புதன், 26 நவம்பர், 2014
செவ்வாய், 25 நவம்பர், 2014
கணினியில் பணிபுரியும் போது கவனிக்க…
# கணினிமுன் தொடர்ச்சியாக அமர்ந்து பணிபுரிபவர்கள் குறிப்பிட்ட கால இடைவெளியில் நாம் அமர்ந்திருக்கும் இருக்கையை விட்டெழுந்து நடந்து வந்து பணியைத் தொடர்ந்து செய்ய வேண்டும்.
# நாளொன்றுக்கு இரண்டு லிட்டர் அளவுக்குக் குறையாமல் தண்ணீர் குடிக்க வேண்டும்.
# கணினியில் தொடர்ந்து பணிபுரிவதைத் தவிர்ப்பதற்காக அவ்வப்போது இடைவேளை விடுவதாகக் கூறிக்கொண்டு ஏராளமாகக் காபியைக் குடிக்க வேண்டாம். அதுவே உடல்நிலையைப் பாதிக்கலாம்.
# தொடர்ந்து நாள் முழுவதும் பணிசெய்வதற்காகக் கணினியின் திரையைக் கண்களால் பார்த்துக் கொண்டே இருப்பதால் கண்ணுக்குச் சோர்வும் கண்ணின் ஈரப்பசை காய்ந்தும் இருக்கும். அதனால் அரைமணிநேரத்துக்கு ஒருமுறை கண்களைப் பத்துமுறை மூடிதிறந்திடுக.
# நாம் பணிபுரியும் கணினியும் நாம் அமரும் நாற்காலியும் சரியான முறையில் அமையுமாறு பார்த்துக்கொள்க. இல்லையெனில் முதுகுவலியும் கழுத்துவலியும் இலவசமாக வந்துசேரும்
# பணி இடைவேளையில் சமோசா போன்றவைகளை உண்பதும், கோக்கோ கோலா போன்றவைகளை அருந்துவதையும் தவிர்த்துப் பழங்களை உண்ணும் பழக்கத்தைப் பின்பற்றிடுக.
# வெப்ப மிகுந்த அறைகளிலிருந்து ஈரப்பதம் அதிகமாகவுள்ள கணினி வைத்துள்ள அறைக்குள் சென்றிடும்போது சிறிதுநேரம் நம்முடைய உடல் அம்மாற்றங்களை ஏற்குமாறு நின்று நிதானித்துச் செல்க.
# கூடியவரை இயற்கையான சூரியஒளி காற்றோட்டம் போன்றவை அலுவலக அறைக்குக் கிடைக்குமாறு அமைத்திடுக.
ஃபோபியா: சின்ன பயம்... பெரிய அபாயம்!
பெரும்பாலான மனநலப் பிரச்னைகளுக்கு சிறு வயதில் நடந்த சம்பவங்கள் தான் காரணமாக இருக்கிறது. அந்த வகையில், ஃபோபியா வருவதற்கும் சிறு வயது தாக்கம் முக்கியக் காரணமாக இருக்கலாம்" என்று உளவியல் பகுப்பாய்வு நூலில் சிக்மண்டு பிராய்டு தெரிவித்துள்ளார்.
ஃபோபியா குறித்துப் பேசுகிறார் மனநல மருத்துவர் டி.வி.அசோகன்...
''பயம் தேவையற்றது. ஆனால், எல்லோரும் பயப்படவே செய்கிறோம். அதற்காக, எல்லா விஷயத்துக்கும் பயந்து கொண்டிருக்கலாமா? அப்படிச் சின்னச் சின்ன விஷயத்துக்குக் கூடப் பயப்படுவதைத்தான் ஃபோபியா என்கிறார்கள் நிபுணர்கள். இந்த ஃபோபியாவை, 'இயற்கைக்கு மாறான அச்சம்' என்றும் கூறப்படுகிறது.
சாதாரணமாகப் பயப்படுபவரைக் காட்டிலும், ஃபோபியாவால் பாதிப்படைந்தவர்கள்தான் அதிகப் பிரச்னைகளை எதிர்கொள்கின்றனர்.
தண்ணீரைக் கண்டால் பயம், உயரமான இடத்தில் ஏற பயம், யாராவது கத்தினால் பயம்... நடுக்கம், பயணம் செய்யப் பயம், பூனையைக் கண்டால் பயம், தனிமையாக இருக்கப் பயம், ரத்தத்தைக் கண்டால் பயம், பூச்சியைக் கண்டால் பயம் என்று நீளும் ஃபோபியாக்களின் வகைகள் ஏராளம். இதுவும், ஒருவித மனநோய் தான்.

இத்தகைய ஃபோபியாக்கள், உடம்பில் ஏற்படும் ரசாயன மாற்றத்தினால் ஏற்படுகிறது. குடும்பத்தில் அல்லது சுற்றுப்புறத்தில் பாதிக்கின்ற நிகழ்வுகள், மனசுக்குள் கண்டபடி குழப்பமான எண்ணங்கள் போன்றவற்றாலும், வளரும் பருவத்தில் மனதில் ஆழப் பதிந்த அல்லது பாதித்த விஷயம் ஏற்படுத்தும் விளைவாலும் இந்த ஃபோபியா ஏற்படுகிறது.
ஃபோபியாவால் பாதிப்புக்கு உள்ளானவர்கள் ஆரம்பக் கட்டத்தில், சாதாரணமாக நடந்த ஒரு சம்பவத்தை நினைத்துப் பயப்படுவார்கள். போகப் போக நடக்காத ஒரு விஷயத்தை எண்ணி பதட்டமும், பயமும் அடைவார்கள்.
இப்படி ஒரு செயலை நினைத்துப் பயப்படுபவர்கள், காலப் போக்கில் அதை நிராகரித்தும் விடுகிறார்கள். இவ்வாறு இருப்பதால், எல்லா விஷயங்களிலும் பயம் வருவதற்கான வாய்ப்புகள் உள்ளது.
ஃபோபியா ஏற்பட்டிருக்கிறது என்றால் குறிப்பாகச் சில அறிகுறிகள் இருக்கும். அவை, அளவுக்கு மீறிய அச்ச உணர்வினால் உடல் நடுங்குவது, உடலில் அதிகமாக வியர்த்துக் கொட்டுவது, மூளைச் சோர்வு, மூக்கு ஒழுகல், இதயத்துடிப்பு அதிகரிப்பது, சுவாசிக்கத் திணறுவது ஆகியன.
இந்த அறிகுறிகளை, சிலர் சாதாரணமான விஷயம்தானே என்று அலட்சியம் செய்பவர்களும் இருக்கிறார்கள். இந்தச் சிறு அலட்சியத்தால் மனநலன் ஆழமாகப் பாதிக்கக் கூடும்.
ஃபோபியாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு, நடத்தை மாற்றுச் சிகிச்சை, மனப்பதட்டத்துக்குத் தரக்கூடிய மருந்து மாத்திரைகள் கொடுப்பதன் மூலம் சரி செய்யலாம். ஃபோபியா அறிகுறி தென்பட்டால், உடனடியாக மனநல மருத்துவரை அணுகுவது நல்லது.
'சின்னப் பயம்... உயிரைக் கொல்லும்' என்று ஒரு பழமொழி இருக்கு. ஞாபகம் இருக்கட்டும்!
- மு.அழகர்பாரதி
ஃபோபியாவால் பாதிப்புக்கு உள்ளானவர்கள் ஆரம்பக் கட்டத்தில், சாதாரணமாக நடந்த ஒரு சம்பவத்தை நினைத்துப் பயப்படுவார்கள். போகப் போக நடக்காத ஒரு விஷயத்தை எண்ணி பதட்டமும், பயமும் அடைவார்கள்.
இப்படி ஒரு செயலை நினைத்துப் பயப்படுபவர்கள், காலப் போக்கில் அதை நிராகரித்தும் விடுகிறார்கள். இவ்வாறு இருப்பதால், எல்லா விஷயங்களிலும் பயம் வருவதற்கான வாய்ப்புகள் உள்ளது.
ஃபோபியா ஏற்பட்டிருக்கிறது என்றால் குறிப்பாகச் சில அறிகுறிகள் இருக்கும். அவை, அளவுக்கு மீறிய அச்ச உணர்வினால் உடல் நடுங்குவது, உடலில் அதிகமாக வியர்த்துக் கொட்டுவது, மூளைச் சோர்வு, மூக்கு ஒழுகல், இதயத்துடிப்பு அதிகரிப்பது, சுவாசிக்கத் திணறுவது ஆகியன.

ஃபோபியாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு, நடத்தை மாற்றுச் சிகிச்சை, மனப்பதட்டத்துக்குத் தரக்கூடிய மருந்து மாத்திரைகள் கொடுப்பதன் மூலம் சரி செய்யலாம். ஃபோபியா அறிகுறி தென்பட்டால், உடனடியாக மனநல மருத்துவரை அணுகுவது நல்லது.
'சின்னப் பயம்... உயிரைக் கொல்லும்' என்று ஒரு பழமொழி இருக்கு. ஞாபகம் இருக்கட்டும்!
- மு.அழகர்பாரதி
திங்கள், 24 நவம்பர், 2014
இரண்டாவது வருமானம்... கைகொடுக்கும் ஈஸி ஃபார்முலா!
இன்றைய சூழ்நிலையில் ஒருவரின் வருமானத்தை வைத்து குடும்பத் தேவைகள் அனைத்தையும் நிறைவேற்றுவது கொஞ்சம் சிரமமான காரியம் தான். எனவேதான் கணவன், மனைவி இருவரும் வேலைக்குப் போகவேண்டிய சூழ்நிலையில் பல குடும்பங்கள் உள்ளன. இன்றைக்கு கிடைக்கக்கூடிய வருமானம், இன்றைய தேவை களை மட்டுமே நிறைவேற்றக் கூடியதாக உள்ளது. எதிர்காலத் தேவைகளை நிறைவேற்றுகிற மாதிரியான வருமானம் இன்றைக்கு பலருக்கும் இல்லை.
ஆனால், குடும்பத்தின் தேவை என்பது நாளுக்குநாள் அதிகமாகிக்கொண்டே செல்கிறது. குழந்தைகளின் உயர்கல்வி, திருமணம், மருத்துவச் செலவுகள் போன்ற தேவைகளை நிறைவேற்ற கடன் வாங்கவேண்டிய நிலை ஏற்படு கிறது. இதுபோன்ற சமயங்களில் ஏற்கெனவே கிடைத்துவரும் சம்பளம் தவிர, கூடுதலாக இன்னொரு வருமானம், அதாவது இரண்டாவது வருமானம் கிடைத்தால் நன்றாக இருக்கும் எனத் தோன்றும். இரண்டாவது வருமானம் கிடைப்பதற்கான எளிய வழிமுறை களைச் சொல்ல முடியுமா என நிதி ஆலோசகர் யூ.என்.சுபாஷிடம் கேட்டோம். விளக்கமாக எடுத்துச் சொன்னார் அவர்.
“இன்றைக்கு, வேலைக்குப் போகிறவர்களில் பெரும்பாலானவர்கள் கூடுதல் வருமானத்துக்கான வழிகள் என்ன என்பதைத் தேடிக்கொண்டுதான் இருக்கிறார்கள். இதன் விளைவாக, இன்ஷூரன்ஸ் ஏஜென்ட், எம்எல்எம் பிசினஸ் போன்றவற்றைச் செய்கிறார்கள். புதுமையாக யோசித்து அதைச் செயல்படுத்த முடியாதவர்கள் இதுமாதிரியான ரிஸ்க் குறைந்த வேலைகளைச் செய்வதன் மூலம் ஓரளவுக்கு சம்பாதிக்க முடியும்.
இதுபோன்ற பல வாய்ப்புகள் இன்று உள்ளன. அதாவது, அனிமேஷன் தெரிந்தவர்கள் அலுவலக வேலை முடிந்தவுடன், பகுதி நேரமாக வேறு சில வேலைகளை செய்வதன் மூலம் கூடுதல் வருமானம் ஈட்ட முடியும். இதன் மூலமாகக் கிடைக்கும் பணத்தை இன்றைய தேவைக்குப் பயன்படுத்தாமல் எதிர்காலத்தில் இரண்டாவது வருமானத்துக்காக முதலீடு செய்யலாம்.

இப்போது நீங்கள் சம்பாதிக்கும் பணம் தவிர, கூடுதலாக மாதம் 5 ஆயிரம் ரூபாய் சம்பாதிக்க முடியும் எனில், அந்தப் பணத்தை சுமார் 12% வருமானம் தரக்கூடிய மியூச்சுவல் ஃபண்ட் திட்டங் களில் அடுத்த இருபது வருடங்களுக்கு முதலீடு செய்தால், சுமார் 80 லட்சம் ரூபாய் கிடைக்கும். இந்தப் பணத்தைத் தேவைப்படும்போது எடுத்து வங்கி ஃபிக்ஸட் டெபாசிட்டில் முதலீடு செய்தால், வருடத்துக்கு ரூ.7 லட்சம் ரூபாய் கிடைக்கும். ஆக, மாதத்துக்கு 60-70 ஆயிரம் ரூபாய் கிடைக்க வாய்ப்புள்ளது.
ஹாபி:
சிலருக்கு பாட்டு, நடனம், செஸ் போன்ற ஹாபிகள் இருக்கும். இதன் மூலமாகவும் வருமானத்தை ஈட்ட முடியும். கவுரவம் பார்க்காமல் பக்கத்து வீடுகளில் இருக்கும் குழந்தைகளுக்கு இதைச் சொல்லிக்கொடுத்து குறைந்தபட்ச வருமானம் சம்பாதிக்க முடியும். அதாவது, மாதம் ஆயிரம் ரூபாய் கிடைத்தால்கூட அதை எஸ்ஐபி முறையில் மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்யலாம். 12 சதவிகித வருமானம் கிடைக்கும் திட்டங்களில் அடுத்த 20 வருடங்களுக்கு முதலீடு செய்தால் சுமார் 10 லட்சம் ரூபாய் கிடைக்க வாய்ப்புள்ளது.
கார் மூலம் வருமானம்:
பெரும்பாலான வீடுகளில் கார் என்பது தவிர்க்க முடியாத ஒன்றாக மாறிவிட்டது. ஆனால், காரை தினசரி பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை மிகவும் குறைவு. இந்த காரை வாடகைக்கு விடுவதன் மூலமாக குறிப்பிட்ட அளவு தொகை வருமானமாக ஒவ்வொரு மாதமும் கிடைக்க வாய்ப்புள்ளது. மேலும், நம்பகமான டிராவல் அல்லது நிறுவனத்தைக் கண்டுபிடித்து வாடகைக்கு விடுவது நல்லது.
விவசாய நிலம் மூலம் வருமானம்:
சென்னை போன்ற பெருநகரங்களில் வாழ்க்கையை அமைத்துக் கொண்டவர் களுக்கு பூர்வீக சொத்து அல்லது முதலீடு நோக்கில் வாங்கி வைத்த விவசாய நிலம் இருந்தால், அதில் நீண்ட கால பயிர்களைப் பயிரிடுவதன் மூலமாக குறிப்பிட்ட அளவு வருமானம் கிடைக்க வாய்ப்புள்ளது. சவுக்கு, தென்னை மற்றும் மரப் பயிர்களைப் பயிரிட்டு அதன் மூலமாக வருமானம் ஈட்ட முயற்சி செய்யலாம். பண்ணை விவசாயம், இயற்கை விவசாயத்தின் மூலமாகவும் குறிப்பிட்ட அளவு வருமானம் ஈட்ட முடியும்.

வீடு மூலம் வருமானம்:
ஏற்கெனவே வீடு உள்ளவர்கள் அல்லது இரண்டு வீடு வாங்க தகுதி உடையவர்கள் அதன் மூலமாகவும் வருமானம் ஈட்ட முடியும். ஒரு வீட்டை வாடகைக்கு விடுவதன் மூலமாக ஒவ்வொரு மாதமும் வாடகை கிடைக்க வாய்ப்புள்ளது. ஆனால், வீட்டின் மூலமாகக் கிடைக்கும் வருமானம் அதிக
அளவில் இருக்கும் என்று சொல்ல முடியாது. அதாவது, ஒரு கோடி ரூபாய் மதிப்புடைய வீடு இருக்கிறது என வைத்துக்கொள்வோம். அந்த வீட்டை வாடகை விடுவதன் மூலம் அதிகபட்சமாக மாதத்துக்கு 15-20 ஆயிரம் ரூபாய்தான் வருமானம் கிடைக்கும். இதுவே, ஒரு கோடி ரூபாயை 8% வருமானம் தரக்கூடிய ஃபிக்ஸட் டெபாசிட்டில் முதலீடு செய்தால், வருடத்துக்கு ரூ.9 லட்சம் வருமானம் கிடைக்கும். ஆனால், வாடகை மூலமாக வருடத்துக்கு அதிகபட்சமாக ரூ.2.4 லட்சம்தான் கிடைக்கும்.

காலி மனை மூலம் வருமானம்:
நகர மைய பகுதி அல்லது முக்கியமான இடத்தில் காலி மனை வைத்திருக்கிறீர்கள். அதில் தற்போது வீடு கட்டுவதற்கு வசதி இல்லை என்றால் அந்த காலி இடத்தில் கார் நிறுத்த, குடோன் அமைக்க வாடகைக்கு விடுவதன் மூலம் வருமானம் ஈட்டலாம். இப்படி பல வழிகளில் வருமானத்தை ஈட்ட முடியும்” என்றார்.
கூடுதலாக பணம் சம்பாதிக்க இன்றைய நிலையில் பல வழிகள் உள்ளன. இந்த வழிகளைப் பயன்படுத்தி இரண்டாவது வருமானத்தை எளிதாகப் பெறலாம். எதிர்காலத் தேவைகளையும் நிறைவேற்றிக் கொள்ளலாம்.
வியாழன், 20 நவம்பர், 2014
தசைகளை வலுவாக்கும் வாக்கிங்!
ம்மில் 2 மணி நேரம் உடற்பயிற்சி செய்து விட்டு வருவதை விட வேக நடை, பல அற்புதங்களை நம் உடலில் நிகழ்த்தும். சாதாரணமாக நடப்பதை விடச் சுறுசுறுப்பான வேக நடை (Brisk walk) நற்பலனை அள்ளி தரும்.
பின் இடுப்பு, தொடைகளை வெகு சீக்கிரம் குறைத்து அழகான வடிவத்தைப் பெற சிறந்த பயிற்சி வேக நடை. சுவாசப் பிரச்னை, மூச்சு விடுவதில் சிரமம் போன்ற தொல்லைகள் இருப்போர் வேக நடை நடக்கும்போது உடலில் ஆக்சிஜனின் ஒட்டம் சீராகும்.
ஃப்ரெஷ்ஷான காற்றைச் சுவாசித்துக் கொண்டே நடக்கையில் நுரையீரல் நன்றாகச் செயல்படத் தொடங்கும். ஒட்டம், மெது ஒட்டம் இது இரண்டிலும் எரிக்கப்படும் கலோரிகளும் வேக நடையினால் எரிக்கப்படும் கலோரிகளும் சமம்தான்.
'ஷூ' போட்டு நடப்பதுதான் சரியான முறை. வேகமாக நடக்கும் போது செளகர்யமாக இருக்க ஷூ அணிவதே சரி. குடிப்பழக்கம், புகைப்பழக்கம் இருப்பவர்கள், வைட்டமின் டி குறைபாடு உள்ளவர்கள், உடலுழைப்பு இல்லாதவர்கள் வேக நடை நடந்தால் இந்தப் பிரச்னைகளின் தாக்கம் குறையும். தினமும் அரை மணி நேரம் நடக்கலாம்.

30-40 வயதுள்ளவர்கள் மெதுவாக நடக்கத் தொடங்கிக் கொஞ்சம் கொஞ்சமாக வேகத்தை அதிகரிக்க வேண்டும். 50வயதுக்கு மேல் உள்ளவர்கள் அரை மணி வரை மட்டுமே நடக்க வேண்டும். அதற்கு மேல் நடக்கக் கூடாது. வேண்டுமெனில் இடையிடையே ஜாக்கிங் செய்யலாம்.
ஸ்ட்ரஸ் பஸ்டர் ஸ்விம்மிங்!
*உடல் முழுவதற்குமான உன்னதப் பயிற்சி நீச்சல். சைக்கிளிங், ரன்னிங்கை விட நீந்துவதால் அதிகக் கலோரிகள் எரிக்கப்படுகின்றன. உடல் பருமனான குழந்தைகளுக்குச் சிறந்த பயிற்சி! ஒரு மணி நேர பயிற்சியில் 500-650 கலோரிகள் வரை எரிக்கமுடியும்.
* மூச்சை இழுத்து விடுவதால் நுரையீரலுக்குச் சிறந்த பயிற்சியாக இருக்கிறது.
* அதிக டென்ஷன் இருந்தாலும், நீரில் நீந்தும்போது, சில்லென்ற உணர்வும், உடல் அசைவுகளும் ஸ்ட்ரெஸ்ஸையும் பஸ்பமாக்கிவிடும்.
* ஒவ்வொரு இதயத் துடிப்பிலும் ரத்தம் பம்ப் ஆவதால் இதயம் வலிமை பெறும்.
* நீந்துதல் பயிற்சியால் நோய் எதிர்பாற்றல் அதிகரிக்கும்.
* சிறு வயதிலேயே நீச்சல் பழகுவதால், வயதான காலத்தில் வரும் மூட்டுத் தொடர்பான பிரச்னைகளை வரவிடாது.
* தசைகள் நன்கு வளைந்து கொடுக்கும். தசைப் பிடிப்புகள், சுளுக்கு போன்ற பிரச்னைகள் வராது.
* உடலில் உள்ள வெப்பம் குறைந்து சமச்சீரான நிலையைப் பெறும்.
* நீச்சலை செய்வோருக்குப் பக்கவாதம் பக்கம் வராது.
* டைப் 2 சர்க்கரை நோய், இதய நோய், பக்க வாதம் போன்ற நோய்கள் வராமல் காக்கும்.
உடல் உறுதிதன்மை பெறும்.
* மனஅழுத்தம், டென்ஷன், பதற்றம் போன்ற மனம் சார்ந்த தொல்லைகள் தீரும்.

புதன், 19 நவம்பர், 2014
பெற்றோர்களே... குழந்தைகள் உங்களின் நீட்சியல்ல!
குழந்தைகளிடம் நமக்கு நிறைய எதிர்பார்ப்புகள் உண்டு. ஆனால், குழந்தைகள் நம்மிடம் என்ன எதிர்பார்க்கிறார்கள் என்கிற அக்கறையும் கேள்வியும், பெரும்பாலான பெற்றோர்களுக்கு எழுவதில்லை என்கிறார் விழியன்.
குழந்தைகள் நலன் குறித்து தொடர்ந்து எழுதி வரும் விழியன், குழந்தைகளுக்கு கதைகள் கூறுவதுடன், அவர்களை பாடபுத்தகம் தாண்டியும் வாசிக்க வைக்க வேண்டும் எனத் தொடர்ந்து வலியுறுத்தி வருபவர்.
கடந்த வருடம் வெளியான இவரின் ‘மாகடிகாரம்’ எனும் சிறுவர் நாவல் புத்தகம், இதுவரை சிறுவர் இலக்கிய விருதுகள் மூன்றினைப் பெற்றுள்ளது.
‘பென்சில்களின் அட்டகாசம்’, ‘டாலும் ழீயும்’, ‘அந்தரத்தில் நடந்த அபூர்வக் கதை’ போன்றவை பரவலாகப் பேசப்படும் இவரின் பிற புத்தகங்கள். இவரின் ‘உச்சி முகர்’ புத்தகம், குழந்தை வளர்ப்பின் மெல்லிய தருணங்களை விவரிக்கும் அழகிய பதிவு.
சிறுவர்களுக்கு மட்டுமல்லாமல் பெற்றோர்களுக்கான குழந்தை வளர்ப்பு கட்டுரைகளையும், தன் மகள் குழலியுடன் நடக்கும் உரையாடல் மூலமாக பகிர்ந்து வருகிறார் விழியன்.
சென்னை, தனியார் நிறுவனம் ஒன்றில் பொறியியல் வல்லுனராக பணியாற்றி வரும் விழியன், குழந்தை வளர்ப்பில் பெற்றோர் கருத்தில் வைக்க வேண்டிய முக்கிய நான்கு விஷயங்கள் சொல்கிறார் இங்கு!
அதுவும் தவறு, இதுவும் தவறு
‘‘கணவன், மனைவி என இருவரும் பணிக்குச் செல்லும் வீடுகளில் வேலைச் சுமையால், குழந்தைகளை பணியாள் அல்லது வீட்டுப் பெரியவர்களிடம் மொத்தமாக ஒப்படைத்துவிட்டு, படிப்பு, நண்பர்கள், தோழிகள், பாக்கெட் மணி எவ்வளவு, இன்டர்நெட்டில் என்ன செய்கிறார்கள் என அவர்களைப் பற்றிய தற்காலக் கவலையை மறந்து, அவர்களின் எதிர்காலத்துக்காகச் சேமிக்கும் பெற்றோர் ஒரு வகை. இப்படிக் கட்டுப்பாடற்று வளரும் குழந்தைகளால் சின்னச் சின்னக் கண்டிப்புகளைக் கூட தாங்க முடியாமல் போகிறது.
கண்டிப்பான பெற்றோராக இருக்க எண்ணி, அத்தியாவசிய சுதந்திரத்தைக்கூட அவர்களுக்கு வழங்காமல், குழந்தையின் ஒவ்வொரு விஷயத்தையும் ஏதோ டிடெக்டிவ் ஏஜன்ட் போல கண்காணித்து, இயல்பான குறும்புகளையும் குற்றமாக பாவித்து தண்டனை கொடுக்கும் பெற்றோர் மற்றொரு வகை.
இப்படியான கட்டுப்பாடுகளால் இறுக்கப்படும் குழந்தைகள் அனைவருமே, 'சந்தோஷம்' என்கிற வார்த்தையுடன் 'பெற்றோர்' என்கிற வார்த்தையை எப்போதும் பொருத்திப் பார்க்காக சூழ்நிலைக்குத் தள்ளப்படுகிறார்கள்.

எனவே, உங்களின் கண்டிப்பு என்பது, குழந்தைகளை எல்லா விஷயத்திலும் உங்களுக்கு அடங்கிப் போகிறவர்களாக வளைப்பதாக அல்லாமல், அவர்களின் நன்வளர்ச்சிக்கானதாக இருக்கட்டும். அதேபோல, சுதந்திரம் என்பது அவர்களுக்குத் தேவையான அளவுக்கு, தேவையான விஷயங்களுக்கு மட்டுமே வழங்கப்படட்டும்.
குழந்தைகள் பெற்றோரிடம் எதிர்பார்ப்பது என்ன?
பரிபூரண அன்பு! அது நிச்சயம் எல்லா பெற்றோர்களிடமும் இருக்கிறது. ஆனால், அதனை செலுத்தும் விதத்தில்தான் தவறுகள் நிகழ்கின்றன அல்லது குழந்தைகளின் எதிர்பார்ப்புகளை சந்திக்க முடியாமல் போகிறது. குழந்தைகளிடம் நீண்ட நேரம் பேசவேண்டும். அவர்களின் சின்னச் சின்ன வெற்றிகளைப் பாராட்ட வேண்டும், தோல்விகளின்போது தட்டிக்கொடுக்க வேண்டும். அவர்களின் நண்பர்களைப் பற்றி அவர்களாகச் சொல்ல வைக்க வேண்டும். அன்றைய தினத்தின் நிகழ்வுகளை அவர்களாகப் பகிர வைக்க வேண்டும். பெற்றோர்களை ஒரு தோழன், தோழி என குழந்தைகள் பாவிக்க வேண்டும். இது எல்லாம் எப்போது சாத்தியம்?
அவர்களுடன் ‘குவாலிட்டி டைம்’ செலவழிக்கும்போது. குழந்தைகளுக்கு நீண்ட காலம் தன் பயங்களையும் ரகசியங்களையும் பாதுகாக்க முடியாது. தொடர் உரையாடல்கள் மூலம் அந்த பயங்களையும், ரகசியங்களையும் நீக்க வேண்டியது உங்கள் பொறுப்பு. ‘இதனை நம் பெற்றோரிடம் பகிர்ந்தால், எந்த பிரச்னையும் இருக்காது ’ என்கிற நம்பிகையை அவர்களுக்கு நீங்கள் ஏற்படுத்த வேண்டும் என்பது அவர்களின் எதிர்பார்ப்பு!

குழந்தைகள் உங்களின் நீட்சியல்ல!
பெற்றோர்கள், தங்களின் நீட்சியாகவே குழந்தைகளைப் பார்க்கிறார்கள். தாங்கள் சிறுவயதில் தவறவிட்ட விஷயங்களை குழந்தைகள் மீது தங்களுக்கே தெரியாமல் திணிக்கிறார்கள். எந்தத் திணிப்பும் கசப்பாகத்தான் முடியும். குழந்தைகள் பெற்றோரின் அங்கம் அல்ல. அவர்கள் தனி ஜீவன்கள். அவர்களுக்கு என்று ஆசைகள், வெறுப்புகள், கனவுகள் இருக்கும். அதனைப் புரிந்து கொண்டு, அவர்களின் இலக்குகளை அடைய துணை நிற்பதே பெற்றோரின் கடமை.
உங்களின் கனவை அவர்கள் மூலமாக நிறைவேற்றும் எண்ணம், தவறு.
ஜனநாயகக் குடும்பம்!
குடும்பத்தில் அமைதியை குழந்தைகள் விரும்புகிறார்கள். பெரும்பாலான பெற்றோர்களுக்கு மத்தியில் நடக்கும் முறையற்ற, தேவையற்ற விவாதங்கள், குழந்தைகளை அச்சுறுத்துகின்றன.
இதைத் தவிர்த்திட வேண்டும். மேலும் குடும்ப முடிவுகளில் அவர்களின் ஆலோசனைகளையும் அவர்கள் கூற விரும்புவார்கள். குறைந்தபட்சம் விவாதங்களில் அவர்களை பங்குகொள்ளவாவது செய்யுங்கள்.
இது ஒரு ஜனநாயகக் குடும்பத்தை நோக்கிய நகர்வு. இதுதான் தற்கால குழந்தைகளின் விருப்பமும் கூட!’’
நிறைவேற்றுவோமா குழந்தைகளின் விருப்பங்களை !
- வே.கிருஷ்ணவேணி
பெற்றோர்கள், தங்களின் நீட்சியாகவே குழந்தைகளைப் பார்க்கிறார்கள். தாங்கள் சிறுவயதில் தவறவிட்ட விஷயங்களை குழந்தைகள் மீது தங்களுக்கே தெரியாமல் திணிக்கிறார்கள். எந்தத் திணிப்பும் கசப்பாகத்தான் முடியும். குழந்தைகள் பெற்றோரின் அங்கம் அல்ல. அவர்கள் தனி ஜீவன்கள். அவர்களுக்கு என்று ஆசைகள், வெறுப்புகள், கனவுகள் இருக்கும். அதனைப் புரிந்து கொண்டு, அவர்களின் இலக்குகளை அடைய துணை நிற்பதே பெற்றோரின் கடமை.
உங்களின் கனவை அவர்கள் மூலமாக நிறைவேற்றும் எண்ணம், தவறு.
ஜனநாயகக் குடும்பம்!

இதைத் தவிர்த்திட வேண்டும். மேலும் குடும்ப முடிவுகளில் அவர்களின் ஆலோசனைகளையும் அவர்கள் கூற விரும்புவார்கள். குறைந்தபட்சம் விவாதங்களில் அவர்களை பங்குகொள்ளவாவது செய்யுங்கள்.
இது ஒரு ஜனநாயகக் குடும்பத்தை நோக்கிய நகர்வு. இதுதான் தற்கால குழந்தைகளின் விருப்பமும் கூட!’’
நிறைவேற்றுவோமா குழந்தைகளின் விருப்பங்களை !
- வே.கிருஷ்ணவேணி
செவ்வாய், 18 நவம்பர், 2014
வாழ்க்கையின் உண்மை
வாழ்க்கையின் உண்மை
ஒருவனுக்கு நான்கு மனைவிகள் இருந்தார்கள்.
ஆனால் அவன் தனது நான்காவது மனைவியை மட்டும் மிக அதிகமாக நேசித்தான். அந்த மனைவியின் அனைத்து ஆசைகளையும் நிறைவேற்றினான்.
அவளுக்கு தேவையானதை எல்லாம் செய்துகொடுத்தான்.
அவன் தனது மூன்றாவது மனைவியைக்கூட நேசித்தான்.
ஆனால் அவளை தனது நண்பர்களுக்கு முன்னால் காட்டிக்கொள்ள பயந்தான்.
பிறரோடு ஓடி விடுவாளோ என்று பயந்தான்.
அவன் தனது இரண்டாவது மனைவியையும் நேசித்தான்.
ஆனால் தனக்கு பிரச்சினைகள் வரும்போது மட்டும் அவளிடம் போவான். அவளும் அவனுடைய பிரச்சினைகளில் உதவினாள்.
ஆனால் அவன் ஒருபோதும் தனது முதல்மனைவியை நேசிக்கவே இல்லை. ஆனால் அவளோ அவன்மீது மிகவும் நேசம் வைத்திருந்தாள். அவனது எல்லா தேவைகளையும் அவள் கவனித்து கொண்டாள்.
ஒருநாள்...
அவன் மரணப்படுக்கையில் விழுந்தான். தான் இறக்கப்போவதை உணர்ந்துவிட்டான். தான் இறந்த பின் தன்னுடன் இருக்க ஒரு மனைவியை விரும்பினான்.
எனவே தன்னுடன் சாக யார் தயாராய் இருக்கிறார்கள் என அறிந்துகொள்ள விரும்பினான். தான் அதிகம் நேசித்த நான்காவது மனைவியை அழைத்தான்.
அவளோ அதிரடியாக மறுத்துவிட்டு அவனை விட்டு நீங்கினாள். அவன் தனது மூன்றாவது மனைவியை அழைத்தான்.
அவளோ நீயோ சாகப்போகிறாய்.
நான் வேறு ஒருவருடன் போகப்போகிறேன் என்று கூறிவிட்டு சென்றுவிட்டாள். பிறகு தனது இரண்டாவது மனைவியை அழைத்துக் கேட்டான்.
அவளும் சாரி என்னால் உன் கல்லறைவரைக்கும் கூட வரமுடியும். கடைசி வரை உன்னுடன் வரமுடியாது என்று மறுத்துவிட்டாள்.
நொந்துபோன அவன் இதயம் தளர்ந்து போனது. அப்போது தான் அவனது முதல் மனைவியின் குரல் ஒலித்தது. ‘’
நீ எங்கே போனாலும் நான் உன்னுடனே இருப்பேன்.
உன்னுடன் நான் கண்டிப்பாக வருவேன் ‘’ என்று சொன்னாள். ஆனால் அவளோ எலும்பும் தோலுமாக சாகும் தருவாயில் இருந்தாள். காரணம் அவன் அவளை நன்கு கவனித்துக் கொள்ளாததுதான். அவன் வருந்தினான். நான் நன்றாக இருக்கும் போதே உன்னையும் சரியாகக் கவனித்திருக்கவேண்டும். தவறிவிட்டேன் என்று அழுதான். அந்த
வருத்தத்திலேயே மரித்தும் போயினான்.
உண்மையில் நாம் அனைவருக்குமே இந்த நான்கு மனைவியர் உண்டு.
1. நான்காவது மனைவி நமது உடம்பு.
நாம் என்னதான் வாழ்நாள் முழுக்க நன்றாகக் கவனித்துக் கொண்டாலும் கடைசியில் நம்முடன் வரப்போவதில்லை.
நாம் இறந்ததும் அதுவும் அழிந்து போகிறது.
2. மூன்றாவது மனைவி நமது சொத்து சுகம்தான்.
நாம் மறைந்ததும் அவை வேறு யாருடனோ சென்றுவிடுகிறது.
3. நமது இரண்டாம் மனைவி என்பது நமது குடும்பம் மற்றும் நண்பர்கள்.
அவர்கள் நமது கல்லறை வரையில் தான் நம்முடன் கைகோர்ப்பார்கள்.
அதற்குமேல் நம்முடன் கூட வரப்போவதில்லை.
4. நாம் கவனிக்காமல் விட்ட முதல் மனைவி நமது ஆன்மா.
நாம் நன்றாக இருக்கும் போது நம்மால் கவனிக்கப்படாமல் நலிந்து சிதைந்து போய் இருந்தாலும் நம்முடன் இறுதி வரை கூட வரப்போவது நமது ஆன்மாதான்.
tks Maalaimalar தமிழ்

நோய் நொடியின்றி வாழ ஊட்டச்சத்துக்கள் 10!
Posted Date : 20:38 (17/11/2014)Last updated : 20:38 (17/11/2014)

1. ஃபோலிக் ஆசிட்
கஷ்டமில்லா சுகப் பிரசவத்துக்கு இந்த வைட்டமின் தேவைப்படுகிறது. இந்த வைட்டமின் சத்து குறைந்தால், நரம்பு சம்பந்தப்பட்ட பிரச்னை ஏற்படுவது மட்டுமின்றி, மூளையின் செயல்பாடும் பாதிக்கப்படும். பெண் குழந்தைகளுக்கு மிகவும் அவசியமான சத்து இது.
பச்சைக்காய்கறிகள் மற்றும் அவகேடோ பழத்தில் இந்த வைட்டமின் அதிகம் இருக்கிறது.
2. இரும்புச்சத்து
ஆரோக்கியமான உடல் வளர்ச்சிக்கு உதவும் பெரும் பங்கு இரும்புச்சத்துக்கு அதிகம். இந்த வைட்டமின் குறைபாடு உள்ளவர்கள் எப்போதும் களைப்பாகவும், சோர்வாகவும் இருப்பார்கள். எந்த ஒரு விஷயத்திலும் கவனக்குறைவு ஏற்படும்.
மாமிசம், ப்ராக்கோலி மற்றும் பீன்ஸில் இரும்புச்சத்தை அதிகம் பெறலாம்.
3. கால்சியம்
உறுதியான பல்லுக்கும், எலும்புக்கும் கால்சியம் அவசியம். 35 வயதில் பெண்களுக்கு ஏற்படும் கால்சியம் குறைபாட்டால் எலும்பு தொடர்பான நோய்கள் வரும். இளம் வயதிலேயே இந்தச் சத்தை எடுத்துக் கொண்டால் எலும்புத் தேய்மானம் பிரச்னை மற்றும் மாதவிடாய் காலங்களில் ஏற்படும் பிரச்னையிலிருந்து விடுபடலாம்.
பால், சீஸ், பசலைக்கீரை மற்றும் பாதாம் போன்றவற்றில் இந்த ஊட்டச்சத்து கிடைக்கும்.
4. வைட்டமின் D
மனித உடலில் போதுமான அளவுக்குக் கிடைக்காத ஒரு முக்கியமான வைட்டமின் இது. சூரிய ஒளியிலிருந்து மட்டுமே இந்தச் சத்தைப் பெறமுடியும். இதன் மூலம், மனஅழுத்தம், நெஞ்சு வலி போன்ற பிரச்னைகளிலிருந்து தப்பிக்கலாம். பல்லுக்கும் எலும்புக்கும் தேவையான கால்சியம் சத்தும் இந்த வைட்டமினிலிருந்து அதிகம் கிடைக்கிறது.
5. மக்னீசியம்
உடலின் பல்வேறு வேதியியல் மாற்றங்களுக்குக் காரணமாக இருக்கிறது இந்தச் சத்து. நரம்பு, தசை, தோல் மற்றும் எலும்பு வலுவாக வைத்திருப்பதோடு மட்டுமில்லாமல் உயர் ரத்த அழுத்தத்தைச் சமநிலையில் இருக்க உதவுகிறது.
பூசணி விதை, பசலைக்கீரை, பாதாமில் இருந்து இந்தச் சத்தைப் பெறலாம்.
6. வைட்டமின் E
கொழுப்புப் பொருட்களில் அதிகமாகக் காணப்படும் இது ஒரு சிறந்த ஆன்டிஆக்சிடன்ட், நோய் எதிர்ப்புச்சக்திக்கு உறுதுணையாக அமைகிறது,
கொய்யா, நெல்லிக்காய், ஆரஞ்சு, எலுமிசை மற்றும் முருங்கை, காலிபிளவர், கீரை வகைகள், முளை தானியங்களின் மூலம் பெறலாம்.

7. ஒமெகா-3
பெண்களுக்கு மிகவும் தேவைப்படும் ஒரு சிறந்த கொழுப்பு அமிலம் இது. உயர் ரத்த அழுத்தம், வீக்கம் மற்றும் நாள்பட்ட நோய்களைச் சரி செய்வதுடன் இதயப் பாதிப்பிலிருந்தும் காக்கிறது. நாள் ஒன்றுக்கு 1.1 கிராம் அளவுக்குப் பெண்களுக்குத் தேவைப்படும்
கடல் மீன்களிலிருந்து இதை பெறலாம்.
8. பொட்டாசியம்
பொட்டாசியத்தின் குறிப்பிடத்தக்க வேலை நரம்புகளில் ரத்தத்தைப் பிரச்னைகள் இல்லாமல் எடுத்துச் செல்ல உதவுவதுதான். மேலும், உறுதியான எலும்புக்கும், புத்துணர்ச்சிக்கும் சக்தியாக அமையும் இந்தச் சத்தை தயிர், உருளைகிழங்கு மீன் மற்றும் மாமிசத்தில் இருந்து அதிகம் பெறலாம். 19 வயதுக்கு மேற்பட்ட பெண்களுக்கு, நாள் ஒன்றுக்கு 4700 மி.கி அளவு இதை எடுத்துக்கொள்ள வேண்டும்.
9. வைட்டமின் C
நோய் எதிர்ப்புச்சக்திக்கு அதிகம் தேவைப்படும் இந்த வைட்டமின் ஒரு சிறந்த ஆன்டிஆக்சிடன்ட். தோல் சம்பந்தப்பட்ட பிரச்னை வராமல் தடுக்கும் இந்த வைட்டமினை 19 வயதுக்கு மேற்பட்ட பெண்கள் 75 மி.கி அளவுக்கு எடுத்துக் கொள்ள வேண்டும்.
ஆரஞ்சு. கிவி, ஸ்ட்ராபெர்ரி போன்ற பழங்களியிருந்து இந்த வைட்டமினை பெறலாம்.
10. நார்ச்சத்து
குடல் செரிமானத்துக்குப் பெரிதும் உதவுவது நார்ச்சத்து. 19-50 வயதுக்கு மேற்பட்ட பெண்கள் ஒரு நாளைக்கு 25 கிராம் அளவுக்கு மட்டுமே இதை எடுத்துக் கொள்ளவேண்டும். சர்க்கரை நோயாளிகளுக்கு இது அவசியம் தேவைப்படுகிறது. இதயம் சம்பந்தப்பட்ட நோய்கள் மற்றும் புற்றுநோய்கள் வராமல் தடுக்கிறது.
கோதுமை, காய்கறி, கீரை மற்றும் பழங்கள் மற்றும் தானியங்கள் நார்ச்சத்து நிறைந்தவை.
- நடராஜன் முருகேசன்

திங்கள், 17 நவம்பர், 2014
பிள்ளைகளின் உயர்கல்வி, திருமணம்... கடன் வாங்காமல் திட்டமிடுவது எப்படி?
பிள்ளைகளின் உயர்கல்வி, திருமணம்... கடன் வாங்காமல் திட்டமிடுவது எப்படி?
சா.ராஜசேகரன், நிதி ஆலோசகர், Wisdomwealthplanners.com
ஒவ்வொரு பெற்றோருக்கும் தங்கள் பிள்ளைகள் நன்றாகப் படித்து சமுதாயத்தில் பேரும் புகழும் அடைய வேண்டும் என்கிற கனவு இருக்கும். அதற்காக உறுதியான, திடமான செயல்வடிவம் இருந்தால் மட்டுமே, பிள்ளைகளின் எதிர்காலம் ஒளிமயமாக அமையும். பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளின் எதிர்காலம் சிறப்பாக அமைய வேண்டும் என்று விரும்பினாலும், அதற்கான திடமான திட்டத்தைப் போட்டுவைத்திருக் கிறார்களா என்றால், இல்லை. ஆனால், நம் முன்னோர் தங்கள் பிள்ளைகளின் எதிர்காலத்துக்கு எப்படி சேமித்தார்கள் தெரியுமா?
எப்படி சேமித்தார்கள்?
குழந்தை பிறந்தவுடன், அதுவும் பெண் குழந்தை பிறந்தவுடன், அந்தக் குழந்தையின் தாத்தா, தேக்கு மரக் கன்றுகளை வாங்கித் தனது தோட்டத்தில் நட்டுவிடுவார். அந்தக் குழந்தை வளர வளர, அந்த மரக்கன்றும் வளரும். அந்தக் குழந்தை பூப்பெய்தும்போது ஒரு மரத்தை வெட்டி, செலவு செய்வார். பேத்தி கல்லூரிக்குப் போகும்போது, இன்னொரு மரத்தை வெட்டுவார். திருமணத்துக்காக இன்னொரு மரத்தை வெட்டுவார். இப்படி கடனே வாங்காமல், எல்லா செலவுகளையும் செய்து முடித்துவிடுவார்.
ஆனால், நாமோ இன்றைக்கு என்ன செய்கிறோம்? குழந்தையின் காதணி விழாவா? தனிநபர் கடன் வாங்கிச் சமாளிக்கின்றோம். தங்க நகை வாங்க வேண்டுமா? கடன் அட்டையைத் தேய்த்து காரியத்தை முடிக்கின்றோம். பட்டபடிப்பு மற்றும் பட்ட மேற்படிப்பா? கல்விக் கடன் வாங்கிவிடுகின்றோம்.

திருமணச் சீராக கார் வாங்க வேண்டுமா? கார் கடன் வாங்கி ஜமாய்க்கின்றோம். திருமணச் செலவுக்கான கடன் பெறும் வசதி இப்போதைய நிலையில் இல்லை என்பதால், வீட்டு அடமான கடன் பெறுகிறோம்.பிள்ளைகளுக்குத் தனி வீடு வேண்டுமா? வீட்டுக் கடன் வாங்கச் சொல்கிறோம்.
நம் முன்னோர்கள் கடன் வாங்கித் தங்கள் செல்வத்தை இழப்பதைவிட, குறைந்த முதலீட்டில் அதிக லாபம் ஈட்டும் செயல்களைச் செய்தார்கள். நாமும் அவர்களைப் பின்பற்றி கடன் பெறாமல், முன்கூட்டியே திட்டமிட்டு முதலீடு செய்து வந்தால் எதிர்காலம் குறித்த கவலை இல்லாமல் நிம்மதியாக இருக்கலாம்.
நான்கு கட்டாயச் செலவுகள்!

1. 4 வயதில் ஆரம்பக் கல்வி
2. 18 வயதில் உயர்கல்வி,
3. 20 வயதில் பட்ட மேற்படிப்பு,
4. 25 வயதில் திருமணம்
குழந்தைகளின் காதுகுத்து விழா, பெண் குழந்தைகள் பூப்பெய்தும் விழா போன்றவை அவரவர் வசதிக்கும் கலாசாரத்துக்கும் ஏற்ப மாறுபடும் என்பதால், அதை எல்லோரும் ஒரேமாதிரி திட்டமிட முடியாது. கல்வி, திருமணம் போன்றவற்றை சிறப்பாக நடத்தி முடிப்பதற்கான திட்டமிடலை மட்டும் பார்ப்போம்.
மூன்று வகை பணவீக்கம்!
முன்பெல்லாம் விலைவாசி என்பது வருடத்துக்கு ஒருமுறையோ அல்லது மாதத்துக்கு ஒருமுறையோ உற்பத்திக்கேற்ப மாறுபடும். ஆனால், வளர்ச்சி மற்றும் தேவையின் காரணத்தினால் ஒவ்வொரு மாதமும் ஏற்றமடைந்த விலைவாசி இன்று தினமும் ஏறிக்கொண்டு வருகிறது. இந்த மாற்றம் கல்வி, மருத்துவம், மற்றும் கல்யாணம் உள்ளிட்ட இதர செலவுகளுக்கும் பொருந்தும்.
பொதுவாக, விலைவாசி ஏற்றத்துக்கு நாம் முக்கியமாக மூன்று விஷயங்களைக் கருத்தில்கொள்ள வேண்டும். அவை, உணவுப் பணவீக்கம், கல்விப் பணவீக்கம்), மருத்துவச் செலவுக்கான பணவீக்கம். இவற்றில் உணவுப் பணவீக்கம் 8 சதவிகிதமாக உள்ளது. மருத்துவப் பணவீக்கம் 15 சத விகிதமாகவும், கல்விப் பணவீக்கம் 20 சதவிகிதமாகவும் உள்ளது என ஓர் ஆய்வில் தெரியவந்துள்ளது.
இந்தியாவில் விலைவாசி ஏற்றத்தைக் கணக்கிட 1980-ல் இருந்து, ஒவ்வொரு ஆண்டும் விலைவாசி ஏற்றம் கணக்கீடு (Cost Inflation Index) செய்யப்படுகிறது. (ஒவ்வொரு வருடமும் மார்ச் மாதம் முடியும் தருவாயில் இந்தக் கணக்கீடு செய்யப்படும்!) அன்று (1980-ல்) 100 புள்ளிகளாக இருந்த கணக்கீடு, 2014 மார்ச் மாத இறுதியில் 1024-ஆக இருக்கிறது. கடந்த 33 வருடத்தில் சராசரியாக 7.30% பணவீக்கம் உயர்வாகும். அதுவும் வருடந்தோறும் கூட்டு வளர்ச்சி (Power of compounding) உயர்ந்து வருகிறது. செலவு, கூட்டு வளர்ச்சியில் வளர்ந்துவரும்போது நம் முதலீடும் அதே விகிதத்தில் வளர்கிறதா என்றும், விலைவாசி ஏற்றத்தைத் தாண்டி வளருகிறதா என்பதையும் பார்ப்பது மிகவும் அவசியம்.

குறையும் வட்டி!
நம் நாடு வளர்ச்சிப் பாதையில் கால் எடுத்துவைப்பதற்குமுன், வங்கி வட்டி விகிதம் 15 சதவிகிதமாக இருந்தது. ஆனால், இன்று அது 8 சதவிகிதமாகக் குறைந்துள்ளது. எப்போதுமே ஒரு நாடு வளர்ச்சிப் பாதையில் செல்லும்போது படிப்படியாக வட்டி விகிதம் குறையும்.
வங்கியில் 1995-ல் வட்டி விகிதம் 15 சதவிகிதமாக இருந்தது. அன்று முதலீடு செய்த தொகை 5 வருடத்தில் இரட்டிப்பாக வளர்ந்திருக்கும். ஏனென்றால், 5 வருட கூட்டுவட்டி கிடைத்தது. ஆனால், இன்று வட்டியின் விகிதம் 8 சதவிகிதமாக இருக்கிறது. இதனால் உங்கள் முதலீட்டுத் தொகை இரட்டிப்பாக 10 வருடங்கள் ஆகும். ஆனால், இன்று பொருளாதாரம் வளர்ச்சிப் பாதையில் சென்று கொண்டிருப்பதால், வங்கிகள் டெபாசிட்டை 10 வருடத்துக்குப் பதில், 3 வருடங்களுக்கு மட்டுமே ஏற்கிறார்கள். மேலும், வட்டி விகிதம் வருங்காலத்தில் படிப்படியாகக் குறையவே வாய்ப்புள்ளது.

முதலீடு என்பது விலைவாசியைத் தாண்டி வளருமேயானால், உங்கள் கனவு எளிதில் நிறைவேற உறுதுணையாக இருக்கும். இதுவே, உங்கள் முதலீடு விலைவாசி ஏற்றத்துக்கு குறைவாக வளர்கிறது எனில், அது உங்கள் வீழ்ச்சிக்கு வழி செய்யும். அது மட்டுமல்ல, நாம் சேமிக்கத் தேர்வு செய்யும் முதலீட்டு வகையானது கூட்டுவட்டி அடிப்படையில் வளரக்கூடிய வகையில் இருந்தால் மட்டுமே நம் கனவை எளிதில் நிறைவேற்றிக்கொள்ள முடியும்.
எதற்கு, எந்தவகை முதலீடு?
குறுகிய கால முதலீடு (ஒரு வருடத்துக்குக் குறைவாக): வங்கி சேமிப்பு, அஞ்சலகச் சேமிப்பு, லிக்விட் ஃபண்ட்
நடுத்தரக் கால முதலீடு (1 முதல் 3 ஆண்டுகள் வரை): வங்கி மற்றும் அஞ்சலக ஆர்டி, அரசு பாண்டுகள்
நீண்ட கால முதலீடு (3 வருடங்களுக்கு மேல்): மியூச்சுவல் ஃபண்ட், நிறுவனப் பங்குகள், ரியல் எஸ்டேட்

எப்படித் திட்டமிடுவது?
இன்றைக்கு பல பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளின் கல்வி மற்றும் திருமணத்துக்கு எவ்வளவு செலவாகும் என்பதைத் தெரியாமல், ஏதோ ஒரு திட்டத்தில் இலக்கு இல்லாமல் சேமிக்கிறார்கள். பிள்ளைகளின் கல்வி மற்றும் திருமணம் என்பது உடனே நடக்கும் நிகழ்வல்ல. குழந்தை பிறந்ததிலிருந்து இந்த நிகழ்வுகளுக்கான 18-25 வருடங்களில் இந்தச் செலவுகளுக்கான பணத்தை எல்லா பெற்றோர்களாலும் நன்றாகவே திட்டமிட்டு சேர்க்க முடியும்.
பிள்ளைகளின் உயர்கல்வி மற்றும் திருமணத்துக்கு முதலீட்டைத் திட்டமிடுவது பெற்றோர்களுக்குச் சாதகமா அல்லது கல்வி மற்றும் திருமணத்தை கடன் வாங்கி நிறைவேற்றுவது சாதகமா என்பதை ஓர் உதாரணம் மூலம் பார்ப்போம்.
பொதுவாக, பணம் என்பது கடன் வாங்குபவர்களுக்கு எதிர்மறையாகச் செயல்படுகிறது. அதுவே பணம், முதலீடு செய்யும்போது அவரின் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருக்கிறது. இந்த விளக்கத்தின் மூலமாக உங்கள் குழந்தையின் கல்வி மற்றும் திருமணத்துக்கு கடன் வாங்குவதா அல்லது முன்கூட்டியே முதலீடு செய்து கடன் வாங்காமல் நிறைவேற்ற விரும்புகிறீர்களா என்பதை நீங்கள் முடிவு செய்துகொள்ளுங்கள்.

குழந்தைகளின் திருமணச் செலவுக்கு!
முன்னரே திட்டமிடுதல்:
முன்னரே திட்டமிடுதல்:
மகள் வயது 1
மகள் திருமண வயது 25
திருமணச் செலவுக்குத் தேவையான தொகை ரூ.25 லட்சம்
முதலீடு மூலம் எதிர்பார்க்கும் வருமானம் 12%
இன்னும் 24 வருடங்களில் மகள் திருமண வயதை அடைவார்.
24 X 12 = 288 மாதங்கள்.
மகள் திருமண வயது 25
திருமணச் செலவுக்குத் தேவையான தொகை ரூ.25 லட்சம்
முதலீடு மூலம் எதிர்பார்க்கும் வருமானம் 12%
இன்னும் 24 வருடங்களில் மகள் திருமண வயதை அடைவார்.
24 X 12 = 288 மாதங்கள்.
இதற்காக 12% வருமானம் எதிர்பார்க்கும் மியூச்சுவல் ஃபண்டில், ஒவ்வொரு மாதமும் முதலீடு செய்ய வேண்டிய தொகை ரூ.1509. அதாவது, மகள் திருமணத்துக்காக பெற்றோர் முதலீடு செய்வது ரூ.4,34,592. ஆனால், 12% வளர்ச்சியில் நமக்குக் கிடைப்பதோ ரூ.25 லட்சம்.
கடன் வாங்குதல்:
மகளின் திருமணத்தை எந்த வகையிலும் பணத்தைச் சேர்க்காமல், சொந்த வீட்டினை அடமானம் வைத்து ரூ.25 லட்சம் கடன் வாங்கி நடத்த முடிவு செய்கிறார்கள் என்று வைத்துக் கொள்வோம். இந்தக் கடனுக்கு 14% வட்டி விகிதத்தில், மாதமொன்றுக்கு ரூ.38,817-ஆக மாத தவணையாகச் செலுத்துவார்.

கடன் பெற்ற தொகை ரூ.25 லட்சம் 10 வருடங்களுக்கு வட்டியாகச் செலுத்துவது ரூ.21,58,040 அசலும், வட்டியும் சேர்த்து மொத்தம் ரூ. 46,58,040 குழந்தைகளின் திருமணத்துக்கு முன்னரே திட்டமிட்டால், மாதம் ரூ1,509 X 288 = 4,34,592 ரூபாயை சீராகச் சேமித்து திருமணச் செலவுக்கான ரூ.25 லட்சத்தை எளிதாகப் பெறலாம். ஆனால், கடனாக வாங்கும் ரூ.25 லட்சத்துக்கு ரூ.46,58,040 (120 மாதங்கள் அசலும், வட்டியாக) செலுத்துகின்றனர்.
பிள்ளையின் கல்விச் செலவுக்கு!
முன்னரே திட்டமிடுதல்:
முன்னரே திட்டமிடுதல்:
பிள்ளையின் வயது 1 பட்டபடிப்புக்குச் செல்லும் வயது 18 உயர்கல்வி செலவுக்குத் தேவையான தொகை ரூ.15 லட்சம் முதலீட்டில் எதிர்பார்க்கும் வருமானம் 12% இன்னும் 17 வருடங்களில் பிள்ளை பட்டபடிப்புக்கு தயாராவார்.
17 X12 = 204 மாதங்கள் இதற்காக 12% வருமானம் எதிர்பார்க்கும் மியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டில் ஒவ்வொரு மாதமும் ரூ.2268 முதலீடு செய்து வந்தாலே, கல்வி செலவை பெற்றோர் ஈடு செய்துவிடலாம்.
அதாவது, முன்னரே திட்டமிடுவதால் பெற்றோர் முதலீடு செய்யும் தொகை ரூ.4,62,672. ஆனால், 12% வருமானத்தின் மூலம் ரூ.15 லட்சமாக உயர்ந்திருக்கும்.
அதாவது, முன்னரே திட்டமிடுவதால் பெற்றோர் முதலீடு செய்யும் தொகை ரூ.4,62,672. ஆனால், 12% வருமானத்தின் மூலம் ரூ.15 லட்சமாக உயர்ந்திருக்கும்.
கடன் வாங்கினால்...
இப்படி இல்லாமல் பெற்றோர்கள் குழந்தையின் கல்வி செலவுக்கு வங்கியில் கல்விக் கடனாக ரூ.15 லட்சம் பெறுகின்றனர். இதற்காக ஒவ்வொரு மாதமும் ரூ.21,521 இஎம்ஐயாகச் செலுத்துவார் (120 மாதத்துக்கு 12% வட்டி விகிதத்தில்) 10 வருடங்களுக்கு வட்டி: ரூ.10,82,520 அசலும் வட்டியும் சேர்த்து மொத்தம் ரூ.25,82,520 பெற்றோர்கள் முன்னரே திட்டமிடுவதால் சிறு தொகையை முதலீடு செய்து, கூட்டுவளர்ச்சி மூலம் பிள்ளைகளின் அனைத்து கனவுகளையும் சிறப்பாக நிறைவேற்றலாம் என்பதைத் தெரிந்து கொண்டீர்களா? இனியும், கடன் வாங்கிக் காலத்தை ஓட்டிவிடலாம் என்று நினைக்காமல், உங்கள் குழந்தைகளின் சிறப்பான எதிர்காலத்துக்காக இன்றே திட்டமிட்டு, பணத்தைச் சேர்க்கத் தொடங்குங்கள்.
சனி, 15 நவம்பர், 2014
உங்கள் நேரத்தை திருடுவது யார்!
உங்கள் நேரத்தை திருடுவது யார்!

ஆனால். நாம் கணக்கு இல்லாமல் செலவழிக்கும் ஒரு விஷயம் நேரம் மட்டும் தான். ஒரு நாளைக்கு நான் பார்க்கும் வேலைக்கு 24 மணி நேரம் போதவில்லை என நேரத்தை குற்றம் சொல்பவர்கள் நம்மில் பலர் இருக்கிறோம்.
நமக்கு ஒரு நாளைக்கு 24 மணி நேரம் கையில் இருக்கிறது. இதில் நாம் என்ன செய்கிறோம்? நமக்கு மீதமிருக்கும் நேரம் என்ன? தேவையில்லாமல் நாம் எவ்வளவு நேரத்தை செலவழிக்கிறோம்? அதனை எப்படி சரியாக செலவழிப்பது போன்ற பல கேள்விகளுக்கு பதில் இதோ...
24 மணி நேரம் கணக்கு என்ன?
இந்த 24 மணி நேரத்தில் 7 மணி நேரத்தை கழித்து விடுங்கள் ஒரு நாளைக்கு கட்டாயம் ஒரு சராசரி மனிதன் என்பவன் 7 மணி நேரம் தூங்க வேண்டும் இல்லை என்றால் அவனால் சரியாக வேலை செய்ய முடியாது என்கிறது ஆய்வு, ஒரு நாளைக்கு பணிபுரிபவரோ அல்லது கல்லூரிக்கு செல்பவர்களோ எட்டு மணி நேரத்தை வேலைக்கோ அல்லது படிக்கவோ செலவழிக்கிறார்கள்.
இதில் உங்கள் மதிய உணவு இடைவேளை சேர்ந்து விடுகிறது. காலை மற்றும் இரவு உணவுக்காக 1 மணி நேரத்தை ஒதுக்கினால் 16 மணி நேரம் முடிந்துவிடும். மீதமிருக்கும் எட்டு மணிநேரத்தில் உங்கள் பயணம் உங்கள் நாளில் இரண்டு மணி நேரத்தை செலவழிக்கிறீர்கள்.

அதனால் உங்களிடம் மீதம் ஆறு மணி நேரம் தான் இதில் உங்கள் நண்பர்கள் உறவினர்களுடன் நேரத்தை செலவழிப்பது, ஷாப்பிங் ஆகியவற்றுக்கு 2 மணி நேரம் என்று வைத்து கொண்டால் உங்களது ஒரு நாளில் 4 மணி நேரம் மீதமிருக்கிறது. இதனை நீங்கள் என்ன செய்கிறீர்கள். 4 மணி நேரம் உங்களது ஒரு நாளில் எவ்வளவு முக்கியமானது அதை யார் எடுத்து கொள்கிறார்கள்? இல்லை எனில் நீங்களே அவசியமில்லாத காரியங்களில் நேரத்தை செலவிடுகிறீர்கள். ஆனாலும் ஏன் நீங்கள் ஒரு நாளைக்கு 24 மணி நேரம் போதவில்லை என குற்றம் சாட்டுகிறீர்கள் என்று பாருங்கள்.
என்ன ஆனது 4 மணி நேரம்?

சமூக வலை தளங்களில் லாக் இன் செய்து பார்த்துவிட்டு சென்று விடுவேன் என்று ஆரம்பித்து நண்பரின் தேவையற்ற கலந்துரையாடலில் 1 மணி நேரம் செலவழிந்திருக்கலாம்.
ஒரு 10 நிமிடத்தில் வாங்கக்கூடிய பொருளை வாங்க பெரிய சூப்பர் மார்க்கெட்டுக்கு சென்று அதில் பல பொருட்களை பார்வையிட்டு அதில் ஒரு ஒரு மணி நேரம் செலவாகி இருக்கலாம்.
செல்போன், வாட்ஸ் அப்,எஸ்.எம்.எஸ் போன்ற செயல்களில் உங்களது அரை மணி நேரம் செலவழிந்திருக்கலாம்.
இது தான் மிகவும் முக்கியமானது, இந்த ஒன்றரை மணி நேரம் உங்கள் அலுவலக வேலைகளில் இடையே நீங்கள் எடுத்த ஓய்வு அதனால் மாலை 5 மணிக்கு கிளம்ப வேண்டிய நீங்கள் மாலை 6:30 மணிக்கு கிளம்பி இருப்பீர்கள். உங்களது ஒன்றரை மணி நேரத்தை இடையிடையே உள்ள செயல்களுக்கு வீணடித்து மொத்தமாக 4 மணி நேரம் வீணாகி இருக்கும்.
இதற்கு யாரையும் காரணம் கூற முடியாது. இதற்கு ஒரே காரணம் நீங்கள் மட்டும் தான்.
எப்படி சமாளிப்பது:
1.உங்கள் வேலை நேரமான 8 மணி நேரத்தில் தேவையில்லாமல் நீங்கள் செலவு செய்யும் நேரத்தில் அடுத்த நாளுக்கு ஆயத்தமாகுங்கள்.அது அடுத்த நாள் வேலையில் புத்துணர்ச்சியை தரும்.
2.உங்கள் சமூக வலைதளம் உங்களை ஆக்கிரமிக்கும் 1 மணி நேரத்தை குறைக்க முயற்சி செய்யுங்கள்.
அருகில் இருபவருடன் ஆன்லைனில் சாட் செய்யாமல் நேரில் சந்தியுங்கள். அப்போது உங்கள் மனநிலையும் அமைதியாகும். அதிக நேரம் கணினி திரையில் கண் விழித்து உட்கார வேண்டிய அவசியம் இருக்காது. லைக்குகள், கமெண்ட்டுகள் எத்தனை என்று எண்ணாமல் உங்கள் வேலையை துவங்க பாருங்கள்.

3.உங்களுக்கு நேரம் மிச்சமிருக்கிறது என்ன செய்யலாம் என்றால் உங்கள் திறமையை வளர்த்துக்கொள்ள தயாராகுங்கள். ஒரு மொழியை கற்றுக்கொள்ளுங்கள் அல்லது ஒரு கட்டுரையை எழுதுங்கள். ஒருவேளை உங்களுக்கு இதுபோன்ற விஷயங்களில் நாட்டம் இல்லை என்றால் உங்களது எதிர்காலத்தையோ அல்லது குறைந்தபட்சம் அடுத்த 24 மணி நேரத்தையாவது திட்டமிடுங்கள்.
4. ரிலாக்ஸ் நேரம் என நீங்கள் செலவு செய்வது உங்களை சோர்வடைய செய்யும் விஷயமாக இருக்க கூடாது. பீச்சுக்கு சென்றேன் ஒரே டயர்டாக உள்ளது. ஷாப்பிங் சென்றதால் கால் வலிக்கிறது என்று கூறாமல் உங்களுக்கு புத்துணர்ச்சி அளிக்கும் ரிலாக்ஸ் விஷயங்களை தேடுங்கள்.
5.வார இறுதியில் வெள்ளிக்கிழமை சினிமாக்களும், மால்களும் போனஸ் டைம் எடுத்து நேரத்தை வீணாக்குகின்றன. அப்படியென்றால் நம்மால் இதனை சமாளிக்க முடியாதா? என்றால் முடியும் ஆனால் அதனை யாரும் சொல்லி செய்துவிட முடியாது அல்லது பயிற்சி வகுப்புகளுக்கு சென்று கற்றுக்கொள்ள முடியாது. உங்களுக்குள் உள்ள சுய கட்டுப்பாட்டால் மட்டுமே கட்டுப்படுத்த முடியும்.
உங்கள் நேரம் அதிக மதிப்புமிக்கது அதனை சரியாக பயன்படுத்துங்கள் 24 மணி நேரம் உங்களுக்கு போதவில்லை என்று நீங்கள் கூற தயாரானால் உங்களது ஒரு மணி நேரத்தை கூட உங்களால் சிறப்பாக செயல்படுத்த முடியாது. 24 மணி நேரம் பெரியது, அதனைச் சரியாக பயன்படுத்தி பயன்பெறுங்கள்
ச.ஸ்ரீராம்
அவசியம் தேவை... அவசரகால நிதி சேமிப்பு!
அவசியம் தேவை... அவசரகால நிதி சேமிப்பு!
|
Posted Date : 15:11 (07/11/2014)Last updated : 12:11 (10/11/2014)
![]() அஸோசெம் சொல்லும் உண்மை! மக்களிடம் அவசரகால நிதி சேமிப்பு எப்படி இருக்கிறது என்பதை அறிந்துகொள்ள, அஸோசெம் அமைப்பானது அகமதாபாத்தில் சர்வே ஒன்றை மேற்கொண்டது. இந்த சர்வேயில் தெரியவந்திருக்கும் உண்மை என்னவெனில் 90% மக்களிடம் அவசரகால நிதி சேமிப்பு இல்லாமல் இருப்பது தெரிய வந்திருக்கிறது. தேசிய அளவில் சர்வே புள்ளி விவரம் இல்லாவிட்டாலும் ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்கிற விஷயம் இதிலும் நிச்சயம் பொருந்தும். அப்படி அவர்கள் மாநிலம் வாரியாக, நகரம் மற்றும் கிராமங்களில் ஊடுறுவி சர்வே மேற்கொண்டாலும் அந்த சர்வே விவரங்கள் இந்திய மக்களில் அதிகமானவர்கள் அவசர கால நிதி சேமிப்பில் பலமிழந்து இருக்கிறார்கள் என்பதை ஆதாரப்பூர்வமாக தெரிவித்துவிடுவார்கள். ![]() எதற்காக இந்த அவசரகால நிதி? ஒரு நிறுவனத்தில் வேலை செய்பவர்களில் பெரும்பாலானவர்கள், அந்த நிறுவனம் வழங்கும் சம்பளத்தை சார்ந்தே வாழ்ந்து கொண்டிருப்பார்கள். இப்படியிருக்க திடீரென்று அந்த நிறுவனம் மூடப்பட்டாலோ அல்லது வேலையின்மை ஏற்பட்டாலோ அடுத்த வேலையை தேடி அதில் சேரும் காலம் வரை குடும்ப பொருளாதாரம் பாதிக்கப்பட்டுவிடும். அல்லது வங்கிக் கணக்கில் சம்பளம் சரியான நேரத்தில் கிரெடிட் ஆகாமல் பத்து நாள் கழித்து காலதாமதமாக வந்தாலோ, சம்பாதிக்கும் நபருக்கு ஏதேனும் அசம்பாவிதம் ஏற்பட்டாலோ குடும்பத்தின் பொருளாதாரம் பாதிக்கப்படும். இதுபோன்ற பாதிப்புகளை சந்திக்காமல் இருக்க வேண்டுமென்றால் அவசர கால நிதியானது அனைவருக்கும் அவசியமாகிறது. ![]() பொதுவாக ஒருவரின் குறைந்தபட்சம் மூன்று மாத சம்பளத்திலிருந்து அதிகபட்சம் ஆறுமாத சம்பளம் வரை அவசர கால நிதி சேமிப்பாக வைத்திருப்பது நல்லது. அப்போதுதான் மேலே குறிப்பிட்டுள்ள அவசரகால சமயங்களை சமாளிக்க முடியும். உதாரணத்திற்கு கமலாவின் மாதச் சம்பளம் 15,000 ரூபாயாக கொள்வோம். அவர் அவசரகால நிதியாக குறைந்தபட்சம் ரூ.45,000 (மூன்று மாத சம்பளம்), அதிகபட்சமாக ரூ.90,000 (ஆறு மாத் சம்பளம்) வைத்திருக்க வேண்டும். சம்பளம் உயரும்போது அவசரகால நிதி சேமிப்பும் அதிகரிக்க வேண்டியது அவசியம். எதில் சேமிப்பது? அவசரகால நிதியானது தேவை என்கிற போது சேமிக்கும் திட்டத்திலிருந்து விரைந்து எடுக்கக் கூடியதாக இருக்க வேண்டும். அதனால் இந்த சேமிப்புக்கு பரிசீலிக்க வேண்டிய திட்டங்களில் முதன்மையானது வங்கி சேமிப்புக் கணக்கு. இதில் இரண்டு மாத தொகையை சேமித்து விட்டு, மீதமுள்ள ஒரு மாத தொகையை லிக்விட் ஃபண்டுகளில் அல்லது கடன் ஃபண்டுகளில் முதலீடு செய்து வைக்கலாம். எனவே, நாம் எல்லோரும் அவசரகால நிதி சேமிப்பதில் அலட்சியம் காட்டாமல் இன்றிலிருந்தே இதற்கான நடவடிக்கையை மேற்கொள்வோம். -செ.கார்த்திகேயன் |
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)