வெள்ளி, 28 ஜூன், 2013

தடுப்பூசிகள்... ஆலோசனையும்.. அட்டவணையும்!

'வருமுன்னர்க் காவாதான்     வாழ்க்கை எரிமுன்னர்   வைத்தூறு போலக் கெடும்'னு வள்ளுவர் சொல்லியிருக்கிறதுதான்... தடுப்பூசியோட தத்துவமும்!'’
- குறள் சொல்லி சிரித்த குரலோடு வரவேற்றார் திருச்சியைச் சேர்ந்த குழந்தைகள் நல சிறப்பு மருத்துவரான சுரேஷ் செல்லையா.
''தடுப்பூசி என்பது இன்ஷூரன்ஸ் மாதிரி. முன்னெச்சரிக்கையாக உரிய காலத்துல குழந்தைக்கு போடப்படும் தடுப்பூசி, பிற்பாடு அந்த குழந்தையோட உயிர்காக்கும் அரணாக அமைவதோடு, பெரும் செலவையும் மன உளைச்சலையும் தவிர்க்க உதவும். ஏனென்றால், இளம்பிள்ளைவாதம், தட்டம்மை, சின்னம்மை, புட்டாளம்மை, மஞ்சள்காமாலை (ஹெபடைடிஸ் பி) போன்ற ஆபத்தான நோய்கள் வந்துவிட்டால், அதையெல்லாம் குணப்படுத்துவதற்கான மருந்துகள் இல்லை. இன்னும், தொண்டை அடைப்பான், கக்குவான், ரணஜன்னி போன்றவை பாதித்தால்... குழந்தையின் உயிருக்கே ஆபத்தாகிவிடும். அதனால், தடுப்பூசி விஷயத்தில் சமரசமே கூடாது.
அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார மையங்கள் மற்றும் சிறப்பு மருத்துவ முகாம்களில் இலவசமாகவே இதில் பெரும்பாலான ஊசிகள் போடப்படுகின்றன. எனவே, செலவு என்று காரணம் சொல்வதற்கு இடமே இல்லை. ஆக, ஒரு பெற்றோராக நம்முடைய பொறுப்பு... உரிய காலக்கிரமத்தில் அவற்றைஎல்லாம் குழந்தைக்கு போடுவதுதான்'' என்ற டாக்டர்,
''தடுப்பூசி தருணத்தில் குழந்தை எதிர்கொள்ளும் சங்கடம் இயல்பானதே. தடுப்பூசி போட்டதுமே குழந்தைக்கு காய்ச்சல் மாதிரியான சிறு உபத்திரவங்கள் தலைகாட்டலாம். காய்ச்சல் அதிகமாக இருந்தால், டாக்டர் தரும் மாத்திரைகளைப் பயன்படுத்தினால் போதும். வேறெந்த வகையிலும் தடுப்பூசிகள் விஷயத்தில் தயங்க வேண்டியதில்லை'' என்று தைரியமும் தந்தார்.
டாக்டர் அளித்த குறிப்புகளைக் கொண்டு குழந்தைகளுக்கான தடுப்பூசி பட்டியலை இங்கு உருவாக்கியிருக்கிறோம். இலவச தடுப்பூசிகள் தவிர்த்து... பிற ஊசிகளுக்கான விலை விவரங்கள், சில மருந்தாளுநர்கள் உதவியுடன் சேகரிக்கப்பட்டுள்ளது. இந்த மதிப்பு நீங்கள் நாடும் மருத்துவமனை, நகரம், சிற்றூர் என சில அம்சங்களைப் பொறுத்து கூடவோ அல்லது குறையவோ செய்யலாம்.
வளர்ப்பு பிராணிகளிடம் இருந்து குழந்தைகளைப் பாதுகாக்கும் நோக்கத்தில், அதற்கான தடுப்பூசியும் இப்பட்டியலில் உண்டு. ஹெபடைடிஸ் ரகங்கள் மற்றும் ஜப்பான் மூளைக்காய்ச்சல் போன்றவை பிராந்திய பாதிப்பைப் பொறுத்து அரசால் அமைக்கப்படும் மருத்துவ முகாம்களிலோ... லயன்ஸ், ரோட்டரி கிளப் போன்ற பொதுச்சேவை அமைப்புகள் நடத்தும் மருத்துவ முகாம்களிலோ இலவசமாக அல்லது மிகக்குறைந்த செலவில் போடப்படுகின்றன. அவற்றையும் பயன்படுத்திக்கொள்ளலாம். இங்கே தரப்பட்டிருக்கும் பட்டியலை ஒரு நினைவூட்டல் மற்றும் பார்வைக்காக வைத்துக் கொண்டு குழந்தை மருத்துவர் அல்லது குடும்ப மருத்துவர் ஆலோசனை மற்றும் கண்காணிப்பின் அடிப்படையில் மருத்துவ நடவடிக்கைகளை மேற்கொள்வது முக்கியம் என்பதை மறந்துவிடாதீர்கள்!
- எஸ்.கவின் நிலா
அவள் விகடன்

வியாழன், 27 ஜூன், 2013

பலம், பலவீனம்

கோவில் யானை ஒன்று நன்றாகக் குளித்துவிட்டு நெற்றியில் பட்டை தீட்டிக் கொண்டு சுத்தமாக வந்து கொண்டிருந்தது.

ஒரு ஒடுக்கமான பாலத்தில் அது வரும் போது எதிரே சேற்றில் குளித்துவிட்டு ஒரு பன்றி, வாலை ஆட்டிக் கொண்டே வந்தது.

யானை ஒரு ஓரத்தில் ஒதுங்கி நின்று அதற்கு வழி விட்டது.

அந்தப் பன்றி, எதிரே இருந்த இன்னொரு பன்றியிடம்,

"பார்த்தாயா, அந்த யானை என்னைக் கண்டு பயந்து விட்டது!" என்று சொல்லிச் சிரித்தது.

அந்த யானையைப் பார்த்து இன்னொரு யானை,

"அப்படியா, நீ பயந்து விட்டாயா?" என்று கேட்டது.

அதற்குக் கோவில் யானை சொன்னது:

"நான் தவறி இடறி விட்டால் பன்றி நசுங்கி விடும். மேலும் நான் சுத்தமாக இருக்கிறேன். பன்றியின் சேறு என் மேல் விழுந்து நானும் அசுத்தமாகி விடுவேன். இந்தக் காரணங்களால், நான் ஒதுங்கிக் கொண்டேன்."

நீதி : # தன் பலம், பலவீனம் தெரிந்தவர்கள் அடக்கத்தில் சிறந்தவர்களாக இருப்பார்கள்...

அறிவுரைகளை ஆராய்ந்து செயல்படுத்து!

    ஊருக்கு ஒதுக்குப் புறமாக ஒரு கொடிய விஷமுள்ள பாம்பு வாழ்ந்து வந்தது. ஊர்
    மக்கள் யாராவது அதன் புற்றின் பக்கம் போனால் சீறி வந்து கொத்தி விடும்.
    பாம்புப் புற்று இருந்த பாதை அந்த ஊருக்கும் பக்கத்து சந்தைக்கும் குறுக்கு
    வழி. பாம்புக்கு பயந்தே ஊர் மக்கள் பல தொலைவு சுற்றி அந்த சந்தைக்குப் போய்
    வந்து கொண்டிருந்தார்கள். வேறு வழியில்லாததால் சலிப்புடனேயே வாழ்க்கையை
    நடத்திக் கொண்டிருந்தனர்

    ஒரு நாள் அந்த ஊருக்கு ஒரு யோகி வந்தார். அவர் மிருகங்களிடம் பேசக் கூடிய வரம்
    பெற்றவர். ஊர் மக்கள் தங்கள் குறையை அவரிடம் முறையிட்டனர். அவர் பாம்பிடம் பேசி
    அதற்கு ஊர் மக்களை கடிக்கக் கூடாது என்று கட்டளை இட்டு விட்டு பக்கத்து
    ஊருக்குச் சென்று விட்டார். பாம்பும் அவர் கட்டளைக்குக் கட்டுப் பட்டு நடந்தது
    .

    ஆனால் ஊர் மக்கள் சும்மாயில்லை. வழியே போகும் சிறுவனுக்குக் கூட பாம்பிடம்
    இருந்த பயம் போய் விட்டது. பாம்பைக் கண்டால் அதைக் கல்லால் அடிப்பது,
    துன்புறுத்துவது, விரட்டியடிப்பது என்று அதன் வாழ்க்கையை நிம்மதியில்லாமல்
    செய்து கொண்டிருந்தனர். உடம்பில் பல காயங்களுடன் குற்றுயிரும் குலையுயிருமாகி
    விட்டது பாம்பு.

    யோகி ஒரு நாள் பாம்புப் புற்று இருந்த வழியாக ஊருக்குள் திரும்ப வரும் போது
    பாம்பின் பரிதாபமான நிலையைக் கண்டு அதனை விசாரித்தார். பாம்பும் நடந்த
    கதையையெல்லாம் கூறி அழுதது.


    யோகி பாம்பைப் பார்த்து "அட முட்டாள் பாம்பே! உன்னை மக்களைக் கடிக்கவேண்டாம்
    என்றுதானே கூறிச் சென்றேன். பக்கத்தில் வருபவனைப் பார்த்து சீறாதே என்று ஒரு
    போதும் சொல்லவில்லையே" என்று கேட்டார். இதற்குப் பின் பாம்பும் பிழைத்துக்
    கொண்டது.

    [image: அறிவுரைகளை ஆராய்ந்து செயல்படுத்து! - பாட்டி சொன்ன கதைகள்]

செவ்வாய், 25 ஜூன், 2013

எளிய இயற்கை மருத்துவம்:-

1. தினசரி ஒரு வெங்காயத்தை பச்சையாக உண்டு வந்தால் இரத்தம் சுத்தமாகும். இருமல், சளி நீங்கும்.

2. சுண்டைக்காயில் இரும்புச்சத்து அதிகமாக உள்ளது. இந்தக்காய் ஆஸ்துமா, ஜீரம் முதலியவற்றை நீக்கும்.

3. கர்ப்பிணிப் பெண்கள் தினமும் ஒரு முறை கேழ்வரகில் செய்த உணவுப்பொருளை சாப்பிட வேண்டும். இதில் இரும்புச்சத்து, கால்சியம் உள்ளது.

4. வேப்பம்பூவை ரசம் வைத்துச் சாப்பிட்டால் உடம்பில் உள்ள கிருமிகள் அழியும். பித்தம் குறையும்.

5. தினமும் முருங்கைக் கீரையைச் சாப்பிட்டால் நீரழிவு நோய் கட்டுப்படும். கண் பார்வை தெளிவு பெறும்.

6. அதிக இருமல் ஏற்படும் போது ஒரு ஸ்பூன் தேன் சாப்பிட்டால் இருமல் குறையும்.

7. சாதாரண வாய்வுப் பிடிப்பிற்கு சுக்கையும், பனை வெல்லத்தையும் கலந்து சாப்பிட்டால் போதும்.

8. அடிக்கடி காபி, டீ ஆகியவற்றை அளவுக்கு அதிகமாக குடிப்பதும், அடிக்கடி பட்டனி கிடப்பதும், சிகரெட், மது குடிப்பதாலும் குடற்புண் விரைவில் ஏற்படும்.

9. கூடுமான வரையில் தாளிப்பு இல்லாமல் உணவு உண்பதே நல்லது.

10. மைதா மாவினால் செய்த உணவுகளைக் குறைத்தாலும் அல்லது நீக்கினாலும் உடல் பருமன் குறையும்.

11. நாம் நம் உடம்பிற்கு ஒரே சோப்பையே எப்போதும் பயன்படுத்த வேண்டும். சோப்பை அடிக்கடி மாற்றுவதால் சரும வியாதிகள் ஏற்படும்.

12. நெய்க்காக வெண்ணையைக் காய்ச்சும் போது அரை ஸ்பூன் வெந்தையத்தைப் போட்டு இறக்கினால் நெய் மணமாக இருக்கும்.

13. மணத்தக்காளிக் கீரையை பருப்புடன் சேர்த்து தினமும் சாப்பிட்டு வந்தால் ஆசனக்கடுப்பு, மூல நோய் குணமாகும்.

14. கறிவேப்பிலை, இஞ்சி, சீரகம் மூன்றையும் சிறிதளவு எடுத்து ஒரு டம்ளர் தண்ணீர் ஊற்றி கொதிக்க வைத்துக் குடித்தால் அஜீரணம் சரியாகிவிடும்.

15. முள்ளங்கி கீரையில் வைட்டமின் சத்து உள்ளது. இக்கீரை தொற்று நோய்களை விரட்டி அடிக்கும்.

16. உடல் எடை குறைந்தவர்கள் வாழைப்பழம் தினமும் இரவில் உண்டு வந்தால் எடை கூடும்.

17. எலுமிச்சை, ஆரஞ்சு தோல்களை அலமாரியில் வைத்தால் சிறிய பூச்சிகள் நெருங்காது.

18. குளிக்கும் சோப்பைத் தலைக்கு தேய்கக் கூடாது. முடி கொட்டி, விரைவில் நரைத்து விடும்.

19. இட்லிக்கு மாவு அரைக்கும் போது உளுந்துக்குப்பதில் சோயா மொச்சையை பயன்படுத்தினால் அதிக சத்தான இட்லி கிடைக்கிறது.

சனி, 22 ஜூன், 2013

கர்ப்ப காலத்தில் குழந்தை பிரசவிப்பதைக் கணக்கிடுதல்

‘கர்ப்ப காலம்’ என்பது இருபத்தியெட்டு நாட்கள் மாதத்தீட்டு சுற்று இருக்கக்கூடிய பெண்ணுக்கு கடைசி மாதவிடாய் தேதியிலிருந்து 280 நாட்கள் எனவும். கரு உற்பத்தி ஆனலிருந்து 266 நாட்களெனவும் கணக்கிடப்பட்டிருக்கிறது. குழந்தை பிரசவம் ஆவதைக் கணக்கிட ஒரு சாதாரண ‘சூத்திரம்’ இருக்கிறது. அதாவது கடைசி மாதவிடாயின் முதல் நாளிலிருந்து ஏழு நாட்களைக் கூட்டிய பின் மூன்று மாதங்கள் பின்னோக்கிச் செல்ல வேண்டும்.

உதாரணத்திற்கு, கடைசி மாத்தீட்டு ஜூன் மாதம் முதல் தேதியில் ஆரம்பித்திருந்தால், அதோடு ஏழு நாட்களைக் கூட்டினால் ஜூன் எட்டாம் தேதி வரும். அதிலிருந்து மூன்று மாதங்கள் பின்னோக்கிச் சென்றால் மார்ச் மாதம் வரும். ஆக, குழந்தை பிரசவிப்பதை நாம் தோராயமாக ‘மார்ச் எட்டாம் தேதி’ எனக் கணக்கில் கொள்ளலாம். ஒரு சிறு சதவீத தாய்மார்களே அந்தக் கணக்கிடப்பட்ட தேதியில் பிரசவிப்பார்கள். அறுபது சதவித தாய்மார்கள் கணக்கிடப்பட்ட தேதியில் ஒர வாரம் முன்னரோ அல்லது பின்னரோ பிரசவிப்பார்கள்.

கர்ப்பப்பையில் குழந்தையின் நிலை

கர்ப்பப்பையில் குழந்தை எந்த நிலையில் இருக்கும் என்பதையும் நாம் தெரிந்துகொள்ள வேண்டும். முதுகுத் தண்டு முன்புறமாக வளைந்து, தலை வளைந்து, தாடை மார்பு எலும்பின் மேல் பட்டுக்கொண்டும், கைகள் வளைந்து மார்பின் குறுக்காக மடிந்து, கால்கள் வளைந்து தொடைகள் வயிற்றின் மீதும், முழங்கால்கள் வளைந்து தொடைகளின் மீதும் இருக்கும்.

பிரசவிக்கும் நிலை

பிரசவம் ஏற்படும்போது குழந்தை இருக்கும் நிலையைத்தான் ‘பிரசவிக்கும் நிலை’ என்போம். சாதாரணமாக அதிகபட்சப் பிரசவத்தில் தலைப்பகுதிதான் முதலில் பிரசவமாகும். இது 96 சதவீத கர்ப்பிணித் தாய்மார்களிடையே நிகழக் கூடியதாம். சில தாய்மார்களுக்குப் பிரசவத்தில் புட்டம் முதலில் பிரசவிக்கம். ஒரு சில தாய்மார்களுக்குப் பிரசவத்தில் முதலில் கைகளோ, கால்களோ பிரசவிக்கலாம்.

வியாழன், 20 ஜூன், 2013

பிறர் மத்தியில் நம் மதிப்பு உயர,

பத்துக் கட்டளைகள்

1. அன்பு செலுத்துங்கள். அக்கறை காட்டுங்கள்.

2. ஆர்வத்துடன் அதிகமாக செயல்பட விரும்புங்கள்.

3. இன்சொல் கூறி நான், எனது போன்ற வார்த்தைகளைத் தவிர்த்திடுங்கள்.

4. உணர்வுகளை மதிக்கவும், மரியாதை கொடுக்கவும் புகழவும் கற்றுக் கொள்ளுங்கள்.

5. ஊக்கத்துடன் சுறுசுறுப்பாகச் செயல்படுங்கள்.

6. எப்போதும் பேசுவதைக் கேட்டு, பின்விளைவை யோசித்து சரியான சைகை, முகபாவத்துடன் தெளிவாகப் பேசுங்கள்.

7. ஏற்றுக்கொள்ளும் மனப் பக்குவத்துடன் பிறர் குறைகளை அலட்சியப் படுத்துங்கள்.

8.ஐங்குணமாகிய நகைச்சுவை, நேர்மை, சமயோசிதம், இன்முகம், விட்டுக் கொடுத்தல் ஆகியவற்றைக் கடைப்பிடியுங்கள்.

9. ஒவ்வொருவரையும் வெவ்வேறு புதுப்புது வழிகளில் கையாளுங்கள்

10.ஓஹோ, இவர் இப்படித்தான் என்று யாரையும் பார்த்த மாத்திரத்தில் மதிப்பிடாதீர்கள்

Vel Murugan

♥, தமிழ் -கருத்துக்களம்-

செவ்வாய், 18 ஜூன், 2013

Useful websites


1) பட்டா / சிட்டா அடங்கல்
http://taluk.tn.nic.in/edistrict_certificate/land/chitta_ta.html?lan=ta

2) அ-பதிவேடு விவரங்களை பார்வையிட
http://taluk.tn.nic.in/eservicesnew/land/areg_ta.html?lan=ta

3) வில்லங்க சான்றிதழ்
http://www.tnreginet.net/igr/webAppln/EC.asp?tams=0

4) பிறப்பு மற்றும் இறப்பு சான்றிதழ்
http://www.tn.gov.in/appforms/birth.pdf

http://www.tn.gov.in/appforms/death.pdf

5) சாதி சான்றிதழ் / வாரிசு சான்றிதழ்
http://www.tn.gov.in/appforms/cert-community.pdf

6) இருப்பிட மற்றும் வருமான சான்றிதழ்
http://www.tn.gov.in/appforms/cert-income.pdf

C. E-டிக்கெட் முன் பதிவு

1) ரயில் மற்றும் பஸ் பயண சீட்டு
http://tnstc.ticketcounters.in/TNSTCOnline/

http://www.irctc.co.in/

http://www.yatra.com/

http://www.redbus.in/

2) விமான பயண சீட்டு
http://www.cleartrip.com/

http://www.makemytrip.com/

http://www.ezeego1.co.in/

D. E-Payments (Online)

1) BSNL தொலைபேசி மற்றும் Mobile Bill கட்டணம் செலுத்தும் வசதி
http://portal.bsnl.in/portal/aspxfiles/login.aspx

2) Mobile ரீ- சார்ஜ் மற்றும் டாப் அப் செய்யும் வசதி
https://www.oximall.com/

http://www.rechargeitnow.com/

http://www.itzcash.com/

3) E.B. Bill கட்டணம் செலுத்தும் வசதி
http://www.itzcash.com/

https://www.oximall.com/

http://www.rechargeitnow.com/

4) NEFT / RTGS மூலம் பிறர் ACCOUNT ‘க்கு பணம் மாற்றும் வசதி

5) E-Payment செய்து வேண்டிய பொருள் வாங்கும் வசதி
http://www.ebay.co.in/

http://shopping.indiatimes.com/

http://shopping.rediff.com/shopping/index.html

6) Share Market – பங்குச் சந்தையில் On-Line வணிகம் செய்யும் வசதி
http://www.icicidirect.com/

http://www.hdfcsec.com/

http://www.religareonline.com/

http://www.kotaksecurities.com/

http://www.sharekhan.com/

E. கல்வி மற்றும் வேலை வாய்ப்பு சார்ந்த சேவைகள் (Online)

1) மாணவர்கள் மேற்படிப்புக்கான வங்கிக் கடன் விவரங்கள் மற்றும் விண்ணப்பங்கள்
https://www.sbi.co.in/user.htm?action=viewsection&lang=0&id=0%2C1%2C20%2C118

http://www.indianbank.in/education.php

http://www.iob.in/vidya_jyothi.aspx

http://www.bankofindia.com/eduloans1.aspx

http://www.bankofbaroda.com/pfs/eduloans.asp

http://www.axisbank.com/personal/loans/studypower/Education-Loan.asp

http://www.hdfcbank.com/personal/loans/educational_loan/el_indian/el_indian.htm

2) பள்ளி மற்றும் கல்லூரி தேர்வு முடிவு / மதிப்பெண் பற்றிய தகவல் அறிந்துக் கொள்ளும் வசதி
http://www.tn.gov.in/dge/

http://www.tnresults.nic.in/

http://www.dge1.tn.nic.in/

http://www.dge2.tn.nic.in/

http://www.Pallikalvi.in/

http://www.results.southindia.com/

http://www.chennaionline.com/results

3) சமச்சீர் கல்வி பாட புத்தகங்களை பதிவிறக்கம் செய்ய
http://www.tn.gov.in/dge

4) இனையதளங்கள் மூலமாக 10th, 12th Std பாடங்களை கற்றுக்கொள்ளும் வசதி
http://www.classteacher.com/

http://www.lampsglow.com/

http://www.classontheweb.com/

http://www.edurite.com/

http://www.cbse.com/

5) 10th & 12th வகுப்பிற்கான அரசு தேர்வு மாதிரி கேள்வி தாள்கள் மற்றும் பாடங்களை படிக்க அல்லது பதிவிறக்கம் செய்ய
http://www.kalvisolai.com/

6) UPSC/ TNPSC/ BSRB / RRB / TRB க்கான பயிற்சி, தேர்வு மற்றும் வேலை வாய்ப்புகள் பற்றிய தகவல் அறிந்துக் கொள்ளும் வசதி
http://www.tnpsc.gov.in/

http://www.upsc.gov.in/

http://upscportal.com/civilservices/

http://www.iba.org.in/

http://www.rrcb.gov.in/

http://trb.tn.nic.in/

7) உள் நாடு மற்றும் உலக நாடுகளில் வேலை வாய்ப்புகள் பற்றிய தகவல் அறிந்துக் கொள்ளும் வசதி, பதிவு செய்து விண்ணப்பிக்கும் வசதி
http://www.employmentnews.gov.in/

http://www.omcmanpower.com/

http://www.naukri.com/

http://www.monster.com/

8) .இந்திய ராணுவத்தில் வேலை வாய்ப்புகள் அறிய
http://www.ssbrectt.gov.in/

http://bsf.nic.in/en/career.html

http://indianarmy.nic.in/

9) இந்திய கப்பல் படையில் பயிற்சி மற்றும் வேலை வாய்ப்புகள் அறிய
http://nausena-bharti.nic.in/

10) Face to Face chat / Interview நேர்காணல் செய்யும் வசதி
http://www.skype.com/

http://www.gmail.com/

http://www.yahoochat.com/

http://www.meebo.com/

F. கணினி பயிற்சிகள் (Online)

1) அடிப்படை கணினி பயிற்சி
http://www.homeandlearn.co.uk/

http://www.intelligentedu.com/

http://www.ehow.com/about_6133736_online-basic-computer-training.html

2) சிறார்களுக்கு கணினி பயிற்சி
http://www.ehow.com/video_5846782_basic-computer-training-children.html

3) இ – விளையாட்டுக்கள்
http://www.zapak.com/

http://www.miniclip.com/

http://www.pogo.com/

http://www.freeonlinegames.com/

http://www.roundgames.com/

4) ப்ரௌசிங், இ-மெயில், சாட்டிங், வெப் கான்ஃபெரென்ஸ், தகவல் தேடுதள்
http://www.google.com/

http://www.wikipedia.com/

http://www.hotmail.com/

http://www.yahoo.com/

http://www.ebuddy.com/

http://www.skype.com/

G. பொது சேவைகள் (Online)

1) தகவல் அறியும் உரிமை சட்டம்
http://rti.gov.in/

http://www.rtiindia.org/forum/content/

http://rti.india.gov.in/

http://www.rti.org/

2) சுற்றுலா மற்றும் முக்கிய தலங்கள் பற்றிய தகவல் பெறும் வசதி
http://www.incredibleindia.org/

http://www.india-tourism.com/

http://www.theashokgroup.com/

http://www.smartindiaonline.com/

3) திருமணம் புரிய விரும்புவோர் இணையதளங்கள் மூலமாக பதிவு செய்து தங்கள் வாழ்க்கை துணையை தேடி தேர்வு செய்யும் வசதி
http://www.tamilmatrimony.com/

http://kalyanamalai.net/

http://www.bharatmatrimony.com/

http://www.shaadi.com/

4) குழந்தைகளுக்கான தமிழ் பெயர்களை அர்த்ததோடு பார்க்கவும் மற்றும் தமிழ் அகராதி, தமிழ் புத்தகங்களை பார்க்க மற்றும் பதிவிறக்கம் செய்ய
http://www.tamilcube.com/

5) ஜாதகம் மற்றும் ராசிபலனை அறிந்துக் கொள்ள
http://www.koodal.com/

http://freehoroscopesonline.in/horoscope.php

6) இனையதளம் மூலமாக இந்தியாவில் எந்த ஒரு மொபைலுக்கும் இலவசமாக SMS அனுப்பும் வசதி
http://www.way2sms.com/

7) இனையதளம் மூலமாக உங்களுக்கு தேவையான VIDEO படங்களை தேடி கண்டு மகிழலாம்
http://www.youtube.com/

8) இனையதளம் மூலமாக உங்களுக்கு தேவையான தொழில் / வர்த்தகம் மற்றும் ஸ்தாபனங்கின் முகவரி / தொலைபேசி தகவல்கலை இலவசமாக தேடி தெரிந்து கொள்ளலாம்
http://www.justdial.com/

9) இனையதளம் மூலமாக உங்களுக்கு தேவையான மொழியில் தினசரி / வார நாளிதல்களை இலவசமாக வாசித்து செய்திகளை அறியலாம்
http://www.dinamalar.com/

http://www.dinamani.com/

http://www.dailythanthi.com/

http://www.tamilnewspaper.net/

http://www.vikatan.com/

http://www.puthiyathalaimurai.com/

http://www.nakkheeran.in/

10) இனையதளம் மூலமாக உங்களுக்கு தேவையான தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிகளை நேரலையாக இலவசமாக கண்டு மகிழலாம்
http://puthiyathalaimurai.tv/new/

http://www.bbc.co.uk/

11) SPEED POST மூலமாக நீங்கள் அனுப்பும் தபால்களை இந்திய தபால் துறையின் இனையதளம் மூலமாக தபால் சேர்ந்த விவரம் அறியலாம்
http://services.ptcmysore.gov.in/Speednettracking/Track.aspx

12) இந்திய தபால் துறையின் INTERNATIONAL SPEED POST / ELECRTONIC MONEY ORDER / REGISTERED POST / EXPRESS PARCEL / E-VPP சேவைகளை தபால் துறையின் இனையதளம் மூலமாக விவரம் அறியலாம்.
http://www.indiapost.gov.in/tracking.aspx

H. மென்பொருள் (Software) பதிவிறக்கம் செய்ய

1) இனையதளம் மூலமாக உங்களுக்கு தேவையான மென்பொறுளை இலவசமாக பதிவிறக்கம் செய்து உபயோகிக்கலாம்
http://www.filehippo.com/

I. வணிகம் (Economy)

1) தமிழ் நாட்டின் இன்றைய தங்கம் மற்றும் வெள்ளியின் விலை விவரம் அறியலாம்
http://www.goldenchennai.com/

http://www.rates.goldenchennai.com/

http://www.bullionrates.in/p/live-bullion-rates.html

2) வெளிநாட்டின் பணமதிப்புக்கு இந்திய ரூபாயின் அன்றைய மாற்றத்தக்க மதிப்பை அறியலாம்
http://www.gocurrency.com/

http://www.xe.com/

H. அரசு சார்ந்த விண்ணப்ப படிவங்கள் (Online)

1) பாஸ்போர்ட் விண்ணப்பம்
http://www.passport.gov.in/

2) பட்டதாரிகள் அரசு வேலைவாய்ப்பிற்கு பதிவு செய்ய
http://www.tn.gov.in/services/employment.html

J. அரசு நலத் திட்ட படிவங்கள் (Online)

1) குடும்ப அட்டை
http://www.tn.gov.in/appforms/ration.pdf

2) மகளிர் சுய வேலை வாய்ப்பு திட்டத்தின் கீழ் வங்கிக் கடன் பெறுவதற்கான விண்ணப்பம்
http://www.tn.gov.in/tamiltngov/appforms/socialwelfare/wses_bankloan_form.pdf

3) பெண்கள் திருமணத்திற்கு கோரப்படும் உதவித் தொகை விண்ணப்பம் மற்றும் பெண் குழந்தை பாதுகாப்பு திட்டம்
http://www.tn.gov.in/tamiltngov/appforms/socialwelfare/socialwelfareschemes.pdf

4) நலிந்தோர் குடும்ப நல நிதியுதவி பெருவதற்கான மனு
http://www.tn.gov.in/tamiltngov/appforms/pdf-drs.pdf

5) ஆதரவற்ற முதியோர் / விதவைகள் / கணவனால் கைவிடப்பட்ட பெண்கள் / உடல் ஊனமுற்றோர் உதவி தொகைக்கான மனு
http://www.tn.gov.in/tamiltngov/appforms/pdf-oap.pdf

http://www.tn.gov.in/schemes/swnmp/social_security_net.pdf

6) புல எல்லை அளந்து அத்து காட்டக் கோருவதற்கான விண்ணப்பம்
http://www.tn.gov.in/tamiltngov/appforms/pdf-boundary.pdf

7) திருமணப்பதிவிற்கான குறிப்பாவணம் மற்றும் விண்ணப்ப படிவம்
http://www.tnreginet.net/english/Applforms/appln3.doc

http://www.tnreginet.net/english/Applforms/compulsory_marriage/Comp_Marriage_Application_Tamil.pdf

8) பட்டா பதிவு மாற்றம் கோருவதற்கான விண்ணப்ப படிவம் – சாதாரண பெயர் மாற்றம் / உட்பிரிவு மாற்றம்
http://www.tn.gov.in/tamiltngov/appforms/pdf-patta-transfer.pdf

K. விவசாய சந்தை சேவைகள் (Online)

1) தேசிய அளவிலான விற்பனை நிலவரம்
http://agmarknet.nic.in/

2) பதிவு செய்து தினசரி சந்தை விலைகளை பெறும் வசதி
http://indg.in/agriculture/e2030aci-nya2039-aea3153oiTM-moo2039/

3) தோட்டப்பயிரகளின் சந்தை நிலவரம்
http://nhb.gov.in/OnlineClient/categorywiseallvarietyreport.aspx

4) முக்கிய வியாபாரிகள் பற்றிய விவரம்
http://indg.in/agriculture/major-traders-database/

5) தமிழ்நாட்டில் உள்ள விவசாய அமைப்புகள் / சங்கங்கள்
http://indg.in/agriculture/database-of-growers-federations-farmers-associations-in-tamil-nadu/

6) கொள்முதல் விலை நிலவரம்
http://www.tnsamb.gov.in/price/login.php

7) ஒழுங்குமுறை விற்பனை கூடம்
http://www.tnsamb.gov.in/mktcom.php

8) தினசரி சந்தை விற்பனை விலை நிலவரம்
http://59.90.246.98/pricelist/

9) வானிலை செய்திகள்
http://services.indg.in/weather-forecast/

L. தொழில் நுட்பங்கள்

1) பயிர் சாகுபடி, பாதுகாப்பு மற்றும் பயிர் பெருக்கம்
http://www.agritech.tnau.ac.in/ta/Agriculture/agri_index_ta.html

http://www.agritech.tnau.ac.in/ta/crop_protection/crop_prot_ta.html

2) விதை கொள்முதல் செய்ய இருப்பு நிலை விவரம்
http://www.tnagrisnet.tn.gov.in/website/availabilityReports.php?type=Seed

3) உயிரிய தொழில்நுட்பம்
http://www.agritech.tnau.ac.in/ta/bio_tech/biotech_ta.html

4) அறுவடை பின்சார் தொழில் நுட்பம்
http://www.agritech.tnau.ac.in/ta/post_harvest/post_harvest_ta.html

5) உயிரி எரிபொருள்
http://www.agritech.tnau.ac.in/ta/bio_fuels/bio_fuels_ta.html

M. வேளாண் செய்திகள்

1) பாரம்பரிய வேளாண்மை
http://www.agritech.tnau.ac.in/ta/itk/indi_farm_ta.html

http://www.agritech.tnau.ac.in/ta/crop_protection/crop_prot_ta.html

2) வளம்குன்றா வேளாண்மை
http://www.agritech.tnau.ac.in/ta/sustainable_agri/susagri_ta.html

3) பண்ணை சார் தொழில்கள்
http://www.agritech.tnau.ac.in/ta/farm_enterprises/farm_enter_ta.html

4) ஊட்டச்சத்து
http://www.agritech.tnau.ac.in/ta/nutrition/nutrition_ta.html

5) உழவர்களின் கண்டுபிடிப்பு
http://www.agritech.tnau.ac.in/ta/farm_innovations/farm_innovations.html

N. திட்டம் மற்றும் சேவைகள்

1) ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறையின் திட்டங்கள் & சேவைகள்
http://www.tnrd.gov.in/schemes_states.html

2) வேளாண் மற்றும் ஊரக வளர்ச்சிக்கான திட்டங்கள் & சேவைகள்
http://www.agritech.tnau.ac.in/ta/govt_schemes_services/govt_serv_schemes_ta.html

3) வட்டார வளர்ச்சி
http://www.agritech.tnau.ac.in/ta/dev_blocks/indextnmap_ta.html

4) வங்கி சேவை & கடனுதவி
http://www.agritech.tnau.ac.in/ta/banking/credit_bank_ta.htm

5) பயிர் காப்பீடு
http://www.agritech.tnau.ac.in/ta/crop_insurance/crop_ins_ta.html

6) Krishi Vigyan Kendra (KVK) | Agricultural Technology Management Agency (ATMA)
http://www.agritech.tnau.ac.in/ta/kvk/kvk_ta.html

http://www.agritech.tnau.ac.in/ta/atma/atma_ta.html

7) NGOs & SHGs
http://www.agritech.tnau.ac.in/ta/ngo_shg/ngo_shg_ta.html

8) அக்ரி கிளினிக்
http://www.agriclinics.net/

9) கிசான் அழைப்பு மையம்
http://www.agritech.tnau.ac.in/ta/kisan/kisan_ta.html

10) பல்லாண்டு மேம்பாட்டு குறிக்கோள்
http://www.agritech.tnau.ac.in/ta/mdg/mdg_ta.html

11) கேள்வி பதில்
http://www.agritech.tnau.ac.in/ta/faq_ta.html

12) பல்கலைக்கழக வெளியீடுகள்
http://www.agritech.tnau.ac.in/ta/tnau_publications/tnau_publish_ta.html

O. ஈ – வேளாண்மை செய்தி மற்றும் சேவைகள்

1) தோட்டக்கலை
http://www.agritech.tnau.ac.in/ta/horticulture/horti_index_ta.html

2) வேளாண் பொறியியல்
http://www.agritech.tnau.ac.in/ta/agrl_engg/agriengg_index_ta.html

3) விதை சான்றிதழ்
http://www.agritech.tnau.ac.in/ta/seed_certification/seedcertification_index_ta.html

4) அங்கக சான்றிதழ்
http://www.agritech.tnau.ac.in/ta/org_farm/orgfarm_index_ta.html

5) பட்டுபுழு வளர்பு
http://www.agritech.tnau.ac.in/ta/sericulture/seri_index_ta.html

6) வனவியல்
http://www.agritech.tnau.ac.in/ta/forestry/forestry_tamil_index.html

7) மீன்வளம் மற்றும் கால்நடை
http://www.agritech.tnau.ac.in/ta/fisheries/fish_index_ta.html

8) தினசரி வானிலை, மழைப்பொழிவு மற்றும் நீர்த்தேக்க நிலைகள்
http://services.indg.in/weather-forecast/

9) விதை மற்றும் உரம் தயாரிப்பாளர் விபரம்
http://www.tnsamb.gov.in/seedcomp.html

http://www.tnsamb.gov.in/fertilizers.html

10) உரங்களின் விலை விபரம்
http://www.tnagrisnet.tn.gov.in/website/FertilizerPrice.php

P. போக்குவரத்து துறை

1) ஓட்டுனர் பழகுனர் உரிமம் மனு முன்பதிவு
http://www.tn.gov.in/appforms/form2.pdf

2) புகார்/கோரிக்கைப் பதிவு
http://transport.tn.nic.in/transport/registerGrievanceLoad.do

3) வாகன வரி விகிதங்கள்
http://www.tn.gov.in/sta/taxtables.html

4) புகார்/கோரிக்கை நிலவரம்
http://transport.tn.nic.in/transport/grievance_statusLoad.do

5) ஓட்டுனர் உரிமம் சேவை முன்பதிவு
http://tnsta.gov.in/transport/transportTamMain.do

6) தொடக்க வாகன பதிவு எண்
http://transport.tn.nic.in/transport/rtoStartNoListAct.do

♥, தமிழ் -கருத்துக்களம்-

வெள்ளி, 14 ஜூன், 2013

நாய்க்குட்டி சொன்ன நீதி

ஒரு வீட்டில் நாய்க்குட்டியொன்றை எடுத்து வளர்த்து வந்தார்கள்.அந்த நாய்க் குட்டி காகத்துடன் நட்பாக இருந்தது. ஒரு நாள் காகம் மிகவும் கவலையுடன் அமர்ந்திருந்தது.

இதைக் கண்ட நாய்க் குட்டி காகத்திடம் சென்று.

என்ன காக்கையாரே! ஏன் ஒன்றும் பேசாமல் வருத்தமாக இருக்கிறீர்? என்று கேட்டது.

அதற்கு காகம், மனிதர்கள் மற்றப் பறவைகளை அன்புடன் வளர்க்கின்றார்கள். அவைகளின் செயல்களைப் பாராட்டுகின்றார்கள் ஆனால் என்னை வெறுத்து. கல்லால் எறிந்து துரத்துகிறார்களே ஏன்? என்று கேட்டது காகம்.

இதற்குக் காரணம் உங்கள் தீய குணங்கள்தான். இதை இல்லாதொலித்தால் உங்களையும் அன்பாக நடத்துவார்கள், என்றது நாய்க் குட்டி

எங்களிடம் அப்படியென்ன தீய குணங்கள் உள்ளன? கடைமை,சுத்தம், இப்படிப் பல நல்ல குணங்களில் நாங்கள்தான் சிறந்தவர்கள்!என்று சொன்னது காகம்.

உண்மைதான்! என்றது நாய்க் குட்டி

பகிர்ந்துண்ணும் பண்பைக் கற்றுத்தந்ததும் நாங்கள்தான்! என்று பெருமையோடு சொன்னது காகம்.

ஆமாம் அதுவும் உண்மைதான்! என்று மறுபடியும் சொன்னது நாய்க்குட்டி.

இப்படி நல்ல குணங்கள் எம்மிடம் இருந்தும், மற்றப் பறவைகளுக்கு உள்ள மதிப்பு எங்களுக்கு இல்லையே ஏன்?

குயில் கூவும்போது அதன் இனிமையை இரசிக்கிறார்கள். மயிலாடும் போது அதை இரசித்துப் பாராட்டுகிறார்கள். கிளியை வீட்டில் வளர்த்து பேசக் கற்றுக் கொடுக்கிறார்கள்.அனால் எவ்வளவோ நல்ல குணங்கள் இருந்தும் எம்மினத்தைக் கண்டாலே துரத்துகிறார்களே ஏன்? என்று மீண்டும் கேட்டது காகம்.

ஏன் என்று நான் சொல்லுகிறேன். உங்களிடம் எவ்வளவு நல்ல குணங்கள் இருந்தாலும். உங்களிடம் இருக்கும் சில தீய குணங்களால் தான் மனிதர்கள் உங்களை வெறுக்கிறார்கள், என்று கூறியது நாய்க்குட்டி

அப்படி என்ன தீய குணங்கள்? என்று கேட்டது காகம்.

திருடுதல்,ஏமாற்றுதல், என்று சொன்னது நாய்க்குட்டி. காகம் தலை குனிந்தது.

ஒருவரிடம் எவ்வளவு நல்ல பண்புகள் இருந்தாலும். அவரின் ஒரு சிறு தீயசெயல் அவரை,அவரின் அத்தனை நல்ல பண்புகளில் இருந்தும் மறைத்து.அந்த தீய செயலே முன்னிற்கும்.

வியாழன், 13 ஜூன், 2013

தேன்

எத்தனை காலமானாலும் கெட்டுப் போகாத ஒரே பொருள் தேன். தேன் என்று சொல்லி சக்கரைப்பாகுவை விற்று விடுவோரும் உண்டு. தேன் வாங்கும்போது உண்மையான தேன்தானா என அறிந்துகொள்ள 2 வழிகள்..

1) ஒரு காகிதத்தில் ஒரு துளி தேனை வைத்தால் அது காகிதத்தால் உறிஞ்சப்படாமல், பரவாமல் அப்படியே நிற்கும்.

2) ஒரு கிளாஸ் தண்ணீரில் ஒரு துளி தேனையிட்டால் அது நீரோடு கரையாமல், நேராக கீழே சென்று அமரும்.

பிரச்சினை

வாத்தியார் வகுப்பறைக்குள் நுழைந்தார். மேஜை மீதிருந்த கண்ணாடி டம்ப்ளரை எடுத்து தூக்கிக் காட்டினார்.

“இது எவ்வளவு வெயிட் இருக்கும்?”

100 கிராம், 50 கிராம் என்று மாணவர்கள் ஆளாளுக்கு ஒரு எடையை சொன்னார்கள்.

“இதோட சரியான எடை எனக்கும் தெரியாது. ஆனா என்னோட கேள்வி அதுவல்ல”

வாத்தியார் தொடர்ந்தார். “இதை அப்படியே நான் கையிலே பிடிச்சிக்கிட்டிருந்தேன்னா என்ன ஆகும்?”

“ஒண்ணுமே ஆகாது சார்”

”வெரிகுட். ஆனா ஒரு மணி நேரம் இப்படியே பிடிச்சிக்கிட்டிருந்தேன்னா...?

“உங்க கை வலிக்கும் சார்”

“ஒருநாள் முழுக்க இப்படியே வெச்சிருந்தேன்னா...”

“உங்க கை அப்படியே மரத்துடும் சார்”

“வெரி வெரி குட். ஒரு மணி நேரத்துலே என் கை வலிக்கறதுக்கும், ஒரு நாளிலே மரத்துப் போகிற அளவுக்கு மாறுறதுக்கு இந்த தம்ப்ளரோட வெயிட் கூடிக்கிட்டே போகுமா என்ன?”

“இல்லை சார். அது வந்து...”

“எனக்கு கை வலிக்காம, மரத்துடாம ஆகணும்னா நான் என்ன பண்ணனும்?”

“கிளாஸை உடனே கீழே வெச்சுடணும் சார்”

”எக்ஸாக்ட்லி. இந்த கிளாஸ்தான் பிரச்சினை. ஒரு பிரச்சினை நமக்கு வந்ததுன்னா அதை அப்படியே மண்டைக்கு ஏத்தி ஒரு மணி நேரம் வெச்சிருந்தோம்னா வலிக்க ஆரம்பிக்கும். ஒரு நாள் முழுக்க அப்படியே வெச்சிருந்தா மூளை செயலிழந்து மரத்துடும். அதனாலே உங்களுக்கு ஏதாவது பிரச்சினை வந்துடிச்சின்னா தூக்கி ஒரு ஓரமா கடாசிடுங்க. அதுவே சரியாயிடும். சரியா?”

'சற்றே திரும்பிப் பாருங்கள்!'

விவேகானந்தர் ஒருமுறை, இமயமலை நோக்கிபயணித்துக் கொண்டிருந்தார். அவருடன் வந்த வயதான முதியவர் ஒருவர், ''இன்னும் நீண்ட தூரம் பயணிப்பது சாத்தியம் இல்லை. இதற்கு மேல் என்னால் ஓர் அடிகூட எடுத்து வைக்க முடியாது. நெஞ்சே வெடித்து விடும் போல் இருக்கிறது'' என்று புலம்பினார்.

உடனே விவேகானந்தர், ''நீங்கள் கடந்து வந்த பாதையை சற்றே திரும்பிப் பாருங்கள்; உங்களுடைய கால்களின் மூலம்தான் இவ்வளவு தூரத்தையும் கடந்து வந்திருக்கிறீர்கள். இதே கால்களால்தான் இன்னமும் உள்ள தொலைதூரத்தை கடக்கப் போகிறீர்கள். அதற்கான சக்தியும் உறுதியும் உங்களது கால் களுக்கு உண்டு'' என்றார்.

இதைக் கேட்டு உத்வேகம் அடைந்த முதியவர், தொடர்ந்து நடப்பது என்று உறுதி கொண்டார். இந்த வைராக்கியத்தால்தான், விவேகானந்தருடன் இமயமலை செல்லும் பாக்கியம் முதியவருக்குக் கிடைத்ததாம்!

_ கே.என். மகாலிங்கம்,

செவ்வாய், 11 ஜூன், 2013

குழந்தை

* அவமானப்படுத்தபடும் குழந்தை குற்றவாளி ஆகிறது.

* கேலி செய்யபடும் குழந்தை வெட்கத்தோடு வளர்கிறது.

* குறைகூறி வளர்க்கப்படும் குழந்தை வெறுக்க கற்றுக்கொள்கிறது.

* அடக்கி வளர்க்கப்படும் குழந்தை சண்டையிட கற்றுக்கொள்கிறது.

* பாதுகாக்கப்படும் குழந்தை நம்பிக்கை பெறுகிறது.

* ஊக்குவிக்கப்படும் குழந்தை மனதிடம் பெறுகிறது.

* புகழப்படும் குழந்தை பிறரை மதிக்க கற்றுக்கொள்கிறது.

* நட்போடு வளரும் குழந்தை உல்கத்தை நேசிக்க கற்றுக்கொள்கிறது.

* நேர்மையை கண்டு வளரும் குழந்தை நியாயத்தை கற்றுக்கொள்கிறது.

* * 4,5 வயதுகளில் குழந்தைக்கு நன்மை,தீமையை பற்றி சொல்லி தரவேண்டும்.

** தினமும் அரை மணி நேரமாவது தந்தை, குழந்தைகளிடம் நண்பனைப்போல் உரையாடுங்கள்.

தமிழ் -கருத்துக்களம்-

பேரீச்சம்பழம்: என்ன சத்து?

இரும்புசத்து மற்றும் நார்சத்து 

எப்படி சாப்பிடலாம்?

பாலை நன்கு கொதிக்க வைத்து பேரீச்சம்பளத்தை அதில் கலந்து தினமும் இளம்பெண்கள், வளரும் குழந்தைகள், கர்ப்பிணி பெண்கள் சாப்பிடவேண்டும்.

என்ன பலன்?

நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.
உடலில் உள்ள ஹார்மோன்களை சரிசெய்ய உதவுகின்றது.
மாதவிடாய் பிரச்னைகளை உடைய‌ பெண்கள் தினமும் பாலுடன் இரண்டு பேரீச்சம்பழத்தை போட்டு கொதிக்க வைத்து, தேன் கலந்து ஒவ்வொரு நாளும் சாப்பிட்டு வந்தால் மாதவிடாய் பிரச்சனை நீங்கும்..


Thanks, Doctor Vikatan

சனி, 1 ஜூன், 2013

குழந்தைகளை தாக்கும் ஐந்து நோய்கள்..

1..வயிற்றுபோக்கு : குழந்தைகள் வயிற்றுபோக்கினால் பாதிக்கப்படுவது எல்லா குழந்தைகளுக்கும் ஏற்படக்கூடிய பொதுவான பிரச்சனைகளில் ஒன்றாக இருக்கிறது. இது உணவு ஒவ்வாமையினால் ஏற்படக்கூடியது. சில உணவுகள் அஜீரணம் ஆகாமை, நோய்தொற்று, ஒவ்வாமை உணவு, போன்ற காரணங்களால் வயிற்றுபோக்கு ஏற்படுகிறது. இந்த சமயத்தில் நீங்கள் சில தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். குழந்தைக்கு நீரேற்றத்தை தக்க வைத்துகொள்ளும் உப்பு மற்றும் சர்க்கரை கலந்த தண்ணீரை ஒரு மருந்தளவு கொடுப்பதால் குழந்தைகளின் உடலுக்கு வலு சேர்க்கிறது.. இதற்கு பிறகும் எந்த முன்னேற்றமும் இல்லையென்றால் மருத்துவரை அனுகுவது அவசியம். 

2..காய்ச்சல்: பெரும்பாலான குழந்தைகள் காய்ச்சலால் அடிக்கடி பாதிக்கப்படுகின்றனர். காய்ச்சல் வர குழந்தைகளுக்கு பல காரணங்கள் இருக்கின்றன அதாவது ஜலதோஷம், இருமல், நோய்தொற்று, உடலின் வளர்ச்சி மாற்றங்கள் என பல காரணங்களால் ஏற்படுகிறது. ஆனால் பல பெற்றோர்கள் குழந்தைக்கு ஏற்பட்டிருக்கும் காய்ச்சலை நோய்தொற்று காரணமாக ஏற்பட்டிருக்கும் என நினைத்து வீட் மருத்துவத்தை பயன்படுத்துகின்றனர். குழந்தைக்கு 100 டிகிரி அதனைவிட அதிக டிகிரியில் காய்ச்சல் இருப்பின் உடனே மருத்துவரை அணுகி குழந்தைக்கு ஏற்பட்டிருக்கும் காய்ச்சலை பற்றி தெரிந்து கொள்ள வேண்டும்.. 

3..இருமல்: குழந்தைக்கு இருமல் இருப்பின் அதை சரிசெய்ய பல வீட்டு மருத்துவமே உள்ளது அதை நீங்கள் பயன்படுத்தி குழந்தையின் இருமலை சரிசெய்யலாம். இது குழந்தைகளை அடிக்கடி தாக்கும் ஒரு நோய். இது காய்ச்சல் வரும் நேரங்களில் மூக்கில் நோய்தொற்று ஏற்படுத்துகிறது. கடுமையான காய்ச்சலுடன் இருமலும் சேர்ந்து குழந்தையின் இயல்பு நிலை பாதிக்கப்பட்டால் நிமோனியா அல்லது வைரஸ் காய்ச்சலின் அறிகுறியாக இருக்கும்..இது உங்கள் குழந்தைக்கு ஆஸ்துமா இருப்பதற்கான ஒரு அறிகுறியாகும்..இது தொற்று நோய் பட்டியலில் வரக்கூடியது. இது குறித்து கவலை கொள்ள வேண்டாம்.

4..வயிறு பிரச்சினைகள்: வயிறு வலி, மலச்சிக்கள்,அமிலத்தன்மை,அஜீரணம் போன்ற காரணத்தால் வயிற்றில் விலி, வயிற்றில் பிரச்சனைகள் ஏற்படுகிறது. கிருமிகள் உள்ள உணவை சாப்பிடுவதால் வறிற்றில் வலி ஏற்படுகிறது. லேசான காய்ச்சலுடன் வயிறு வலி இருந்தால் உடனே மருத்துவரை பரிசோதிக்க வேண்டும். 

5..அரிப்பு மற்றும் தடிப்பு: குழந்தைகளுக்கு பயன்படுத்தும் டயாப்பர் அரிப்பு, தோல் அழற்சி, அதிக நேரம் உபயோகிப்பதால் குழந்தைக்கு பாதிப்பு ஏற்படும். எனவே இதை உபயோகபடுத்துவதில் கவனம் தேவை...