செவ்வாய், 26 ஆகஸ்ட், 2014

வக்கிரமான எண்ணங்கள் தலைதூக்காது இருக்க என்ன செய்ய வேண்டும்?

மனதை வேறொன்றின் பக்கம் திசைதிருப்ப வேண்டும். சதாசர்வ காலமும் வக்கிரமான யோசனையிலேயே மூழ்கியிருந்தால், அதற்கே மனம் பழகிவிடும். இந்த யோசனைகளே சுகங்கள் கொடுக்கக்கூடியது என்று மருத்துவர்கள் சொல்வார்கள்.
கலை, ஆன்மிகம், இலக்கியம், சேவை போன்றவற்றின் பக்கமாக சிந்தனையைத் திருப்பி செயல்பட்டால் மட்டுமே, வக்கிரமான எண்ணங்களை விரட்ட முடியும். சும்மா இருந்தால் வக்கிரமான எண்ணங்களே ஆக்கிரமித்து ஆட்டம் போடும். மனம் விரும்புவதை சிந்திக்கிறோமா, சிந்தனைக்கு ஏற்ப மனத்தைப் பழக்குகிறோமா என்பதைப் பொறுத்தது இது.

ஆரோக்கியம் தரும் அசத்தல் ரெசிப்பி!


ஆரோக்கியம் தரும் அசத்தல் ரெசிப்பி!
நாம் ஒருவேளையாவது அரிசி, எண்ணெய் இல்லாத உணவு முறைக்கு மாற வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம். உடல் நலத்துக்கு ஏற்ற உணவுகளால் மாத்திரை, மருந்துகளின் தேவை அளவும் குறையும். விரும்பி சமைத்து சாப்பிட ஆரம்பித்தால் சுவையாக சமைக்கும் கலை புரிபடும்.
ராகி இட்லி
(நான்கு பேருக்கான அளவு)
150 கிராம் ராகி , 50 கிராம் உளுந்து, 50 கிராம் வெந்தயம் இந்த மூன்றையும் ஒருமணி நேரம் தண்ணீரில் ஊற வைத்து இட்லி பதத்தில் உப்பு சேர்த்து கெட்டியாக அரைக்கவும். இட்லி தட்டில் மாவை ஊற்றி வேக வைத்து எடுக்கவும். மாவுடன் வெஜிடபிள் சேர்த்தும் (அ) முந்திரி , பாதாம், டிரை ஃப்ரூட்ஸ் சேர்த்தும் இட்லி தயாரிக்கலாம்.
இதற்கு தொட்டுக் கொள்ள 2 விதமான சட்னி அருமையாக இருக்கும்.
க்ரீன் சட்னி: 1 கட்டு புதினாவை ஆய்ந்து கழுவி லேசாக வேக வைக்கவும். இதனுடன் 2 கட்டு கொத்தமல்லியை நறுக்கிப்போட்டு, 2 பூண்டு பல், பச்சை மிளகாய் உப்பு, புளி சேர்த்து அரைக்கவும்.
தக்காளி - வெங்காய சட்னி: சின்ன வெங்காயத்தை தோல் உரித்துக் கொள்ளவும். தக்காளியை கழுவி துண்டுகளாக நறுக்கவும். இதை சிறிது எண்ணெயில் வதக்கி (எண்ணெய் சேர்க்காமல் சிறிது தண்ணீரில் வேக வைத்தும் அரைக்கலாம்), கொத்தமல்லி, 4 பச்சை மிளகாய், இஞ்சி, 2 பூண்டு பல் சேர்த்து மேலும் வதக்கவும். இதில் தேவையான உப்பு, புளி சேர்த்து பெருங்காயத்தூள் போட்டு மிக்ஸியில் அரைக்கவும்.
* இதேபோல் கம்பை ஊறவைத்து கம்பு மாவு இட்லி தயாரிக்கலாம்.
* இரண்டு இட்லி - 70 -100 கலோரி வெப்பசக்தி தரும்.
LikeLike ·  ·  · 41

வெள்ளி, 22 ஆகஸ்ட், 2014

சில உளவியல் ஆலோசனைகள்...!


