புதன், 24 ஜூன், 2015

மனிதன் எந்த ஒரு சூழ்நிலையிலும் மகிழ்ச்சியாகவும் நிம்மதியாகவும் வாழ கடைப்பிடிக்க வேண்டிய முக்கியமான யோசனைகள்

மனிதன் எந்த ஒரு சூழ்நிலையிலும் மகிழ்ச்சியாகவும் நிம்மதியாகவும் வாழ கடைப்பிடிக்க வேண்டிய முக்கியமான யோசனைகள் ஐந்து மட்டும் சொல்லுங்கள். அதில் ஏதாவது ஒன்றிரண்டையாவது கடைப்பிடிக்க முடிகிறதா என்று முயற்சி செய்து பார்க்கிறேன்?
 
* தன் நிலை அறிந்து வாழ வேண்டும்.
* வருமானத்துக்கும் செலவுக்குமான விகிதாசாரம் சம அளவில் அமைய வேண்டும்.
* அடுத்தவரோடு ஒப்பிடுதலும் பொறாமைப்படுதலும் கூடாது.
* நா காக்க வேண்டும்.
* மனதறிய பொய்மை கூடாது.
 
இந்த ஐந்துமே சராசரி வாழ்க்கைக்கு அடித்தளமான விஷயங்கள். இந்த ஐந்தையும் கடைப்பிடிப்பவர்களுக்கு கஷ்டங்கள் இல்லை. இதனைத்தான் வேறு வேறு வார்த்தைகளில் வள்ளுவரும் சித்தர்களும் ஆன்மிகப் பெரியவர்களும் சொல்லியிருக்கிறார்கள்.
‪#‎விகடன்‬

கருத்துகள் இல்லை: