1. நேர்முகத் தேர்வு நடக்கும் அறைக்கு வெளியே ராஜு மிகுந்த பதற்றத்துடன் காத்திருக்கிறான். தன் பெயர் அழைக்கப்பட்டவுடன் வேகவேகமாக உள்ளே சென்றவன், மிதியடி தடுக்கி, கையில் இருந்த ஃபைலுடன் நேர்முகத் தேர்வு நடை பெற்ற அறைக்குள் விழுந்துவிட்டான். கடுப்பான அதிகாரிகள், ''ராஜு! வாட் இஸ் திஸ்?'' எனக் கேட்டனர். பதற்றத்துக்கு நடுவே ராஜு சொன்ன பதிலில் அதிகாரிகளின் கோபம் மறைந்து, ''ஓ.கே... ஓ.கே! கம் இன்சைட்!'' எனச் சிரித்துக்கொண்டே கூறினர். அப்படி அவர்கள் சிரிக்கும் அளவுக்கு ராஜு என்ன சொல்லிஇருப்பான்?
2. நேர்முகத் தேர்வில் மோகனிடம் இந்தக் கேள்வி கேட்கப்படுகிறது. 'உங்களது இடப்பக்கமும், வலப் பக்கமும் இரண்டு கிணறுகள் உள்ளன. இடப்பக்கக் கிணறு முழுக்க நீர் நிரம்பி இருக்கிறது. வலப்பக்கக் கிணற்றில் ஒரு சொட்டு நீர்கூட இல்லை. இரண்டு கிணறுகளும் சம அளவு ஆழம் உடையது. உங்களிடம் ஒரு வாளி தரப்படுகிறது. அந்த வாளியைப் பயன்படுத்தி எத்தனை முறைகளில் உங்களால் இடப்பக்கக் கிணற்றில் இருந்து நீரை வலப்பக்கக் கிணற்றுக்கு மாற்ற முடியும்?'' மோகன் அந்தக் கேள்விக்குச் சரியான விடை அளிக்கவில்லை. ஆனாலும், அவனுக்கு வேலை கிடைத்தது. ஏன்?
3. 5+5+5=550. ஒரே ஒரு கோடு போட்டால் இந்த சமன்பாடு உண்மையாகும். அந்தக் கோடு எது?
- ஜி.லட்சுமிபதி, சென்னை-88.
- ஜி.லட்சுமிபதி, சென்னை-88.
4. ஒரு பொருள். அதில் ஒன்று வாங்கினால் ஐந்து ரூபாய், இரண்டு வாங்கினால் அதே விலைதான். 12 வாங்கினால் பத்து ரூபாய். 144 வாங்கினால் பதினைந்து ரூபாய். அந்தப் பொருள் என்ன?
5. கிழக்குத் திசையில் இருந்து மேற்கு நோக்கி ஒரு மின்சார ரயில் 90 கி.மீ. வேகத்தில் செல்கிறது. அது வெளியிடும் புகை எந்தத் திசையில் செல்லும்?
6. நான் பொய் சொல்லவே மாட்டேன். என்னிடம் இரண்டு நாணயங்கள் உள்ளன. அவற்றின் மொத்த மதிப்பு 75 பைசா. ஆனால், சத்தியமாக அதில் ஒன்று 50 பைசா நாணயம் இல்லை. எப்படி?
7. நான்கு பஞ்சு வியாபாரிகள் இருந்தனர். பஞ்சை எலிகள் நாசமாக்கிவிடுவதால் அவற்றைப் பிடித்துத் தின்ன ஒரு பூனை வளர்த்தனர். பூனையின் நான்கு கால்களையும் ஒவ்வொருவரும் பிரித்துக்கொண்டு பராமரித்தனர். அவரவர் கால்களுக்குத் தங்க மோதிரம், சங்கிலி எனப் போட்டு அழகு பார்த்தனர். ஒருநாள் பின்னங்கால் ஒன்றில் பூனைக்கு அடிபட, அந்தக் காலுக்கு உரிய வியாபாரி மண்ணெண்ணெயில் பஞ்சை நனைத்துக் கட்டுப்போட்டார். அந்த நேரம் பார்த்து பூனை அடுப்போரம் ஒதுங்க, காயம்பட்ட காலில் தீ பிடித்துக்கொள்கிறது. தன் காலில் தீயைப் பார்த்ததும் மிரண்ட பூனை, பயந்து பஞ்சு கோடவுனுக்குள் ஓட, பல லட்ச ரூபாய் பஞ்சு எரிந்து நாசமானது. அதற்கு நஷ்டஈடு கேட்டு மற்ற மூன்று வியாபாரிகளும் அந்த எரிந்த காலுக்குரிய வியாபாரி மீது வழக்குத் தொடுத்தனர். ஆனால், இந்த மூன்று வியாபாரிகளும்தான் அந்த வியாபாரிக்கு நஷ்டஈடு கொடுக்க வேண்டும் என்று தீர்ப்பு வருகிறது. எப்படி?
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக