சனி, 31 ஆகஸ்ட், 2013

பூச்சித் தொல்லை ஒழிய....

கொசுத் தொல்லை ஒழிய...

கொசுத்தொல்லைக்கு குட்நைட் போன்றவற்றை பணம் செலவழித்து வாங்க முடியாதவர்கள். வீட்டில் அருகே வளரும் தும்பைச் செடியை அரைத்து இரவில் பூசிக்கொண்டு படுத்தால் கொசுக்கள் கடிக்காது. தும்பைச் செடி உடலுக்கு குளிர்ச்சியை தரக்கூடியது.

ஈ மொய்ப்பதை தடுக்க...

சமையலறை, டைனிங் டேபிள் ஆகிய இடங்களில் ஈ மொய்த்தால் ஒரு குவளை நீரில் 2 டீஸ்பூன் உப்பு கலந்து அந்த இடங்களில் தெளித்து விட்டால் ஈ மொய்க்காது.

பல்லியை விரட்ட...

வீட்டில் பல்லிகள் நடமாடும் இடத்தில் பாச்சை உருண்டை ஒன்றிரண்டை போட்டு வைத்தால் பல்லி எட்டியே பார்க்காது. நாமும் பல்லி பற்றிய பயமின்றி நிம்மதியாக வீட்டு வேலைகளைக் கவனிக்கலாம்.

எறும்புகள் வராமல் தடுக்க...

எறும்பு பவுடர் போடும் போது அதை அப்படியே தூவி வைத்தால் மின்விசிறி சுற்றும்போது காற்றில் பறந்து சாப்பாட்டில் கூட கலந்து விடலாம். அதனால் எறும்பு பவுடரை மண்ணெண்ணெயில் குழைத்து பூசி விட்டால் எறும்பும் வராது. அதிகப் பவுடரும் ஆகாது.

கரப்பான் பூச்சிகளை ஒழிக்க...

கரப்பான் பூச்சிகள் இருக்குமிடத்தில் வெள்ளைப்பூண்டை நசுக்கி சிறு, சிறு துண்டுகளாக்கி சிதறி இருக்கும்படி போட்டு வைத்தால் கரப்பான் பூச்சிகள் ஒழிந்து விடும்.

மூட்டைப் பூச்சிகளை ஒழிக்க...

தேங்காய் எண்ணெய்யில் கற்பூரத்தை கலந்து அதை பிரஷ் ஒன்றினால் எடுத்து வீட்டிலுள்ள மரச்சாமான்களின் மீது தடவி வந்தால் மூட்டை பூச்சிகள் ஒழிந்து விடும்.

விஷக்கடி

விஷ வண்டுகள் கொட்டினால் அந்த இடத்தில் துளசி இதழ்களை கசக்கித் தேய்த்தால் விஷம் முறிந்து, வலி குறையும்.

பூச்சிக்கடி, உடல் அரிப்பு

பூச்சிக்கடி ஏற்பட்டால் உடனே 3 கிராம்பை வாயில் போட்டு சுவைத்துச் சாப்பிட வேண்டும். அரிப்பு நிற்கும். தேனீ , குளவி கடித்து பெரியதாக வீங்கினாலும் சரியாகி விடும். கடிபட்ட இடத்தில் சுண்ணாம்பு தடவ வேண்டும்.

தேள் கொட்டுதல்

தேள் கொட்டினால், கொட்டிய இடத்தில் சுண்ணாம்பை தடவ வேண்டும். 3 கிராம்புகளை மென்று சாப்பிட்டால் விஷம் இறங்கிவிடும். கொட்டின இடம் வீங்கினாலும் வற்றிவிடும். மஞ்சளையும் சுண்ணாம்பையும் கலந்து கடிவாயில் தடவினால் வலியும் வீக்கமும் மறைந்துவிடும்.

வேர்க்குரு, அரிப்பு

குளித்த பிறகு ஈரம் போக துடைத்து, மருதாணி எண்ணைய் தடவி வந்தால், அரிப்பு நின்று புண் ஆறி பரிபூரண குணம் கிடைக்கும்.

வேப்பிலையை சுத்தம் செய்து, கழுவி நிழலில் உலர வைத்து, அரைத்து உடம்பிற்கு தேய்த்துக் குறித்தால் சரும நோய்கள் வராது.

பாசிப்பயறுடன் பொடுதலை இலையையும் சேர்த்து அரைத்துத் தேய்த்துக் குளித்தால் உடம்பு பளபளப்புடன் இருப்பதுடன் தேகத்தில் சொறி , சிரங்கு, படை போன்ற சரும நோய்கள் வராது.

வெள்ளி, 30 ஆகஸ்ட், 2013

”நேர்மையை விதையுங்கள்.

ஒரு மிகப்பெரிய கம்பெனியின் முதலாளி தனக்கு வயதாகி விட்டதால் அவர் கம்பெனியின் பொறுப்பை அவரிடம் வேலை செய்யும் ஒரு திறமையானவரிடம் ஒப்படைக்க முடிவு செய்தார்.எல்லாரும் தன் ரூமுக்கு வருமாறு கட்டளை இட்டார்.

உங்களில் ஒருவர் தான் என் கம்பெனியின் பொறுப்பை ஏற்க வேண்டும் ,அதனால் உங்களுக்கு ஒரு போட்டி வைக்க போகிறேன். யார் ஜெயிக்கிறார்களோ அவர் தான் அடுத்த மேனேஜர் என்றார்.

என் கையில் ஏராளமான விதைகள் இருக்கின்றன இதை ஆளுக்கு ஒன்று கொடுப்பேன்.இதை நீங்கள் உங்கள் வீட்டில் ஒரு தொட்டியில் நட்டு, உரம் இட்டு தண்ணீர் ஊற்றி நன்றாக வளர்த்து அடுத்த வருடம் என்னிடம் காட்ட வேண்டும்.யார் செடி நன்றாக வளர்ந்து இருக்கிறதோ அவரே என் கம்பெனியின் பொறுப்பை ஏற்க வேண்டும் என்றார்.

அனைவரும் ஆளுக்கு ஒரு விதை வாங்கி சென்றனர்.அந்த கம்பெனியில் வேலை செய்யும் வாசு வும் ஒரு விதை வாங்கி சென்றான்.தன் மனைவியிடம் முதலாளி சொன்ன அனைத்தையும் சொன்னான்.அவன் மனைவி தொட்டியும் உரம் தண்ணீர் எல்லாம் அவனுக்கு கொடுத்து அந்த விதையை நடுவதற்க்கு உதவி செய்தாள்.

ஒரு வாரம் கழிந்தது ஆபிஸில் இருக்கும் அனைவரும் தங்கள் தொட்டியில் செடி வளர ஆரம்பித்து விட்டது என்று பேசிக்கொள்ள ஆரம்பித்தனர்.ஆனால் வாசுவின் தொட்டியில் செடி இன்னும் வளரவே ஆரம்பிக்கவில்லை.

ஒரு மாதம் ஆனது செடி வளரவில்லை, நாட்கள் உருண்டோடின ஆறு மாதங்கள் ஆனது அப்பொழுதும் அவன் தொட்டியில் செடி வளரவே இல்லை.நான் விதையை வீணாக்கிவிட்டேனா என்று புலம்பினான் ஆனால் தினந்தோறும் செடிக்கு தண்ணீர் ஊற்றுவதை நிறுத்தவில்லை.தன் தொட்டியில் செடி வளரவில்லை என்று ஆபிஸில் யாரிடமும் சொல்லவில்லை.

ஒரு வருடம் முடிந்து விட்டது எல்லாரும் தொட்டிகளை முதலாளியிடம் காட்டுவதற்காக எடுத்து வந்தார்கள்.வாசு தன் மனைவியிடம் காலி தொட்டியை நான் எடுத்து போகமாட்டேன் என்று சொன்னான்.அவன் மனைவி அவனை சமாதானப்படுத்தி நீங்கள் ஒரு வருடம் முழுக்க உங்கள் முதலாளி சொன்ன மாதிரி செய்தீர்கள்.செடி வளராததற்கு நீங்கள் வருந்த வேண்டியதில்லை .நேர்மையாக நடந்து கொள்ளுங்கள் தொட்டியை எடுத்து சென்று முதலாளியிடம் காட்டுங்கள் என்றாள்.

வாசுவும் காலி தொட்டியை ஆபிஸுக்கு எடுத்து சென்றான்.எல்லார் தொட்டியையும் பார்த்தான் விதவிதமான செடிகள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு உயரத்தில் இருந்தன.இவன் தொட்டியை பார்த்த அனைவரும் சிரிக்க ஆரம்பித்தனர்.

முதலாளி எல்லாரையும் தன்னுடைய அறைக்கு வருமாறு சொன்னார்.வாவ் எல்லாரும் அருமையாக செடியை வளர்த்து உள்ளீர்கள் உங்களில் ஒருவர் தான் இன்று பொறுப்பு ஏத்துகொள்ளபோகறீர்கள் என்றார்.எல்லாருடைய செடியையும் பார்வை இட்டார்.வாசு கடைசி வரிசையில் நின்றிருந்தான் அவனை அருகே வருமாறு அழைத்தார்.

வாசு தன்னை வேலையை விட்டு நீக்கத்தான் கூப்பிடுகிறார் என்று பயந்து கொண்டே சென்றான்.முதலாளி வாசுவிடம் உன் செடி எங்கே என்று கேட்டார்.ஒரு வருடமாக அந்த விதையை நட்டு உரமிட்டு தண்ணீர் விட்டதை விலாவாரியாக சொன்னான்.

முதலாளி வாசுவை தவிர அனைவரும் உட்காருங்கள் என்றார்.பிறகு வாசு தோளில் கையை போட்டுகொண்டு நமது கம்பெனியின் நிர்வாகத்தை ஏற்று நடத்தப் போகிறவர் இவர்தான் என்றார்.வாசுவுக்கு ஒரே அதிர்ச்சி தன் தொட்டியில் செடி வளரவே இல்லை பிறகு ஏன் நமக்கு இந்த பொறுப்பை கொடுக்கிறார் என்று குழம்பிபோனார்.

சென்ற வருடம் நான் உங்கள் ஆளுக்கு ஒரு விதை கொடுத்து வளர்க்க சொன்னேன் அல்லவா அது அனைத்தும் அவிக்கப்பட்ட விதைகள்[Boiled seeds]. அந்த விதைகள் அவிக்கப்பட்டதால் அது முளைக்க இயலாது. நீங்கள் அனைவரும் நான் கொடுத்த விதை முளைக்காததால் அதற்கு பதில் வேறு ஒரு விதையை நட்டு வளர்த்து கொண்டு வந்தீர்கள்.வாசு மட்டுமே நேர்மையாக நடந்து கொண்டான்,ஆகவே அவனே என் கம்பெனியை நிர்வாகிக்க தகுதியானவன் என்றார்.

*If you plant honesty, you will reap trust.
* If you plant goodness, you will reap friends.
* If you plant humility, you will reap greatness.
* If you plant perseverance, you will reap contentment.
* If you plant consideration, you will reap perspective.
* If you plant hard work, you will reap success.
* If you plant forgiveness, you will reap reconciliation.
* If you plant faith in God , you will reap a harvest.

So, be careful what you plant now; it will determine what you will reap later..

“Whatever You Give To Life, Life Gives You .

Ilayaraja Dentist

வெள்ளி, 23 ஆகஸ்ட், 2013

கால்ஷியம் அவசியம்...

கிட்டத்தட்ட 1 முதல் 1.3 கிராம் கால்சியம் நமக்கு தினசரி தேவை. தினசரி 2 கப் மோர், கொஞ்சம் சோயாகட்டி(TOFU), கீரை, 1கப் பீன்ஸ், 1 கப் பழச்சாறு சாப்பிட்டாலே இந்த 1 கிராம் கால்சியம் கிஅடைத்து விடும். பாலில் நிறைய கால்சியம் இருந்தாலும் பாக்கெட் பால் குறித்து பயம் நிறைய இருப்பதால் முடிந்தவரை தவிர்க்கலாம். மற்ற உணவிற்கு வாய்ப்பில்லாதவரும், மெனோபாஸ் நேரத்தில் ஆஸ்டியோபோரோஸிஸ் இருப்பாதாக ஏற்கனவே மருத்துவரால் சொல்லப்பட்டவரும் மட்டும், உங்கள் மருத்துவரின் ஆலோசனைப்படி பால் எடுங்கள்.

பழங்களில் அத்திப்பழம் கால்சியம் நிறைந்த ஒரு கனி. உலராத சீமை அத்தி இன்னும் சிறப்பு. கிட்டத்தட்ட ஒரு அத்தியில் 170கிராம் கல்சியம் உள்ளது. ஆரஞ்சு, வாழைப்பழம், கொய்யா, இவற்றிலும் கால்சிய சத்து கூடுதலாக உள்ளது. கீரைகளை எடுத்தால் வெந்தயக் கீரை, வெங்காயத் தாள் மிகச் சிறப்பு. காலிஃப்ளவரிலும் மிக அதிக அளவு கால்சியம் உள்ளது. முருங்கை, கொத்தமல்லி, முள்ளங்கிகீரை, பாலக் இவற்றிலும் கால்சியம் குறைவில்லாமல் உண்டு.

தானியங்களில் ராகிக்கு முதலிடம். கிட்ட்த்தட்ட 100கிராம் ராகியில் 380 மில்லி கிராம் கால்சியம் உள்ளது. அவ்வப்போது ராகி கஞ்சி/ராகி தோசை/ ராகி வெல்ல உருண்டை வீட்டில் இனி செய்யத் தவறாதீர்கள். கொள்ளு, ரஜ்மா இரண்டுமே சோயாவிற்கு இணையாக கால்சியம் உள்ளவை. ராகி ரொட்டிக்கு, ரஜ்மா குருமா பாலக் கீரை சேர்த்து தந்து, ஒரு கப் மோரோ அல்லது ஒரு கப் ஆரஞ்சு ஜூஸோ சாப்பிட்டால், அன்றைய தேவை கால்சியம் பூர்த்தி!

காய்கறிகளில் கேரட், வெண்டை, வெங்காயம், சர்க்கரைவள்ளிகிழங்கு இவற்றிலுள்ள சுண்ணாம்பு சத்து குறைவில்லாதது. புலால் சாப்பிடுபவருக்கு நண்டில் எக்கச்சக்கமாய் கால்சியம் கிடைக்கும். 100கிராம் நண்டில் 1600மிகி கால்சியமுள்ளது. அதே போல் மீனிலும் கால்சியம் மிக அதிகம். அது தான் நண்டு எலும்புக்கு நல்ல்துன்னு சொல்லிட்டாரே என அவசரப்பட வேண்டாம். அலர்ஜி உள்ளோருக்கு நண்டு உடம்பெங்கும் அரிப்பை தடிப்பை ஏற்படுத்திவிடலாம். “சைனிஸ் ஃபுட் சாப்பிடலாமுன் வந்தோம் சார்!..சாப்பிடும்போது இந்தியனாக இருந்தார்..இப்போது மூஞ்சு சைனிஸாகவே மாறிடுச்சு”, என்று சைனிஸ் ரெஸ்டரண்டுக்கு சமீபமாய் போய் பதறி வந்த நண்பர் பலரை எனக்குத் தெரியும்.

கால்சியம் என்றதும் பலருக்கும் அது எலும்புக்கு நல்லது என்ற கருத்துதான் தெரியும். கால்சியம் இதய துடிப்பிற்கு, தசை வலுவிற்கு, இரத்த கொதிப்பு சீராக இருக்க , இரத்த நாளங்களில் புண்ணாகாமல் இருக்க என பல பணிகளுக்கு மிக அவசியம். உடல் சோர்வு போக்க உடனடி கால்ஸியம் மட்டுமே மருந்தும் கூட. கால்சியம் உடலில் சேர விட்டமின் டி சத்து ரொம்ப அவசியம். இப்போது விட்டமின் கே2, மக்னீசியமும் அவசியம் என்கிறார்கள். விட்டமின் டி சத்து எந்த ஆட்சிக்கு வந்தாலும் இலவசமாய் கிடைக்கும். கொஞ்ச நேரம் வெயிலில் நிற்க வேண்டும் அவ்வளவுதான் 15 நிமிட சூரியஒளி போதும்.

சுண்ணாம்புச்சத்து குறைவால், விழாமலே வரும் எலும்பு முறிவுகள் இன்று அதிகம். ஷாப்பிங் போவது மாதிரி மருந்துக்கடைக்கு போய் பல மருந்தை வாங்கி விருந்தாய் சாப்பிடுவோருக்கும் கால்சியம் குறையும். குறிப்பாய் ஸ்டீராய்டு மருந்து சாப்பிடுவோருக்கு இந்த வாய்ப்பு அதிகம். மாதவிடாய் முடிவில், குழந்தைப்பேற்றில் பாலூட்டும் போது, கால்சியம் குறையும். இவர்கள் எல்லோருக்குமே கூடுதல் கால்சியம் ரொம்ப ரொம்ப அவசியம். உணவில் அதை தேர்ந்து எடுத்து சாப்பிடுவது அவசியம். டாக்டர் சொன்னப்புறம் பார்த்துக்கலாம் என இராமல் 20 வயதுகளிலேயே இதில் கவனாமாயிருப்பது நல்லது!

வியாழன், 22 ஆகஸ்ட், 2013

அவசியத் தேவையாகிவிட்ட ஆங்கிலம்!

ஆங்கிலம்தான், அறிவின் அடையாளம் என்பது நடைமுறை நிஜம். எனவே, கல்வி அறிவுபெற படிக்க மட்டுமல்ல, கார்ப்பரேட் உலகில் ஜெயிக்க மட்டுமல்ல, எந்தத் துறையில் சிகரம் தொடவும், எழுதுவதிலும், பேசுவதிலும் ஆங்கிலத் திறமை அவசியம். 

பள்ளிக் கூடமே போகாத எத்தனையோ பேர் பிசினஸில் ஜெயித்திருக்கிறார்களே என்று கேட்கலாம். பிசினஸ் நடத்த ஆங்கிலப் புலமைத் தேவையில்லை. ஆனால், இன்றைய கல்வியில் படிப்பதற்கு ஆங்கிலத் தேர்ச்சி அவசியமாகிவிட்டது.

இன்ற இணையதளமும், மின்னஞ்சலும், பிசின¬ஸ் உலகமயமாக்கிவிட்டன. இதனால் உலகத்தில் உள்ள அனைத்து நாட்டினரும் ஆங்கிலத்தைக் கற்று வருகின்றனர்.

ஆங்கிலத்தைக் கண்டு பயப்படாதீர்கள். தினமும் நூல் நிலையம் செல்லவேண்டும். ஆங்கில நாளிதழ் படிக்கவேண்டும். ஐந்து புதிய வார்த்தைகளின் அர்த்தங்களை கண்டுபிடிக்க வேண்டும். பின்னர் அதனை மனப்பாடம் செய்யவேண்டும்.

சுமாராக ஒரு வருடத்திற்கு 1,500 வார்த்தைகளைக் கற்க முடியும். ஐந்தே வருடங்களில் 7,500 வார்த்தைகளை கற்கலாம். இவ்வாறு கற்றுக்கொள்ளும்போது ஆங்கில ஞானம் பிரமாதமாக வளரும். இந்த டெக்னிக்கை பின்பற்றி ஆங்கிலத்தில் பேசவும், எழுதவும் திறமையை வளர்த்தால் வாழ்க்கையில் கற்பனை செய்து பார்த்தேயிராத மாற்றங்கள் வரும் என்பது உண்மை.

தமிழை மறக்காதீர்கள். தமிழை மறப்பது தாயை மறப்பதற்கு சமம். ஆனால், மாறிவரும் உலகில் ஆங்கில அறிவு அத்தியாவசியமான ஒன்றாகிவிட்டது.


Nanayam Vikatan

வெள்ளி, 9 ஆகஸ்ட், 2013

தவறுகளைத் திருத்துவோம்!

பணம், காசு மட்டும் ஒரு மனிதனை மதிப்புமிக்கவனாக மாற்றிவிடாது. சுய ஒழுக்கமும் தேவை. நாம் செய்வதை யார் கவனிக்கப் போகிறார்கள் என உங்கள் வீட்டின் முன்னே ஒரு பேப்பரை சுருட்டிப் போட்டுப் பாருங்கள், மாலையில் வீட்டுக்கு நீங்கள் திரும்பி வரும்போது மாநகராட்சி குப்பை வண்டி உங்கள் வீட்டின் முன்பு வந்து நிற்கும். அந்த அளவுக்கு ஒருவரைப் பார்த்து ஒருவர் குப்பைகளை அதே இடத்தில் போட்டுச் சென்றிருப்பார்கள்.

நகர் முழுக்க அங்கங்கே குப்பைத் தொட்டிகள் வைக்கப்பட்டுள்ளது. அதில் குப்பைகளைப் போடுவோம். காலையில் வீடு தேடிவரும் குப்பை சேகரிப்பவரிடம் குப்பைகளைக் கொட்டுவோம். அதைவிடுத்து தெருக்களிலும், வீட்டின் முன்பும் குப்பைகளைச் சேர்ப்பதால் நாமே வலிய சென்று நோய்களை வாங்கி மருத்துவத்துக்கு பணம் செலவழிப்பதை நிறுத்துவோம்!

வியாழன், 8 ஆகஸ்ட், 2013

ஈஸியான... மட்டன் பிரியாணி

ஈஸியான... மட்டன் பிரியாணி

ரம்ஜான் என்றால் அனைவருக்கும் முதலில் நினைவிற்கு வருவது பிரியாணி தான். இத்தகைய பிரியாணியானது பலவாறு சமைக்கப்படும். இந்தியாவின் பல பகுதியில் உள்ள மக்கள் பிரியாணியை பல ஸ்டைலில் சமைப்பார்கள். இப்போது தமிழ் போல்டு ஸ்கை ஒரு சூப்பரான மற்றும் ஈஸியாக சமைக்கக்கூடியவாறு இருக்கும் ஒரு பிரியாணி ஸ்டைலை கொடுத்துள்ளது. அந்த மட்டன் பிரியாணியின் செய்முறையை படித்து முயற்சி செய்து பாருங்கள்.

குறிப்பாக இந்த பிரியாணியை பேச்சுலர்கள் கூட ட்ரை செய்யலாம். சரி, அந்த ரெசிபியைப் பார்ப்போமா!!!

தேவையான பொருட்கள்:

மட்டனுக்கு...

மட்டன் - 1 கிலோ
வெங்காய பேஸ்ட் - 4 டேபிள் ஸ்பூன்
பாதாம் பேஸ்ட் - 1 டேபிள் ஸ்பூன்
தயிர் - 1/2 கப்
புதினா - 1 கட்டு (நறுக்கியது)
தேங்காய் பால் - 1/2 கப்
மல்லி தூள் - 1 டீஸ்பூன்
மஞ்சள் தூள் - 1 டீஸ்பூன்
மிளகு தூள் - 1 டீஸ்பூன்
இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 டேபிள் ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - 3 டேபிள் ஸ்பூன்
தண்ணீர் - 2 கப்

சாதத்திற்கு...

பாசுமதி அரிசி - 2 கப்
ஏலக்காய் - 4
கிராம்பு - 4
பட்டை - 2 உப்பு -
தேவையான அளவு நெய் - 2 டேபிள் ஸ்பூன்
தண்ணீர் - 4 கப்

செய்முறை: முதலில் மட்டனை நன்கு சுத்தமாக கழுவி, நீரை முற்றிலும் வடிகட்டி விட்டு, ஒரு பாத்திரத்தில் போட்டுக் கொள்ள வேண்டும்.

பின் அந்த மட்டனில் தயிர், மஞ்சள் தூள் மற்றும் உப்பு சேர்த்து 2 மணிநேரம் ஊற வைத்துக் கொள்ள வேண்டும்.

இரண்டு மணிநேரம் ஆன பின்பு, ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், வெங்காய பேஸ்ட் போட்டு, 5-6 நிமிடம் வதக்க வேண்டும்.

பின் இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து 2 நிமிடம் வதக்கி, பாதாம் பேஸ்ட், மல்லி தூள், மிளகு தூள், கரம் மசாலா, தேங்காய் பால் ஆகியவற்றை சேர்த்து 3 நிமிடம் வதக்க வேண்டும்.

பின்பு ஊற வைத்துள்ள மட்டன் மற்றும் புதினாவைப் போட்டு, நன்கு கிளறி 15-20 நிமிடம் தீயை குறைவில் வைத்து வதக்கி விட வேண்டும்.

பிறகு உப்பு மற்றும் தண்ணீர் ஊற்றி, மூடி வைத்து, 45 நிமிடம் மட்டனை வேக வைத்து, இறக்க வேண்டும்.

பின்னர் அரிசியைக் கழுவி, நீரை வடிகட்டிவிட்டு தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.

அடுத்து ஒரு குக்கரை அடுப்பில் வைத்து, அதில் சாதத்திற்கு கொடுத்துள்ள தண்ணீரை ஊற்றி, கிராம்பு, பட்டை, ஏலக்காய் போட்டு, நன்கு தண்ணீரை கொதிக்க விட்டு, அரிசி மற்றும் உப்பு சேர்த்து, தீயை குறைவில் வைத்து, மூடி வைத்து 2-3 விசில் விட்டு இறக்க வேண்டும்.

விசில் போனதும் குக்கரை திறந்து, ஒரு பாத்திரத்தில் சிறிது சாதத்தைப் போட்டு, அதன் மேல் சிறிது மட்டன் கலவையை பரப்பி, மீண்டும் சாதத்தை போட்டு, மீதமுள்ள மட்டனை பரப்பி, தட்டு கொண்டு மூடி, அடுப்பில் வைத்து 5 நிமிடம் தீயை குறைவில் வைத்து இறக்கி, அதனை கிளறி விட்டால், சூப்பரான மட்டன் பிரியாணி ரெடி!!!

புதன், 7 ஆகஸ்ட், 2013

உன்னதமான வாழ்க்கை எது?

திட்டமிட்டு எளிமையாக வாழ்வது எப்படி என்பதில் சிலருக்கு அல்ல பலருக்கும் பலவித சந்தேகங்கள்.

பத்து, பன்னிரண்டு மணி நேரம் உழைப்பதன் மூலம் என்னத்தைக் காண்கிறீர்கள். வாழ்வில் பாதியை ஆபீஸிலேயே தொலைத்துவிடுகிறீர்கள். இதைத் தவிர, ஏதாவது பிரயோஜனம் உண்டா என்றால் வேறேதும் இல்லை.

ஒரு ஆழமான வாழ்க்கையை வாழ்வது என்பது தான் சிறந்தது. ஆழமான வாழ்க்கை என்றால் என்ன என்று கேட்கிறீர்களா?

நெருங்கிய மனிதர்களுடன் நல்ல தொடர்புடன் இருப்பது, பிடித்த இடங்கள், பிடித்தப் பொருட்களுடன் நேரத்தைச் செலவிடுவதுதான் ஆழமான வாழ்க்கை. அதுதான் உங்களுக்காக நீங்கள் வாழும் உன்னதமான வாழ்க்கை.
Like ·  ·  · 32 minutes ago · 

வியாழன், 1 ஆகஸ்ட், 2013

முன்னேற மூன்று விஷயங்கள்!

வசதியான மற்றும் செழிப்பான வாழ்க்கையை வாழ நீங்கள் சென்றடைய நினைக்கும் இடத்திற்கு உங்களைக் கொண்டு செல்லும் விஷயங்களை மட்டுமே நீங்கள் செய்யவேண்டும்.

உங்களுக்கு எது சரியென்றுபடுகிறதோ, அதைச் செய்யவேண்டும். 

உங்களுக்கு நியாயம் என்று எது தெரிகிறதோ அதன்படியே நடக்கவேண்டும்.

இந்த மூன்றையும் செய்தாலே வாழ்க்கையில் முன்னேறிவிடலாம்!.


Nanayam Vikatan