1. மற்றவரிடம் பேசும்போது, கைகளை கட்டிக் கொள்ளாதீர்கள். அது உங்களை பலவீனமானவராக காட்டும்.

2. மற்றவரின் கண்களை நேராகப் பார்த்து பேசவும். அது உங்களை நேர்மையானவராகக் காட்டும்.

3. மிகத்தொலைவிலிருந்து மற்றவரோடு குரலை உயர்த்திப் பேசாதீர்கள்.

4. நீங்கள் பேசுவதை மற்றவர் கேட்க வேண்டுமானால் அவர் முகத்தைப் பார்த்து பேசவும்.

5. நேராக அமர்ந்து அல்லது நின்று பேசவும். கூன் போட்டு அமர்ந்தால் மற்றவர் உங்களை சோம்பேரி என நினைக்கக்கூடும்.

6. பேசும்போது முடியை கோதிக் கொள்வதையோ அல்லது அடிக்கடி உடைகளை சரிப் படுத்துவதையோ தவிர்க்கவும். அது உங்களை நம்பிக்கையற்றவராகக் காட்டும்.

7.நகத்தையோ, பென்சில் / பேனா முனையையோ கடிப்பதை தவிர்க்கவும். அது உங்களை பயந்தவராக காட்டக்கூடும்.

8.நம்பிக்கையோடு கூடிய புன்னகை, நீங்கள் சொல்வதை கேட்க விரும்பாதவரையும் கேட்கவைக்கும்.

9.குழந்தைகளோடு பேசும்போது, அருகில் அமர்ந்து பரிவோடு பேசவும்.

10.உங்கள் பேச்சை விளக்குவதற்கு, உங்கள் கைகளையும் பயன்படுத்தவும். சைகைகள் நீங்கள் சொல்வதை மேலும் விவரிக்கும்

வியாழன், 14 ஆகஸ்ட், 2014

கோபத்தை அடக்கச் சுலபமான வழிகள்..!.




1. பொருட்படுத்தாதீர்கள்.
------------------------------------

உங்களைப் பற்றி அவதூறாகவோ, மிக மட்டமாகவோ யார் பேசினாலும் அதைக் காதில் வாங்கிக் கொள்ளாதீர்கள். அதைக் கண்டு கொள்ளாமல் விட்டுவிடுங்கள். எதிரிகள் ஏமாந்து விடுவார்கள்.

2. எதையும் யாரிடமும் எதிர்பார்க்காதீர்கள்.
----------------------------------------------------------------

ஒருவரிடம் நாம் ஒன்றை எதிர்பார்த்து அது கிடைக்கவில்லையென்றால், அவர் மீது கோபம் நமக்கு வருவது இயற்கை தான். எனவே, யாரிடமும் எதையும் எதிர்பார்க்காதீர்கள்.

3. எதிரிகளை அலட்சியம் செய்யுங்கள்.
---------------------------------------------------------

தனக்குப் பிடிக்காத மனிதர்களைப் பற்றி நினைத்துக்கூடப் பார்க்கக்கூடாது. அதனால் நமக்கு ஆத்திரமும், கோபமும் அடிக்கடி ஏற்படுவதை தவிர்க்கலாம். தன்னம்பிக்கை உள்ளவனை ஒரு போதும் அவதூறுகளும், ஏச்சு பேச்சுகளும் பாதிப்பதில்லை.

4. தேவையற்ற எண்ணங்களை நிறுத்தி விடுங்கள்.
--------------------------------------------------------------------------

பிடிக்காத நபர்கள் மற்றும் செயல்களைப் பற்றி எண்ணம் வரும்போது, அந்த எண்ணங்களுக்கு பெரிய பூட்டு போட்டுவிடுங்கள்.