புதன், 31 ஜூலை, 2013

வாழ்கைத் தத்துவம்

1. பேசும்முன் கேளுங்கள், எழுதும் முன் யோசியுங்கள், செலவழிக்கும் முன் சம்பாதியுங்கள்

2. சில சமயங்களில் இழப்புதான் பெரிய ஆதாயமாக இருக்கும்.

3. யாரிடம் கற்கிறோமோ அவரே ஆசிரியர். கற்றுக்கொடுப்பவரெல்லாம் ஆசிரியர் அல்லர்.

4. நான் மாறும்போது தானும் மாறியும், நான் தலையசைக்கும் போது தானும் தலையசைக்கும் நண்பன் எனக்குத் தேவையில்லை. அதற்கு என் நிழலே போதும்!

5. நோயை விட அச்சமே அதிகம் கொல்லும்!

6. நான் குறித்த நேரத்திற்குக் கால்மணி நேரம் முன்பே சென்று விடுவது வழக்கம். அதுதான் என்னை மனிதனாக்கியது.

7. நம்மிடம் பெரிய தவறுகள் இல்லை எனக் குறிப்பிடுவதற்கே, சிறிய தவறுகளை ஒப்புக்கொள்கிறோம்!

8. வாழ்க்கை என்பது குறைவான தகவல்களை வைத்துக்கொண்டு சரியான முடிவுக்கு வரும் ஒரு கலை.

9. சமையல் சரியாக அமையாவிடில் ஒருநாள் இழப்பு. அறுவடை சிறக்காவிடில் ஒரு ஆண்டு இழப்பு. திருமணம் பொருந்தாவிடில் வாழ்நாளே இழப்பு.

10. முழுமையான மனிதர்கள் இருவர். ஒருவர் இன்னும் பிறக்கவில்லை. மற்றவர் இறந்துவிட்டார்.

11. ஓடுவதில் பயனில்லை. நேரத்தில் புறப்படுங்கள்

12. எல்லோரையும் நேசிப்பது சிரமம். ஆனால் பழகிக்கொள்ளுங்கள்

13. நல்லவர்களோடு நட்பாயிரு. நீயும் நல்லவனாவாய்

14. காரணமே இல்லாமல் கோபம் தோன்றுவதில்லை. ஆனால் காரணம் நல்லதாய் இருப்பதில்லை

15. இவர்கள் ஏன் இப்படி? என்பதை விட, இவர்கள் இப்படித்தான் என எண்ணிக்கொள்

16. யார் சொல்வது சரி என்பதல்ல, எது சரி என்பதே முக்கியம்

17. ஆயிரம் முறை சிந்தியுங்கள். ஒருமுறை முடிவெடுங்கள்

18. பயம்தான் நம்மைப் பயமுறுத்துகிறது. பயத்தை உதறி எறிவோம்

19. நியாயத்தின் பொருட்டு வெளிப்படையாக ஒருவருடன் விவாதிப்பது சிறப்பாகும்

20. உண்மை புறப்பட ஆரம்பிக்கும் முன் பொய் பாதி உலகத்தை வலம் வந்துவிடும்

21. உண்மை தனியாகச் செல்லும். பொய்க்குத்தான் துணை வேண்டும்

22. வாழ்வதும் வாழவிடுவதும் நமது வாழ்க்கைத் தத்துவங்களாக ஆக்கிக்கொள்வோம்.

23. தன்னை ஒருவராலும் ஏமாற்ற முடியாது எனச் செருக்கோடு இருப்பவனே கண்டிப்பாக ஏமாந்து போகிறான்

24. உலகம் ஒரு நாடக மேடை ஒவ்வொருவரும் தம் பங்கை நடிக்கிறார்கள்

25. செய்வதற்கு எப்போதும் வேலை இருக்கவேண்டும் . அப்போது தான் முன்னேற முடியும்

26. அன்பையும் ஆற்றலையும் இடைவிடாது வெளிப்படுத்துகிறவர் ஆர்வத்துடன் பணிபுரிவர்

27. வெற்றி பெற்றபின் தன்னை அடக்கி வைத்துக்கொள்பவன், இரண்டாம் முறையும் வென்ற மனிதனாவான்

28. தோல்வி ஏற்படுவது அடுத்த செயலைக் கவனமாகச் செய் என்பதற்கான எச்சரிக்கை.

29. பிறர் நம்மைச் சமாதானப்படுத்த வேண்டும் என்று எதிர்பார்க்காமல், நாம் பிறரைச் சமாதானப்படுத்த முயற்சிக்க வேண்டும்.

30. கடினமான செயலின் சரியான பெயர்தான் சாதனை. சாதனையின் தவறான விளக்கம் தான் கடினம்

31. ஒன்றைப்பற்றி நிச்சயமாக நம்ப வேண்டுமென்றால் எதையும் சந்தேகத்துடனே துவக்க வேண்டும்

32. சரியானது எது என்று தெரிந்த பிறகும் அதைச் செய்யாமல் இருப்பதற்குப் பெயர்தான் கோழைத்தனம்.

செவ்வாய், 30 ஜூலை, 2013

Parents Tips

1. ஆணோ, பெண்ணோ, எந்த குழந்தையாய் இருந்தாலும், "Good touch", "bad touch" எது என்பதை பெற்றோர்கள் சொல்லிக் கொடுங்கள்.

2. மேலாடையின்றியோ,ஆடையே இன்றியோ குழந்தைகள் உங்களுக்கு குழந்தையாய் தெரியலாம், எல்லோருக்கும் அப்படியே தெரியும் என்று எண்ணிவிடாதீர்கள்.

3. குழந்தைகளை தனியே கடைக்கு அனுப்பும் போது கவனம் தேவை, நெடு நேரம் குழந்தை நிற்க வைக்கப்பட்டாலோ, பொருட்கள் மிகுதியாகவோ, இலவசமாகவோ வழங்கப்பட்டாலோ கவனம் தேவை.

4. பள்ளிக்கு ஏதோ ஒரு வாகனத்தில் தனியாகவோ, பிற குழந்தைகளுடனோ அனுப்பினால், அந்த வாகன ஓட்டுனரின் முழு விவரமும் தெரிந்து கொள்ளுங்கள், அவர் வீட்டு முகவரி உட்பட.

5. வாகன ஓட்டுனரின் நடத்தையிலும், பழக்க வழக்கத்திலும் ஐயமின்றி தெளிவுறுங்கள்!

6. பெரும்பாலான வாகன ஓட்டுனர்கள், மூட்டைகளை போல் குழந்தைகளை அடைத்து, மரியாதையின்றி பேசுவதும், தொடக் கூடாத இடங்களை தொடுவதும், சில இடங்களில் நடக்கிறது.

7. யார் அழைத்தால் போக வேண்டும், யார் கொடுத்தால் வாங்க வேண்டும் என்று குழந்தைகளுக்கு தெளிவுப்படுத்துங்கள்

8. குழந்தைகள், வீட்டின் முகவரி, பெற்றோரின் தொலைப்பேசி எண்கள் அறிந்திருத்தல் நலம்.

9. வீட்டில் ஒன்றுக்கு மேற்பட்ட குழந்தைகள் இருந்தால், ஒருபோதும் ஒருவருடன் மற்றவரை ஒப்பிட்டு பேசாதீர்கள், வயது வித்தியாசம் எப்படி இருந்தாலும்!

10. ஒரு கட்டத்திற்கு மேல், உங்கள் விருப்பங்களை குழந்தையின் மேல் திணிக்காதீர்கள்.

11. வீட்டில் குழந்தைகள் இருக்கும் போது, வன்முறை, காதல், கொலை, களவுப் போன்றவை நிறைந்த திரைக்காட்சிக்களையோ, நிகழ்ச்சிகளையோ பார்க்காதீர்கள்!

12. பெரியவர்கள், பெண்கள் எப்போதும் சீரியல்களில் மூழ்கி இருக்காமல், குழந்தைகளுக்கு பிடித்தாற்போலோ, அல்லது அவர்களுக்கு பொதுஅறிவு பெருகும் வகையிலான நிகழ்ச்சிகளை பார்ப்பது நலம்.

13. குழந்தைகளிடம் தினம் நேரம் செலவிடுங்கள், ஒரு தோழமையுடன் அவர்கள் சொல்வதை காது கொடுத்து கேளுங்கள்.

14. தவறுகளை தன்மையுடன் திருத்துங்கள், தண்டிக்க நினைக்காதீர்கள்!

15. ஒருமுறை நீர் ஊற்றியவுடன், விதை மரமாகிவிடாது, நீங்கள் ஒருமுறை சொன்னவுடன் குழந்தைகள் உங்கள் விருப்பபடி மாறிவிட மாட்டார்கள். உங்களுக்கு பொறுமை அவசியம்.

16. பள்ளி விட்டு வரும் குழந்தைகளை அன்புடன் அரவணைத்து, வேண்டியது செய்ய அம்மாவோ, பெரியவர்களோ வீட்டில் இருத்தல் வேண்டும்!

17. குழந்தைகளின் எதிரில் புறம் பேசாதீர்கள். பின்னாளில் அவர்கள் உங்களை பற்றி பேசலாம்.

18. உங்கள் பெற்றோரை நடத்தும் விதம், உங்கள் பிள்ளைகளால் கவனிக்க படுகிறது. நாளை உங்களுக்கு அதுவே நடக்கலாம்!

19. படிப்பு என்பது அடிப்படை, அதையும் தாண்டி குழந்தைகளுக்கு உள்ள மற்ற ஆர்வத்தையும் ஊக்குவியுங்கள்.

20. ஓடி ஆடி விளையாடுவது குழந்தைகளின் ஆரோக்யத்திற்கு அவசியம். விளையாட்டிற்கு தடை போடாதீர்கள். "All work and no play makes Jack a dull boy"

21. குழந்தைகள் கேள்வி கேட்கட்டும், அவர்களின் வயதுக்கேற்ப புரியும்படி பதில் சொல்லுங்கள்! பொது அறிவு கேள்விகள் கேட்கப்படும் போது தெரிந்தால் சொல்லுங்கள், தெரியாவிட்டால் பிறகு சொல்லுகிறேன் என்று சொல்லுங்கள். சொன்னபடி கேள்விக்கான பதிலை அறிந்து கொண்டு, மறக்காமல் அவர்களிடம் சொல்வது அவசியம்.

22. ஒருபோதும் "ச்சீ வாயை மூடு" "தொணதொண என்று கேள்வி கேட்காதே" என்று அவர்களிடம் எரிச்சல் காட்டி, அவர்களின் ஆர்வத்தை குழி தோண்டி புதைத்து விடாதீர்கள்!

23. பசி என்று குழந்தை சொன்னால், உடனே உணவு கொடுங்கள், அரட்டையிலோ, சோம்பலிலோ, வேறு வேலையிலோ குழந்தையின் குரலை அலட்சியப்படுத்தாதீர்கள்!

24. ஒரு போதும், உங்கள் குழந்தைகளின் எதிரே சண்டை இடாதீர்கள்!

25. ஒவ்வொரு குழந்தையும் ஒரு வரம், அவர்கள், ஒருபோதும் உங்கள் கோபதாபங்களின் வடிகால்கள் அல்ல!

நன்றி : அமுதா சுரேஷ்

திங்கள், 29 ஜூலை, 2013

மன இறுக்கத்தை போக்கும் வழிமுறைகள்


1. சத்தான உணவைச் சாப்பிடுங்கள்

கவனியுங்கள்... ருசியான உணவு என்று சொல்லவில்லை. சத்தான, இயற்கையான உணவுவகைகளைச் சாப்பிடும்போது மூளை எப்போதும் சுறுசுறுப்பு நிலையிலேயே இயங்குகிறது. பதப்படுத்தப்பட்ட, டின்களில் அடைக்கப்பட்ட உணவுகளைச் சாப்பிடும்போது உடல் ஒருவித மந்த நிலையினை அடைகிறது. இதனால் நாம் செய்யும் செயல்களில் நமக்குத் திருப்தி ஏற்படுவதில்லை.

2. நன்றாகத் தூங்குங்கள்

நல்ல ஆழ்ந்த தூக்கம் அனைத்து மனிதர்களுக்கும் அவசியம். பகலில் நாம் செய்யும் வேலைகளினால் களைப்புறும் உடல் உறுப்புகள் தூக்கத்தில் மட்டுமே Refresh அடைகின்றன. தூக்கத்தில் மட்டுமே ஒரு பகுதி மூளை அவற்றைச் சரிசெய்யும் பணியினைச் செய்வதால் நல்ல தூக்கம் அவசியம். அது இல்லையேல் உடல்நலக்குறைவு நிச்சயம். இளைஞர்களுக்கு ஆறிலிருந்து எட்டுமணி நேரத்தூக்கம் அவசியம்.

3. நடங்கள்! ஓடுங்கள்!

தினமும் அதிகாலை எழுந்தவுடனோ அல்லது மென்மையான மாலை வேளைகளிலோ மெல்லோட்டம் (Jogging) செய்யும் வழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ளுங்கள். அல்லது கை கால்கள் வீசி விரைந்து நடக்கலாம். இது உங்கள் உடல் இறுக்கத்தைப் பெருமளவு தளர்த்தும். மனம் உற்சாகம் பெறும். ஆரம்பத்தில் அதிகாலை எழுவதும், மெனக்கெட்டு செல்லவேண்டுமா எனத் தோன்றுவதும் இயல்பு. பத்து நாட்கள் விடாமல் சென்று பாருங்கள். 40வயதுக்காரர் 20வயது இளைஞனைப்போல் உற்சாகமாக வேலை செய்வீர்கள்.

4. ஓய்வெடுங்கள்.

பணியிடையே அவ்வப்போது ஓய்வெடுங்கள். ஓய்வெடுத்தல் என்பது வேலையை நிறுத்திவிட்டு அரட்டை அடிப்பதல்ல. கண்களை மூடி நன்றாக மூச்சை ஆழ்ந்து இழுத்து, சற்று நிறுத்தி, மெல்ல விடுங்கள். கடினமான, மிகக் கவனமான வேலைகளைச் செய்வோர் செய்யும் சுவாசம் ஆழ்ந்து இல்லாமல் மேம்போக்காக இருக்கும். அதனால் மூளைக்கு சரியாக ஆக்ஸிஜன் செல்லாமல் தலைவலி, உடல் சோர்வு ஏற்படும். ஒரு மணிநேரக் கடின வேலைக்கு ஐந்து நிமிட ஓய்வு போதுமானது.

5. சிரியுங்கள்

மனம் விட்டு சிரியுங்கள். “மனம் விட்டு என்பதற்கு ஆழ்ந்த அர்த்தமுண்டு. சிரிக்கும்போது மனதில் எந்தவித எண்ணங்களும் இருக்கக்கூடாது. சிரிக்கும்போது நன்றாக முழுமையாக ரசித்துச் சிரிக்க வேண்டும். வேறு ஏதேனும் சிந்தனை தோன்றி பட்டென்று சிரிப்பை நிறுத்தும்போது வேறு விளைவுகளை ஏற்படுத்தும். எப்பொழுதும் சிரித்து இன்முகம் காட்டுபவர் முகத்தில் ஒருவித தேஜஸ் இருக்கும். அது மற்றவர்களை உங்கள்பால் கவர்ந்திழுக்கும்.

6. மனம்விட்டுப் பேசுங்கள்.

மனம் விட்டுப்பேசுங்கள், உங்கள் நம்பிக்கைக்குரியவர்களிடம் மட்டும். எல்லோரிடமும், எல்லா நேரமும், தெரிந்த எல்லாவற்றையும் பேசிக்கொண்டிருக்காதீர்கள். யாரிடம் பேசினால் உங்களுக்கு ஆன்ம திருப்தி கிடைக்கிறதோ அவர்களிடம் மனம் விட்டுப் பேசுங்கள். அவர்கள் சொல்லும் வார்த்தைகள் உங்கள் மனதிற்குத் தெளிவைத் தரும்.

7. உங்களால் மாற்ற முடியாதவற்றை ஏற்றுக் கொள்ளுங்கள்

இந்த உலகத்தில் ஒருவரே எல்லாவற்றையும் தன் வாழ்நாளில் ஒழுங்குபடுத்திட இயலாது. அது தேவையில்லாததும் கூட. மலையைத் தலையால் முட்டி உடைக்கமுடியாது. ஆனால் சிறு பாறையைப் பெயர்த்தெடுக்க இயலும். சமூகத்தில் உங்களால் முடிந்த சிறுசிறு வேலைகளைச் செய்யுங்கள். மற்றவர்களையும் உத்வேகப்படுத்துங்கள்.

8. தெளிவாகச் செய்யுங்கள்

எந்தச் செயல் செய்தாலும் முழுமையான ஆத்மார்த்தமான ஈடுபாட்டுடன் செய்யுங்கள். வேண்டாவெறுப்பாக ஒரு வேலையைச் செய்வதை விட அதைச் செய்யாமல் இருப்பதே மேல். எந்த ஒரு நிறுவனத்தில் வேலை செய்தாலும் செய்யும் வேலையை மட்டும் காதலியுங்கள், நிறுவனத்தை அல்ல. நிறுவனம் உங்களைத் தூக்கிவிடும் அல்லது கவிழ்த்திவிடும், ஆனால் ஈடுபாட்டுடன் காட்டிய வேலை திருப்தியை மட்டுமல்ல, நல்ல அனுபவத்தையும் கொடுக்கும்.

9. விளையாடுங்கள்

உங்கள் நேர நிர்வாக அட்டவணையில் விளையாட்டிற்கும் இடம் ஒதுக்குங்கள். கோயிலுக்குச் செல்வதை விட கால்பந்து விளையாடுவது மேலானது என விவேகானந்தரே கூறியிருக்கிறார். விளையாட்டு உடலுக்கு மட்டுமல்ல மனதிற்கும் உற்சாகம் தரும்.

10. மற்றவர்களையும் கவனியுங்கள்

உங்கள் விருப்பங்களையும், உங்கள் தேவைகளையும் மட்டுமே சிந்தித்துக் கொண்டிருக்காதீர்கள். அது மன உளைச்சலில் கொண்டுபோய்விடும். நமது விருப்பு வெறுப்புகளுக்கு எல்லைகளே கிடையாது. உங்களைச் சுற்றியிருப்பவர்களையும் கவனியுங்கள். யாருக்கேனும் உதவி தேவைப்பட்டால் தயங்காமல் செய்யுங்கள், பிரதிபலன் எதிர்பாராமல். உங்களுக்கே தெரியாமல் அது திரும்பிவரும் !!!

மருத்துவக் குறிப்பு Health Care in Tamil

வியாழன், 25 ஜூலை, 2013

மனித உறவுகள் மேம்பட.....

1.தானே பெரியவன்,தானே சிறந்தவன் என்ற அகந்தையை விடுங்கள். (Ego)

2. அர்த்தமில்லாமிலும்,தேவையில்லாமிலும் பின் விளைவு அறியாமலும் பேசுக் கொண்டேயிருப்பதை விடுங்கள். (Loose Talks)

3.எந்த விசயத்தையும் பிரச்சனையும் நாசூக்காகக் கையாளுங்கள். (Diplomacy)

4.விட்டுகொடுங்கள். (Compromise)

5.சில நேரங்களில் சில சங்கடங்களை சகித்துதான் ஆகவேண்டும் என்று உணருங்கள். (Tolerate)

6.நீங்கள் சொன்னதே சரி செய்வதே சரி என்று கடைசிவரை வாதாடதீர்கள். (Adamant Arguments)

7.குறுகிய மனப்பான்மையை விட்டொழியுங்கள். (Narrow Mindedness)

8.உண்மை எது பொய் எது என்று விசாரிக்காமல் இங்கே கேட்டதை அங்கே சொல்வதையும் அங்கே கேட்டதை இங்கே சொல்வதையும் விடுங்கள். (Carrying Tales)

9.மற்றவர்களை விட உங்களையே எப்போதும் உயர்த்தி நினைத்து கர்வபடாதீர்கள். (Superiority Complex)

10. அளவுக்கு அதிகமாய்,தேவைக்கு அதிகமாய் ஆசைப்படாதீர்கள். (Over Expectation)

11.எல்லோரிடத்திலும் எல்லா விசயங்களையும், அவர்களுக்கு சம்பந்தம் உண்டோ இல்லையோ சொல்லிகொண்டிருக்காதீர்கள்.

12.கேள்விப்படுகிற எல்லா விசயங்களையும் நம்பிவிடாதீர்கள்.

13.அற்ப விசயங்களையும் பெரிதுபடுத்தாதீர்கள்.

14.உங்கள் கருத்துகளில் உடும்புப்பிடியாய் இல்லாமல், கொஞ்சம் தளர்த்திக்கொள்ளுங்கள். (Flexibility)

15.மற்றவர் கருத்துக்களை, செயல்களை நடக்கின்ற நிகழ்ச்சிகளைத் தவறாகப் புரிந்து கொள்ளாதீர்கள். (Missunderstanding)

16.மற்றவர்களுக்கு உரிய மரியாதையைக் காட்டவும், இனிய இதமான சொற்களை பயன்படுத்தவும் தவறாதீர்கள். (Courtesy)

17. புன்முறுவல் காட்டவும், சிற்சில அன்புச் சொற்களைச் சொல்லவும்கூட நேரமில்லாதது போல நடந்து கொள்ளாதீர்கள்.

18.பேச்சிலும், நடத்தையிலும் திமிர்த்தனத்தையும், தேவையில்லாத மிடுக்கையும் காட்டுவதைத் தவிர்த்து அடக்கத்தையும், பண்பாட்டையும் காட்டுங்கள்.

19.அவ்வப்போது நேரில் சந்தித்து மனம் திறந்து அளவளாவுங்கள். (Frankness)

20.பிணக்கு ஏற்படும்போது, அடுத்தவர் முதலில் இறங்கி வரவேண்டும் என்று காத்திருக்காமல் நீங்களே பேச்சைத் துவக்க முன் வாருங்கள். (Initiative)

21. தேவையான இடங்களில் நன்றியையும், பாராட்டையும் சொல்ல மறக்காதீர்கள். பாராட்டுக்கு மயங்காத மனிதனே இல்லை. அதுவே உங்களுக்கு வெற்றியாக அமையும்.

தமிழ் -கருத்துக்களம்-

அவமானங்களை உங்களால்

தன் குருவிடம் ஒருவர் கேட்டார்,

”என்னை பலரும் அவமானப்படுத்துகிறார்கள். நான் என்ன செய்வது?’

குரு சொன்னார், “அவற்றைப் பொருட் படுத்தாதீர்கள்”.

“என்னால் முடியவில்லையே”!

“அப்படியானால் அவற்றைக் கடந்து செல்லுங்கள்”. “அதுவும் முடியவில்லையே!”

“சரி! அப்படி யென்றால் அவற்றைக் கண்டு சிரித்து விடுங்கள்.

“குருவே! அதுவும் முடியவில்லை!”

குரு சொன்னார்,

“அவமானங்களை உங்களால் நிராகரிக்க முடியவில்லை, கடக்க முடியவில்லை, கண்டு சிரிக்க முடியவில்லை

என்றால் அந்த அவமானங்களுக்கு நீங்கள் தகுதியுடையவர் என்று அர்த்தம்.

உணர்ச்சியே இல்லாத மரம்

அரசன் பரிவாரங்களுடன் சென்று கொண்டிருந்த போது எங்கிருந்தோ வந்த ஒரு கல் அவன் தலையில் பட்டு காயம் ஏற்பட்டது. வீரர்கள் உடனே நாலாபுறமும் சென்று ஒரு கிழவியைப் பிடித்து வந்தார்கள்.

கிழவி சொன்னாள்,''அரசேஎன் மகன் சாப்பிட்டு மூன்று நாள் ஆகிறது. அவனுக்காகப் பழம்பறிக்கக் கல்லைவிட்டு எறிந்தேன். அது தவறி உங்கள் மேல் பட்டுவிட்டது.

''இதைக் கேட்ட அரசர் மந்திரியிடம் உடனே கிழவிக்கு ஆயிரம் காசுகள் கொடுக்கச் சொன்னார். எல்லோருக்கும் ஆச்சரியம். காரணம் கேட்க அவர் சொன்னார்,

''உணர்ச்சியே இல்லாத மரம் தன மீதுகல்லை விட்டு
எறிந்ததற்குபுசிக்கப் பழங்களைத் தருகிறது.

ஆறறிவு படைத்த, அதுவும் மன்னனான நான் தண்டனையா கொடுப்பது?!'
நீதி: நடந்த செயல்களை ஆராய்ந்து முடிவெடுங்கள். அவசரப்படாதீர்கள்!

வெள்ளி, 19 ஜூலை, 2013

குழந்தைகளுக்கு மாதம் ஒரு நற்பழக்கம்

‘ஒரு நல்ல செயலை தொடர்ந்து ஒருமாதம் செய்தால் உங்களிடம் உருவாகும், மாதம் ஒரு நற்பழக்கம்’ என்று குழந்தைகளுக்கு எடுத்துச் சொல்லிவிட்டு இந்த மாதம் அவர்களிடம் நீங்கள் ஏற்படுத்த வேண்டிய நற்பழக்கம் :

உணவுப் பழக்கம்

சாப்பிடக்கூட நம் குழந்தைகளை பழக்க வேண்டுமா? என்று நீங்கள் ஆச்சரியப்பட்டாலும் உண்மை அதுதான். இன்றைய குழந்தைகள் பலருக்கு சாப்பிடக்கூட தெரியவில்லை. எப்படிப் பட்ட உணவு எடுத்துக்கொள்ள வேண்டும்? எப்போது, எப்படி எடுத்துக்கொள்ள வேண்டும்? என்பதை யாரும் சொல்லித்தருவதுமில்லை.

பெற்றோர்கள் குழந்தைகளுக்கு தர வேண்டிய முதல் பரிசு, ஆரோக்கியம்தான். எனவே ஆரோக்கியத்திற்கு தேவையான உணவுப் பழக்கங்கள் பற்றி பார்ப்போம்.

எப்போது சாப்பிட வேண்டும் ?

பசித்தால் மட்டுமே சாப்பிட வேண்டும். காரணம், நன்கு பசி எடுத்தபிறகே உமிழ்நீர் தேவையான அளவில் சுரக்க துவங்கிறது. பசி எடுத்தபின் சாப்பிட்டால்தான் உணவை செரிமானம் செய்ய தேவையான உமிழ்நீர் கிடைக்கும் . எனவே பசியின்றி சாப்பிடக்கூடாது.

எப்படி சாப்பிட வேண்டும் ?

உணவை மென்று, பற்களால் நன்றாக அரைத்து சாப்பிட வேண்டும். அப்போதுதான் உணவு நன்கு செரிமானமாகும். சட்னியில் உள்ள பொட்டுக்கடலை, மிளகாய், புளி எல்லா வற்றையும் மிக்ஸியில் போட்டு அரைக்காமல் சாப்பிடச் சொன்னால், நமக்கு எவ்வளவு கஷ்டமாக இருக்கும்? என்று யோசித்துப் பாருங்கள். உணவை அரைக்காமல் அப்படியே உள்ளே தள்ளினால் நம் உடலுக்கும் அதே சிரமம்தான்.

சாப்பிடும்போது பிற சிந்தனைகளை தவிர்த்து விட்டு, முழு கவனத்தையும் உணவில் வைத்து நன்கு ரசித்து, ருசித்து சாப்பிட வேண்டும். பலரும் அரக்கப் பரக்க எதையோ யோசித்துக் கொண்டு சாப்பிடுவதால், சாப்பிட்ட நிறைவும் கிடைப்பதில்லை.

மனம் நிறைந்தால்தான் வயிறு நிறையும். அள்ளி விழுங்கினால் அளவு தெரியாது. உடம்பை குறைக்க உணவை நன்கு மென்று ரசித்து சாப்பிட்டாலே போதும் என்கிறார்கள். முழு கவனத்துடன் சாப்பிடுவதால் மனமும் வயிறும் சீக்கிரமே நிறைந்துவிடுகிறது. சரியான அளவே சாப்பிடுவோம். உடலும் ஆரோக்கியமாக இருக்கும் என்கிறார்கள் மருத்துவ நிபுணர்கள்.

எவ்வளவு சாப்பிட வேண்டும் ?

அரைவயிற்றுக்குத்தான் உணவு எடுத்துக் கொள்ள வேண்டும். கால் வயிறு தண்ணீர் இருக்க வேண்டும். கால் வயிறு காலியாக இருக்க வேண்டும். ஆனால் நம்மில் பலர் அடுத்த வேளை உணவையும் சேர்த்தே சாப்பிட்டுவிடுகிறúôம். இது தவறு. உணவு நேரம் நெருங்கியதும் நன்றாக பசிக்க வேண்டும். அப்போதுதான் நீஙகள் சரியான அளவில் சாப்பிட்டிருக்கிறீர்கள் என்று அர்த்தம்.

நன்றாக சாப்பிடுவது வேறு, நிறைய சாப்பிடுவது வேறு. பெரும்பாலான பெற்றோர்கள் படிக்கிற குழந்தை நன்றாக சாப்பிட வேண்டும் என்று நிறைய கொடுத்து படிக்க முடியாமல் செய்து விடுவதுண்டு. அதிகமாக சாப்பிட்டு திணற திணற அசைய முடியாமல் உட்கார்ந்திருப்பது, நம் குழந்தைகளின் கல்விக்கு மட்டுமல்ல, உடல் நலனுக்கும் கேடு.

அதிக உணவு மதமதப்பை ஏற்படுத்தி படிக்க முடியாமல் செய்துவிடும், எனவே உணவு விஷயத்தில் மட்டுமல்ல, அதன் அளவு விஷயத்திலும் எச்சரிக்கையாக இருங்கள்.

ஏன் சாப்பிட வேண்டும் ?

நொறுக்குதீனிகளில் காட்டுகிற ஈடுபாட்டை, காய்கறிகள், பழங்கள் சாப்பிடுவதில் நம் குழந்தைகள் காட்டுவதேயில்லை. ஒவ்வொரு காய்கறியும் ஒவ்வொரு பழமும் நமக்கு பல்வேறு ஊட்டச்சத்துக்களை தருகிறது. எனவே காய்கறிகளை சூப் ஆகவும் பழங்களை ஜுஸாகவும் சாப்பிடவாவது பழக்கப் படுத்துங்கள்.

பொதுவாக சில:

மாணவர்கள் இப்பொழுது இரவு உணவு நேரத்தை ஒன்பது பத்து என நீட்ட ஆரம்பித்து விட்டார்கள். எட்டு மணிக்குள் இரவு உணவை முடித்துவிடவேண்டும். அப்பொழுதுதான் செரிமானம் சிறப்பாக இருக்கும்.

உணவுக்கு ஏற்ற உடற்பயிற்சி செய்ய வேண்டும். இரவு உணவுக்கு பிறகு அப்படியே படுத்து விடக்கூடாது. கட்டாயம் நடக்க வேண்டும்.

குழந்தைகளுக்கு அசைவத்தையும் அதிக அரிசி உணவுகளையும் முக்கியமாக தேர்வு நேரத்தில் தவிர்த்திடுங்கள்.

படிக்கும் நேரத்தில் எடுத்துக்கொள்ள வேண்டிய உணவுகள் :

சத்துமாவு உருண்டை, தேன் கலந்த தண்ணீர், தேனில் ஊறிய பேரீட்சை, பழங்கள், முளை கட்டிய பயிறு சுண்டல் (இவை அனைத்தையும் ஒரே நாளில் கொடுத்து மிரட்டி விடாதீர்கள். )

பாகற்காய் கசப்பாக இருக்கிறது என்பதால் பல குழந்தைகள் அதை தவிர்த்துவிடுகிறார்கள். நம் உடலில் உள்ள தேவையற்ற பேக்டீரியாக்களை அழிக்கக்கூடிய இயற்கையான பூச்சி மருந்துக்கள் பாகற்காயில் இருக்கிறது அதனால்தான் பாகற்காய் கசக்கிறது. இப்படி ஒவ்வொரு காய்கறிக்கும் பழத்திற்கும் உள்ள நன்மையை எடுத்துச் சொன்னால் ஏன் இதை தவிர்க்கக்கூடாது என்று குழந்தைகளுக்கு விளங்கும். கேள்வியே கேட்காமல் எல்லாவற்றையும் சாப்பிடுவார்கள்.

இதையெல்லாம் கடைப்பிடிக்கிறபோது உணவே மருந்து என்று நம் முன்னோர்கள் சொன்னதன் அர்த்தம் உங்களுக்கே விளங்கும்.

என்ன சத்துக்கள்?

புரதம், கொழுப்பு, கார்போஹைட்ரேட், கால்சியம், பாஸ்பரஸ், நார், இரும்புசத்து, பாஸ்பேட், சர்க்கரை, பொட்டாசியம், சோடியம், பெக்டின், மேலிக் யூரிக் அமிலங்கள், வைட்டமின் A-B1-B2 மற்றும் சி ஆகியவை உள்ளன.

கலோரிகளில் குறைவானது ஆப்பிள். 140 கிராம் எடை கொண்ட ஒரு ஆப்பிளில் 90 கலோரிகளே உள்ளன.மேலும் கரைபடக்கூடிய நார்ச்சத்துக்கள் ஆப்பிள்களில் அதிகம்

ஆப்பிள் பழத்தில் பெக்டின், பாலிபினால்கள் இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது. இது இரத்தத்தில் கலந்துள்ள கொழுப்புகளை தடுத்து ஆக்ஸிஜனேற்றம் அடைவதற்கான அடர்த்தியுள்ள லிபோபுரோட்டீன் (LDL) கொண்டுள்ளது

பலனகள்

நரம்பு மண்டலத்துக்கும் மூளைக்கும் நல்ல சக்தி கிடைக்கிறது.

செரிமான மண்டலம் சீராக இயங்கச் செய்கிறது. கால்சியம் உடலில் சேமிக்கச் செய்கிறது.

சருமத்துக்கு மிகவும் நல்லது. பொலிவான‌ உடல் தோற்றத்தையும் ஆரோக்கியமான உடல் நலனையும் தரும்

கர்ப்பிணிப் பெண்கள் தினமும் ஒரு ஆப்பிளை கட்டாயமாக சாப்பிட வேண்டும். கர்ப்பகாலத்தில் கர்ப்பிணிகள் ஆப்பிள் சாப்பிட்டால் இரத்தத்தில் காணப்படும் சர்க்கரையின் அளவை கட்டுபாட்டுக்குள் வைத்துக்கொள்ளும்.
ஆனால் அதில் உள்ள பெக்டின் என்னும் கார்போஹைட்ரேட், வாயுத் தொல்லையை உண்டாக்கும். எனவே கர்ப்பிணிகள் இதனை அளவாக சாப்பிடுவது நல்லது.

பைட்டோ கெமிக்கல்ஸ் ஆப்பிள்களில் அதிகம் காணப்படுகிறது. அதாவது குறிப்பாக `குவர்செடின்' அதிகமாக இருப்பதால், இருதய நோயையும், புற்றுநோயையும் தடுக்கிறது. வயிற்றுப் போக்கு, குன்மம், சீதபேதி, சிறுநீரகக் கோளாறுகள், இதய நோய்கள், இரத்த அழுத்தம் ஆகியவைகளுக்கு நல்லது.

குடலில் உள்ள கிருமிகளை அழிக்க உதவுகிறது. குழந்தைகளுக்குப் பேதி கண்டால் ஆப்பிள் பழத்தைஆவியில் வேகவைத்து பிசைந்து கொடுத்தால் வயிற்றுப்போக்கு குணமாகும்

வியாழன், 18 ஜூலை, 2013

வயதிற்கேற்றார் போல் நல்லா தூங்குங்க

தூக்கம் என்பது ஒவ்வொருவருக்கும் அத்தியாவசியமான ஒன்று. நன்றாக தூங்கினால்தான் அடுத்த ஓட்டத்துக்கு நாம் நம்மை தயார் செய்து கொள்ள முடியும். ஆனால், பணம் பணம் என்று ஓடிக் கொண்டிருக்கும் இந்த காலகட்டத்தில் 8 மணி நேர தூக்கம் என்பது பலராலும் இயலாத காரியம். தூங்கும் நேரத்தை குறைத்துக் கொண்டு பணம் சம்பாதிக்க ஓடுகிறோம். 

24 மணி நேரமும் சம்பாதிக்க தயாராக இருக்கும் நாம் 8 மணி நேரம் தூக்கத்துக்கு ஒதுக்க ரொம்பவே கஷ்டப்படுறோம். இதனால், பல்வேறு இன்னல்களுக்கு ஆளாகிறோம். மன அழுத்தம், ரத்த அழுத்தம், கண் எரிச்சல், சோர்வு... ஹார்ட் அட்டாக் கூட வருமாம். அதனால இனிமே 8 மணி நேரம் தூங்குறதை தவிர்க்காதீங்க. அதுக்காக இதோ சில டிப்ஸ்...

குறிப்பிட்ட நேரத்தில் தூங்கும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ளுங்கள். தினமும் அந்த நேரத்தில் கட்டாயம் தூங்க சென்று விட வேண்டும்.
பகல் நேரத்தில் தூங்குவதை தவிர்க்க வேண்டும். இது இரவு நேர தூக்கத்தை பாதிக்கும். எனவே, இரவில் மட்டுமே தூங்க வேண்டும். ஒருநாளைக்கு குறைந்தபட்சம் 30 நிமிடம் என்ற கணக்கில் ஒருவாரத்துக்கு 5 முறையாவது உடற்பயிற்சி செய்வது அவசியம். தூங்குவதற்கு 2-3 மணி நேரத்துக்கு முன்பாகவே உடற்பயிற்சியை முடித்துவிட வேண்டும்.

எந்த சத்தமும், ஒலியும் பெட்ரூமில் இல்லாதவாறு பார்த்துக் கொள்ளுங்கள். தெரு விளக்கு வெளிச்சம் கூட வரக்கூடாது. அப்படியே வந்தால் கனமான ஸ்கிரீன் துணியால் ஜன்னல்களை மூடி வையுங்கள். பெட்டில் அமர்ந்தபடி வேலை பார்ப்பது, டிவி பார்ப்பதை தவிர்க்கவும். பெட்ரூமில் டிவி இல்லாமல் இருப்பதே நல்லது.

தூங்குவதற்க 2 மணி நேரம் முன்பாகவே இரவு உணவை முடிப்பது நல்லது. ஆனாலும், பசியோடு தூங்க செல்லக் கூடாது. இரவு தூங்குவதற்கு முன் பாலுடன் தேன் கலந்து குடித்தால் நல்லது. இந்த டிப்ஸ் எல்லாம் தெரிஞ்ச விஷயம்தானே என்று யோசிங்கிறீங்களா... இதனால எந்த பலனும் இல்லை என்று கருதி விடாதீர்கள்.

தொடர்ந்து 2, 3 வாரங்கள் கடைபிடியுங்கள். நிச்சயம் பலன் கிடைக்கும். சரியா தூங்கவில்லை என்றால், அது உங்கள் மனதையும் உடலையும் பாதிப்பதுடன் ஹார்ட் அட்டாக் ரேஞ்ச்சுக்கு கொண்டு போயிடும். அதனால உங்க உடல் நிலையை பாதுகாக்கக் கூடிய தூக்கத்தை அலட்சியப்படுத்தாதீங்க!

வயதிற்கேற்றார் போல் தூங்குங்கள்

வயது தூங்கும் நேரம்
2 மாத குழந்தை 12 - 18 மணி வரை
3 மாதம் - 1 வயது 14 - 15 மணி வரை
1 - 3 வயது 12 - 14 மணி வரை
3 - 5 வயது 11 - 13 மணி வரை
5 - 12 வயது 10 - 11 மணி வரை
12 - 18 வயது 8 - 10 மணி வரை
18 வயதுக்கு மேல் 7 - 9 மணி வரை

புதன், 17 ஜூலை, 2013

பெண்களுக்கு...

ஒரு பெண்ணின் வாழ்வில் மிகப் பெரிய விஷயம், குழந்தை பெறுவது. 

திருமணத்தை விடவும் சவாலான அதேநேரம் திருப்தி அளிக்கும் விஷயம். 

திருமணமான ஒரு பெண் கர்ப்பம் தரிப்பது முதல் குழந்தை பெறும் வரை அதை ஆழ்ந்து அனுபவிக்க வேண்டும்.

அதற்கான 6 படிகள்..

. ஆரோக்கியமாக இருங்கள் *

முதலில், கர்ப்பம் தரிக்க விரும்பும் பெண் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்த வேண்டும். தமது மகப்பேறு மருத்துவரைப் போய் பார்த்து, கர்ப்பம் தரிப்பதற்கு ஏற்றவகையில் தனது உடல்நிலை உள்ளதா என்று அறிந்துகொள்ள வேண்டும். நோய்த் தொற்று ஏதும் இருக்கிறதா, எடை, ரத்த அழுத்தம் சரியான அளவில் உள்ளதா என்று அறிந்துகொள்வது அவசியம்

. சரியான விதத்தில் சாப்பிடுங்கள் *

மகப்பேறுக்குத் தயாராகும் பெண் நாக்குக்குச் சுவையான உணவுகளைக் கொஞ்சம் தள்ளிவைத்து, ஆரோக்கியம் காக்கும், சத்துகள் செறிந்த உணவுகளைச்

சாப்பிடுவதில் கவனம் செலுத்த வேண்டும். *

பிரசவத்துக்கு முன்பும் பின்பும் நிறைய பழங்கள், பச்சைக் காய்கறிகள், முழுத் தானிய உணவுகள், புரதச் சத்து மிக்க உணவுகள் ஆகியவற்றைச் சாப்பிடுவது அவசியம். கால்சியம், இரும்பு சத்துகளும், வைட்டமின்களும் அத்தியாவசியமானவை.

தீய பழக்கங்கள் கூடாது *

புகைத்தல், மது அருந்துதல் போன்ற தீய பழக்கங்கள் கூடவே கூடாது. அதேநேரம் உடற்பயிற்சியில் கவனம் செலுத்த வேண்டும். அது உங்களின் எடையைக் கட்டுப்பாட்டுக்குள் வைப்பதுடன், கர்ப்பம் தரிப்பதால் ஏற்படும் மாற்றங்களில் இருந்தும்
உடம்பைக் காக்கும்

. *சுறுசுறுப்பான

ஒரு நடை அல்லது சிறுபயிற்சி, மகிழ்ச்சி ஹார்மோன் எனப்படும் எண்டார்பினை வெளியிடச் செய்து உங்களின் மனஅழுத்தத்தைக் குறைக்க உதவுகிறது.

சரியான நேரம் *

ஒரு சராசரிப் பெண் தனது வாழ்நாளில் 400 கருமுட்டைகளை வெளியிடுகிறார். ஒரு பெண் மகப்பேறுக்கு மிகவும் வாய்ப்பான நாட்களை அறியவேண்டும். பிசுபிசுப்பான திரவ சுரப்பைக் கொண்டும் ஒரு பெண் அதை அறியலாம்

. *பெண்களின் உடல் கருமுட்டையை வெளியிடும் முன் உயிரணுவை வரவேற்கும் விதமாக அதற்கேற்ற சூழலை உருவாக்குகிறது. அவற்றில் ஒன்றுதான், உயிரணு பயணத்துக்கு ஏற்ற வகையிலான திரவ சுரப்பு. அது ஒட்டக்கூடியதாகவோ, பசை போலவோ, கிரீம் போலவோ இருக்கலாம். கர்ப்பம் தரிக்கும் திறன் உச்சத்தில் இருக்கும்போது அது முட்டைவெள்ளை நிறத்தில் இருக்கும். பாலியல் அறிவு அவசியம் *

படுக்கையறை உறவு

என்பது எந்த நிர்ப்பந்தங்கள் இல்லாததாகவும், ஓர் இன்ப விளையாட்டாகவும் இருக்க வேண்டும். உறவுக்குப் பின் உடனே எழுந்து விட வேண்டாம். உறவுக்குப் பின் சிறிதுநேரம் அப்படியே மல்லாந்து கிடப்பது கர்ப்பம் தரிக்கும் வாய்ப்பை அதிகரிக்கிறது என்று பாலியல் நிபுணர்கள் கூறுகின்றனர். குறைந்தபட்சம் ஐந்து நிமிடங்கள் அப்படிப் படுத்திருந்தால் போதும். உயிரணு கருமுட்டையைத் தேடி அடைய அது உதவும். உணர்வு ரீதியாகத் தயாராகுங்கள்

*கர்ப்பம் தரிக்கும் பெண்

உடல் ரீதியாக மட்டுமின்றி, உணர்வுரீதியாகவும் அதற்குத் தயாராக வேண்டும். தனது முழுக்கவனத்தையும் மகப்பேறில் செலுத்தியாக வேண்டும் என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும். ஒரு குழந்தையைப் பெற்று வளர்ப்பது என்பது கடினமும், பொறுப்பும் சேர்ந்த வேலை என்பதை உணர வேண்டும்.

*குழந்தையைப் பெற்று வளர்ப்பதில் கணவரை விட மனைவிக்குப் பொறுப்புகளும் அதிகம். உடல்ரீதியாகவும், உளரீதியாகவும் அவர் சவால்களை எதிர்கொள்ள நேரும் என்பதைப் புரிந்துகொண்டு நடக்க வேண்டும்.

வியாழன், 11 ஜூலை, 2013

ஒரு தவறுக்கு ஒரு ரூபாய் அபராதம்!

தன் மகனை அழைத்த தந்தை, “நாம் இருவருமே இனிமேல் தவறு செய்யக் கூடாது. யார் எந்தத் தவறு செய்தாலும் அதற்கு அபராதமாக இந்த உண்டியலில் ஒரு ரூபாய் போட வேண்டும். அப்படிச் சேரும் தொகையைப் பிள்ளையார் கோயிலுக்குத் தந்து விட வேண்டும்” என்றார்.

மகனும் இதற்கு ஒப்புக் கொண்டான்.

அவரின் திட்டம் அப்படியே நடந்தது. திடீரென்று அவர் உடல்நிலை மோசம் ஆயிற்று. உண்டியலில் இருந்த பணத்தை எல்லாம் பிள்ளையார் கோயிலுக்குத் தந்துவிட்டு மருத்துவ மனைவில் சேர்ந்தார்.

மகனைப் பார்த்து, “நான் இல்லாத போதும் இந்தப் பழக்கத்தை விட்டு விடாதே. ஒரு தவறுக்கு ஒரு ரூபாய் உண்டியலில் போட்டுவிடு” என்றார்.

மருத்துவ மனையில் மூன்று மாதம் தங்கிய அவர் வீடு திரும்பினார். உண்டியலைத் திறந்து பார்த்தார். அதில் ஒரே ஒரு ரூபாய் தான் இருந்தது.

மகிழ்ச்சி அடைந்த அவர் தன் மகனை அழைத்தார்.

“இந்த மூன்று மாதத்தில் ஒரே ஒரு தவறு தான் செய்தாயா?” என்று கேட்டார்.

“இல்லை அப்பா! உண்டியலில் முந்நூறு ரூபாய் பணம் சேர்ந்தது” என்றான் அவன்.

“அந்தப் பணத்தைப் பிள்ளையார் கோயிலுக்குத் தந்து விட்டாயா?” என்று கேட்டார் அவர்.

“அப்பா! உண்டியலைத் திறந்து அந்தப் பணத்தை நானே எடுத்துக் கொண்டேன். அந்தத் தவறுக்காக நீங்கள் சொன்னபடி ஒரு ரூபாயை உண்டியலில் போட்டு விட்டேன்” என்றான் அந்த கெட்டிக்கார மகன்.


Thanks, Nanayam Vikatan

நாம் சாப்பிடும் எந்த உணவுப் பொருளுக்கும் ஒரு சுவை உண்டு. அறுவகைச் சுவை என்ன என்ன?

காரம்: உடலுக்கு உஷ்ணத்தைக் கூட்டுவதுடன் உணர்ச்சிகளை கூட்டவும்,குறைக்கவும் செய்யும்.
கிடைக்கும் உணவுப் பொருட்கள்: வெங்காயம், மிளகாய், இஞ்சி, பூண்டு, மிளகு, கடுகு போன்றவற்றில் அதிகப்படியான காரச்சுவை அடங்கியுள்ளது.

கசப்பு: உடம்பிலுள்ள உதவாத கிருமிகளை அழித்து உடம்பிற்கு சக்திகூட்டும். சளியைக்கட்டுப்படுத்தும்.
கிடைக்கும் உணவுப் பொருட்கள்: பாகற்காய், சுண்டக்காய், கத்தரிக்காய், வெந்தயம், பூண்டு, எள், வேப்பம்பூ, ஓமம் போன்றவற்றில் இந்த சுவைமிகுதியாய் உள்ளது.

இனிப்பு: உடம்பு தசையை வளர்க்கும் தன்மை வாய்ந்தது. வாதத்தைக் கூட்டும்.
கிடைக்கும் உணவுப் பொருட்கள்: பழவகைகள், உருளை, காரட் போன்ற கிழங்கு வகைகள், அரிசி, கோதுமை போன்ற தானியங்கள் மற்றும் கரும்பு போன்ற தண்டு வகைத் தாவரங்களிலும் இனிப்புச் சுவை அதிக அளவில் அடங்கியுள்ளது.

புளிப்பு: இரத்தக் குழாயின் அழுக்கை நீக்கவல்லது. வாதத்தைக்கூட்டும்.
கிடைக்கும் உணவுப் பொருட்கள்: எலுமிச்சை, புளிச்ச கீரை, இட்லி, தோசை, அரிசி, தக்காளி, புளி, மாங்காய், தயிர், மோர், நார்த்தங்காய் போன்றவற்றில் அதிகம் உள்ளது.

துவர்ப்பு: இரத்தம் வெளியேறாது தடுக்க வல்லது. இரத்தம் உறைவதை கூட்டும் தன்மையுள்ளது.
கிடைக்கும் உணவுப் பொருட்கள்: வாழைக்காய், மாதுளை, மாவடு, மஞ்சள், அவரை, அத்திக்காய் போன்ற காய் வகைகளில் அடங்கியுள்ளது.

உப்பு: ஞாபகசக்தியை கூட்டும். கூடினால் உடம்பில் வீக்கத்தை ஏற்படுத்தும்
கிடைக்கும் உணவுப் பொருட்கள்: கீரைத்தண்டு, வாழைத்தண்டு, முள்ளங்கி, பூசணிக்காய், சுரைக்காய், பீர்க்கங்காய் போன்றவற்றில் அதிகமாய் இருக்கின்றது


Thanks Doctor Vikatan

சனி, 6 ஜூலை, 2013

முடியும் என்று நினைத்தால் முடியும்!

வாழ்க்கையில் நிறைய விஷயங்கள் செய்யவே முடியாததைப்போல தோன்றும்; நாம் அதை செய்து முடிக்கும்வரை. அப்படித்தானே..? 

வாழ்க்கை என்ற விளையாட்டில் நடந்த மோசமான நிகழ்வுகளை நினைவுகளாகச் சேகரித்தால் தோற்றுப்போவோம்; அதில் நடந்த நல்ல நிகழ்வுகளை நினைவுகளாகச் சேகரித்தால் நிச்சயம் வெற்றிபெறுவோம்! 

மறுபடியும், மறுபடியும்... கடைசியில் எல்லாம் முடியும்!

Thanks, Nanayam Vikatan