ஞாயிறு, 17 பிப்ரவரி, 2013

மனசுல பட்டது - 17/02/2013

 சினிமா: இந்தவாரம் வந்த கல்கியில் , இயக்குனர் பாலுமகேந்திராவின் பேட்டி படித்தேன். அவரின் படைப்பில் வந்த படங்கள் ஒரு மாற்றத்தை ஏற்படுத்தியது என்பது மறுப்பதற்கு இல்லை. பொதிகையில் பார்த்த 'சந்தியா ராகம்' மறக்க முடியாதது.

சோகம்: அமில வீச்சால் பாதிக்கப்பட்டு, சிகிச்சை  பலன் அளிக்காமல் சகோதரி விநோதினி மறைந்தது மிகுந்த சோகத்தை ஏற்படுத்துகிறது. அரசுகள் சரியான தண்டனைகளை இக்குற்றம் புரிந்தவர்களுக்கு அளித்தால் மட்டுமே , இது போன்ற நிகழ்வுகள் நடைபெறாது.

என்னைப் பற்றி:
வாழ்க்கையில் நான் ரொம்பவே ப்ராக்டிக்களாகவே யோசிப்பேன், முடிந்த வரை அதேபோல் இருப்பேன். ஒரு சாதாரண மனிதனாகவே வாழ விரும்புகிறேன். இது சில நேரங்களில் என்னை சார்ந்தவர்களை அதிகம் பாதித்தாலும், என்னால் மாற்றிக் கொள்ள முடியவில்லை.


காதல்: என்றும் இனிமையானது என்றாலும் பெற்றோரை அவமதித்து செய்யும் காதல்கள் கொஞ்சம் யோசிக்கவே செய்கிறது.

சிந்தனைக்கு: நல்லதையே நினை; நல்லதே நடக்கும்;

கருத்துகள் இல்லை: