செவ்வாய், 26 ஆகஸ்ட், 2014

ஆரோக்கியம் தரும் அசத்தல் ரெசிப்பி!


ஆரோக்கியம் தரும் அசத்தல் ரெசிப்பி!
நாம் ஒருவேளையாவது அரிசி, எண்ணெய் இல்லாத உணவு முறைக்கு மாற வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம். உடல் நலத்துக்கு ஏற்ற உணவுகளால் மாத்திரை, மருந்துகளின் தேவை அளவும் குறையும். விரும்பி சமைத்து சாப்பிட ஆரம்பித்தால் சுவையாக சமைக்கும் கலை புரிபடும்.
ராகி இட்லி
(நான்கு பேருக்கான அளவு)
150 கிராம் ராகி , 50 கிராம் உளுந்து, 50 கிராம் வெந்தயம் இந்த மூன்றையும் ஒருமணி நேரம் தண்ணீரில் ஊற வைத்து இட்லி பதத்தில் உப்பு சேர்த்து கெட்டியாக அரைக்கவும். இட்லி தட்டில் மாவை ஊற்றி வேக வைத்து எடுக்கவும். மாவுடன் வெஜிடபிள் சேர்த்தும் (அ) முந்திரி , பாதாம், டிரை ஃப்ரூட்ஸ் சேர்த்தும் இட்லி தயாரிக்கலாம்.
இதற்கு தொட்டுக் கொள்ள 2 விதமான சட்னி அருமையாக இருக்கும்.
க்ரீன் சட்னி: 1 கட்டு புதினாவை ஆய்ந்து கழுவி லேசாக வேக வைக்கவும். இதனுடன் 2 கட்டு கொத்தமல்லியை நறுக்கிப்போட்டு, 2 பூண்டு பல், பச்சை மிளகாய் உப்பு, புளி சேர்த்து அரைக்கவும்.
தக்காளி - வெங்காய சட்னி: சின்ன வெங்காயத்தை தோல் உரித்துக் கொள்ளவும். தக்காளியை கழுவி துண்டுகளாக நறுக்கவும். இதை சிறிது எண்ணெயில் வதக்கி (எண்ணெய் சேர்க்காமல் சிறிது தண்ணீரில் வேக வைத்தும் அரைக்கலாம்), கொத்தமல்லி, 4 பச்சை மிளகாய், இஞ்சி, 2 பூண்டு பல் சேர்த்து மேலும் வதக்கவும். இதில் தேவையான உப்பு, புளி சேர்த்து பெருங்காயத்தூள் போட்டு மிக்ஸியில் அரைக்கவும்.
* இதேபோல் கம்பை ஊறவைத்து கம்பு மாவு இட்லி தயாரிக்கலாம்.
* இரண்டு இட்லி - 70 -100 கலோரி வெப்பசக்தி தரும்.
LikeLike ·  ·  · 41

கருத்துகள் இல்லை: