வியாழன், 24 ஜனவரி, 2013

மனசுல பட்டது - 24/01/2013

சினிமா: சமீபத்தில் அலெக்ஸ் பாண்டியன் படத்தைப் பார்க்கும் நிர்பந்தம் ஏற்பட்டது. என்ன செய்வது, சில ஞாயிறு விடுமுறை பாடுபடுத்துகிறது. டிக்கேட் விலை ரூ.80. ஏற்கனவே இப்படத்தின் விளம்பரங்களைப் பார்த்தும், விமர்சனங்களை படித்தும்தான் பார்க்கச் சென்றேன். படம் ஆரம்பமே ரயில் சண்டைதான். காதுகிழிய சப்தம் வேறு. (DTS)

என்னைப் போன்ற சண்டை பிரியர்களுக்கு ஏற்ற படம்தான், ஆனால் ஒவர் பில்டப் உடம்புக்கு ஆகாது. அலெக்ஸ் பாண்டியன் அதற்கு உதாரணம். எப்படித்தான், இந்த மாதிரி படங்களை எடுக்கிறார்களோ. ஒரே ஆறுதல் சந்தானம், சிரிப்பு கூடவே உவ்வே. அர்த்த வார்த்தைகள். முழுக்க முழுக்க மொக்க படம்தான்.

அனுஷ்கா இருப்பதையே காட்ட வில்லை. பல இடங்களில் லாஜில் சுத்தமாகவே இல்லை. கார்த்தி இம்மாதிரி படங்களை தவிர்த்தால், அடுத்த படங்கள் சுமாராகவாவது ஓடும். இந்த மாதிரி, படங்களை கண்டிப்பாக, இந்திய தொலைக்காட்சிகளில் கூட பார்க்க விரும்ப வில்லை.

நாவல்: எழுத்தாளர் தமிழ்வாணன் நாவல்களை தற்போது படித்து கொண்டிருக்கிறேன். பாக்கெட் நாவல் உபயம். அட ஆச்சரியமாக இருக்கிறது, சுத்த தமிழில் அற்புதமாக எழுதி இருக்கிறார். 

புத்தக சந்தை :
'புத்தக சந்தை' விளம்பரங்கள் பார்க்க பார்க்க மனம் போக துடிக்கிறது. நேரமின்மையால் இந்த முறையும் போக முடியவில்லை. இந்த மாதிரி நிரந்தர புத்தக சந்தையை ஏற்படுத்தினால் எப்பவேண்டுமானாலும் போகலாம்.

கருத்துகள் இல்லை: