பெரும்பாலான மனநலப் பிரச்னைகளுக்கு சிறு வயதில் நடந்த சம்பவங்கள் தான் காரணமாக இருக்கிறது. அந்த வகையில், ஃபோபியா வருவதற்கும் சிறு வயது தாக்கம் முக்கியக் காரணமாக இருக்கலாம்" என்று உளவியல் பகுப்பாய்வு நூலில் சிக்மண்டு பிராய்டு தெரிவித்துள்ளார்.
ஃபோபியா குறித்துப் பேசுகிறார் மனநல மருத்துவர் டி.வி.அசோகன்...
''பயம் தேவையற்றது. ஆனால், எல்லோரும் பயப்படவே செய்கிறோம். அதற்காக, எல்லா விஷயத்துக்கும் பயந்து கொண்டிருக்கலாமா? அப்படிச் சின்னச் சின்ன விஷயத்துக்குக் கூடப் பயப்படுவதைத்தான் ஃபோபியா என்கிறார்கள் நிபுணர்கள். இந்த ஃபோபியாவை, 'இயற்கைக்கு மாறான அச்சம்' என்றும் கூறப்படுகிறது.
சாதாரணமாகப் பயப்படுபவரைக் காட்டிலும், ஃபோபியாவால் பாதிப்படைந்தவர்கள்தான் அதிகப் பிரச்னைகளை எதிர்கொள்கின்றனர்.
தண்ணீரைக் கண்டால் பயம், உயரமான இடத்தில் ஏற பயம், யாராவது கத்தினால் பயம்... நடுக்கம், பயணம் செய்யப் பயம், பூனையைக் கண்டால் பயம், தனிமையாக இருக்கப் பயம், ரத்தத்தைக் கண்டால் பயம், பூச்சியைக் கண்டால் பயம் என்று நீளும் ஃபோபியாக்களின் வகைகள் ஏராளம். இதுவும், ஒருவித மனநோய் தான்.

இத்தகைய ஃபோபியாக்கள், உடம்பில் ஏற்படும் ரசாயன மாற்றத்தினால் ஏற்படுகிறது. குடும்பத்தில் அல்லது சுற்றுப்புறத்தில் பாதிக்கின்ற நிகழ்வுகள், மனசுக்குள் கண்டபடி குழப்பமான எண்ணங்கள் போன்றவற்றாலும், வளரும் பருவத்தில் மனதில் ஆழப் பதிந்த அல்லது பாதித்த விஷயம் ஏற்படுத்தும் விளைவாலும் இந்த ஃபோபியா ஏற்படுகிறது.
ஃபோபியாவால் பாதிப்புக்கு உள்ளானவர்கள் ஆரம்பக் கட்டத்தில், சாதாரணமாக நடந்த ஒரு சம்பவத்தை நினைத்துப் பயப்படுவார்கள். போகப் போக நடக்காத ஒரு விஷயத்தை எண்ணி பதட்டமும், பயமும் அடைவார்கள்.
இப்படி ஒரு செயலை நினைத்துப் பயப்படுபவர்கள், காலப் போக்கில் அதை நிராகரித்தும் விடுகிறார்கள். இவ்வாறு இருப்பதால், எல்லா விஷயங்களிலும் பயம் வருவதற்கான வாய்ப்புகள் உள்ளது.
ஃபோபியா ஏற்பட்டிருக்கிறது என்றால் குறிப்பாகச் சில அறிகுறிகள் இருக்கும். அவை, அளவுக்கு மீறிய அச்ச உணர்வினால் உடல் நடுங்குவது, உடலில் அதிகமாக வியர்த்துக் கொட்டுவது, மூளைச் சோர்வு, மூக்கு ஒழுகல், இதயத்துடிப்பு அதிகரிப்பது, சுவாசிக்கத் திணறுவது ஆகியன.
இந்த அறிகுறிகளை, சிலர் சாதாரணமான விஷயம்தானே என்று அலட்சியம் செய்பவர்களும் இருக்கிறார்கள். இந்தச் சிறு அலட்சியத்தால் மனநலன் ஆழமாகப் பாதிக்கக் கூடும்.
ஃபோபியாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு, நடத்தை மாற்றுச் சிகிச்சை, மனப்பதட்டத்துக்குத் தரக்கூடிய மருந்து மாத்திரைகள் கொடுப்பதன் மூலம் சரி செய்யலாம். ஃபோபியா அறிகுறி தென்பட்டால், உடனடியாக மனநல மருத்துவரை அணுகுவது நல்லது.
'சின்னப் பயம்... உயிரைக் கொல்லும்' என்று ஒரு பழமொழி இருக்கு. ஞாபகம் இருக்கட்டும்!
- மு.அழகர்பாரதி
ஃபோபியாவால் பாதிப்புக்கு உள்ளானவர்கள் ஆரம்பக் கட்டத்தில், சாதாரணமாக நடந்த ஒரு சம்பவத்தை நினைத்துப் பயப்படுவார்கள். போகப் போக நடக்காத ஒரு விஷயத்தை எண்ணி பதட்டமும், பயமும் அடைவார்கள்.
இப்படி ஒரு செயலை நினைத்துப் பயப்படுபவர்கள், காலப் போக்கில் அதை நிராகரித்தும் விடுகிறார்கள். இவ்வாறு இருப்பதால், எல்லா விஷயங்களிலும் பயம் வருவதற்கான வாய்ப்புகள் உள்ளது.
ஃபோபியா ஏற்பட்டிருக்கிறது என்றால் குறிப்பாகச் சில அறிகுறிகள் இருக்கும். அவை, அளவுக்கு மீறிய அச்ச உணர்வினால் உடல் நடுங்குவது, உடலில் அதிகமாக வியர்த்துக் கொட்டுவது, மூளைச் சோர்வு, மூக்கு ஒழுகல், இதயத்துடிப்பு அதிகரிப்பது, சுவாசிக்கத் திணறுவது ஆகியன.

ஃபோபியாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு, நடத்தை மாற்றுச் சிகிச்சை, மனப்பதட்டத்துக்குத் தரக்கூடிய மருந்து மாத்திரைகள் கொடுப்பதன் மூலம் சரி செய்யலாம். ஃபோபியா அறிகுறி தென்பட்டால், உடனடியாக மனநல மருத்துவரை அணுகுவது நல்லது.
'சின்னப் பயம்... உயிரைக் கொல்லும்' என்று ஒரு பழமொழி இருக்கு. ஞாபகம் இருக்கட்டும்!
- மு.அழகர்பாரதி
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக