செவ்வாய், 30 ஏப்ரல், 2013

பலம் தரும் பலாக்கொட்டை.


நாம் தூக்கி எறியும் பழங்களின் தோல், கொட்டை ஆகியவற்றில் ஏராளமான அத்தியாவசிய சத்துக்கள் உள்ளதால், இவற்றை விதவிதமான உணவாக சமைத்து உண்பது நம் பாரம்பரிய வழக்கம். அசைவ உணவை போன்ற ருசியைத் தரும் காளான், சோயா மற்றும் பட்டர்பீன்ஸ் போன்றவை பெருமளவு விரும்பி உண்ணப்படுகின்றன.

பழங்களைவிட ஒரு மரத்தையே உருவாக்கும் பழக்கொட்டையில் உளள மரபணு கூறுகள் நோய் எதிர்ப்பு சக்தி ஆற்றலை அதிகம் பெற்றிருப்பதுடன், செல்களை அழிவிலிருந்து காக்கும் ஆற்றலையும் உடையது. இவற்றை உண்பதற்கு ஏற்றவாறு ருசியாக சமைத்து சாப்பிட்டால் உணவே மருந்தாகும். அதுபோன்ற அற்புத ஆற்றல் தரும், ஆண்களின் வலிமையைப் பெருக்கும் தன்மை உள்ளதுதான் பலாக்கொட்டை.”அர்டோகார்பஸ் இன்டிகிரிபோலியா’ என்ற தாவரவியல் பெயர் கொண்ட மொரேசியே குடும்பத்தைச் சார்ந்த பலாப்பழத்தின் கொட்டை மருத்துவ ரீதியாக உட்கொள்ள ஏற்றது. 100 கிராம் பலாக்கொட்டையில் 135 கிலோ கலோரி சத்து உள்ளது. இவற்றில் உள்ள கார்போஹைட்ரேட், நார்ச்சத்து மற்றும் ஏ, பி, சி போன்ற வைட்டமின்கள், கால்சியம், துத்தநாகம், பாஸ்பரஸ் போன்ற தனிமங்கள் உள்ளன. இவற்றில் காணப்படும் லிக்னான்கள், ஐசோபிளேவோன்கள், சப்போனின்கள் புற்றுநோய், செல் முதிர்ச்சி, செல் அழிவு போன்றவற்றிலிருந்து பாதுகாக்கும் தன்மை உடையவை. இவற்றிலுள்ள பிளேவனாய்டுகள், ஆர்டோகார்பெசின் மற்றும் நார்ஆர்டோ கார்பெடின் போன்றவை வீக்கத்தைக் கரைக்கக்கூடியவை. அதிக ரத்த அழுத்தம் மற்றும் குடற்புண்களை ஆற்றும் தன்மையும் பலாக்கொட்டைக்கு உண்டு. இவற்றை நன்கு வேகவைத்து உருளைக் கிழங்கிற்கு பதில் உட்கொள்ளலாம்.

பலாக்கொட்டையை வறுத்தோ, வேகவைத்தோ உட்கொள்ளலாம். விதைகளை நன்கு உலர்த்தி, மைய அரைத்து, கோதுமை மாவுடன் கலந்து சப்பாத்தியாகவோ, ரொட்டியாகவோ செய்தும் சாப்பிடலாம். தோலுரித்து கழுவி, ஒன்றிரண்டாக இடித்த பலாக்கொட்டை-10, பட்டர்பீன்ஸ்-20,
உருளைக்கிழங்கு-1, பச்சைப்பயறு-100 கிராம் ஆகியவற்றை நீரில் ஊறவைத்து, தேவையான அளவு உப்பு சேர்த்து வேகவைத்துக்கொள்ள வேண்டும். தேங்காய், மிளகாய்தூள், மஞ்சள்தூள், பூண்டு, புளிச்சாறு ஆகியவற்றை நீர்விட்டு மைய அரைத்து, வெந்த பலாக்கொட்டை கலவையுடன் சேர்த்து, தேவையான அளவு நீர் ஊற்றி மீண்டும் அடுப்பிலேற்றி கொதிக்கவைத்து, கறிவேப்பிலை, கடுகு, மிளகாய் சேர்த்து தாளித்து குழம்பு பதத்தில் இறக்கி வைத்துக்கொள்ள வேண்டும். இதனை சப்பாத்தியுடன் சேர்த்து சாப்பிட உடலுக்கு வலிமையும் குளிர்ச்சியும் உண்டாகும். ஆண்களுக்கு ஆண்மை அதிகரிக்கும். பலம் உண்டாகும்.
பலாக்கொட்டையை மட்டும் தனியாக அதிகம் உட்கொண்டால் உஷ்ணம் அதிகரித்து, மார்பு மற்றும் வயிற்றில் கடும் வலி, முதுகுப்பிடிப்பு ஏற்படும் என சித்த மருத்துவ நூல்கள் குறிப்பிடுகின்றன. எனவே இதனை உணவாக சமைத்து உட்கொள்வதே நல்லது.
-டாக்டர் ஜெ.ஜெயவெங்கடேஷ்

வாழை மரத்தின் மருத்துவ குணங்கள்:-


* தீக்காயம், வெந்நீர் காயம், சூடான எண்ணைபட்ட காயம்- பாதிக்கப்பட்ட இடத்தில் குருத்து வாழை இலையைச் சுற்றிக் கட்டுப் போடலாம். வாழை இலை அல்லது பூவைக் கசக்கி பாதிக்கப்பட்ட இடத்தில் தடவினாலும் பலன் இருக்கும்.

* காயங்கள், தோல் புண்கள்- தேங்காய் எண்ணையை மஸ்லின் துணியில் நனைத்து, புண்கள் மேல் போட்டு அவற்றின் மீது மெல்லிய வாழை இலையை கட்டு மாதிரி போட வேண்டும்.

* சின்னம்மை, படுக்கைப் புண், உடலில் தீக்காயம்- பெரிய வாழை இலை முழுவதும் தேன் தடவி, அதில் பாதிக்கப்பட்டவரை சில மணி நேரம் படுக்க வைக்க வேண்டும். இதைத் தொடர்ந்து செய்தால் குணமாகும்.

* சோரியாசிஸ், தோல் அழற்சி, கொப்புளங்கள்- பாதிக்கப்பட்ட இடங்களில் வாழை இலையைக் கட்டி வைக்க வேண்டும்.

* குடற்புழுக்கள், நீரிழிவு, அமிலச் சுரப்பு, தொழுநோய், ரத்த சோகை- வாழை வேரை தீயில் கொளுத்தி, அந்தச் சாம்பலை கால் தேக்கரண்டி அளவுக்கு எடுத்து தேனில் குழைத்துச் சாப்பிட்டுவர, இவை சரியாகும்.

* அஜீரணம், மூலநோய்- பாலுடன் ஒரு வாழைப்பழம் சாப்பிட்டு வந்தால் அஜீரணம் சரியாகும். தொடர்ந்து 2- 3 வேளை சாப்பிட்டு வந்தால் மூலநோய் தீரும்.

* காசநோய்- அரை கப் தயிரில் வாழைப்பழத்தைப் பிசைந்து ஒரு தேக்கரண்டி தேன், ஒரு தம்ளர் இளநீர் சேர்த்துத் தினமும் இரண்டு வேளை வீதம் சாப்பிட்டு வந்தால் சரியாகும்.

* டைபாய்டு, மஞ்சள் காமாலை- தேனில் வாழைப் பழத்தைப் பிசைந்து தினம் இரு வேளை வீதம் சாப்பிடுவது பலன் கொடுக்கும்.

* இருமல்- கரு மிளகு கால் தேக்கரண்டி எடுத்துப் பொடி செய்து, அதில் பழுத்த நேந்திரம் பழத்தைக் கலந்து இரண்டு, மூன்று வேளை சாப்பிட்டு வந்தால் இருமல் குணமாகும்.

* சிறுநீரக நோய்கள், ரத்தக் குறைபாடுகள்- நெல்லிச்சாறு அரைக் கரண்டியுடன் பழுத்த வாழைப் பழத்தைக் கலந்து 2, 3 வேளை சாப்பிட்டு வந்தால் இந்தக் குறைபாடு நீங்கும்.

Karthikeyan Mathan

பலம், பலவீனம்


வீதியால் யானை ஒன்று நன்றாகக் குளித்துவிட்டு சுத்தமாக வந்து கொண்டிருந்தது. ஒரு ஒடுக்கமான பாலத்தில் அது வரும் போது எதிரே சேற்றில் குளித்துவிட்டு ஒரு பன்றி, வாலை ஆட்டிக் கொண்டே வந்தது.

யானை ஒரு ஓரத்தில் ஒதுங்கி நின்று அதற்கு வழி விட்டது.

அந்தப் பன்றி, எதிரே இருந்த இன்னொரு பன்றியிடம், "பார்த்தாயா, அந்த யானை என்னைக் கண்டு பயந்து விட்டது!" என்று சொல்லிச் சிரித்தது.

அந்த யானையைப் பார்த்து இன்னொரு யானை, "அப்படியா, நீ பயந்து விட்டாயா?" என்று கேட்டது.

அதற்குக் இந்த யானை "நான் தவறி இடறி விட்டால் பன்றி நசுங்கி விடும். மேலும் நான் சுத்தமாக இருக்கிறேன். பன்றியின் சேறு என் மேல் விழுந்து நானும் அசுத்தமாகி விடுவேன். இந்தக் காரணங்களால், நான் ஒதுங்கிக் கொண்டேன்" என்று சொல்லிவிட்டது.

தன் பலம், பலவீனம் தெரிந்தவர்கள் அடக்கத்தில் சிறந்தவர்களாக இருப்பார்கள்...

Cent


ரத்த மூலத்திற்கு அருமருந்தாகும் பிரண்டை!


பிரண்டை என்பது தற்போது பலருக்கும் மறந்து போயிருக்கும் ஒரு செடியாகும்.

பிரண்டை துவையல் செய்து சப்புக் கொட்டி சாப்பிட்ட காலம் மீண்டும் வருமா என்று ஏங்க வைக்கும் அளவிற்கு பிரண்டை மறைந்து வருகிறது.

இந்த பிரண்டை ரத்த மூலத்திற்கு அருமருந்தாக உள்ளது.

இளம்பிரண்டையை நறுக்கி, நெய்விட்டு வதக்கி நன்கு அரைத்து, காலை மாலை இருவேளையும் நெல்லிக்காய் அளவிற்கு உண்டு வர வேண்டும்.

இப்படி ஒரு மண்டலம் சாப்பிட்டு வந்தால் ரத்த மூலம் குணமாகும்.

மாதவிடாய் பிரச்சினைகளுக்கு:

விளக்கெண்ணெயுடன் துளசிச் சாறு, வெங்காயச் சாறு, எலுமிச்சம் சாறு சம அளவு எடுத்து காய்ச்சிக் கொண்டு 15 மில்லி அளவு உட்கொண்டு வர பெண்களுக்கு ஏற்படும் மாதவிடாய் கோளாறுகள் அகலும்.

மாதவிடாய் சரியாக வெளிப்படாமல் வயிற்றுவலி ஏற்படுவதைத் தடுக்கவும் விளக்கெண்ணெய் பயன்படுகிறது.

சிலருக்கு குழந்தைப் பேற்றுக்குப் பின்னர் சரியாக மாதவிடாய் ஆகாமல் தொடர்ந்து வயிற்று வலியை ஏற்படுத்தும்.

அப்படி இருக்கும்போது, அடிவயிற்றில் விளக்கெண்ணெய் தடவி, அதன் மீது ஆமணக்கு இலைகளை வதக்கி பொறுக்கக் கூடிய சூட்டில் போட்டு வர உதிரப் போக்கு ஏற்பட்டு வயிற்று வலி தீரும்.

பொதுவாக பூப்பெய்திய பெண்களுக்கு வெறும் வயிற்றில் விளக்கெண்ணெய் கொடுக்கும் வழக்கம் இருந்தது. இது கர்ப்பப்பை தொடர்பான கேளாறுகளை சரி செய்யும். ஆனால் அந்த வழக்கம் நாளடைவில் குறைந்து வருவதே பல கர்ப்பப்பை பிரச்சினைகளுக்குக் காரணமாக உள்ளது.

இரும்புச் சத்து நிறைந்த குங்குமப் பூ:

பிரசவ வலி வந்தும், குழந்தை வெளியில் வராமல் இருக்குபோது, 4 கிராம் குங்குமப் பூவை பாலில் கரைத்து குடிக்கக் கொடுத்தால் உடனடியாக சுகப்பிரசவம் ஆகும்.

கர்ப்பிணிகள் வெற்றிலையுடன் சிறிது குங்குமப் பூவை சேர்த்துச் சாப்பிட்டால் எளிதில் ஜீரணமாகும்.

குழந்தை பிறந்ததும், 3 கிராம் குங்குமப் பூவை விழுதாக அரைத்து சாப்பிட்டால், வயிற்றில் இருக்கும் அழுக்குகள் நீங்கும்.

அதிக வயதைக் கடந்தும் பூப்பெய்தாத பெண்களுக்கு தினமும் பாலில் குங்குமப் பூவை கலந்து கொடுத்து வந்தால் ஆறே மாதத்தில் பூப்படைவர்.

பல் வலியைத் தீர்க்க:

பற்கள் வலிமையாகவும், பிரச்சினை இன்றி இருக்கவும் பல வகையான பற்பசைகளும், பற்பொடிகளும் வந்துவிட்டன. ஆனால் இயற்கை முறைக்கு முன்னாடி இவை எதுவும் நிற்க முடியாது.

அந்த காலத்தில் புங்கங் குச்சிகளைக் கொண்டு கிராமத்தினர் பல் துலக்கினர். அதில் இருக்கும் மருத்துவத் தன்மை அறிந்துதான் அப்படி செய்தார்கள்.

பல் வலிமையாக புங்கம் பட்டையை இடித்து தூளாக்கி, நீர்விட்டு காய்ச்சி பாதிகாய வற்ற வைக்க வேண்டும்.

கால் லிட்டர் நல்லெண்ணெயில் 10 கிராம் கடுக்காய் தூள் சேர்த்து காய்ச்சி, அது கொழகொழவென்று வரும்போது, அதில் புங்கம் கஷாயத்தை ஊற்றி கொதிக்கவிட்டு இறக்கிவிடவும்.

இதனைக் கொண்டு தினமும் 2 வேளை வாய் கொப்பளித்து வர பல் வலி, பல் கூச்சம் நீங்கிவிடும்.

பல் சொத்தையாவதில் இருந்து தடுக்கவும், ஈறு உறுதியாகவும் உதவும்.

அவசியம் அனைவரும் படிக்கவும்


ஒரு நிறுவனத்தின் தலைவருக்கு தன் நிறுவனத்தில் சில தவறுகளால் 50 கோடிகள் நஷ்டம் ஏற்பட்டுவிட்டது. மிகவும் சோர்ந்து போய் அருகில் இருந்த பூங்காவிற்கு சென்று அங்கிருந்த சிமெண்ட் பெஞ்சில் அமர்ந்தார்.

அப்போது சற்று பெரிய மனிதர் போல தோற்றம் உடைய ஒருவர் இவருக்கு அருகில் வந்து அமர்ந்தார். இவர் சோகமாக அமர்ந்திருப்பதை கண்டு

" ஏன் சோகமாக இருக்கிறீர்கள் " என்று கேட்டார்.

அதற்கு இவர் " எனது தொழில் நஷ்டம் அடைந்து விட்டேன். மிகவும் மனது உடைந்து போய்விட்டேன் " என்றார்.

" எவ்வளவு ரூபாய் நஷ்டம் ? " என்றால் அவர்.

" 50 கோடி ரூபாய் " என்றார் இவர்.

" அப்படியா, நான் யார் தெரியுமா ? " என்று கேட்டு அந்த ஊரின் பிரபல செல்வேந்தரின் பெயரை சொன்னார்.

அசந்து போனார் இவர்...

" சரி 50 கோடி பணம் இருந்தால் நீ சரியாகி விடுவாயா ? " என்று கேட்டார் அவர்.

உடனே முகமலர்ச்சியுடன் இவர் " ஆமாம் எல்லாம் சரியாகி விடும் " என்றார்.

பின் அந்த செல்வேந்தர் ஒரு செக் புத்தகத்தை எடுத்து கையெழுத்திட்டு இவரிடம் நீட்டி " இந்தா இதில் 500 கோடிக்கு செக், நீ கேட்டதைவிட 10 மடங்கு அதிகமாக கொடுத்திருக்கிறேன். எல்லாவற்றையும் சமாளி. ஆனால் ஒருவருடம் கழித்து இந்த பணத்தை எனக்கு திருப்பிக் கொடுத்துவிட வேண்டும். அடுத்த வருடம் இதே நாளில் இங்கே நான் காத்திருப்பேன் " என்று சொல்லி விட்டு செக்கை இவர் கைகளில் தினித்து விட்டு சென்றார் அவர்.

பின் அந்த நிறுவனத்தின் தலைவர் வேகமாக அலுவலகத்திற்கு சென்றார். தன் அறைக்குள் சென்று அந்த செக்கை தனது பீரோவில் வைத்து பத்திரமாக பூட்டினார். பின் தனது உதவியாரை அழைத்து அனைத்து ஊழியர்களை நிர்வாக கூட்டத்திற்கு அழைத்து வர ஏற்பாடு செய்ய சொன்னார். ஊழியர்கள் அனைவரும் கூட்டத்தில் அமர்ந்திருந்தனர்.

இந்த நிறுவனத்தின் தலைவர் பேச ஆரம்பித்தார். " நண்பர்களே, நமது நிறுவனத்தில் 50 கோடி நஷ்டம் ஏற்பட்டுள்ளது. ஆனால் இப்போது என்னிடம் 500 கோடி ரூபாய் உள்ளது ஆனால் அந்த பணத்தை தொடமாட்டேன். இந்த நஷ்டம் எப்படி ஏற்பட்டது ? எதனால் ஏதற்காக ஏற்பட்டது ? என்று ஆராய்ந்து அதை களைந்து நமது நிறுவனத்தை வெற்றிகரமாக செயல்படுத்த நீங்கள் அனைவரும் ஒத்துழைப்பு கொடுங்கள் " என்று கேட்டுக் கொண்டார்.

பின்னர் வேளைகள் வேகமாக நடந்தன. தவறுகள் கண்டுப் பிடிக்கபட்டு களையப்பட்டன. மிக சரியாக அனைத்து ஊழியர்களையும் ஓத்துழைக்க வைத்தார். அவருடைய பேச்சு மூச்ச செயல் சிந்தனை தூக்கம் அனைத்து அவருடைய தொழிலை பற்றியே இருந்தது.

மிக சரியா ஒரு வருடம் கழிந்தது. கணக்குகள் அலசப்பட்டன. மிக சரியா 550 கோடி ரூபாய்கள் லாபம் ஈட்டி இருந்தது இவருடைய நிறுவனம். அடுத்த நாள் விடிய காலை அந்த செல்வேந்த கொடுத்த 500 கோடிக்கான செக்கை எடுத்துக் கொண்டு அந்த பூங்காவிற்கு விரைந்தார். சென்ற வருடம் அமர்ந்த அதே சிமென்ட் பெஞ்சில் அமர்ந்தார். காலை நெரம் ஆதலால் பனி மூட்டத்துடன் காணப்பட்டது. சற்று நேரம் கழித்து தூரத்தில் அந்த செல்வேந்தரும் அவருக்கு அருகில் அவரை கைகளால் பிடித்துக் கொண்டு ஒரு பெண்மணியும் வந்தது பனி மூட்டத்தின் ஊடே தெரிந்தது. சில விநாடிகள் கழித்து பார்த்தால் அந்த பெண்மணி மட்டும் வருகிறார் அந்த செல்வேந்தரை காணவில்லை.

இவர் சென்று அந்த பெண்மணியிடம் " எங்கே அம்மா உங்கள் கூட வந்தவர் ? " என்றார்

அதற்கு அந்த பெண்மணி பதட்டத்துடன் " உங்களுக்கு அவர் ஏதாவது தொந்தரவு கொடுத்து விட்டாரா? " என்றார்

இவர் " இல்லை அம்மா, ஏன் கேட்கிறீர்கள் ?" என்றார்.

அந்த பெண்மணி " இல்லை அய்யா அவர் ஒரு பைத்தியம் அதாவது மனநிலை சரி இல்லாதவர், செக்கு தருகிறேன் என்று சொல்லி இங்கு இருப்பவர்களிடம் தனது பழைய செக்கை கிழித்து கையேழுத்திட்டு கொடுத்து விடுவார் " என்றார்.

ஒரு நிமிடம் அந்த நிறுவன தலைவருக்கு பேசமுடியவில்லை. அப்போ நம்மால் முடியும் என்று நினைத்தால் நிச்சயம் முடியும். அதுவே நம்மை காப்பாற்றி இருக்கிறது என்று நினைத்தார்.

கதையின் நீதி - இதிலிருந்து நாம் தெரிந்து கொள்ள வேண்டியது என்வென்றால் எந்த ஒரு விசயமும் நம்மால் முடியும் என்று முதலில் நம் நம்பவேண்டும் அப்போதுதான் நாம் நமது வாழ்வில் முன்னேற முடியும்

பற்களை வெண்மையாக்கும் வீட்டுப் பொருட்கள்!


அழகான புன்னகையால் ஆயிரம் இதயங்களை கவர முடியும். ஆகவே அனைவருக்குமே அழகான மற்றும் வெள்ளையான பற்கள் வேண்டுமென்ற ஆசை இருக்கும். ஆனால் அத்தகைய வெள்ளையான பற்களை பெறுவதற்கு நிறைய முயற்சிகளை மேற்கொள்ள வேண்டியுள்ளது. அதிலும் பற்களை பொலிவோடு வைப்பதற்கு அனைவரும் ஒரு நாளைக்கு இரண்டு முதல் மூன்று முறை பற்களை துலக்குவோம். இருப்பினும் ஏதாவது உணவுகளை சாப்பிட்டுவிட்டால், பற்களில் உணவுக் கறைகள் படிந்து மற்றும் ஆங்காங்கு சிக்கிக் கொண்டு, பற்களின் நிறத்தை மஞ்சள் நிறமாக்குகின்றன. மேலும் சில நேரங்களில் அத்தகைய கறைகளால் வாய் துர்நாற்றம் அதிகம் இருக்கும். எனவே இத்தகைய பிரச்சனைகளைப் போக்கி, பற்களின் இருக்குகளில் சிக்கிக் கொள்ளும் பொருட்களை தவிர்க்கவும், வாய் துர்நாற்றத்தையும் நீக்கவும், அத்தகைய உணவுகளை சாப்பிடுவதை தவிர்த்து, பற்களுக்கு நன்மை தரும் உணவுகளான ஸ்ட்ராபெர்ரி, சிட்ரஸ் பழங்கள், கேரட் போன்றவற்றை சாப்பிட்டால், பற்கள் வெண்மையுடன் இருக்கும். மேலும் ஒருசில வீட்டுப் பொருட்களைப் பயன்படுத்தி, பற்களை துலக்கினாலும், பற்களை நன்கு ஆரோக்கியமாகவும், பளிச்சென்று வெண்மையுடனும் இருக்கும். சரி, இப்போது அத்தகைய பொருட்கள் என்னவென்று பார்ப்போமா!!!

எலுமிச்சை

எலுமிச்சை துண்டை வைத்து பற்களை தேய்த்தால், பற்கள் இயற்கையாக வெண்மையாக இருக்கும். அதிலும் எலுமிச்சையை உப்பில் தொட்டு தேய்க்க வேண்டும்.

கடுகு எண்ணெய்

பற்களை வெள்ளையாக்கும் பராம்பரிய வீட்டு வைத்திய பொருட்களில் கடுகு எண்ணெயும் ஒன்று. அதற்கு கடுகு எண்ணெய் மற்றும் மஞ்சள் தூள் கலந்து பேஸ்ட் போல் செய்து துலக்க வேண்டும்.

பேக்கிங் சோடா

பேக்கிங் சோடாவை உப்புடன் சேர்த்து பற்களை துலக்கினால், பற்கள் வெண்மையோடு ஜொலிக்கும்.

சாம்பல்

அக்காலத்தில் பேஸ்ட் கிடைக்காத நேரத்தில் வாழ்ந்த மக்கள், வீட்டில் விறகு அடுப்பில் சமைக்கும் போது கிடைக்கும் சாம்பலைப் பயன்படுத்தி பற்களை துலக்கினார்கள். இதனால் பற்கள் வலுவோடு இருப்பதோடு, வெள்ளையாகவும் இருக்கும்.

உப்பு

அனைவருக்குமே உப்பு பற்களை வெள்ளையாக்கும் பொருட்களில் மிகவும் சிறந்தது என்று. இவற்றை வைத்து பற்களை துலக்கினால் பற்களை வெள்ளையாக மட்டும் மாறாமல், பளிச்சென்றும் மின்னும்.

ஆரஞ்சு தோல்

ஆரஞ்சு தோல் பற்களுக்கு மிகவும் நல்லது. பற்கள் வெள்ளையாக இருக்க வேண்டுமென்று நினைப்பவர்கள், ஆரஞ்சு பழத்தின் தோல் அல்லது அதன் கூழை வைத்து பற்களை தேய்த்தால், பற்கள் மின்னுவதோடு, வாய் துர்நாற்றமின்றியும் இருக்கும்.

வினிகர்

தினமும் வினிகரை நீருடன் சேர்த்து கலந்து வாயில் விட்டு, கொப்பளித்தால், வாய் துர்நாற்றம் நீங்கி, பற்களில் உள்ள மஞ்சள் நிறக் கறையும் நீங்கும்.

கிராம்பு எண்ணெய்

ஈறுகளில் வலி அல்லது சொத்தை பற்கள் இருப்பவர்களுக்கு கிராம்பு ஒரு சிறந்த மருத்துவப் பொருள். அதிலும் தினமும் பற்களை துலக்கும் போது, பிரஷ்ஷில் சிறிது கிராம்பு எண்ணெய் ஊற்றி, பின் பேஸ்ட் சேர்த்து தேய்க்க, பற்கள் ஆரோக்கியமாக இருக்கும்.

வேப்பங்குச்சி


பற்களை வெண்மையாக்கும் பொருட்களில் இதுவும் ஒன்று. இதனை வைத்து தினமும் பற்களை தேய்த்து வந்தால், பற்கள் ஆரோக்கியமாக இருப்பதோடு, பளிச்சென்றும் மின்னும்.


பிரியாணி இலை

பிரியாணி இலையை பொடி செய்து, அதனை எலுமிச்சை சாற்றில் கலந்து, பற்களை துலக்க, பற்கள் வெள்ளையாகும்.

எலுமிச்சை


எலுமிச்சை

பொதுகுணமாக பித்தம் போக்கும், சித்தம் ஆக்கும், அறிவை வளர்க்கும், மந்திரம் செய்ய பில்லி, சூனியம் எடுக்க பேய் விரட்ட, இறையருள் கூட்ட ஏற்றது. வாந்தி, விக்கல், வயிற்றோட்டம், ஆகியவற்றைக் குணமாக்கும். பைத்தியம் தெளிவிக்கும். சித்த மருந்துகளில் துணை மருந்தாகப் பயன்படும். பிற மருந்துகள் கெடமல் பாதுகாக்கப் பயன்படுத்தப்படும். அதிகமாகப் பயன்படுத்தினால் சுண்ணாம்புச் சத்தைக் கரைத்து எலும்பை ஆற்றல் இழக்க வைக்கும். விந்தை நீர்த்துப்கோக வைக்கும். இதன் சாறு டீயுடன் சேர்த்தால் தனி சுவையுண்டு.

பழச்சாறு, கரிசலாங்கண்ணிச் சாறு, பால் வகைக்கு அரைலிட்டர் ஒன்றரை லிட்டர் நல்லெண்ணையில் கலந்து காய்ச்சி வடித்துத் தலைமுடிக்குத் (6 மாதம்) தடவி வர நரைக்காமல் நீண்டு அடர்ந்து வளரும்.

பழச்சாற்றை கண், காதுவலிக்கு 2 துளிகள் விட்டுவரக் குணமாகும்.

பழச்சாற்றில் சீரகத்தை ஊறவைத்து பின் காயவைத்து, தேவையான போது சுவைத்து வரப் பித்த மயக்கம், குமட்டல், பித்தவாந்தி, நாவில் சுவையின்மை, வயிற்றுப்போக்கு ஆகியவை தீரும்.

நகச்சுற்றுக் விரலில் செருகி வைக்கப் பழுத்து உடையும்.

வயிற்றோட்டம், வாந்திக்கு எலுமிச்சம்பழம் நல்ல மருந்தாகும். சர்கரைசேர்த்து எலுமிச்சம் பழச்சாற்றுடன் ஒரு கிராம் அளவு உப்பு சேர்த்து இருவேளை கொடுக்க வாந்தி, வயிற்றோட்டம் குணமாகும். வைரஸ் தொற்று இருந்தால் இது குணமளிக்காது.

பிற கேடு தரும் மருந்துகளைச் சாப்பிட்டவர்களுக்கு 30 மி.லி. சாறு 20 நாள் காலையில் கொடுக்க குணமடைவர்.

இதன் சாறு 30 மி..லி. இந்துப்பு-15 கிராம், சீரகம் 5 கிராம் சேர்த்து நீரில் கலந்து 20 நாள் கொடுக்க பித்த நோய், வயிற்றுக்கோளாறு, பக்க சூதக வாதம், கப நோய் குணமாகும்.

இதன் சாற்றை வாயிலிட்டுச் சுவைக்க பித்த மயக்கம், குமட்டல், பித்த வாந்தி, சூடு குணமாகும்.

பற்பம் என்பது சுண்ணாம்பு சத்துடையதாம். எலும்பு, சுண்ணாம்பு இதன் சாற்றில் கரையும், சங்கு, பவளம், முத்து ஆகியன இச்சாற்றில் பற்பமாகும்.

இலையைப்புளித்த மோருடன் ஊறவைத்து பழைய சோற்றில் ஊற்றி உப்பிட்டு காலையில் உண்டுவர உடல் வெப்பம் குறையும். பித்த சூடு தீரும் தழும்புகள் குணமாகும்.

படை, கருமையாகத் தடிப்பாகப் படர்தல், இச்சாற்றில் நிலாவரை வேரை இழைத்துப் பூசவேண்டும். 5-6 நாள் பூச குணமாகும்.

வெறும் வயிற்றில் காலை 3-4 மண்டலம் இச்சாற்றைத் தேனுடன் அருந்த கற்பகுணம் உண்டு. மூப்பு நீங்கும், நரை, திரை படராது. ஆயுள் பெருகும். உடல் ஊட்டம் பெறும். ஆனால் புளி, காரம், புலால், புகை ஆகாது.

எலுமிச்சம் பழச்சாறு அளவோடு மருந்தாகத்தான் பயன்படுத்த வேண்டும். நாளும் தவராது சாப்பிட்டால் உடல் எலும்புச் சத்தை இழந்து விடும். விந்து நீர்த்து விடும். தாது நட்டம் எற்படும்.

இப்பழச்சாற்றைத் தலைக்குத் தேய்த்து அரை மணி நேரம் சென்று குளிக்க வேண்டும். சீரகத்தை இச்சாற்றில் ஊறவைத்து உலர்த்தி, சூரணம் செய்து 5 கிராம் அளவு கொடுத்து வர 48 நாளில் பைத்தியம் குணமாகும். பிதற்றல் மயக்கம் தீரும்.

குடற்புண், காச்சல், டைப்பாய்டு சுரம் எனப்படும். இதற்கு எலுமிச்சம் பழச்சாற்றில் பாலைக் கலந்தால் அது திரிந்து நீர்த்து விடும். இதனை வடிகட்டிக் கொடுக்கலாம். பிற மருந்து, ஊசி போட்டாலும் இதனை துணை மருந்தாகக் கொடுக்கலாம்.

Thanks,Pasumai Vidiyal

உடற்பயிற்சி செய்தவுடன் சாப்பிடக் கூடாத உணவுகள்


எவ்வளவு தான் உடற்பயிற்சியை சரியாக செய்தாலும், சாப்பிடுவதில் தவறு செய்கிறோம். அதாவது நாம் உணவை சாப்பிடுகிறோம் என்றால் அதற்கென்று நேரம் உள்ளது. அந்த நேரத்தை சரியாக பின்பற்றி சாப்பிடாமல் இருந்தால், அதற்கான விளைவுகளை நேரிடக் கூடும். அதிலும் மற்ற நேரங்களில் சாப்பிடுவதால் ஏற்படும் பிரச்சனைகளை விட, உடற்பயிற்சி செய்து முடித்த உடனேயே, கண்ட கண்ட உணவுகளைச் சாப்பிட்டால் தான் மிகவும் ஆபத்தானது. அதுமட்டுமின்றி நிபுணர்கள் பலர், உடற்பயிற்சி செய்த பின்னர் சாப்பிடக்கூடிய உணவுகள் என்றால் அது காம்ப்ளக்ஸ் கார்போஹைட்ரேட், தண்ணீர் மற்றும் புரோட்டீன் நிறைந்த உணவுகள் தான் என்று கூறுகின்றனர். ஏனெனில் உடற்பயிற்சியின் போது உடலில் உள்ள குளுக்கோஸானது எரிபொருளாக மாறுகிறது. எனவே இந்த நேரம் இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை அதிகரிக்கும் உணவுகளை சாப்பிடாமல் இருக்க வேண்டும். இப்போது அவ்வாறு உடற்பயிற்சிக்குப் பிறகு சாப்பிடக் கூடாத உணவுப் பொருட்கள் என்னவென்று பார்ப்போமா!!!

சீஸ்
நீண்ட தூரம் ஓடியப் பின்பு, சீஸ் உணவுகளை அதிகம் சாப்பிடக் கூடாது. ஏனெனில் அதில் சாச்சுரேட்டட் கொழுப்புகள் மற்றும் உப்பு அதிகமாக உள்ளது. எனவே இத்தகைய உணவுகளை சாப்பிடுவதை தவிர்ப்பது நல்லது.

பதப்படுத்தப்பட்ட இறைச்சி
உடற்பயிற்சி செய்தப் பின்னர், பதப்படுத்தப்பட்ட இறைச்சியால் செய்யப்பட்ட உணவுகள் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். ஏனெனில் பதப்படுத்தப்பட்ட இறைச்சியில் கொழுப்புகள் மற்றும் உப்பு அதிகமாக இருக்கும். இதனால் அவை செரிமான மண்டலத்தின் இயக்கத்தை குறைத்துவிடும்.

நவதானிய உணவுகள்
நவதானிய உணவுகள் எனப்படும் செரியல் எவ்வளவு தான் ஆரோக்கியமானதாக இருந்தாலும், பாக்கெட்டுகளில் விற்கப்படும் நவதானிய உணவுகளை வாங்கி சாப்பிடுவதை தவிர்ப்பது நல்லது. ஏனென்றால் அவற்றில் சர்க்கரை அதிகமாக இருக்கும். வேண்டுமெனில், உடற்பயிற்சிக்குப் பின் சர்க்கரை குறைவாக உள்ள கிரனோலாவுடன், பழங்கள் மற்றும் நட்ஸ் சேர்த்து, சிறிது ஸ்கிம் மில்க் ஊற்றி சாப்பிட்டால், உடல் ஆரோக்கியமாக இருக்கும்.

பிரட்
வெள்ளை பிரட் எனப்படும் மைதாவால் ஆன பிரட் சாப்பிடுவதை அறவே தவிர்க்க வேண்டும். ஏனெனில் உடற்பயிற்சிக்குப் பின், இந்த பிரட் சாப்பிட்டால், அவை உடலில் செல்லும் போது மிகவும் எளிதில் சர்க்கரையாக மாறிவிடும். எனவே அப்போது வேண்டுமெனில் நவதானியங்களால் ஆன பிரட்டை(கோதுமை பிரட்) சாப்பிடலாம்.

பழ ஜூஸ்
எவ்வளவு தான் பழங்கள் உடலுக்கு நல்லதாக இருந்தாலும், உடற்பயிற்சிப் பின்னர் உடனே சாப்பிடக் கூடாது. இதனால் அதில் உள்ள சர்க்கரை, இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை அதிகரித்துவிடும். ஒருவேளை ஏதாவது குடிக்க வேண்டுமென்று தோன்றினால், தண்ணீர் அல்லது ஐஸ் துண்டுகள் போட்ட மூலிகை டீ அல்லது இளநீரை குடிக்கலாம். இது மிகவும் ஆரோக்கியமானது.

முட்டை
முட்டையானது உடற்பயிற்சிக்கு பின்னர் சாப்பிடக்கூடிய உணவுப் பொருள் தான். ஏனெனில் அதில் உள்ள புரோட்டீன் மற்றும் கோலைன் இதயத்திற்கு மிகவும் நல்லது. ஆனால் அவற்றை பொரியல் செய்து சாப்பிட கூடாது. அப்போது அதில் கொழுப்புகள் அதிகமாக இருக்கும். எனவே அதனை வேக வைத்து சாப்பிடுவது தான் நல்லது

மில்க் ஷேக்
பொதுவாக மில்க் ஷேக் உடலுக்கு நல்லது தான். ஆனால் அந்த மில்க் ஷேக்கை பழங்களால் செய்து சாப்பிடும் போது, அதில் சர்க்கரை அதிகமாகிவிடும். எனவே அவ்வாறு சாப்பிடுவதை தவிர்த்து, பழங்களுக்குப் பதிலாக பாதாம் சேர்த்து செய்யலாம் அல்லது சாதாரண பாலாக குடிக்கலாம்.

காய்கறிகள்
காய்கறிகளை வேக வைக்காமல் சாப்பிட்டால், அதில் உள்ள சத்துக்கள் உடலுக்கு அப்படியே வரும். ஆனால் அவற்றையே உடற்பயிற்சிக்குப் பின்னர் உடனே சாப்பிட்டால், உடற்பயிற்சி செய்ததே வீணாகிவிடும்.

உடல் எடை அதிகரிக்க


இக்காலத்தில் உடல் எடை அதிகமாக இருப்பதால், அதனைகுறைக் க பலரும் முயற்சி செய்கின்றனர். அதே சமயம், சிலர் என்னதான் உணவுகளை உண்டு உடல் எடையை அதிகரிக்க நினைத்தாலும், எடை மட்டும் கூடாமல் இருக்கும். ஆகவே அவ்வாறு எடையை அதிகரிக்க தேவையற்ற ஆரோக்கியமில்லாத உணவுகளை எல்லாம் உண்டால், எடைகூடாது.எடையை அதிகரிக்க அதிக அளவு கலோரி நிறைந்த உணவுகளை உட்கொள்ள வேண்டும். ஏனெனில் சரியான அளவு ஊட்டச்சத்துக்கள், புரோட்டீன், கார்போஹைட்ரேட் மற்றும் கொழுப்புகள் உடலுக்கு கிடைத்தால் தான், விரைவில் உடல் எடையை கூட்ட முடியும். எனவே எந்த உணவுகளை உட்கொண்டால், உடல் எடை அதிகரிக்கும்;.

புரோட்டீன்

புரோட்டீன் அதிகம் இருக்கும் உணவுப் பொருட்களான இறைச்சி, மீன்கள், முட்டை, வான் கோழி, சிக்கன், டோஃபு போன்றவற்றை அதிகம் தினமும் உணவில் சேர்த்து வந்தால், உடல் ஆரோக்கியமாக இருப்பதோ, உடல் எடையை அதிகரிக்க நினைப்போருக்கு ஒரு நல்ல ஈஸியான வழியாகும். அதி லும் சோயா பொருட்களை அதிகம் சேர்த்துக் கொண்டால் நல்லது.

கார்போஹைட்ரேட்

ஓட்ஸ் மீல், தானியங்கள், பிரட் போன்றவற்றில் கார்போஹைட்ரேட் அதி கம் உள்ளது. மேலும் பழங்களில் மாம்பழம், ஆப்பிள், செர்ரி, திராட்சை, பீச் போன்றவையும், காய்கறிகளில் கார்ன், பிராக்கொலி, கேரட், வால் மிளகு, முள்ளங்கி போன்றவையும், பாஸ்தா, சிவப்பு அரிசி உணவுகள், கொண்டைக் கடலை போன்றவற்றை யும் தினமு ம் உணவில் சிறிது சாப்பிட்டு வந்தால், உடல் நன்கு இருக்கும். மேலு ம் உடலுக்கு தினமும் குறைந்தது 40% கார்போஹைட்ரேட் தேவைப் படுகிறது, அதற்கு இந்த உணவுகளை உண்டால், விரைவில் உடல் எடையை அதிகரிக்க முடியும்.

கொழுப்புகள்

பாதாம் பருப்பு, ஆலிவ் ஆயில், சூரிய காந்தி எண்ணெய், நல்லெண் ணெய், முந்திரி பருப்பு, வேர் கட லை, வெண்ணெய், பால் போன்ற அனைத்திலும் கொழுப்புகள் அதிகம் நிறைந்துள்ளது. ஆகவே இதற்கான டயட் இருக்கும்போது, தினமும் உடலில் 10% கொழுப்பு சத்தானது உடலில் சேர வேண்டும். இவை அனைத்துமே ஆரோக்கிய மான கொழுப்புகள் தான்.

மேலும் உடல் எடையை அதிகரி க்க அடிக்கடி ஏதேனும் சாப்பிட்டுக் கொண்டிருப்பீர்கள். அவ்வாறு ஏதேனும் ஒன்றை சாப்பிடுவதற்கு, உடலுக்கு ஆரோக்கியத்தை தரும் வகையில் இருக்கும் ஸ்நாக்ஸ் ஆன நட்ஸ், ஆப்பிள், புரோட்டீன் பார், உருளைக்கிழங்கு சிப்ஸ் போன்றவற்றை சாப்பிடுவது நல்லது. அதிலும் சீஸ் மற்றும் காய்ந்த பழ ங்களை சாப்பிடுவதும், உடல் எடை யை அதிகரிக்கச் செய்யும் உணவுக ள் ஆகும். அதுமட்டுமல்லாமல் சாக்லேட்டில்கூட அதிக கலோரிகள் நிறைந்துள்ளன.

ஆகவே இத்தகைய உணவுகளை உண்டால், உடல் எடை அதிகரிப்ப தோடு, உடலும் ஆரோக்கியமாக இருக்கும். முக்கியமாக உடனே உட ல் எடையை அதிகரிக்க வேண்டும் என்று எதையும் அதிக அளவில் ஒரே நேரத்தில் சாப்பிட்டால், அந்த அமிர்தம்கூட நஞ்சாக மாறி விடும்.

உடலில் தீக்காயங்களால் ஏற்பட்ட தழும்புகளை இலகுவாக நீக்குவது எப்படி ?


உடல் அழகைக் கெடுப்பதில் தழும்புகள் முக்கிய பங்கினை வகிக்கிறது. அத்தகைய தழும்புகள் விபத்து அல்லது அலர்ஜியின் காரணமாக ஏற்படும். இவ்வாறு ஏற்படும் தழும்புகளை நீக்குவது மிகவும் கடினமான ஒரு செயல். நிறைய பெண்கள் வேலை செய்யும் போது, இந்த மாதிரியான தழும்புகளைப் பெறுவார்கள். அதிலும் சமைக்கும் போது சூடான எண்ணெய் படுவது, துணியை இஸ்திரி போடும் போது சூடு வைத்துக் கொள்வது போன்றவற்றால் தான் தழும்புகளைப் பெறுகிறார்கள்.

இத்தகைய தழும்புகளை நன்கு தெளிவாக தெரியும். இதனை போக்க எத்தனை க்ரீம்கள் கடைகளில் விற்றாலும், அதைப் பயன்படுத்தினால், எந்த ஒரு பலனும் இருக்காது. ஆனால் அத்தகைய தழும்புகளைப் போக்க சில இயற்கை முறைகள் உள்ளன. அவற்றைப் பயன்படுத்தினால், தெளிவாக தெரியும் தழும்புகளை சற்று மங்க வைப்பதோடு, மறையவும் வைக்கலாம். இப்போது அது எவ்வாறு என்று பார்ப்போமா!!!

எலுமிச்சை சாறு
சிட்ரஸ் பழங்கள் தீக்காயங்களை நீக்குவதற்கு ஒரு சிறந்த பொருள். அதிலும் எலுமிச்சை சாறு மிகவும் சூப்பரானது. அதற்கு எலுமிச்சை சாற்றை தினமும் தீக்காயம் ஏற்பட்ட இடத்தில் தடவி, 2 நிமிடம் மசாஜ் செய்ய வேண்டும். முக்கியமாக எலுமிச்சை சாற்றை தீக்காயம் நன்கு காய்ந்தப் பின்னர் தடவ வேண்டும்.

பாதாம் எண்ணெய்
தீக்காயம் ஏற்பட்ட இடத்தில் உள்ள தழும்புகளை நீக்க, பாதாம் அல்லது ஆலிவ் ஆயிலை தடவி மசாஜ் செய்ய வேண்டும். அதிலும் ஒரு நாளைக்கு இரு முறை தடவி வந்தால், நன்கு பளிச்சென்று தெரியும் தழும்புகள் மங்கிவிடும்.

கற்றாழை
கற்றாழையில் உள்ள ஜெல்லானது மிகவும் சிறந்த ஒரு பொருள். அந்த ஜெல்லை தழும்புகள் உள்ள இடத்தில் தொடர்ந்து தடவி வந்தால், தீக்காயம் ஏற்பட்ட இடத்தில் உள்ள தழும்பானது மறைய ஆரம்பிக்கும். அதுமட்டுமின்றி, சருமமும் மென்மையாகும்.

பால்
பாலில் உள்ள சத்துக்களை சொல்லித் தான் தெரிய வேண்டுமென்பதில்லை. ஏனெனில் அந்த அளவு அதில் நன்மையானது பாக்கெட் பாக்கெட்டாக உள்ளது. எனவே தினமும் குளிக்கும் முன்பு, பாலை தழும்புகள் உள்ள இடத்தில் தடவி, மசாஜ் செய்து 10 நிமிடம் ஊற வைத்து குளிக்க வேண்டும். வேண்டுமெனில் அதில் சிறிது எலுமிச்சை சாற்றை விட்டும் செய்யலாம்.

ஆலிவ் ஆயில்
ஆலிவ் ஆயில் பல நன்மைகளை உள்ளடக்கியது. அத்தகைய ஆலிவ் ஆயில் தழும்புகளை நீக்கவும் பயன்படுகிறது. எனவே இந்த ஆயிலை தீக்காயம் ஏற்பட்ட இடத்தில், தினமும் காலையும், மாலையும் தடவி மசாஜ் செய்து வந்தால, ஆலிவ் ஆயிலில் உள்ள பொருளானது தழும்புகளை மறைய வைக்கும்.

தக்காளி சாறு
தக்காளியில் அதிகமான வைட்டமின்கள் இருப்பதால், அவை சருமத்தில் உள்ள இறந்த செல்களை நீக்கி, தழும்புகளை மறைய வைக்கும். அதற்கு தக்காளி துண்டுகளை வெட்டிவோ அல்லது அதன் சாற்றையோ பாதிக்கப்பட்ட இடத்தில் தடவி, தினமும் மசாஜ் செய்து வந்தால், தழும்புகள் போய்விடும்.

பழைய சாதத்தின் மகத்துவம்


முதல் நாள் சோற்றில் நீரூற்றி, மறுநாள் சாப்பிடும் இந்த பழைய சாதத்தில் தான் பி6, பி12 ஏராளமாக இருக்கிறது என்கிறார் அமெரிக்காவில் இருக்கும் ஒரு மருத்துவர். தவிரவும் உடலுக்கு, குறிப்பாக சிறு குடலுக்கு நன்மை செய்யும் 'ட்ரில்லியன்ஸ் ஆஃப் பாக்டீரியாஸ்' (கவனியுங்கள்: 'மில்லியன்' அல்ல 'ட்ரில்லியன்') பெருகி நம் உணவுப் பாதையையே ஆரோக்கியமாக வைத்திருக்கிறதாம்!

கூடவே இரண்டு சிறிய வெங்காயம் சேரும்போது, நோய் எதிர்ப்பு சக்தி அபரிமிதமாக பெருகுகிறதாம். அப்புறம் பன்றிக் காய்ச்சல் என்ன, எந்தக் காய்ச்சலும் நம்மை அணுகாது!

பழைய சாதத்தின் மகத்துவத்தைப் பற்றி அமெரிக்காவில் வசிக்கும் நம் இந்திய விஞ்ஞானி ப்ரதீப் கூறியதில் இருந்து சில:

1. "காலையில் சிற்றுண்டியாக இந்த பழைய சாதத்தைக் குடிப்பதால், உடல் லேசாகவும், அதே சமயம் சுறுசுறுப்பாகவும் இருக்கிறது.
2. இரவே தண்ணீர் ஊற்றி மூடி வைப்பதால் இலட்சக்கணக்கான நல்ல பாக்டீரியாக்கள் இதில் உருவாகிறது.
3. மறுநாள் இதை குடிக்கும் போது உடல் சூட்டைத் தணிப்பதோடு குடல்புண், வயிற்று வலி போன்றவற்றையும் குணப்படுத்தும்.
4. அதுமட்டுமில்லாமல் இதிலிருக்கும் நார்ச்சத்து, மலச்சிக்கல் இல்லாமல் உடலை சீராக இயங்கச் செய்கிறது.
5. இந்தப் பழைய சாதம் உணவு முறையை சில நாள் தொடர்ந்து நான் சாப்பிட்டதில் நல்ல வித்தியாசம் தெரிந்தது. இரத்த அழுத்தம் கட்டுக்குள் வந்துவிட்டதோடு, உடல் எடையும் குறைந்தது." என்கிறார்.
6. மிகவும் முக்கியமான விஷயம் என்னவென்றால் உடலுக்கு அதிகமான சக்தியை தந்து நாள் முழுக்க சோர்வின்றி வேலை செய்ய உதவியாக இருக்கிறது.

7. அலர்ஜி, அரிப்பு போன்றவை கூட சட்டென்று சரியாகி விடும்.

8. அல்சர் உள்ளவர்களுக்கு இதைக் கொடுத்து வர, ஆச்சரியப்படும் அளவிற்குப் பலன் கிடைக்கும்.

9. எல்லாவற்றிற்கும் மேலாக நோய் எதிர்ப்பு சக்தி அதிகளவில் கிடைப்பதால், எந்த நோயும் அருகில்கூட வராது.

10. ஆரோக்கியமாக அதே சமயம் இளமையாகவும் இருக்கலாம்".

**
பழைய சாதத்தை எப்படி செய்வது:
பழைய சாதத்திற்கு மிகவும் சிறந்தது பிரெளன் ரைஸ் என்று அழைக்கப்படும் கைக்குத்தல் அரிசிதான்.
ஒரு கல் சட்டி அல்லது மண் சட்டியில் சிறிது சாதத்தைப் போட்டு, சுத்தமான தண்ணீரை நிறைய ஊற்றவும்.
மறுநாள் சாதத்தை நன்கு பிசைந்து, மோர் சிறிது சேர்த்து, சின்னவெங்காயம் சேர்த்துக் குடிக்க 'ஜில்'லென்று இருக்கும் (மிகவும் சூடாக இருக்கும் சாதத்தில் தண்ணீரை ஊற்றக் கூடாது.)

மதிய உணவு நேரம் வரை டீ, காபி கேக்காது வயிறு!

திங்கள், 29 ஏப்ரல், 2013

HEALTH TIPS


இதய தமனி அடைப்புக்கு

*ஈறுகள் பலம்*

*சிறிது உப்புத் தூளில் எலுமிச்சை சாறு கலந்து, கைவிரலால் பற்களை நன்றாக
தேய்க்க வேண்டும். ஈறுகளையும் விரலால் நன்றாக தேய்த்து விட்டால் ஈறுகள் பலம்
பெறும்.*

*இரத்த இருமல்*

*தூதுவளை இலை, ஆடாதொடை இலை இந்த இரண்டையும் எடுத்து பிட்டவியல் (புட்டு மாவு
அவிப்பது போல்) செய்து, பிழிந்து 400 மில்லி சாறு (2 டம்ளர்) எடுத்து வைத்துக்
கொள்ளவும். பிறகு கேரிஷ்டம் 2 கிராம், திப்பிலி 2 கிராம், சாம்பிராணி 2 கிராம்
அனைத்தையும் காய வைத்து தூள் செய்து அச்சாற்றில் கலந்து கொடுத்து வந்தால்
இரத்த இருமல் நீங்கும்.*

*இதய தமனி அடைப்பு*

*இதய தமனி அடைப்பால் பாதிக்கப்பட்டவர்கள் 1 தேக்கரண்டி வெங்காயச்சாற்றை 4
வாரங்களுக்கு தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.*

*இமை முடி, புருவம்*

*இமை முடி மற்றும் புருவங்கள் அடர்த்தியாக இல்லாவிட்டால், இரவு படுக்கச்
செல்லும் முன் சிறிதளவு விளக்கெண்ணெய்யை இமையில் மற்றும் புருவங்களில் தடவி
வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.*

*வறட்டு இருமல்*

*வறட்டு இருமல் தொண்டை, நெஞ்சு, வயிறு அமைத்தையும் ரணமாக்கிவிடும். 2 டம்ளர்
வெதுவெதுப்பான தண்ணீரில், 1 எலுமிச்சைச் சாறு பிழிந்து, 1 மேஜைக்கரண்டி தேன்
கலந்து குடித்து வந்தால் வறட்டு இருமல் குணமாகும்.*

*ஜலதோஷம்*

*வெதுவெதுப்பான பீட்ரூட் சாற்றை மூக்கினுள் தடவினால் ஜலதோஷம் சரியாகி விடும்.
தேன் ஜலதோஷத்தை குணப்படுத்தும்.*

*கல்லீரல்*

*கல்லீரல் சம்பந்தப்பட்ட நோய்களுக்கு தேனுடன் எலுமிச்சைச் சாறு கலந்து
சாப்பிடலாம்.
கல்லீரலில் ஏற்படும் எல்லாவித நோய்களையும் தேன் குணப்படுத்தும்.*

*காமாலை*

*கீழாநெல்லி இலையை சுத்தம் செய்து, அரைத்து தினமும் காலையில் 1 நெல்லிக்காய்
அளவு சாப்பிட்டால் காமாலை குணமாகும்.
மஞ்சள் கரிசிலாங்கண்ணிக் கீரையை வாரத்திற்கு 2 முறைகள் சாப்பிட்டு வந்தால்
ஈரல் சம்பந்தமான நோய்கள் வராது.
தினமும் 2 வேளை தேன் குடித்தால் எல்லாவிதமான காமாலை நோய்களும் குணமாகும்.*

*பற்களில் கறை*

*சிறிது எலுமிச்சைச் சாறுடன் உப்புத்தூள் கலந்து கறை உள்ள இடங்களில்
தேய்த்தால், பற்களில் உள்ள கறை நீங்கி விடும்.*

* *

*காதுவலி*

*காதில் ஏற்படும் வலிக்கு காற்றொட்டிக் கொழுந்து, பூண்டு, வசம்பு ஆகியவற்றைசம
எடை எடுத்து, அரைத்து ஒரு பாத்திரத்தில் போட்டு நல்லெண்ணெய் போதிய அளவு ஊற்றி,
காய்ச்சி இறக்கி ஆறிய பிறகு இளஞ்சூட்டுடன் காதில் ஒரு துளி விட்டால் காதுவலி
நாளடைவில் நீங்கும்.*

Thanks Kadhal Group

மல்லிகைப் பூவின் மருத்துவ குணங்கள்:-


மல்லிகைப் பூவை அந்த காலத்திலேயே பல்வேறு பிரச்சினைகளுக்கு மருந்தாக பயன்படுத்தி வந்தனர். அதேப்போல, பல்வேறு மருத்துவ குணம் கொண்ட மல்லிகைப் பூ எண்ணெய் மருந்தாக பயன்படுத்தப்பட்டுள்ளது.

வெளியில் உணவை வாங்கி சாப்பிடுபவர்களுக்கு வயிற்றில் பூச்சித் தொல்லைகள் அதிகமாக இருக்கும். வயிற்றில் பூச்சி இருந்தால் உடல் மெலியும், சருமத்தில் வெள்ளைத் திட்டுக்கள் காணப்படும். அப்படியானவர்கள் 4 மல்லிகைப் பூவை தண்ணீரில் போட்டு கொதிக்க வைத்து அந்த நீரை அருந்தி வர வேண்டும். இவ்வாறு அருந்தி வர வயிற்றில் உள்ள கொக்கிக் புழு, நாடாப் புழு போன்றவை அழியும்.

இந்த அறிகுறிகள் இருப்பவர்கள் மட்டுமல்லாமல் பொதுவாக அடிக்கடி பூச்சி மருந்து சாப்பிடுபவர்கள் தவிர அனைவருமே இந்த மல்லிகைத் தண்ணீரை அருந்தலாம்.

இதேப்போல, மல்லிகைப் பூக்களை நிழலில் வைத்து உலர்த்தி அவை காகிதம் போல ஆனதும், அவற்றை பொடியாக அரைத்து பொடி செய்து வைத்துக் கொள்ளவும். இதனை தண்ணீரில் கலந்து குடித்து வர சிறுநீரக கற்கள் தானாகவே கரைந்து போகும். எந்த உயர் சிகிச்சையும் தேவைப்படாது.

நோய் எதிர்ப்பு சக்தி இல்லாதவர்கள் மல்லிகைப் பூக்கள் ஒன்றிரண்டை உண்டு வர நோய் எதிர்ப்புச் சக்தி உயரும்.

இது மட்டுமல்லாமல் அவ்வப்போது ஏற்படும் சில உடல் நலப் பிரச்சினைகளுக்கும் மல்லிகை சிறந்த நிவாரணியாக உள்ளது. அதாவது, சிலருக்கு மல்லிகை வாசனை தலைவலியை ஏற்படுத்தும். ஆனால் தலைவலியை குணமாக்கும் குணம் மல்லிகைக்கு உள்ளது என்பது பலருக்கும் தெரியாது. தலைவலி ஏற்படும் போது, சில மல்லிகைப் பூக்களை கையில் வைத்து கசக்கி அதனை தலையில் பத்திடுவது போல தேய்த்துவிட்டால் தலைவலி காணாமல் போகும்.

மல்லிகைப் பூவில் இருந்து ஒரு வகை எண்ணெய் எடுக்கப்படுகிறது. இந்த எண்ணெய் பல்வேறு உடல் உபாதைகளுக்கு அருமருந்தாக உள்ளது.

எங்கேனும் அடிபட்டு அல்லது சுளுக்குப் பிடித்து வீக்கம் காணப்பட்டாலும், நாள்பட்ட வீக்கமாக இருந்தாலும், மல்லிகைப் பூவை அரைத்துப் பூசினால் வீக்கம் குறையும்.

மன அழுத்தம், உடல் சூடு போன்ற பிரச்சினைகளால் பாதிக்கப்பட்ட பெண்கள், ஒன்றுமே செய்ய வேண்டாம்.. உங்களுக்குப் பிடித்த அளவிற்கு மல்லிகைப் பூவை வாங்கி தலையில் சூடுங்கள் போதும். மன அழுத்தமும் குறையும், உடல் சூடும் மாறும்.

இதுபோன்ற பல மகத்துவங்களைக் கொண்டுள்ளது மல்லிகை பூ.

Karthikeyan Mathan

கற்றது கையளவு...!!!


புத்தர் ஒரு மரத்தடியில் அமர்ந்திருந்தார். அப்போது அங்கு வந்த புத்தரின் முதன்மைச் சீடரான ஆனந்தன் புத்தரிடம், “குருவே, நான் இந்த உலகத்தைத் தெரிந்துகொள்ள ஆசைப்படுகிறேன்.. எப்படி?” என்று கேட்டார்..

புத்தர் அவரிடம், “இந்த மரத்தில் ஏறி தழைகளைப் பறித்து வா!” என்றார்..

ஆனந்தன் அந்த மரத்தின் மேல் ஏறி கைகொள்ளும்
அளவுக்குத் தழைகளைப் பறித்துக்கொண்டு கீழிறங்கி வந்தார்..

புத்தர் அவரைப் பார்த்து, “ஆனந்தா, இப்போது உன்
கையில் என்ன உள்ளது?” என்று கேட்டார்..

“தழைகள் குருவே” என்றார்..

“அப்படியானால்.. மரத்தில்...?”
என்று திருப்பிக் கேட்டார் புத்தர்..

“மரத்தில் நிறைய தழைகள் இருக்கின்றன” என்றார் ஆனந்தன்..

உடனே புத்தர்,

“ஆனந்தா, இந்த உலகத்தைத் தெரிந்துகொள்ள வேண்டுமென்று சொன்னாயே... அது இதுதான்.. நான் உனக்குப் போதித்தது உன் கையிலுள்ள அளவுதான்.. நான் உனக்குப் போதிக்காதது மரத்திலுள்ள தழைகளின் அளவு.. அவ்வளவையும் என்னால் போதிக்க முடியாது.. நீ இந்த உலகத்தை உன் அனுபவத்தால்தான் அதிகம் தெரிந்துகொள்ள முடியும்” என்றார்.

முதுகுவலி தடுக்கும் முறைகள்


முதுகுவலி வந்தவர்கள், அதற்கு அடிக்கடி இலக்காகிறவர்கள், சில எளிய சுய அணுகுமுறைகளால் முதலுதவி பெறலாம். அவை வருமாறு:

1. பெரிய பிரச்னைக்கு ஆளாகிவிட்டோம் என்று பதறிவிடாமல் மனதை ஓய்வு நிலைக்குக் கொண்டு வாருங்கள். இதைக் குணப்படுத்த முடியும் என்ற சாதகமான மன‌நிலையை‌ப் பெறுங்கள்.

2, வ‌லி அ‌திக‌ரி‌த்தா‌ல்...

வலி அதிகரித்து நீங்கள் எழுந்து நிற்கிற நேரங்களில் எல்லாம் ‌கீ‌ழ்‌க்க‌ண்ட உடற் தோற்றத்தைக் கடைப்பிடியுங்கள்.

(அ) நேராக நிமிர்ந்து நில்லுங்கள்.

(ஆ) தரையைப் பார்க்காதவாறு தலை நேர்கோணத்தில் நிற்க வேண்டும்.

(இ) வயிற்றை உள்ளுக்கு தசைகள் மூலம் இழுங்கள். சிறிது நேரம் வயிறு உள்ளடங்கியே இருக்கட்டும்.

(ஈ) இரு தொடைகளும் காலுக்கு மேல் ஒன்றை ஒன்று சந்திப்பது போல் இணைத்து வையுங்கள்.

(உ) முதுகின் கீழ்ப்பகுதி அசைந்தோ, சாய்ந்தோ ஆடாத நிலையில் இருக்கும்படி பார்த்துக் கொள்ளுங்கள்.

3. கடுமையான தாக்குதல் வந்தால் முழுமையாக 3-4 நாட்களுக்கு படுக்கை நேராக அசைவு இன்றி மல்லாந்த நிலையில் படுத்திருங்கள். இதுவே வலியைக் குறைக்கும்.

4. வெந்நீர் ஒத்தடம் அல்லது ஐஸ் ஒத்தடம் கொடுங்கள்.

5. உட்காரும் போது...

(அ) நேரான முதுகுப் பக்கம் உள்ள நாற்காலி அதுவும் பாதியளவு மட்டுமே சாய்ந்து கொள்ள அமைப்புக் கொண்ட நாற்காலியே சிறந்தது.

(ஆ) இடுப்பைவிட லேசாக உயர்ந்த நிலையில் உங்கள் முழங்கால் இருக்கும்படி பார்த்துக் கொள்ளுங்கள். தேவைப்பட்டால் காலுக்கு சிறிய ஸ்டூல் ஒன்று வைத்துக் கொள்ளுங்கள்.

(இ) கால்மேல் கால் போடாதீர்கள். நாற்காலியில் சரிந்து உட்காராதீர்கள்.

(ஈ) உங்கள் வேலை ஒரே இடத்தில் வெகு நேரம் அமர்ந்து செய்ய வேண்டிய வகைப்பட்டது எனில், இடையிடையே அடிக்கடி எழுந்து நில்லுங்கள். அல்லது சிறிது தூரம் நடந்து செல்லுங்கள்.

6. நிற்கும்போது...

(அ) இரண்டு கால்களிலும் உங்கள் உடல் எடை சமமாக அமரும்படி நில்லுங்கள்.

(ஆ) நெடுநேரம் நிற்க வேண்டி இருப்பின் சற்று சுற்றிச் சுற்றி நடந்து செல்லுங்கள். உங்கள் உடல் எடையை ஒரு கால் விட்டு ஒருகால் என்று மாற்றி மாற்றி தாங்க வையுங்கள்.

(இ) நெடுநேரம் நிற்கும்போது முதுகில் ஏற்படும் டென்ஷனைக் குறைக்க ஒரு ஸ்டூல் அல்லது படி மீது ஒரு கால் மாற்றி ஒரு கால் உயர வையுங்கள்.

7. தூங்கும்போது...

(அ) மென்மையான, புதையும் தன்மை கொண்ட மெத்தையில் படுக்காதீர்கள். கடினமான ஒரு படுக்கை அல்லது கடினமான பலகை உள்ள கட்டிலின் மேல் விரிப்பு விரித்துப் படுங்கள்.

(ஆ) உங்கள் படுக்கை முதுகிற்கு நல்ல சார்பு தருவதாகவும், முதுகெலும்பை நேர்நிலையில் வைக்க உதவுவதாகவும் அமையவேண்டும்.

(இ) ஒருப‌‌‌க்கமாகப் படுக்கும்போது முழங்கால்கள் நேர்கோணத்தில் அமையும்படி விழிப்பாகக் கவனித்துக் கொள்ளுங்கள்.

(ஈ) கவிழ்ந்து படுப்பது சரியல்ல.

8. பொருள்களைத் தூக்கும்போதோ உயர்த்தி எடுக்கும்போதோ...

(அ) முழங்காலை வளையுங்கள். முதுகை அல்ல.

(ஆ) பயணத்துக்குச் சுலபம் என்று ஒரே சூட்கேஸில் அடைக்காதீர்கள். இரண்டு சிறிய அல்லது மீடியம் சைஸ் சூட் கேஸில் கொண்டு செல்லுங்கள். இரண்டையும் இருகரங்களால் தூக்கும்போது சம எடைப் பங்கீடு வரும். முதுகுத் தசைகளுக்கும் சம வேலை கிட்டும்.

(இ) முதுகுத் தசைகளை அதிக உபத்திரவம் செய்யாத வகையில் பொருள்களை உயர்த்தி வைக்கும்போது ஏணியில் படிப்படியாக வைத்து ஏற்றுங்கள்.

9. கார் ஓட்டும்போது...

(அ) உங்கள் கீழ் முதுகுக்கு சார்ந்து கொள்ள ஒரு குஷன் உபயோகியுங்கள். இடைவெளி விட்டு விட்டு காரை நிறுத்தி இறங்கி நின்று பின்பு தொடருங்கள்.

10. ஹீல் வைத்த காலணிகளை அணியாதீர்கள். தட்டையாக உள்ள காலணியையே அணியுங்கள்.

11. உங்கள் எடை அதிகமாக இருந்தால் குறைத்துவிடுங்கள்.

12. டைவ் அடித்தல், பல்டி அடித்தல் போன்ற செயல்கள் கூடாது.

13. கண்ட கண்ட மாத்திரை மருந்துகளை வாங்கி நீங்களே சுய மருத்துவம் செய்து கொள்ளாதீர்கள்.

உடற்பயிற்சி!

தசை இயங்கு நிலைக்கு தேகப்பயிற்சி அவசியம். முதுகெலும்பை நல்ல நிலைக்கு வைக்கவும் உடற்பயிற்சி உதவும்.

உங்கள் மருத்துவரின் அனுமதி பெற்று உடற்பயிற்சிகளைச் செய்யுங்கள். வேகமாக நடத்தல், நீச்சல், கைகால்களை மென்மையாக நீட்டி மடக்கல் நல்ல பயிற்சிகளாகும்.

எந்தப் பயிற்சியையும் நிதானமாகவும் படிப்படியாகவும் செய்யவேண்டும்.

நடைப்பயிற்சி அவசியம் ஏன்?


நமது இயல்பு வாழ்வுக்கு உழைப்பும், உணவும் அத்தியாவசிய, அவசியத் தேவைகளாகின்றன. பயிற்சிகளும், இயற்கை உணவுகளும் இனிய வாழ்வுக்கு உத்திரவாதம் தருகின்றன.

கடின உழைப்பும், விளையாட்டும் இலகுவில் நமது உணவு தனம மாதலையும் உடல் உறுப்புகள் கழிவுகளை வெளியேற்றுவதுடன், நல்லதொரு களைப்பை உருவாக்கி உடல் தலை இறுக்கம், அழுத்தம், சீர்படுவதுடன் மன அழுத்தம் உருவாக்கும் ஹார்மோனை மாற்றும் வல்லமையைத் தருகின்றன மகிழ்ச்சி தரும், சுகம் தரும் ஹார்மோனை சுரக்கும் ஆற்றல்களைப் பெறுகிறோம். மெட்டாபாலிசம் மேம்படுகிறது. நன்றாக பசி எடுக்கிறது. நோய் எதிர்ப்பு ஆற்றல் அதிகரிக்கிறது.


எனவே, நமது அன்றாட இயக்கங்களில், தினசரி நடை முறையில் வாழ்நாள் முழுமைக்கும் கடின, உழைப்பு, அல்லது விளையாட்டு, அல்லது கராத்தே நடனம் அல்லது யோகா, அல்லது பயிற்சிகள், அல்லது ஓட்டம் அல்லது தோட்ட பணிகள் அவசியம் தேவை.


ஆனாலும் இவைகளை போட்டிகளில் பங்கேற்கும் அளவில் பயிற்சி மேற்கொள்ளத் தேவை இல்லை. அவசர, அதிவேக உலகில் தினமும் உழைப்பு, விளையாட்டு, பயிற்சிகளைச் செய்திட மயங்குகிறோம். சோம்பேறி ஆகிவிடுகிறோம். மறந்து விடுகிறோம். நாளை செய்வோம் என நினைக்கிறோம். இவைகளை ஒரு நாள் தவற விட்டாலும் பின் தொடர்வதில்லை சோம்பல் வயப்படுகிறோம்.


இதனால் நமது சுறுசுறுப்புக் குறைகின்றது மெட்டாபாலிசம் சீர்குலைகிறது. உடல் திசுக்களில் லேக்டிக் அமிலம் சேர்ந்து தசை இறுக்கத்தை அதிகரிக்கிறது மனதில் அழுத்தம் உருவாகிறது சோம்பல், அசதி, கூடி வாழ்வின் உத்வேகம் குறைகிறது. பிணிகள் எளிதில் நம்மை அடிமைப்படுத்துகின்றன.


எனவே உழைப்பு, பயிற்சிகள், விளையாட்டு கிட்டாத தேகத்திற்கு மாற்றாக நடைபயணம், நடை பயிற்சியை அவசியம் மேற்கொள்ள வேண்டும். நமது உயிர் உயரி உணர்வுகளைப் பெற நடை அவசியம் தேவை.

நடைபயிற்சியால் நமது உடல் இரத்த ஓட்டம் எல்லா திசுக்களிலும் மேம்படுவதுடன் உடலில் திசு இறுக்கம், பிடிப்பை உருவாக்கும் லேக்டிக் அமிலம் வெளியேறுகிறது. சுறுசுறுப்பு அதிகரிப்பதுடன் நமது மெட்டாபாலிசம், உணவு தன்மையாதல், ஜீரணம் சிறப்படைகிறது நெடுநாள் பிணியாளர்கள் நலம் பெற நடைப்பயிற்சி உதவி புரிகிறது.


நடப்பது நமது கால்களுக்கு, நமது உடலுக்கு, மனதிற்கு ஒரு புதுசக்தியையும், தெம்பையும் தருகின்றது உடல் நலிவைக் குறைத்து உடல் வலிவைத் தருகின்றது. பிணிகள் குறைய, மறைய வாய்ப்பை உருவாகித் தருகின்றது எவ்வயதிலும் நடக்கலாம் எவரும் நடக்கலாம் எப்போதும் நடக்கலாம் நடை ஒரு உடம்பின் ஒரு இயல்பான இயக்கம். அதன் அருமையை பெருமையை உடனடியாக உணர்வோம் அறிவோம் நடக்கத் தொடங்குவோம்.


பிற விளையாட்டுகள், பயிற்சிகள் நடைப்பயிற்சி, பயணம் ஓர் ஒப்பீடு

"ஆபத்தில்லா ஆரோக்கிய பயிற்சியை நாம் நாட வேண்டும். பயிற்சியைத் தேர்ந்தெடுக்க வேண்டும்” கால்பந்து, கைப்பந்து, பூப்பந்து, கிரிக்கெட், ஹாக்கி, குதிரையேற்றம் போன்ற விளையாட்டுகளை சிறுவயதில் விளையாடினாலும் வயதானபின் வேலைக்கு சென்ற பின் பலரும் மறந்தே விடுகின்றன.


பலரின் கூட்டணி இருந்தால் மட்டுமே இவைகளை விளையாட இயலும். பாதியில் நிறுத்த இயலாது வெப்ப கலோரி, சக்தி அதிகம் செலவழியும். உடலுக்கு ஊறுதரும் ஆபத்து மிகுந்துள்ளது. அதற்கான கருவிகள் மைதானம் தேவை. அதற்கான கோச் தேவை. நினைத்த இடத்தில் விளையாட இயலாது மேலும் இவைகள் போட்டியாகவே விளையாடப்படுகின்றன அதற்கான வேகமும், முனைப்பும் அதிகரிக்கும் சமயம் ஆபத்து அதிகரிக்கிறது. ஆரோக்கியம் பின்னுக்குத் தள்ளப்படுகிறது.




நீச்சல், ஜிம், வேக ஓட்டம், மெது ஓட்டம் பளு தூக்குதல், தோட்ட வேலை, ஏரோபிக்ஸ் பயிற்சிகள், நாட்டியம், குதிரையேற்றம், சைக்கிள் விடுதல், கடின உழைப்பு போன்றவைகள் மிகச் சிறந்த பயிற்சிகள். இவைகளிலும் மிதமான வெப்ப கலோரி, உடல் சக்தி செலவழிகின்றன சில பயிற்சிகளில் கருவிகளும் தேவைப்படுகின்றன சில நேரங்களில் வழிநடத்தும் மாஸ்டர்கள் தேவை. அதற்கேற்ற இடம், சூழல், கருவிகள், பொருளாதாரம் தேவைப்படுகின்றன தினமும் தொடர்வதில் பலருக்கு சிரமம் ஏற்படுகிறது வயது அதிகரித்தவர்கள் இப்பயிற்சிகள் சிலவற்றை தொட இயலவில்லை.




மேற்சொன்னவைகள் விளையாட்டு பயிற்சிகள் என்ற முறையில் வருகின்றன வாழ்நாள் முழுவதும் ஓட இயலுமா? நமது உடல் அமைப்பு அப்படி அமைந்துள்ளதா? வாழ்நாள் முழுவதும் தினமும் விளையாடுவோர் குறைவு. குழந்தை சிறுவர்களாக இருக்கும் சமயம் நமக்கு நாமே கூட விளையாடுகிறோம். துள்ளி ஓடுகிறோம். பெரியவர்களானதும் தினசரி விளையாட இயலவில்லை. வேலைப் பணிகள் நிமித்தம் சிரமப்படுகிறோம்.


ஆனால் வாழ்நாள் முழுவதும் நடக்கலாம். அதற்கான அமைப்பில் நமது உடல் உறுப்புகள், இயக்கங்கள் அமைந்துள்ளன என்கின்றனர் நடைவல்லுனர்கள். நடப்பதற்கு தடையே இல்லை. இயன்றவரை நடக்கலாம்.

75 மில்லியன் அன்பர்கள் நடைப் பயிற்சியை ஆரோக்கியம் பெறும் பொருட்டு தினமும் கடைப்பிடிப்பதாக கணக்கிடப்பட்டுள்ளது.

நடைப்பயிற்சி ஆபத்து இல்லாப் பயிற்சி எனலாம்.


நடைப்பயிற்சிக்கு வழிநடத்தும் வல்லுநர்கள் தேவை இல்லை.

நடைப்பயிற்சிக்கு தனியான மைதானம், இடம் தேவை இல்லை.

நடை நமது வாழ்வின் ஓர் அங்கம். வாழ்நாள் முழுவதும் அதன் முழுப் பயனை நுகர வேண்டும். அனுபவிக்க வேண்டும்.


சென்னையில் காலையில் காரில் பவனி வந்து கடற்கரையில் அதிகாலையில் நடப்பவர்கள் ஏராளம். காலை நடைகாட்சி திருவிழாபோல் இருக்கும். சென்னை, கோவை, மதுரை போன்ற பல ஊர்களிலும் காலையில் ஏராளமானோர் நடக்கப் பழகிவிட்டனர். கூட்டணியாகவும், தனியாகவும் கிளப் மூலமாகவும் நடக்கின்றனர்.


பல மருத்துவ வல்லுனர்கள் மாத்திரை, மருந்துகளை நம்புவதைவிட நடைப்பயிற்சிகளை இயன்றவரை கடைப்பிடிக்க வற்புறுத்துகின்றனர். வலியுறுத்துகின்றனர். பலருடைய வாழ்வில் காலையில் நடையும் அருகம்புல் பானமும் பிரிக்க இயலாத அளவிற்கு ஒன்றிவிட்டன. ஆரோக்கியத்தின் அருமையை அவர்கள் ரசிக்கின்றனர். ருசிக்கின்றனர். நாமும் அதற்குத் தயாராவோம்.

அம்மா


நம் வாழ்கையில் மறக்க முடியாத ஒருத்தியாக இருக்கிறாள் கருவுற்று இருக்கும் போதில் இருந்து நமக்கு என்ன குழந்தை பிறக்கும் என்பதில் இருந்து அவளுடைய கவலைகள் ஆரம்பிக்கிறது....

பெற்று வளர்த்து 3 வயது ஆனவுடன் பள்ளிகூடத்தில் சேர்க்கவேண்டுமே என்ற கவலை..

13 வயதில் வயதுக்கு வந்து விடுவாள் என்ற கவலை ..

17 வயதில் collage ல சேர்க்கவேண்டுமே என்ற கவலை ...

21 வயதில் கல்யாணம் பண்ணி குடுக்கவேண்டுமே என்கிற கவலைஅப்படி அவள் கல்யாணம் வேண்டாம் வேலைக்கு போக போறேன் நு என்று சொன்னால் காலையில் இருந்து மாலை வரைக்கும் மகள் பத்திரமாக வீடு வந்து சேர வேண்டுமே என்கிற கவலை ( இந்த பயம் தான் வயுத்துல நெருப்பு கட்டி கொண்டு இருப்பது) அன்று என் அம்மா சொன்னது ...

இன்று தான் அதை நான் உணர்கிறேன் ... பெண் குழந்தைகள் பிறந்தால் இவ்வளவு கஷ்டங்களா!!!

அதுவும் இப்போது இருக்கும் சூழ் நிலைமையில் எல்லா பெற்றோர்களும் மிகவும் பயப்பட வேண்டிய காலம் இது..... பெற்ற அம்மாவின் வலி இப்போது தான் எனக்கு புரிகிறது ....

எனக்கு ஒரு பெண் குழந்தை இருக்கும் பொழுது .....


- Sumitha Subramanian.

மரங்கள்


ஒரு மனிதன் ஒரு நாளைக்கு மூன்று சிலிண்டர்கள் அளவு ஆக்ஸிஜனை சுவாசிக்கிறான்.,

ஒரு ஆக்ஸிஜன் சிலிண்டரின் விலை 700 ரூபாய்.,

மூன்று சிலிண்டரின் விலை 2100 ரூபாய்., ஒரு வருடத்திற்கு 7,66,000 ரூபாய்க்கு மேல் போகிறது.,

ஒரு மனிதனின் சராசரி ஆயுள் காலம் 65 வருடம் என்றால் 5 கோடி ரூபாய்க்கு மேல் எட்டுகிறது., இவ்வளவு விலையுயர்ந்த, மதிப்பு மிகுந்த சுவாசக்காற்றை நமக்காக இலவசமாக மரங்கள் தருகிறது........,

அப்படி என்றால் நாம் மரங்களுக்கு எந்த அளவிற்கு மரியாதை கொடுக்க வேண்டும்.,

மரங்கள், இயற்கை மனிதனுக்கு தந்த பொக்கிஷம்...., இனியேனும் மரங்கள் என்னும் அட்சயபத்திரத்தை அழிக்கவிடாமல் தடுத்து காக்க உறுதி எடுப்போம்.

தமிழ் -கருத்துக்களம்

உண்மையில் உங்களுக்கு 'டென்ஷனா'?


'டென்ஷன்’ - இன்று நாம் அதிகம் பயன்படுத்தும் வார்த்தை. அந்த அளவுக்கு வீட்டிலும், வெளியிலும், எங்கேயும், எப்போதும் டென்ஷனும் நம்முடனே பயணிக்கிறது.

டென்ஷனாக இருக்கும்போது வேலையில் ஈடுபாடின்மை, நம்பிக்கையின்மை, தன்னம்பிக்கைக் குறைதல், தூக்கப் பிரச்னை என்று மன அழுத்தத்துக்கான அறிகுறிகளும் ஆரம்பமாகிவிடுகின்றன.

கடந்த இரண்டு வாரங்களில் உங்களுக்கு நேர்ந்த அனுபவத்தை அடிப்படையாகக்கொண்டு, கீழ்க்காணும் கேள்விகளுக்குப் பதிலை மனதுக்குள் 'டிக்’ செய்துகொள்ளுங்கள். நீங்கள் எப்படிப்பட்டவர், உங்களுக்கு சிகிச்சை தேவையா என்பதை உங்கள் பதில்களே கூறும்.

1. எந்த ஒரு காரியத்தையும் விருப்பமின்றி செய்தீர்களா?

அ. ஆம், முழு ஈடுபாட்டுடன் செய்தேன்
ஆ. ஒரு சில நாட்கள் மட்டும் (1 முதல் 3 நாட்கள்)
இ. கிட்டத்தட்ட பாதிநாட்கள் (4 முதல் 7 நாட்கள்)
ஈ. பெரும்பான்மையான நாட்கள் விருப்பமின்றிச் செய்தேன் (8 முதல் 14 நாட்கள்.)

2. மனம் தளர்ந்து, சோர்வாக இருப்பதாக உணர்கிறீர்களா?

அ. இல்லை.
ஆ. சில தினங்கள் அப்படி இருந்தது.
இ. பாதி நாட்கள் அப்படித்தான்.
ஈ. கிட்டத்தட்ட எல்லா நாட்களும்.

3. தூங்குவதில் சிரமம் அல்லது போதுமான தூக்கம் இல்லாமல் அவதிப்படுகிறீர்களா?

அ. இல்லை
ஆ. சில தினங்கள் அப்படி இருந்தது
இ. பாதி நாட்கள் அப்படித்தான்
ஈ. கிட்டத்தட்ட எல்லா நாட்களும்
(ஒரு நாளைக்கு எந்தவிதத் தடங்கலும் இன்றி குறைந்தது எட்டு மணி நேரத் தூக்கம் அவசியம்)

4. சோர்வாகவோ அல்லது குறைந்த ஆற்றலுடன் இருப்பதுபோலவோ உணர்கிறீர்களா?

அ. இல்லை
ஆ. சில தினங்கள் அப்படி இருந்தது
இ. பாதி நாட்கள் அப்படித்தான்
ஈ. கிட்டத்தட்ட எல்லா நாட்களும்

5. பசியின்மை அல்லது அதிகமாகச் சாப்பிடுதல் பிரச்னை உள்ளதா?

அ. இல்லை
ஆ. சில தினங்கள் அப்படி இருந்தது
இ. பாதி நாட்கள் அப்படித்தான்
ஈ. கிட்டத்தட்ட எல்லா நாட்களும்

6. தோல்வியுற்ற, தன்னைத்தானே வெறுக்கின்ற உணர்வு ஏற்பட்டதா?

அ. இல்லை
ஆ. சில தினங்கள் அப்படி இருந்தது
இ. பாதி நாட்கள் அப்படி ஏற்பட்டது
ஈ. கிட்டத்தட்ட எல்லா நாட்களும்

7. செய்தித்தாள் படிப்பது, தொலைக்காட்சி பார்ப்பது போன்ற சின்னஞ்சிறு விஷயங்களில்கூட சரியாகக் கவனம் செலுத்த முடியாத நிலை ஏற்பட்டதா?

அ. இல்லை
ஆ. சில தினங்கள் அப்படி இருந்தது
இ. பாதி நாட்கள் அப்படி இருந்தது
ஈ. கிட்டத்தட்ட எல்லா நாட்களும்

8. மற்றவர்கள் கவனிக்கும் அளவுக்கு மிக மெதுவாகப் பேசுகிறீர்களா? வேலை செய்கிறீர்களா? அல்லது அளவுக்கு அதிகமாகப் பரபரப்புடன் இருக்கிறீர்களா?

அ. இல்லை
ஆ. சில தினங்கள் அப்படி இருந்தது
இ. பாதி நாட்கள் அப்படித்தான் நடந்துகொண்டேன்
ஈ. கிட்டத்தட்ட எல்லா நாட்களும்

9. வாழ்க்கையை வெறுத்து தன்னைத்தானே காயப்படுத்திக்கொள்ளும் மனநிலை ஏற்பட்டதா?

அ. இல்லை
ஆ. சில தினங்கள் அப்படித் தோன்றியது
இ. பாதி நாட்கள் அப்படி இருந்தது
ஈ. கிட்டத்தட்ட எல்லா நாட்களும்
(உங்களையே வெறுத்துக்கொள்ளும், காயப்படுத்திக்கொள்ளும் அல்லது தற்கொலை செய்துகொள்ளும் எண்ணம் ஒருநாள் ஏற்பட்டிருந்தால்கூட, அது மிகவும் ஆபத்தானது.)

(அ- 0, ஆ-1, இ-2, ஈ-3 மதிப்பெண்கள்)

மதிப்பெண் 0 - மனஅழுத்தம் இல்லாதவர் நீங்கள். இந்த நிலையைத் தக்கவைத்துக்கொண்டால், நீங்கள்தான் மகிழ்ச்சியான நபர்.

1 முதல் 4 வரை - மிகக் குறைந்த மனச்சோர்வு. மன அழுத்தத்தைக் குறைக்கும் எளிய பயிற்சிகள் செய்யுங்கள். யோகா, தியானம், உடற்பயிற்சிகள் உங்கள் மனச்சோர்வை நீக்கப் பயன்படும்.

5 முதல் 14 வரை - மனச்சோர்வு. மன அழுத்தம் என்பது எல்லோருக்கும் தோன்றுவதுதான் என்று அலட்சியமாக இருக்க வேண்டாம். எனவே, மனநல மருத்துவரிடம் சென்று ஆலோசனை பெற்றுக்கொள்வது நல்லது.

15 முதல் 19 வரை - சற்றே அதிகமான மனச்சோர்வு.

20 முதல் 27 வரை - அதிகமான மனச்சோர்வு- நீங்கள் உங்களையே காயப்படுத்திக்கொள்ளும் அளவுக்கு மனநிலை கொண்டவராக இருப்பதால் மனநல மருத்துவரைச் சந்தித்து சிகிச்சை பெறுவது மிகவும் அவசியம்.

உடலுக்கு ஆரோக்கியத்தை தரும் 10 உலர் பழங்கள்!!!


அனைவருக்கும் ஸ்நாக்ஸ் சாப்பிடும் பழக்கம் நிச்சயம் இருக்கும். அதுவும் ஸ்நாக்ஸ் என்றதுமே முறுக்கு, வடை, சிப்ஸ் போன்றவை தான் ஞாபகத்திற்கு வரும். ஆனால் அத்தகைய உணவுப் பொருட்களை சாப்பிட்டால், உடலில் பல பிரச்சனைகள் தான் வரும். ஏனெனில் அவை அனைத்துமே எண்ணெய் பலகாரங்கள். அதிலும் இவற்றை சாப்பிட்டால், உடல் எடை தான் அதிகரிக்கும். அதிலும் உடல் எடையை குறைக்க விரும்புவோர், இத்தகைய உணவுப் பொருட்களை அறவே தவிர்க்க வேண்டும். அதற்கு மாறாக பழங்கள் அல்லது உலர் பழங்களை சாப்பிட்டால் மிகவும் நல்லது. பழங்களில் நிறைய சத்துக்கள் உள்ளது என்று நன்கு தெரியும்.

அதேப் போன்றே உலர் பழங்களிலும் சத்துக்கள் உள்ளன. ஏனெனில் உலர் பழங்கள் பழங்களில் இருந்து வந்ததே ஆகும். இவை உடலுக்கு ஆரோக்கியத்தை தருவதோடு, உடல் எடையையும் குறைக்க உதவியாக இருக்கும். குறிப்பாக வேலை செய்யும் போதோ அல்லது ஸ்நாக்ஸ் ஏதேனும் சாப்பிட வேண்டும் என்று நினைக்கும் போதோ, இத்தகைய உலர் பழங்களை சாப்பிட்டால், எனர்ஜி கிடைக்கும். ஆனால் இதை மட்டும் சாப்பிட்டு இருக்க முடியாது. ஏனெனில் இவை பசியை கட்டுப்படுத்தாது. உலர் பழங்களில் அனைவருக்கும் தெரிந்தது உலர் திராட்சை, உலர் ஆப்ரிக்காட், உலர்ந்த அத்திப்பழம் போன்றவை தான். ஆனால் உலர் பழங்களில் இன்னும் நிறைய உள்ளன. அவை அனைத்து சீசன் பழங்கள் என்பதால், அவற்றை உலர் பழங்களாக்கி, வருடம் முழுவதும் சாப்பிடும் படியாக தயாரித்துள்ளனர். சரி, இப்போது அந்த உலர் பழங்களில் வேறு எவையெல்லாம் இருக்கின்றன என்று பார்ப்போமா!!!

உலர் திராட்சை
உலர் திராட்சை இனிப்புடன் இருப்பதோடு, மேலும் இதில் சோடியம் குறைவாகவும், நார்ச்சத்து அதிகமாகவும், கொழுப்பின்றி இருக்கும்.

அத்திப்பழம்
அத்திப்பழம் பெண்களுக்கு மிகவும் சிறந்தது. ஏனெனில் இதில் இரும்புச்சத்து மற்றும் ஃபோலிக் ஆசிட் அதிகம் நிறைந்துள்ளது. அதிலும் மாதவிடாய் காலங்களில் பெண்கள் அதிகம் சாப்பிட்டால், உடலுக்கு வேண்டிய சத்துக்கள் கிடைக்கும்.

தக்காளி
என்ன தக்காளியில் உலர்ந்தது உள்ளதா? ஆம் தக்காளியிலும் உலர்ந்தது உள்ளது. உலர் தக்காளியில் வைட்டமின் சி அதிகம் இருப்பதோடு, நல்ல சுவையும் இருக்கும். மேலும் இதிலும் புற்றுநோயை எதிர்த்துப் போராடும் லைகோபைன் அதிகம் உள்ளது.

ப்ளம்ஸ்
உலர்ந்த ப்ளம்ஸை, மல்டி-வைட்டமின் மாத்திரை என்று சொல்லலாம். ஏனெனில் அந்த அளவில் அதில் வைட்டமின்கள் உள்ளது மேலும் இது செரிமான மண்டலத்திற்கு மிகவும் நல்லது.

ஆப்பிள்
ஆப்பிளில் கூட உலர்ந்ததா? புதிதாக உள்ளதா? உண்மை தான் உலர் ஆப்பிளில், சாதாரண ஆப்பிளை விட அதிக அளவில் இரும்புச்சத்து உள்ளது. அதுமட்டுமின்றி, இதில் புற்றுநோயை எதிர்த்து போராடும் பைட்டோ-நியூட்ரியன்ட்டுகளும் உள்ளன.

ப்ளூபெர்ரி
பெர்ரிப் பழங்களில் ஒன்றான ப்ளூபெர்ரியிலும், உலர்ந்து இருக்கிறது. இந்த உலர் ப்ளூபெர்ரியில் வைட்டமின் சி, பி மற்றும் ஏ அதிக அளவில் நிறைந்துள்ளது. இது மைய நரம்பு மண்டலத்தின் சீரான இயக்கத்திற்கு மிகவும் இன்றியமையாத சத்துக்கள் உள்ளடக்கியது.

மாம்பழங்கள்
கோடையில் மட்டும் கிடைக்கும் மாம்பழத்தை வருடம் முழுவதும் சாப்பிடுவதற்கு தான் உலர் மாம்பழங்கள் தயாரிக்கப்பட்டுள்ளன. இந்த உலர் மாம்பழங்களில் ஒமேகா-3 ஃபேட்டி ஆசிட், வைட்டமின் ஏ, சி மற்றும் ஈ போன்றவை உள்ளன. அதுமட்டுமின்றி இதில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்களும் அதிகம் உள்ளன.

ஆப்ரிக்காட்
இதிலும் இரும்புச்சத்து அதிகம் உள்ளது. அதவும் இது டயட்டில் இருப்போருக்கு மிகவும் சிறந்த ஸ்நாக்ஸ்.

செர்ரி
உலர்ந்த செர்ரி பழத்திலும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் மற்றும் வைட்டமின் சி அதிகமாக நிறைந்துள்ளது. மேலும் இது டெசர்ட் உணவுகளில் டாப்பிங்கிற்கு ஏற்றதும் கூட.
குருதிநெல்லி (Cranberry)
குருதிநெல்லியில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகம் இருக்கும். அதேப் போன்று உலர்ந்த குருதிநெல்லியை அதிகம் சாப்பிட்டாலும், நோயெதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். அதிலும் சிறுநீர் தொற்று அல்லது இருமல் மற்றும் சளி இருப்பவர்கள் சாப்பிடுவது மிகவும் நல்லது.

லவ்


ஒரு பையன் ஒரு கண்ணு தெரியாத பெண்ணை லவ் பண்ணினான்.

அந்த பெண் "என்னை கை விடமாட்டியே " என்று கேட்டாள் .

அவன் "நிச்சியமாக உன்னை கல்யாணம் செய்து கொள்வேன் " என்று சொன்னான் .

ஒரு நாள் அந்த பெண்ணிற்கு ஆபரேசன் நடந்து பார்வை வந்துவிட்டது .

அப்போ பையன் கேட்டான் " இப்போ கல்யாணம் செய்து கொள்ளலாமா" ?

அந்த பெண்ணிற்கு அதிர்ச்சி .
அந்த பையனுக்கு பார்வை இல்லை.
அதனால அந்த பெண் கல்யாணம் பண்ணிக்க முடியாது என்று சொல்லிவிட்டாள்.

சிறுது தூரம் சென்ற பிறகு அவன் அவளிடம் சொன்னான் .
" என்னை கல்யாணம் செய்யவில்லை என்றாலும் பரவாயில்லை என்னுடைய இரு கண்களை பத்திரமா பார்த்துக்கோ "

ரத்த ஓட்டத்தைத் துரிதமாக்கும் திராட்சை ரசம்...


"கிரேக்கத்துல "கடவுளின் பானம்"னு சொல்வாங்க கிரேப் ஜூஸை. அநேகமாக மனிதனுக்கு அறிமுகமான முதல் ஜூஸ் இதுவாகத்தான் இருக்கும். ஏன்னா, கி.மு. 1000-ம் ஆண்டிலேயே கிரேப் ஜூஸ் (Grape juice) தயாரிச்சிருக்காங்களாம்!". திராட்சை ரசத்தின் மேன்மைகளைப் பார்ப்போம்.

* இரண்டு கிளாஸ் திராட்சைப் பழரசம் குடிப்பது, ஐந்து பிளேட் பச்சைக் காய்கறிகளை உண்பதற்குச் சமம்.

* ரத்த ஓட்டத்தைத் துரிதமாக்கும்; ரத்தம் கிளாட் ஆவதை, அதாவது, ஆங்காங்கே உறைவதைத் தடுக்கும்.

* திராட்சைப் பழரசத்தை சோடா, கோலாக்களுக்கு பதிலாக அருந்துவது அத்தனை ஆரோக்கியம்! தினமும் மதிய உணவுக்குப் பின் 200 மில்லி கிரேப் ஜூஸ் குடிப்பது நல்லது!

* ஒரு கிளாஸ் கிரேப் ஜூஸில் 80 சதவிகிதம் தண்ணீரும், 60 சதவிகிதம் கலோரிகளும் இருக்கும். நார்ச்சத்து அதிகமுள்ள இதனை "டயட்"டில் இருப்பவர்கள் தயங்காமல் குடிக்கலாம்.

* "ரெஸ்வெரட்ரால் (Resveratrol)" எனப்படும் ஒரு வகை இயற்கை அமிலம் கிரேப் ஜூஸில் அபரிமிதமாக உள்ளது. இந்த அமிலம் கேன்சர் செல்களின் வளர்ச்சியை முடக்குவதுடன், தேவை இல்லாத கட்டிகளின் வளர்ச்சியையும் கட்டுப்படுத்துகிறது.

* பெண்களுக்குச் சுரக்கும் ஈஸ்ட்ரோஜன் ஹார்மோனின் வேதிவினை மாற்றத்தை கிரேப் ஜூஸ் (Grape juice) கட்டுப்படுத்துவதால், மார்பகப் புற்று நோய்க்கான அபாயம் குறைக்கப்படுகிறது.

ஆகையால், எல்லோரும் திராட்சைப் பழரசம் அருந்தி, முக்கியமாக சுத்தமான திராட்சைப் பழங்களின் மூலம் தயாரிக்கப்படும் பழரசத்தை அருந்தி, ஆரோக்கியமா இருங்க!

மாதுளை ரொம்ப பிடிக்குமா? அப்ப நீங்க ஆரோக்கியசாலி தான்!!!


மாதுளை மருத்துவ குணங்கள் நிறைந்த ஒரு இனிய கனி வகை, என்பது போன்ற பல வித வர்ணனைகளைக் கொண்டது. இது வருடந்தோறும் கிடைக்கக்கூடிய கனி என்பது இதன் கூடுதல் நன்மையாகும். எனினும், பெரும்பாலானோர் இதை மருத்துவ குணங்கள் நிறைந்த கனிவகைகளுள், சாமானியமான ஒன்றாகவே கருதுகின்றனர். அதனால் அவற்றை தினமும் டயட்டில் சேர்த்துக் கொண்டும் வருகின்றனர்.

ஏனெனில் அந்த அளவில் இதன் மருத்துவ குணமானது அதிகம். ஆனால் சிலருக்கு இந்த பழத்தை பொறுமையாக உரித்து சாப்பிட நேரமில்லாததால், இதனை சாப்பிடுவதை தவிர்க்கின்றனர். அவ்வாறு தவிர்த்தால், அது நமக்கு தான் நஷ்டம். இப்போது இந்த அற்புத கனியின் அரிய மருத்துவ குணங்களைப் பற்றி விளக்கிக் கூறுவதன் மூலம், அக்கனிக்குரிய நம் மனமார்ந்த பாராட்டுக்களை வழங்கலாம். மாதுளையின் மருத்துவப் பயன்கள்!!!

இளமையை தக்க வைத்தல்
மாதுளைகளில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் அதிகம் நிறைந்துள்ளது. இந்த தன்மையினால், அவை கட்டற்ற மூலக்கூறுகளினால் உண்டாகக் கூடிய இளமூப்பு வியாதியிலிருந்து, உடலின் உயிரணுக்களைக் காக்கக் கூடிய வல்லமை பொருந்தியவையாய் உள்ளன. இக்கட்டற்ற மூலக்கூறுகள், சூரியனின் கதிர்வீச்சு மற்றும் சுற்றுச் சூழலிலுள்ள மாசுக்களின் பாதிப்புகளினால் உண்டாகின்றன.

இயற்கையான இரத்த மெலிவூட்டிகள்
இரண்டு வகையான இரத்த உறைவுகள் உள்ளன. முதல் வகையான உறைவு, வெட்டுக்காயங்கள் மற்றும் சிராய்ப்புகளினால் உண்டாகும் காயங்களிலிருந்து புறத்தோலை விரைவாக மீளச் செய்யும் ஆற்றல் கொண்டது. இவ்வகைக் காயங்களில், உடனடி இரத்த உறைவு, அதிக இரத்தப் போக்கை தடுக்கக் கூடியது. அதனால் இது கட்டாயத் தேவையாக உள்ளது. இரண்டாவது வகை இரத்த உறைவு, உடலின் உள்ளே நிகழக்கூடியது. இது மிகவும் ஆபத்தான ஒன்று. இதயம் மற்றும் இரத்த நாளங்களில் உண்டாகும் உறைவுகள் மற்றும் சிறுநீர்த்தேக்கம் ஆகியவற்றை இதற்கு உதாரணமாக கூறலாம். இவ்வகை பாதிப்புகளில், இரத்தம் உறைவதினால் மரணம் கூட நிகழலாம். எனவே இதற்கெல்லாம் மாதுளை சரியான தீர்வு தரும்.

பெருந்தமனி தடிப்பு நோய் (atherosclerosis)
வயது மற்றும் ஆரோக்கியமற்ற வாழ்வியல் பழக்கங்களினால், கொலஸ்ட்ரால் மற்றும் பிற பொருள்கள் உடலுக்குள் சென்று சேர்ந்து, இரத்த நாளங்களின் சுவர்களை இறுகிக் கொள்ள வைக்கும். மாதுளையின் ஆன்டி-ஆக்ஸிடன்ட் குணங்கள், “அடர்த்தி குறைந்த லிப்போப்ரொட்டீன்” என்றழைக்கப்படும் கெட்ட வகை கொலஸ்ட்ராலை தமனிகளின் சுவர்களில் படிவதைத் தடுக்கிறது.

ஆக்ஸிஜன் மாஸ்க்
எளிமையான வார்த்தைகளில் சொல்வதானால், மாதுளைச் சாறு இரத்தத்தின் ஆக்ஸிஜன் அளவை மேலேறச் செய்கிறது. ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் கொலஸ்ட்ராலைக் குறைத்து, கட்டற்ற மூலக்கூறுகளோடு போராடி, ஆபத்து விளைவிக்கக்கூடிய இரத்த உறைவுகளில் இருந்து காத்து, அருஞ்சேவை புரிகிறது. இவ்வாறு செய்வதன் மூலம் கொஞ்சம் கொஞ்சமாக, இரத்த ஓட்டத்தை சீராக்கி, இரத்தத்தின் ஆக்ஸிஜன் அளவுகளை இவை அதிகப்படுத்துகின்றன.

மூட்டுவாதம்
மாதுளையின் மருத்துவ குணங்கள், எலும்புகளையும் எட்டுகின்றன. இது, மூட்டுவாதத்தினால் பாதிக்கப்பட்டவர்களின், ‘குருத்தெலும்பு’ என்றழைக்கப்படும் சவ்வுப் பகுதியை, அதீத பாதிப்புக்குள்ளாவதிலிருந்து தடுக்கிறது. இந்தக் கனி, வீக்கம் மற்றும் எரிச்சலைக் குறைக்கும் ஆற்றலும், குருத்தெலும்பை பாதிக்கும் நொதிகளை எதிர்க்கும் ஆற்றலும் கொண்டவை.

விறைப்புத்தன்மை குறைபாடு
மாதுளை, இந்த தர்மசங்கடமான பிரச்சினையை, தீர்க்கவல்லதாகும். ஆனால், இது இப்பிரச்சினைக்கு உடனே முழு நிவாரணம் வழங்கக்கூடிய அதிசய மருந்து என்று நினைத்தல் தவறு. மாதுளைச் சாறு, இக்குறையை மிதமாக மட்டுமே நிவர்த்திக்கக்கூடும். இதைப் பற்றிய ஆராய்ச்சி இன்னும் ஒரு தீர்க்கமான முடிவை வெளியிடவில்லை. ஆனால் இந்த கருத்துக்கு, சில ஆதரவாளர்களும் இருக்கவே செய்கின்றனர்.

புரோஸ்டேட் புற்றுநோய்
இந்த கருத்தும், திடமான முடிவுடையது அல்ல. ஆனால், இரு வேறு ஆய்வுகள், மாதுளைச் சாறு புரோஸ்டேட் புற்றுநோய்க்கு எதிராக போராட உதவுகிறது என்று கூறுகின்றன. ஆய்வுக்கூடத்தில் நிகழ்த்தப்பட்ட ஒரு சோதனையில், மாதுளைச் சாறு, புற்றுநோய் செல்களின் வளர்ச்சியைக் குறைத்து, அவற்றின் அழிவை அதிகரிக்கச் செய்கிறது என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இதய நோய்கள்
ஆய்வுக்கூடப் பரிசோதனையில், மாதுளைச் சாறு, இதய நோயாளிகளின் இரத்த ஓட்டத்தைச் சீராக்கி, அவர்களின் உடல்நிலையில் முன்னேற்றத்தைக் கொடுக்கிறது என்றும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. எச்சரிக்கை: மாதுளைச் சாறு, இதய நோய்க்கு மருத்துவ சிகிச்சை எடுப்போர்க்கு, எதிர்மறையான விளைவுகளை உண்டாக்கலாம்.

வயிற்றுப்போக்கு வயிற்றுப் போக்கினால் அவதிப்படுவோர், மாதுளைப் பழத்தை உட்கொள்வதன் மூலம் போக்கலாம்.

உடல் எடை குறைய
மாதுளை, அதிக கலோரிகள் இல்லாத பழமாதலால், இது உடல் எடையை கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்க உதவும்.

பாட்டி வைத்தியம்


புள்ளதாச்சி பொண்ணு வாந்தி எடுத்தா...

எதை சாப்பிட்டாலும் வாந்தியா வருது.. எத கிட்ட கொண்டுபோனாலும் குமட்டுது.. என்ன செய்யிறதுன்னே தெரியலனு புலம்புற புள்ளத்தாச்சியா நீங்கள்! அப்படின்னா இது உங்களுக்குதான்.
மசக்கையின்னா அப்பிடி இப்பிடித்தான் இருக்கும்.. நாமதான் அதுக்கு ஏதாச்சும் பிடிச்சதா பண்ணி சாப்பிணும்.நெல்லுப்பொரி இருக்குல்ல அதைக் கஞ்சியா காச்சி சாப்பிட்டா குமட்டாது. வாந்தியும் நிக்கும். நல்லா பசி எடுக்கும். இத மட்டும் தொடர்ச்சியா சாப்பிட்டு வந்தால் சரியாப் போகும்.

சிறுநீர் சரியா போகலையா.....

வெயில் அதிகமானதுல இருந்தே சிறுநீர் சரியா போகல... ஒரே கடுப்பா இருக்கு... சிறுநீர் கழிச்சப்புறம் ஒரே எரிச்சல், அடிவயிறு வலி ஊசியால குத்துறமாதிரி இருக்குனு சில பேர் புலம்புவாங்க... ஆனால், நீர்க்கடுப்புக்கு வெயில் மட்டுமே காரணம் இல்ல.. நேரத்துக்கு சாப்பிடாம இருக்குறது. சரியான தூக்கமில்லாம இருக்குறது... தேவையற்ற சிந்தனை, மன உளைச்சல்.. இதனாலேல்லாம் தான் நீர்க்கடுப்பு வருது... மொதல்ல இந்த பழக்கங்கள மாத்திக்கணும்...
சீரகம், சோம்பு, வெந்தயம், சின்ன வெங்காயம், கொத்தமல்லி விதை- இது எல்லாத்தையும் சம அளவு எடுத்து அரைச்சு மோர் அல்லது தயிர்ல கலந்து குடிக்கலாம். இல்லாட்டியும் இதையெல்லாம் பொடியாக்கி தேனிலும், நெய்யிலும் கலந்து சாப்பிடலாம். நீர்க்கடுப்பு உடனே குணமாயிடும்.
வேனல் காலமான இந்த காலகட்டத்துல நெறயா தண்ணி குடிக்கணும்.

நகம் கடிக்கும் குழந்தையா....

எம் பொண்ணு ஓயாம நகம் கடிக்கிறா.... நானும் எவ்வளவோ தடுத்துப் பாத்துட்டேன்.. ஆனா முடியலனு தவிக்கிறங்க தாய்மார்களுக்கு.....
நகம் மேல மருந்து தடவுறது தற்காலிக வைத்தியம்தான்.. நிரந்தரமா அந்த பழக்கம் நிக்கணும்னா வயித்துல இருக்குற கிருமிய வெளியேத்தணும். வயித்துல கிருமி இருக்குற குழந்தைகள்தான் நகத்தக் கடிக்கும். தூங்குறப்போ அரைக்கண் மூடித் தூங்கும். முகம் எப்போதும் வாடிப்போயி வெளிறியே இருக்கும். குழந்த ஏதோ சிந்தனையிலேயே இருக்கும். பதட்டமா இருக்கும். இது எல்லாமே வயித்துல இருக்குற கிருமிக படுத்துற பாடுதான்.
அதனால கிருமிய வெளியேத்திட்டா குழந்த நல்லாயிடும்.

இப்ப இத கவனமா கேட்டுக்கங்க.....

இஞ்சி - 1 துண்டு. முருங்கைப்பட்டை - 1 துண்டு எடுத்து ரெண்டையும் இடிச்சி நல்லா சாறு எடுத்து அந்த சாறோட கொஞ்சம் வெற்றிலை சாறையும், தேனையும் அளவாக் கலந்து 10 நாளுக்கு ஒருதடவ மாதத்துல மூணு தடவை ஒரு வேளைக்கு குடுத்து வாங்க. இப்பிடி மூணு மாசம் குடுத்துக்கிட்டு வந்தால், வயித்துல இருக்குற பூச்சியெல்லாம் தானா வெளியேறிடும்.

நகச்சுத்திக்கு......
விரல்ல நகச்சுத்தி மாதிரி வந்து வீங்கிக்கிட்டு ரொம்ப வேதனப்படுத்துது... ஒடையவும் மாட்டேங்குது.. அதுக்கு என்ன பண்ணலாமுன்னு யோசிச்சிட்டுருக்கீங்களா....?
கண்ட தண்ணியவும் குடிக்கிறது.. அளவுக்கு மீறுன அலைச்சல்.. சரியான தூக்கமில்லாதது... இதுனால ஏற்படுற உஷ்ணத்துல வர்றதுதான் இந்த மாதிரி கட்டியெல்லாம்...
சரி இப்ப சொல்ற மருந்த கவனமா கேட்டுக்கங்க...
சின்ன வெங்காயம் 5, கறிமஞ்சள் பொடி, கஸ்தூரி மஞ்சள் பொடி, வசம்புப் பொடிதலா 5 கிராம், சுக்கு ஒரு துண்டு, கொஞ்சம் முருங்கை இலை இது எல்லாத்தையும் சேத்து அரச்சி, அதுல எலுமிச்சை சாறு 25 மிலி விட்டு குழச்சி நகச்சுத்தி வந்த இடத்துல பத்து போட்டு, வெள்ளத் துணிய வச்சி கட்டுப்போட்டுக்கிட்டு வந்தால், 1 வாரத்துல எல்லாம் சரியாப்போயிடும்.

சாப்பிடப் பழகுவோம்!


''சாப்பாட்டுக்காகத்தான் நிற்க நேரம் இல்லாமல் ஓடுகிறோம். ஓடி ஓடி உழைக்கிறோம்... ஆனால், அந்தச் சாப்பாட்டை எப்படிச் சாப்பிடுவது என எத்தனை பேருக்குத் தெரிகிறது? சாப்பாட்டில் நாம் காட்டும் அலட்சியம்தான் பின்னாளில் இரைப்பை மற்றும் குடல் பகுதிகளில் பெரும் பாதிப்பை ஏற்படுத்துவதோடு ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியத்துக்குமே வேட்டு வைக்கிறது!''

அதிகாலை உணவு அதிமுக்கியம்!
இரவுச் சாப்பாட்டுக்கும் காலை நேரச் சிற்றுண்டிக்கும் இடையேயான இடைவெளி அதிகம். எனவே, காலை உணவினைத் தவிர்க்கவே கூடாது.

உணவை தள்ளிப்போடக் கூடாது!

வேலை வேலை என்று காரணம் சொல்லி சிலர் நேரத்துக்கு சாப்பிட மாட்டார்கள். இது தவறு. உணவு செரிமானத்துக்குத் தேவையான ஹைட்ரோ குளோரிக் அமிலம், குறித்த நேரத்தில் சுரக்க ஆரம்பிக்கும்போதே, பசி உணர்வு ஏற்படுகிறது. அப்போது உடனடியாக நாம் சாப்பிடாவிட்டால், சுரந்த அமிலமானது இரைப்பைச் சுவரை அரிக்க ஆரம்பித்துவிடும். இதனைத் தொடர்ந்து ஏப்பம், வயிற்றில் எரிச்சல், நெஞ்சு எரிச்சல் போன்ற அறிகுறிகள் தோன்றும். நாளடைவில், இரைப்பை மற்றும் குடல் பகுதிகளில் இந்த அமில அரிப்பினால், புண்கள் தோன்றும். இந்த வயிற்றுப் புண்ணே பெப்டிக் அல்சராக (Peptic Ulcer) மாறிவிடும், எச்சரிக்கை.

சாப்பிட வாங்க...
வயிற்றைக் காலியாக வைத்திருப்பது எந்த அளவு தவறோ, அதே அளவு வயிறு முட்ட சாப்பிடுவதும் தவறு. பசிக்கும்போது மட்டுமே சாப்பிடுங்கள். அதுவும் ஒரே வேளையில் மூக்குப் பிடிக்கச் சாப்பிடுவது செரிமான உறுப்புகளுக்கு அதீத வேலை வைப்பதோடு சர்க்கரை நோய் உள்ளிட்ட பாதிப்புகளையும் ஏற்படுத்தும். எனவே, அவரவர் உடல்நலத்துக்கு ஏற்றவாறு நான்கு அல்லது ஐந்து வேளைகளாகக்கூட உணவைப் பிரித்துச் சாப்பிட்டுப் பழகலாம். இது எளிதான செரிமானத்துக்கு உதவும்.

அடிக்கடி டீ...

டீ குடிக்கும் பழக்கம் உள்ளவர்கள் அதிகாலையில் ஒருமுறை டீ குடிக்கலாம். பின்னர் மதிய உணவுக்கும் இரவு உணவுக்கும் இடையிலான மாலை வேளையில் ஒரு கோப்பை டீ குடிக்கலாம். இதைத் தவிர்த்து அடிக்கடி காபி, டீ அருந்துவது பசி உணர்வை மட்டுப்படுத்தி பல்வேறு சிக்கல்களை ஏற்படுத்திவிடும்.

சாப்பிட்ட உடனேயே சாய்ந்துவிடலாமா?

இரவு சாப்பிட்ட உடன் தூங்கச் சென்றால் அஜீரணம், மலச்சிக்கல், தூக்கமின்மை எனப் பல பிரச்னைகள் உண்டாகும். சாப்பிட்ட உணவானது இரைப்பை, சிறுகுடல் எனச் செரிமானப் பாதையைக் கடப்பதற்கு குறைந்தபட்சம் நான்கு மணி நேரம் தேவைப்படும். ஆனால், இரவில் சாப்பிட்டு முடித்ததும் தூங்க ஆரம்பித்துவிட்டால், சாப்பிட்ட உணவானது செரிமானப் பாதையைக் கடக்கவே சிரமப்படும். அந்த நேரத்தில் செரிமான உறுப்புகளும் ஓய்வு நிலையில் இருப்பதால், உணவானது விரைவாக ஜீரணிக்கப்படாமல், நெஞ்சு எரிச்சல், தூக்கமின்மை போன்ற பிரச்னைகளை ஏற்படுத்தும்.

 எனவே, இரவு உணவை உண்ட பின் ஒன்று அல்லது ஒன்றரை மணி நேரமாவது விழித்திருந்து அதன் பிறகே படுக்கைக்குச் செல்லலாம். சாப்பிட்ட உடன் சில நூறு அடிகள் நடப்பதும் செரிமானத்துக்கு உதவியாக இருக்கும்.

சர்க்கரையில் வேண்டும் அக்கறை!

தென்னிந்தியர்களைவிடவும் அதிக அளவில் இனிப்பு பதார்த்தங்கள் சாப்பிடக்கூடியவர்கள் வட இந்தியர்கள். ஆனாலும், சர்க்கரை நோய்ப் பாதிப்பு என்னவோ தென்னிந்தியர்களைத்தான் அதிக அளவில் பாதிக்கிறது. இதற்குக் காரணம், நம்முடைய அரிசி வகை உணவுகள்தாம். அரிசி - கோதுமை என இரண்டு தானியங்களிலுமே கலோரி அளவு சமமாகவே உள்ளது. ஆனால், அரிசியைப் பட்டை தீட்டி வெண் நிறமாக்கும்போது, அதில் உள்ள நார்ச் சத்து வீணாகிவிடுகிறது. ஆனால், கோதுமையில் உள்ள நார்ச் சத்தினை இப்படி எல்லாம் வீணாக்காமல் சமைத்து உண்ணுகிறார்கள் வட இந்தியர்கள். அதிலும் குறிப்பாக ரொட்டி போன்ற கடின வகை உணவுகளை நன்றாகக் கடித்து மென்று விழுங்கும்போது உணவோடு உமிழ்நீரும் கலந்து கூழாக்கப்படுகிறது. உணவை ஜீரணிக்கச் செய்வதில் உமிழ்நீரின் பங்கு முக்கியமானது. ஆனால், நார்ச் சத்து இல்லாத அரிசி சாதம் போன்றவற்றை கடித்துச் சாப்பிட வேண்டிய அவசியம் இல்லாததால், அவசரம் அவசரமாக ஒன்றிரண்டு நிமிடங்களிலேயே அள்ளி விழுங்கிவிடுகிறோம். இப்படித் திடுமென இரைப்பைக்குள் வந்து விழும் அரிசி உணவானது எளிதில் செரித்து மொத்தமாகக் கலோரியை வெளிப்படுத்தும்போது ரத்தத்தில் சர்க்கரையின் அளவும் தடாலடியாக எகிறிப்போகிறது.

சாப்பிடப் பழகுங்கள்
டி.வி. பார்த்தபடியோ அல்லது புத்தகம் படித்தபடியோ சாப்பிடக் கூடாது. அப்படிச் சாப்பிட்டால் என்ன சாப்பிடுகிறோம். எவ்வளவு சாப்பிடுகிறோம் என்று அளவு தெரியாமல் சாப்பிட்டுவிடுவோம். அம்மா, அப்பா, அண்ணன், தங்கை என்று குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் ஒன்றாக அமர்ந்து மகிழ்ச்சியான சூழலில் சாப்பிடுவதே நிறைவைத் தரும். ஆனால், சாப்பாட்டு வேளையில் சத்தமாகப் பேசுவது, சிரிப்பது வேண்டாம். ஏனெனில், உணவானது புரையேறிவிடும் வாய்ப்பு உள்ளது. ஆகவே, உணர்ச்சிகரமாக எதையும் விவாதிக்காமல் இருப்பதே நல்லது.

உணவுப் பக்குவம் மற்றும் சத்துக்கள்குறித்து குறிப்புகள்

அதிகாலை ஐந்து அல்லது ஆறு மணிக்கு எழுந்ததும் திட உணவைச் சாப்பிட முடியாது. அதனால், அவரவர் விருப்பப்படி தண்ணீர், பால், காபி, டீ என்று திரவமாக அருந்தலாம். பின்னர் காலை எட்டு மணிக்கு முன்னரே கட்டாயம் திட உணவு சாப்பிட்டாக வேண்டும்.

இளநீர், ஜூஸ், பழம்... இவற்றில் ஏதாவது ஒன்றை காலை பத்து மணி அளவில் சாப்பிடலாம்.பிற்பகல் நான்கு மணிக்குச் சுண்டல், பயிறு, பொட்டுக்கடலை, பட்டாணி, பழம், மோர் அல்லது பிஸ்கட், சாண்ட்விச்... இவற்றில் ஏதாவது ஒன்றைச் சிறுதீனியாகச் சாப்பிடலாம். வடை, பஜ்ஜி போன்ற எண்ணெய்ப் பலகாரங்களை அடிக்கடி சாப்பிட வேண்டாம்.

பருப்பில் உள்ள கரைகிற நார்ச் சத்தும் கொழுப்பும் ரத்தத்தில் சர்க்கரையை அதிகரிக்கவிடாமல் பாதுகாக்கும். அசைவ உணவு சாப்பிடாதவர்களுக்கு, பருப்பில் உள்ள புரோட்டின் சத்து மிகவும் அவசியம். ஆனால், பருப்பு சேர்த்துக்கொண்டால் வாயுத் தொல்லை. ஆகையால், சமைப்பதற்கு முன்பு பருப்பினைத் தண்ணீரில் நன்றாக ஊறவைத்துப் பயன்படுத்தினால், இந்த வாயுத் தொல்லை இருக்காது. மேலும், நமது சமையல் முறையில் (ரசம்) சேர்க்கப்படும் சீரகம், மஞ்சள், பூண்டு, பெருங்காயம் போன்றவையும் வாயுவைத் தடுப்பதோடு ஜீரண சக்தியையும் ஊக்குவிக்கும்.

மாவுச் சத்துக்களை அதிகமாக உணவில் சேர்த்துக்கொள்வதால் மலச்சிக்கல் பிரச்னை நம்மில் பலருக்கும் இருக்கிறது. இவர்கள் சுண்டல், பீன்ஸின் வெளிப்புறத் தோல் போன்றவற்றை உணவோடு சேர்த்துக்கொண்டால், மலச்சிக்கல் வராது.

சாதாரணமாக சாப்பிடுவதற்கு முன்பு அரை டம்ளர் தண்ணீர் அருந்தலாம். சாப்பாட்டின்போது தாகம் அல்லது விக்கல் ஏற்பட்டால் மட்டுமே நீர் அருந்தவேண்டும். சாப்பிட்டு முடித்த பின்னர் ஒன்று அல்லது இரண்டு டம்ளர் தண்ணீர் அருந்துவது செரிமானத்துக்கு உதவியாக இருக்கும்.

சமச்சீர் உணவு என்பது தானியம், பருப்பு, காய்கறி-பழம், பால், எண்ணெய் என ஐந்து வகையாக இருக்கின்றன. நமது தென்னிந்திய உணவு வகைகளில் இந்த ஐவகை சத்துக்களும் இருப்பதால், நம்முடைய உணவு வகைகள் சமச்சீர் உணவே!

சர்க்கரை நோயைக்கட்டுப்படுத்தனுமா? நாவல் பழம் சாப்பிடுங்க!


நாவல் பழத்தை சாப்பிடுவது, உடம்பிற்கு மிகவும் நல்லது. ஆனாலும், இன்னமும் பெரியோர்கள், இதை குழந்தைகள் சாப்பிடும் பழமாகத்தான் கருதுகிறார்கள். நாவல் பழம் சாப்பிட்டால் நீரிழிவு நோய் கட்டுப்பாட்டில் இருக்கும். கல்லீரல் கோளாறுகள், குடற்புண் போன்றவற்றைப் போக்க வல்லது.

நாவல் பழச்சாற்றை தினமும் மூன்று வேளை தவறாமல் உட்கொண்டு வந்தால் நீரிழிவு நோயாளியின் சர்க்கரையின் அளவு 15 நாட்களில் பத்து சதவிகிதம் குறைத்துவிடலாம். மூன்று மாதத்திற்குள் முற்றிலும் கட்டுப்படுத்திவிடலாம். நாவல் பழத்தின் துவர்ப்புச் சுவை ஒரு சிறப்பு அம்சமாகும்.

நாவல் பழம் இரத்தத்தைச் சுத்தப்படுத்தும். இரத்தத்தில் இரும்புச்சத்தை அதிகரிக்கும். இதனால் இரத்தத்தின் கடினத் தன்மை மாறி இலகுவாகும். மேலும் இரத்தத்தில் கலந்துள்ள இரசாயன வேதிப் பொருட்களை நீக்கி சிறுநீர் மூலம் வெளியேற்றும். சிறுநீரகத்தை சீராக செயல்பட வைக்கும். மலச்சிக்கலைப் போக்கும்.

மூல நோயின் பாதிப்பு உள்ளவர்கள் நாவல் பழத்தை அடிக்கடி சாப்பிட்டு வந்தால், மூல நோயின் தாக்கம் குறையும். நன்கு பழுத்த நாவற்பழத்தை, உப்பு அல்லது சர்க்கரையுடன் சேர்த்து சாப்பிட்டு வந்தால் வாய்ப்புண், வயிற்றுப்புண், குடற்புண் போன்றவை குணமாகும். அஜீரணக் கோளாறுகளைப் போக்கி, குடல் தசைகளை வலுவடையச் செய்யும்.

தூக்கமின்றி அவதிப்படுபவர்கள், நாவல் பழத்தை மதிய உணவுக்குப்பின் சாப்பிட்டு வந்தால், தூக்கமின்மை நீங்கும். மெலிந்த உடல் உள்ளவர்கள் தினமும் நாவல் பழத்தைச் சாப்பிட்டு வந்தால் உடல் தேறும். நாவல்பழம் வியர்வையைப் பெருக்கும். சரும நோய் ஏற்படாமல் பாதுகாக்கும். பித்தத்தைக் குறைக்கும், உடல் சூட்டைத் தணிக்கும். ஞாபக சக்தியை அதிகரிக்கும்.

தங்கம் வாங்க போறீங்களா?


இந்திய தரக்கட்டுப்பாடு நிறுவனம் (Bureau of Indian Standards), 22 கேரட் தங்கத்தால் செய்யப்பட்ட நகைகளுக்கு வழங்கும் முத்திரைதான் '916 ஹால்மார்க்'. ஒரு கிராம் நகையில் 91.6% தூய தங்கம் இருக்கிறது என்பதைத்தான் குறிக்கிறது அந்த 916. தூய தங்கத்தின் அளவைப் பொறுத்து இந்த எண்கள் மாறுபடும் (9 கேரட்- 375; 14 கேரட்- 585; 17 கேரட்- 708; 18 கேரட்- 750; 21 கேரட்- 875; கேரட்- 23 கேரட்- 958). இதையெல்லாம் கவனித்து நகைகளை வாங்குவது நல்லது.

. நீங்கள் வாங்கும் நகை, 'ஹால்மார்க்' முத்திரையுடன் இல்லையென்றால்... 'ஹால்மார்க்' முத்திரையைப் போட்டு தரச்சொல்லி வாங்கலாம். ஆனால், நகைகளை அதற்குரிய விற்பனை ரசீதுகளுடன் வாங்குவது முக்கியம்.

. வாங்கும் நகையின் தரம் எதுவென்று முத்திரைக்கு உள்ளே இருக்கும் தர எண்ணை, லென்ஸ் மூலம் தெளிவாகப் பார்த்து உறுதி செய்து கொள்ளவும்.

. பெண் குழந்தை என்றால், எதிர்காலத்துக்குத் தேவை என்று நகைகளாக வாங்கிச் சேமிப்பீர்கள். அதைவிட, தங்க நாணயங்களாகச் சேமித்தால்... எதிர்காலத்தில், அன்றைய நாகரிகத்துக்கு ஏற்றாற்போல புதிய நகைகளைச் செய்து கொள்ளலாம்.

தங்க நகை விலை உயர்ந்து கொண்டே போகும் இந்தக் கால கட்டத்தில், உங்களின் முதலீடு, தங்க நகைகளாக இருக்கட்டும். அதுவும் '916 ஹால்மார்க்' நகைகளாக இருப்பது மிகவும் புத்திசாலித்தனமானது.

. தங்க நகை வாங்கும்போது, தரமானதா என்பதைத்தான் முக்கியமாக கவனிக்க வேண்டும். 'பவுனுக்கு இத்தனை ரூபாய் தள்ளுபடி' என்பதையெல்லாம் பார்த்து, தரமற்ற தங்க நகைகளை வாங்கிவிடாதீர்கள். விற்கும்போது உங்களுக்கு நஷ்டம் ஏற்படும்.

கல் வைத்த நகைகள் வாங்கும்போது, அந்தக் கற்களின் தரம் பற்றி நன்றாகக் கேட்டறியுங்கள். அவை தங்கத்தின் எடையுடன் சேருமா, சேராதா என்பதையும் கவனிப்பது முக்கியம். விலை குறைந்த கற்கள் பதிக்கப்பட்டிருக்கும் நகையை, தங்கத்துக்குரிய விலை கொடுத்து வாங்குவது புத்திசாலித்தனமல்ல.

நீண்ட காலம் வாழ ஆசையா? இதை உட்கார்ந்து படித்து கொண்டிருப்பவர்கள் எழுந்து நில்லுங்கள்!


நீண்ட காலம் வாழ ஆசையா… இதை உட்கார்ந்து படித்து கொண்டிருப்பவர்கள் எழுந்து நில்லுங்கள். ஆம். ஒரு நாளில் 11 மணி நேரம் வரை உட்கார்ந்து இருப்பவர்களில் 40 சதவீதத்தினர் அடுத்த 3 ஆண்டுகளில் உயிரை விடும் ஆபத்து அதிகம் என்று ஒரு ஆய்வு மிரட்டுகிறது.

ஆஸ்டிரேலியாவின் சிட்னி பல்கலைக்கழக பொதுநல மருத்துவ பிரிவு பேராசிரியர் ஹைட் வான் டெர் பிளாஜ். இவரது தலைமையில் ஒரு குழு நடத்திய ஆய்வில் 2 லட்சம் பேர் பங்கேற்றனர். அதன் அறிக்கை ஏஐஎம் என்ற மருத்துவ இதழில் வெளியானது. அதில் இடம்பெற்ற விவரங்கள்.

நீண்ட நேரம் உட்கார்ந்திருப்பதே பல்வேறு உடல் பாதிப்புகளை ஏற்படுத்தக் கூடியது. பருமன், டயபடீஸ் ஆகியவை அவற்றில் முக்கியமானவை. ஒரு நாளில் 4 மணி நேரத்துக்கு குறைவாக உட்கார்ந்தே இருப்பவர்களுடன் ஒப்பிடுகையில், 11 மணி நேரத்திற்கு அதிகமான நேரம் உட்கார்ந்து இருப்பவர்கள் மிகவும் பாதிக்கப்படுகிறார்கள். இவர்களில் 40 சதவீதத்தினர் அடுத்த 3 ஆண்டுகளில் உயிரிழக்கும் அபாயம் இருக்கிறது.

2 லட்சம் பேரிடம் நடத்தப்பட்ட உடல் உழைப்பு, எடை, உடல் ஆரோக்கிய நிலை ஆகியவற்றின் அடிப்படையில் துல்லியமாக நடத்திய ஆய்வில் இது தெரிய வந்தது. ஜிம்முக்கு போய் உடற்பயிற்சி செய்வது, நீண்ட நடைபயிற்சி ஆகியவையும் அவசியம்தான். ஆனால், அவற்றை விட மிக முக்கியமானது நீண்ட நேரம் ஒரே இடத்தில் உட்காராமல் இருப்பது. உட்கார்ந்தே இருந்தால் பல உடல் பாதிப்புகளை ஏற்படுத்தும்.

அலுவலக நேரத்தில் எத்தனை முறை முடியுமோ 20 முதல் 30 வினாடிகள் வரை எழுந்து நிற்கலாம். போன் பேசும் போது நிற்கலாம். லிப்ட், எஸ்கலேட்டரை தவிர்த்து படிகளில் ஏறலாம். இமெயில் , இன்டர்காம் தகவல் பரிமாற்றம் தவிர்த்து நேரில் சென்று பார்க்கலாம். ஒவ்வொரு 30 நிமிடங்களுக்கு ஒருமுறை இருக்கையை விட்டு எழுந்து சில நிமிடங்கள் நடக்கலாம். குறைந்தபட்சம் உட்கார்ந்த பொசிஷனை மாற்றி தோள்பட்டையை அசைத்து, நீண்ட மூச்சிழுத்து விட்டு தசைகள் அழுத்தத்தை ரிலாக்ஸ் செய்யலாம்.

ஆய்வில் கவனிக்க வேண்டிய விஷயங்கள்,

45 வயதுள்ள 2 லட்சம் பேரிடம் 2009 முதல் 2013 வரை, 5 ஆண்டுகள் ஆய்வு நடத்தப்பட்டது.

ஒரு நாளில் 3 மணி நேரம் வரை உட்கார்ந்திருப்பவரைவிட 6 மணி நேரம் உட்கார்ந்திருப்பவர் 15 ஆண்டுகளுக்குள் இறக்க நேரிடலாம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

பணி நேரம் மட்டுமின்றி ஓய்வை சேர்த்து ஒருநாளில் 90 சதவீத நேரத்தை பெரும்பாலோர் உட்கார்ந்தே செலவிடுகின்றனர். இது முற்றிலும் ஆபத்தானது.

குடற்புழுவை நீக்க ஒரு சிறந்த மருத்துவம் !!!


இயற்கை மனிதனுக்கு எந்த அளவு ஆரோக்கியம் தரும் பொருட்களை கொடுத்துள்ளதோ, அதை சீராக பயன்படுத்தி நலம் பெற நினைக்காத மனிதன் அதை தீமையாக்கி தன் ஆரோக்கியத்தைக் கெடுத்து வாழ்கிறான்.

உணவு, பாதுகாப்பற்ற குடிநீர், மாசடைந்த காற்று இவற்றால் மனிதனுக்கு பலவிதமான நோய்கள் உண்டாகின்றன. ஒரு நாட்டின் பொருளாதார நிலை, மக்களின் தனிப்பட்ட வாழ்வாதார சூழ்நிலை இவைகளைப் பொறுத்தே உடல்நிலை அமைகிறது.

மனிதனின் முறையற்ற உணவுப் பழக்கத் தாலும், உணவாலும், உடல் நோய்க்கு ஆளாக நேரிடுகிறது. இந்த வகையில் உணவின் மூலம் உடலுக்கு சென்று பல்கிப் பெருகி உடலை பாழ்படுத்தும் சிறுகுடற் புழுக்களும் உண்டு. இவை உணவின் மூலம் உடலுக்குச் செல்வதோடு, சில சமயங்களில் சருமத்தின் மூலமும், நீரின் மூலமும் செல்கிறது. இவ்வாறு உடலுக்குச் சென்று உடலில் குடித்தனம் நடத்தும் புழுக்கள் நாற்பது வகைகள் உள்ளன. அவற்றில் ஒன்றுதான் சிறுகுடற் புழு.

Ascaris lumbri coides என்னும் சிறுகுடற்புழு எல்லா நாட்டு மக்களின் உடலிலும் காணப்படுகிறது. குறிப்பாக ஆசிய நாடுகளில் இந்தியா, இலங்கை, பாகிஸ்தான், மியான்மர், சீனா போன்ற நாடுகளிலும், பசிபிக் தீவு, பகுதிகளில் வாழும் மக்களிடம் அதிகம் காணப்படுகிறது.

அசுத்தமான பச்சைக் காய்கறிகளைச் சாப்பிடுவ தாலும், சுகாதாரமற்ற குடிநீரை அருந்துவதாலும், அசுத்தம் நிறைந்த பகுதிகளில் குடியிருப்பதாலும், அசுத்தகாற்றை சுவாசிப்பதாலும், இவை மனித உடலுக்குள் செல்கின்றன.

சுகாதாரமற்ற எண்ணெய் பொருள்கள் ஒரு தடவை சமைத்த எண்ணெயை திரும்ப சமைப்பது, சுகாதாரமற்ற தண்ணீர் அருந்துவது, பல நாட்களுக்கு முன்பு சமைத்த பொருட்களை மீண்டும் மீண்டும் குளிர்சாதனப் பெட்டியில் வைத்து சாப்பிடுவது போன்ற சுகாதாரக் கேடுகளால் வயிறு செரிமான சக்தி இழந்துகாணப்படும். இச்சமயத்தில் சிறுகுடல்புழு முட்டையானது வயிற்றுக்குள் சென்று வளர ஏதுவாகிறது.

சிறு குடற்புழு உடலிலே வளர்ச்சியடைந்து விடுகிறது. இந்த வகை சிறுகுடற்புழுக்களை விருந்தாளியாக ஏற்றுக்கொள்வது மனிதன் மட்டும் தான்.

மனிதனின் உணவுக் குழாய் வழியாகச் செல்லும் இந்தப் புழு முட்டையானது வயிற்றுப் பகுதிக்கு சென்றவுடன் அங்குள்ள செரிமான திரவத்தால் முட்டைகள் பொரிக்கப்பட்டு சிறு புழுக்களாக வெளியேறி சிறு குடலின் மேற்பகுதிக்குச் செல்கின்றன.

இத்தகைய சிறு புழுவானது (Larvae) சிறுகுடலின் மெல்லிய சவ்வுகளைத் துளைத்துக்கொண்டு, கல்லீரலுக்குச் செல்கிறது. இது இரத்த நாளங்கள் வழியாக நடைபெறுகிறது. கல்லீரலில் நான்கு அல்லது ஐந்து நாட்கள் விருந்தாளியாகத் தங்கவிட்டு அதே இரத்தக்குழாய் வழியாக இருதயத்திற்குச் சென்று அங்கிருந்து நுரையீரலை அடைகிறது. பிறகு நுரையீரலிலிருந்து மூச்சுக்குழல் வழியாக முன்பக்கம் உந்தித் தள்ளி உணவுக் குழலுக்குள் சென்று இரைப்பையைத் தாண்டி, பழையபடி சிறுகுடலின் மேற்பகுதிக்குச் சென்றுவிடுகிறது. இந்த சிறிய புழு பெரிய புழுவாக மாற ஆறு வாரங்கள் முதல் பத்து வாரங்கள் ஆகும்.

நன்கு வளர்ச்சியடைந்த புழு, மண் புழுவைப் போன்று உருவத்தைப் பெற்று நீண்ட உருண்டை வடிவமாக காணப்படும். இதன் இரு முனைப் பகுதிகளும் குவிந்து காணப்படும்.

சிறுகுடற் புழுக்களால் உண்டாகும் நோய்கள்

சிறு குடல் புழுக்கள் அதிகத் தொல்லை கொடுப்பவை. இதனால் சளி, மேல்மூச்சு வாங்குதல் போன்றவை இருக்கும். உடலெங்கும் நமைச்சல் உண்டாகும். இதனால் ஈசனோபீலியா என்னும் கிருமி ரத்தத்தில் பரவு காரணமாகிறது.

நன்கு வளர்ந்த புழுவினால் டைபாய்டு போன்ற காய்ச்சல், உடல் நமைச்சல், முக வீக்கம், கண் நோய் போன்றவை உண்டாகும். மேலும் இந்தப் புழுக்களால் குடல்வாத நோய், கல்லீரல் கட்டி, மஞ்சள் காமாலை போன்றவையும் ஏற்பட வாய்ப்புண்டு.

சிறு குழந்தைகளுக்கு நெஞ்சுப் பகுதி சதைப்பற்று இன்றி கூடுபோல காணப்படும்.

குழந்தைகள் தூங்கும்போது பல் கடிக்கும். அரைக்கண் கொண்டு தூங்கும். எந்நேரமும் உதட்டைக் கடித்துக் கொண்டே இருக்கும்

குழந்தைகள் உணங்கிப்போய் காணப்படும். முகத்தில் இலேசான வெள்ளைத் தழும்புகள் தோன்றும்.

பள்ளி செல்லும் குழந்தைகளின் கால் மூட்டுகளில் வலி உண்டாகும்.

உடல்கூறுகளுக்குத் தகுந்தவாறு அடிக்கடி வயிற்றுப்போக்கு ஏற்படும், காலையில் எழுந்தவுடன் மலம் கழிக்காமல் மாலையில் மட்டுமே மலம் கழிக்கும்.

குழந்தைகள் காலை எழுந்தவுடன் மலம் கழிப்பது ஆரோக்கியத்திற்கு மிகவும் முக்கியமாகும். ஒருசில குழந்தைகள் காலை உணவுக்குப்பின் மலம் கழிக்கும். அல்லது பள்ளிக்குச் சென்றபின் மலம்கழிக்கும். இதற்கு சிறுகுடற்புழுக்கள்தான் முக்கிய காரணம்.

ஒரு சில குழந்தைகளுக்கு மலத்துவாரத்தில் அரிப்பு ஏற்படும். குழந்தைகள் சொல்லத் தெரியாமல் அழுதுகொண்டே இருக்கும்.

சிறுகுழந்தைகளுக்கு சிறுகுடற்புழுக்களால் கல்லீரல் பாதிக்கப்பட்டு அவை கண்களைத் தாக்கி கண்களுக்கு கண்ணாடி போடும் சூழ்நிலை உருவாகும். கல்லீரல் பாதித்தால் கண்பார்வைக் கெடும். இந்த சிறு குடற்புழுக்கள் பற்றி அதிகம் கண்டறிய முடியாது. இதனால் வரும் நோய்களை குணப் படுத்தினாலும், மீண்டும் மற்றொரு நோயை ஏற்படுத்தும் தன்மை கொண்டது. இந்த புழுக்களை முழுவதுமாக அழிப்பதுதான் சிறந்த வழியாகும்.

சிறுகுடற்புழுக்களை நீக்க குழந்தைகளுக்கும் பெரியவர்களுக்கும் சூப் கொடுப்பது நல்லது.

சின்ன வெங்காயம் -2

நல்ல மிளகு - 2

சீரகம் - 1/2 ஸ்பூன்

இஞ்சி - சிறிய துண்டு


தேவையான அளவு - கீரை (தண்டுக்கீரை அல்லது அகத்திக்கீரை)

பூண்டு - 1 பல்

சேர்த்து சூப் செய்து, வாரத்தில் மூன்று நாட்கள் மாலை
வேளையில் அருந்தி வந்தால் குடற்புழுக்கள் நீங்கும்

மனைவியிடம் கணவனுக்கு பிடிக்காத 12 விசயங்கள்


1. சின்ன விசயத்திற்கெல்லாம் கணவனை துணைக்கு அழைப்பது

2. ஏதோ சொல்ல வந்து பின் ‘அதை விடுங்க’ என பொடி வைத்து பேசுவது . மூடி மறைத்து கணவனை உஷ்ணபடுத்துவது.

3. ‘அன்பு’ என்ற பெயரில் ஆயிரம் ‘போன்கால்’ பண்ணி நச்சரிப்பது

4. எதற்கெடுத்தாலும் அழுது வடிவது

5. ‘இவங்க தப்பா நினைப்பாங்க அவங்க தப்பா நினைப்பாங்க’ என்று தனக்காக வாழாமல் சமூகத்திற்கு பயந்து பயந்து வாழ்வது

6. சாப்பிடும் நேரம் பார்த்து குடும்ப பிரச்சினைகளை கிளறுவது. நமக்காக இரவில் சாபிடாமல் காத்து கொண்டிருப்பது .

7. வீட்டை அலங்கோலமாக போட்டு வைப்பது

8. நண்பர்களை பற்றி தவறாக பேசுவது

9. வேலைக்கு போகும் பெண்ணாக இருந்தால் ‘ரூல்ஸ்’ போடுவது

10. எதற்கெடுத்தாலும் கணக்கு கேட்பது

11. கணவன் வேலைவிட்டு வீட்டுக்கு திரும்பும் போது சொர்ணாஅக்கா ரேஞ்சுல முகத்தை வைச்சுக்கிட்டு பேசுவது…

12. எப்ப பாத்தாலும் நான் அழகாயில்லையாங்கன்னு கேட்டு நச்சரிச்சு அடிக்கடி கணவனைப் பொய் சொல்ல கட்டாயப்படுத்துவது.

மனைவியிடம் பிடிக்காத விஷயங்கள் 12 இருந்தாலும் பிடிச்ச விஷயங்கள் ஆயிரத்திற்கு மேல் உள்ளது.

[வீட்ல சோறு கிடைக்கணும்ல நண்பர்களே! அதான் கடைசி இரண்டு வரிகள் நம்ம பிட்டு எப்புடி?]
Thanks Facebook

வெள்ளி, 26 ஏப்ரல், 2013

என்னென்ன பழங்களில் என்னென்ன நோய்களை வராமல் தடுக்கிறது?


இன்றைக்கு நமக்கு வரும் பல நோய்களுக்கும் காரணம் நம்முடைய உணவுப்பழக்கம் மாறியிருப்பது தான். இயற்கை உணவுப்பழக்கத்தை மாற்றிக் கொண்டாலே பாதி நோய்களிலிருந்து தப்பி விடலாம். இயற்கையிலேயே கிடைக்கும் பழங்களை உட்கொண்டாலே ஆரோக்கியமாக இருக்க முடியும். காட்டில் வாழ்ந்த சித்தர்கள் நூறு வயதை கடந்தும் ஆரோக்கியமாக வாழ்ந்துள்ளனர். இதற்கு காரணம் அவர்கள் இயற்கையில் கிடைக்கும் பழங்களை உட்கொண்டது தான்.

ஆப்பிள் : இருதய நோய், இரத்தக் கொதிப்பு, மூட்டுவலி, தலைவலி போன்றவை வராமல் தடுக்கும்.

திராட்சை : பசியின்மை, மலச்சிக்கல், சிறுநீரக கல் போன்றவற்றில் இருந்து பாதுகாக்கும்.

ஆரஞ்சு : காய்ச்சல், எலும்பு நோய்கள், முகப்பரு வராமல் தடுக்கும். வளரும் குழந்தைகளுக்கு இந்தப் பழத்தை அதிக அளவில் கொடுக்கலாம்.

மாதுளை : வயிற்றில் பூச்சி, அஜீரணக்கோளாறு, பித்தப்பை, சிறுநீரகக்கல், புற்றுநோய் போன்றவை வராமல் தடுக்கும்.

வாழைப்பழம் : மூட்டுவலி, சிறுநீரகக்கோளாறு, காசநோய், அலர்ஜி

பப்பாளி : பசியின்மை, வயிற்றுப்பூச்சி, ஈரல் சம்பந்தமான நோய்களை தீர்க்கும், மேனியை பளபளப்பாக்கும்.

நெல்லிக்கனி : நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கும். தூக்கமின்மை, உடல்கொழுப்பு குறைய, இளநரை, முடி உதிர்வு நிற்க உதவும்.

தினமும் சாப்பிடலாம் உலர்ந்த திராட்சை


உலர்ந்த திராட்சை பழத்தின் மகிமை என்னவென்று பலருக்கு இன்னமும் தெரியவில்லை என்று சொல்லலாம். உலர்ந்த திராட்சை என்றால் சர்க்கரை பொங்கலுக்கும், பாயாசத்திற்கும் மட்டும் தான் பயன்படுத்த வேண்டும் என்று பலர் நினைத்து கொண்டிருக்கின்றனர். இதன் பயனை அறிந்தால் வெறும் வாயிலேயே இதை மென்று சாப்பிடுவார்கள்...

உலர்ந்த திராட்சைப் பழத்தில் சுண்ணாம்புச் சத்து அதிகம் உள்ளது. ஓர் உலர்ந்த திராட்சைப் பழம் 30 மிலி கிராம் சுண்ணாம்புச் சத்து கொண்டது. இதை குழந்தைகளுக்குக் கொடுத்து வந்தால், அவர்கள் நல்ல உடல் பலத்துடன் வேகமாக வளர்ந்து வருவார்கள். எலும்புகளோடு பற்களும் உறுதியாக அமையும். ஆகையால் வளரும் குழந்தைகளுக்கு இரவு உணவுக்குப் பின் தினசரி 15 முதல் 20 வரை திராட்சை பழத்தைக் கொடுத்து வருவது நல்லது.

வாலிப வயது தாண்டி வயோதிக வயதிற்கு வரும் பொழுது தினசரி உலர்ந்த திராட்சைப் பழத்தை இரவு ஆகாரத்துக்குப் பின் சாப்பிட்டு வந்தால் சுறுசுறுப்பு ஏற்படும். எலும்புகள் உறுதியாக இருக்கும், பற்கள் கெட்டிப்படும்; பல் சம்பந்தமான எந்தக் கோளாறும் ஏற்படாது. இதயம் பலத்துடனிருக்கும். இதயத்துடிப்பு இயற்கை அளவிலேயே இருக்கும்.

குழந்தைகளுக்கு பால் கொடுக்கும் பெண்கள் இரவு சாப்பாட்டிற்குப் பிறகு கைப்பிடியளவு உலர்ந்த திராட்சைப் பழத்தைச் சாப்பிட்டு வந்தால் சத்தான பால் உற்பத்தியாகும். வளரும் குழந்தைகளின் எலும்புகள் பலப்பட்டு கால்கள் வளையாது வளரும்.

தற்போது உள்ள பருவ பெண்களுக்கு முடி உதிரும் பிரச்னை அதிகமாக உள்ளது. பியூட்டி பார்லர் சென்று ஆலோசனை கேட்பதை விட, தினமும் 10 உலர் திராட்சையை சாப்பிட்டாலே போதும் முடி கொட்டும் பிரச்னையிலிருந்து விடுபடலாம். தினமும் சாப்பிட மண்டையோடு பலப்படும்.
நன்றி: மருத்துவமணி

இல்லத்தரசிகளுக்கு எளிய டிப்ஸ்:-


சமையலை எளிதாக்க இல்லத்தரசிகளுக்கு சில டிப்ஸ்.

* அரிசியை நன்கு ஊறவைத்து பின் வேகவைத்தால் சீக்கிரமாக வேகும்.

* இட்லி, இடியாப்பம், புட்டு எண்ணையில்லாச் சப்பாத்தி ஆகியவற்றிற்கு முதலிடம் கொடுப்பது உடலுக்கு நல்லது.

* ஒரு நேரத்திற்கு ஒரே வகைக் காய் நல்லது.

* கீரை வகைகளை, அரை வேக்காட்டில் இறக்க வேண்டும்.

* எண்ணெய்விட்டு தாளித்து பின் காய்களை வேக வைத்து பொரியல் செய்வது வழக்கம். அதற்குப் பதிலாக தேவையான அளவு தண்ணீர் மட்டுமே விட்டு காய்களையும் மசாலாச் சாமான்களையும் சேர்த்து வேகவேகக் கிளற வேண்டும். பச்சை நிறம் மாறும் முன்பே தேங்காய்த்துருவலை வேண்டிய அளவு சேர்த்து கிளறி இறக்கிவிட வேண்டும், தேங்காயை வேகவிடக் கூடாது.

* குழம்புச் சாதத்தை குறைத்து மோர்சாதத்தைக் கூட்ட வேண்டும்.

* காரம், புளி, உப்பு மிகக் கெடுதல் குறைத்து கொள்வது நல்லது.

* தேங்காய் வெந்தால் கொழுப்புக் கூடும். பச்சையாக உபயோகித்தால் கூடுதலாக இருக்கிற கொழுப்பு வெளியேறி சமநிலைக்கு வந்துவிடும்.

* பொரித்த பண்டங்களைத் தவிர்ப்பது நல்லது.

* வெள்ளைச் சர்க்கரை கெடுதல் தரும். வெல்லம், கருப்பட்டி, பனங்கற்கண்டு ஆகியவற்றை சேர்ப்பது நல்லது.

* அரிசியோடு சோளம், கேழ்வரகையும் சேர்த்து இட்லி தயாரித்தால் சத்து கூடுதலாக கிடைக்கும்.

• காய்கறிகள், கீரை வகைகளை கூடுதலாக எடுத்துக் கொண்டு உணவை குறைத்தால் உடல் ஆரோக்கியமாக இருக்கும்.

Karthikeyan Mathan

செல்போன் வாங்கப் போறீங்களா?


1. மொபைலை மாற்றும்போது 'எக்ஸ்சேஞ்ச் ஆஃபர்' இருக்கிறதா என்று பார்த்து வாங்குவது நல்லது. நல்ல கடைகளாகப் பார்த்து மொபைலை மாற்றுங்கள். உங்களின் பழைய மொபைலுக்கு அவர்கள் சொல்லும் விலைக்கு உடனே தலையாட்டிவிடாதீர்கள். கூச்சப்படாமல் பேரம் பேசினால், உங்களுக்குக் கூடுதல் லாபம் கிடைப்பது நிச்சயம்.

2. பேட்டரியின் லைஃப் எந்த அளவுக்கு இருக்கும் என்பதைக் கவனமாகப் பாருங்கள். அடிக்கடி சார்ஜ் செய்வதுபோல் இருந்தால், நம்முடைய நேரத்தை சாப்பிடுவதோடு பணியையும் பாதிக்கும். அடிக்கடி சார்ஜ் செய்யவேண்டிய நிலை ஏற்பட்டால்... உடனே பேட்டரியை மாற்ற வேண்டியதுதான் என்று முடிவு செய்துவிடாதீர்கள். அது மொபைல் போனின் தொழில்நுட்பக் கோளாறாகவும் இருக்கலாம். முறைப்படி செக் செய்து கொள்ளுங்கள்.

3. மொபைல் வாங்கியதுமே.... சிம் கார்டு போட்டுப் பேசிப் பாருங்கள். தெளிவாக, சத்தமாகக் குரல் கேட்பது ரொம்ப முக்கியம். என்னதான் எக்ஸ்ட்ரா சமாசாரங்கள் இருந்தாலும்... பேசுவதற்கும் கேட்பதற்கும்தான் மொபைல் போன் என்பதை மறந்து விடாதீர்கள்.

4. மொபைல் போன் வாங்க நினைப்பவர்கள், நேரில் போய் வாங்குவதே மிக மிக நல்லது. பட்டன்கள் எல்லாம் நன்றாக இருக்கிறதா, சரியாக இருக்கிறதா என்பதைக் கவனிப்பது முக்கியம். 'ஆகா... வீடியோ இருக்கிறது, ஆடியோ இருக்கிறது, போட்டோ எடுக்கலாம்' என இத்யாதி இத்யாதிகளில் கவனம் செலுத்தி, முக்கியமான சமாசாரங்களை கோட்டை விட்டுவிடாதீர்கள்.

5. மொபைல் போன் வாங்கும் முன் அதைப் பற்றிய தகவல்களை நண்பர்களிடமோ, இணைய தளத்திலோ சில நாட்கள் அலசுங்கள். பிறகு, 'இதுதான் எனக்குத் தேவையான போன்' என முடிவெடுங்கள். தீர்மானம் செய்துவிட்ட பிறகு, கடைக்குச் செல்லுங்கள்.

6. காஸ்ட்லி போன் எனில் மொபைல் போனுக்கான இன்ஷுரன்ஸ் செய்து வாங்கிக் கொள்ளுங்கள். மொபைல் போன் கோளாறு, தீ, திருட்டு என்று எந்த விஷயங்களுக்கெல்லாம் இன்ஷுரன்ஸ் கவரேஜ் இருக்கிறது என்பதை விசாரித்த பிறகு பாலிஸி எடுப்பது நல்லது!

7. நீங்கள் மொபைல் போனை அடிக்கடி பயன்படுத்துபவரா..? அப்படியென்றால், 'அம்பாஸடர் மாதிரி' என்பார்களே... அதுமாதிரி தரமான, எல்லா சூழலையும் தாக்குப் பிடிக்கற மாடல் போன்களைத் தேர்ந்தெடுங்கள். அதாவது 'பேஸிக் மாடல்' என்றுகூட சொல்லலாம். 'டச் ஸ்க்ரீன்' போன்ற 'ஃபேன்ஸி' மற்றும் அதிக சென்ஸிடிவ்வான தொழில்நுட்பங்கள் இல்லாத மாடலாக இருப்பது பயன் தரும். அத்தகைய போன்கள் நீண்ட நாள் உழைக்கவும் செய்யும்.

8. 'இரண்டு சிம்', 'குறைந்த விலை' என்று சீனா போன்ற வெளிநாட்டு போன்களை வாங்கி விடாதீர்கள். அந்த போன்களில் உள்ள ஆன்டெனா மூலம் ரேடியேஷன்கள் அதிகமாக ரிஸீவாகும். இது, உடலுக்கு ஊறு விளைவிக்கும்.

சிம் கார்டு ஜாக்கிரதை!

9. செல்போன் வைத்திருக்கிறீர்களா... சிம் கார்டு வாங்கும்போது, எந்த நிறுவனத்தின் (சர்வீஸ் புரவைடர்) சேவை, உங்களுக்குத் தேவை என்பதை தீர ஆராய்ந்து முடிவு செய்யுங்கள். வழக்கமாக எந்தெந்த ஊர்களுக்குச் செல்வீர்களோ... அங்கெல்லாம் கவரேஜ் இருக்கும் சர்வீஸ் புரவைடராக இருப்பதுதான் உங்களுக்கு லாபகரமானதாக இருக்கும்.

10. மொபைல் சர்வீஸ் வாங்கும்போது எஸ்.எம்.எஸ்., இன்டர்நெட், கால் சார்ஜ், மாதக் கட்டணம் என அனைத்தையும் கவனியுங்கள். பலர் நாசூக்காக மறைமுகக் கட்டணங்களை வைத்திருப்பார்கள்.

11. கால் சார்ஜ் விஷயத்தில் அதிக கவனம் தேவை. 'நாங்கள், நிமிடத்தில் வசூலிக்கிறோம்...', 'நாங்கள் விநாடிகளில்தான் வசூலிக்கிறோம்...' என்றெல்லாம் வகை வகையாக வலை விரிப்பார்கள். வார்த்தைகளில் மயங்கினால் பாக்கெட் பணால்! சர்வீஸ் புரவைடர்களிடம் பேசி, அவர்களின் கால் கட்டணங்களைத் (டேரீஃப்) தெரிந்து கொண்டு, அலசி ஆராய்ந்து எது நமக்கு லாபகரமானது என்பதை கண்டுபிடிக்க வேண்டியது உங்கள் பொறுப்பு.


12. போனில் இன்டர்நெட் இருக்கிறது, வீடியோ சேட்டிங் இருக்கிறது என்பதற்காக சதா அவற்றையே சுழற்றிக் கொண்டிருந்தால்... சத்தம் இல்லாமல் பைசா கரைய ஆரம்பித்துவிடும். 'அதெல்லாம் நமக்குத் தேவையா' என்று தெரிந்து, அந்த வசதிகளைப் பெற்றுக் கொள்வதுதான் புத்திசாலித்தனம்.

13. ஹலோ ட்யூன்/காலர் ட்யூன் எனப்படும் வசதியை ஏற்படுத்தும் முன்பாக அதனால் என்ன பயன் என்பதை முதலில் உணரவேண்டியது அவசியம். அந்த ட்யூன் உங்களுக்குப் பிடித்த பாடலாக இருக்கலாம். ஆனால், எதிர் முனையில் பேசுபவர்தான் அதைக் கேட்கப்போகிறார் என்பதை மறந்துவிடாதீர்கள். அந்தப் பாடல் சிலருக்கு எரிச்சல் ஊட்டுவதாக அமைந்துவிட்டால்... உங்கள் மீதான அபிப்பிராயத்தில் பேதங்கள் வரலாம்.

முடி உதிர்தல், இளநரை சரியாக....


நம்மிடமிருந்து மறைந்து போன பாரம்பரிய மருத்துவக் குறிப்புகள் ஏராளம். கை வைத்தியம் அல்லது பாட்டி வைத்தியம் என்று சொல்லப் படுகின்ற வைத்த முறைகள் நம்மிடம் விலகிக் கொண்டிருப்பது வருத்தமான விஷயம். 'அன்னமேரி பாட்டி' சொல்லும் சில வைத்தியக் குறிப்புகளைப் பார்ப்போமா?

முடி உதிர்தல், இளநரை சரியாக....

கரிசலாங்கண்ணி இலையை (200 கிராம்) மையா அரைச்சி, அதோட அரை லிட்டர் தேங்காய் எண்ணெய் சேர்த்து காய்ச்சி பதத்துக்கு வந்ததும் இறக்கி வச்சிரணும். வழக்கமா தலைக்கு எண்ணெய் தேய்க்கிற மாதிரி அதை தேய்ச்சிட்டு வந்தா....முடி உதிர்றது, இளநரை எல்லாம் சரியாகும்.

கரிசலாங்கண்ணி சூரணத்தை கால் ஸ்பூன் எடுத்து, தேன் சேர்த்து சாப்பிட்டாலும் நரை விழுற பிரச்னை சரியாகும்.

மருதாணி இலை 300 கிராம், நல்லெண்ணெய் 1 1/2 லிட்டர், பசும்பால் 700 மில்லி சேர்த்து பதமா காய்ச்சி, தலைக்கு தேய்ச்சிட்டு வந்தா...கூந்தல் நல்லா வளரும். அதோட நரை விழுறதையும் தடுக்கும்.

வியாழன், 25 ஏப்ரல், 2013

முட்டை

கொழுப்புச்சத்தை குறைக்கும் குண்டு உடலை மெலிய வைக்கும் முட்டை
கொழுப்புச்சத்து காரண மாக உடல் குண்டான வர் கள் பெரும் அவஸ்தைப்பட்டு வருகின்றனர். எவ்வளவோ மருந்து மாத்திரைகளை உட் கொண்டு வந்தாலும் போதிய பலன் இல்லை.

இதனால் குண்டானவர் கள் உடல் இளைக்க உடற் பயிற்சி உள்ளிட்ட பல்வேறு உபாயங்களை மேற்கொண்டு வருகின்றனர்.

அப்படிப்பட்டவர்களுக்கு வரப்பிரசாதமாக இங்கிலாந்து இருதய மருத்துவ ஆராய்ச்சி மையம் ஒரு தகவலை தெரிவித்து உள்ளது.

அதாவது தினசரி முட்டை சாப்பிட்டு வந்தால் உடல் மெலியுமாம்.

தினமும் காலை டிபனுக்கு பதில் 2 முட்டை மட்டும் சாப்பிட்டு வர வேண்டும். தொடர்ந்து 12 வாரம் இது போன்று சாப்பிட்டு வந்தால் கொழுப்பு சத்து குறைந்து உடல் மெலியும். அழகான தோற்றம் பெறலாம் என்று அந்த மருத்துவ ஆராய்ச்சி மையம் தெரிவித்து உள்ளது.

தியானமும் தூக்கமும்!

மாணவர்கள் மத்தியில் உரையாற்றிக் கொண்டிருந்தார் சுவாமி விவேகானந்தர். ''அரை மணி நேரம் தியானம் செய்தால் ஆறு மணி நேரம் தூங்குவதற்குச் சமம்'' என்றார்.

சட்டென்று எழுந்த மாணவன் ஒருவன், ''அப்படியெனில், ஆறு மணி நேரம் தூங்கினால் அரை மணி நேரம் தியானம் செய்வதற்குச் சமமா?'' என்று கேட்டான்.

சுவாமி விவேகானந்தர் புன்னகையுடன் பதிலளித்தார்...

''முட்டாள் ஒருவன் தியானம் செய்தால் அறிவாளியாக முடியும். ஆனால் அறிவாளி ஒருவன் தூங்கத் துவங்கினால் முட்டாளாகி விடுவான்!''

Vikatan EMagazine

எலும்புகளை பலப்படுத்தும் அத்திப்பழம்/சர்க்கரை நோயை தடுக்கும் அத்திபழம்.

அதிசயமாக கிடைக்கும் அத்திப்பழம் பல்வேறு மருத்துவப் பண்புகளைக் கொண்டுள்ளது. சீசனில் மட்டுமே கிடைக்கும் இந்த பழத்தை உண்பதன் மூலம் உடல் சுறுசுறுப்படைகிறது. இதில் சீமை அத்திப்பழம், நாட்டு அத்திப்பழம் என இரண்டு வகை உண்டு. அத்திப்பழத்தில் இரத்தத்தை விருத்தி செய்யக்கூடியதும், இரத்தத்தை சுத்தப்படுத்தக்கூடியதுமான உயிர்ச் சத்துக்கள் அதிகம் காணப்படுகின்றன. பழத்தில் அடங்கியுள்ள சத்துக்கள்: புரோட்டீன், கால்சியம், பாஸ்பரஸ், பொட்டாசியம் மற்றும் இரும்பு சத்து அதிகம் காணப்படுகின்றன. வைட்டமின் ஏ, வைட்டமின் பி, வைட்டமின் பி 12, வைட்டமின் சி போன்ற சத்துக்களும் அத்திப்பழத்தில் அடங்கியுள்ளன. உடல் எடையை குறைக்கும் உடல் பருமனாக உள்ளவர்கள் எடையை குறைக்க அத்திப்பழம் மிக முக்கிய பங்காற்றுகிறது. நார்ச்சத்து அதிகம் காணப்படுவதால் உண்ணும் உணவு எளிதில் ஜீரணமாகி தேவையற்ற இடங்களில் கொழுப்பு சேருவது தடுக்கப்படுகிறது. தாம்பத்யத்தில் ஈடுபாடு குறைந்தவர்கள் இரவு நேரத்தில் பால் அருந்தும் போது மூன்று அத்திப்பழத்தை சாப்பிட்டுவிட்டு படுத்தால் பாலுணர்வு அதிகரிக்கும். உயர் ரத்த அழுத்தம் உள்ள நபர்கள் அத்திப்பழத்தை சாப்பிட்டால் அதில் உள்ள பொட்டாசியம் உயர்ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்துகிறது. அத்திப்பழம் உணவை விரைவில் ஜீரணிக்கச் செய்து, சுறுசுறுப்பைத்தந்து, கரும் பித்தத்தை வியர்வை மூலம் வெளியாக்கி, ஈரல், நுரையீரலிலுள்ள தடுப்புகளையும் நீக்குகிறது. அத்திப்பழத்தைத் தின்பதால் வெட்டை நோய் குணமடைகிறது. கால் விரல்களில் உண்டாகும் ஒரு வித நோயையும் வராமல் தடுக்கிறது. எலும்புகளை பலப்படுத்தும் அத்திப்பழம் வாய் துர்நாற்றத்தை நீக்குகிறது. தினசரி 2 பழங்கள் சாப்பிடுவதன் மூலம் உடலில் ரத்த உற்பத்தி அதிகரித்து உடலும் வளர்ச்சி அடையும். கால்சியம் அதிகம் காணப்படுவதால் எலும்புகளை பலப்படுத்துகிறது. நீரிழிவு நோயாளிகள் அதிகமாக சிறுநீர் கழிப்பதன் மூலம் ஏற்படும் கால்சியம் இழப்பினை ஈடுசெய்கிறது. கல்லீரல் வீக்கத்தை குணப்படுத்தும். தினமும் இரவு நேரத்தில் 5 அத்திப்பழம் சாப்பிட்டால் நாள்பட்ட மலச்சிக்கலை குணமாகும் வயதானவர்களுக்கு அத்திப்பழம் அருமருந்தாகும். தொண்டை எரிச்சலை போக்கும். இருமல், ஆஸ்துமாவை கட்டுப்படுத்துகிறது. செரிமான கோளாறினால் ஏற்படும் வயிற்றுவலியை குணப்படுத்துகிறது. பித்தத்தைத் தணித்துச் சமப்படுத்துவதில் அத்திப்பழம் தனிச்சிறப்பு வாய்ந்தது. சீமை அத்திப்பழம் பதப்படுத்தப்பட்ட அத்திப்பழம் சீமை அத்திப்பழம் எனப்படும். இது வெண்குஷ்டத்தை குணமாக்கும். அரைகிராம் காட்டு அத்திப்பழத்தை தினசரி ஒருவேளை சாப்பிட்டால் வெண்புள்ளிகள், வெண்குஷ்டம், தோலின் நிறமாற்றம் போன்றவை குணமடையும். சீமை அத்திப்பழத்தை தொடர்ந்து 40 நாட்கள் உட்கொண்டு வந்தால் ஒருவருடைய உடல் பலமேறும்.
Published by: Mayura Akilan
Read more at: http://tamil.oneindia.in/art-culture/essays/2011/fig-fruit-nutrition-facts-aid0174.html


அனைவரும் விரும்பும் அத்திப்பழத்தில் ஏராளமான நன்மைகள் உள்ளன. வைட்டமின் ஏ, இ சத்துக்கள் நிறைந்துள்ள அத்திப்பழத்தில் அதிகளவு நார்ச்சத்து உள்ளது. சர்க்கரை நோயை தடுக்கும் சக்தி அத்தி இலைகளுக்கு உண்டு. சர்க்கரை நோய் வராமல் தடுப்பதில் முக்கிய பங்கு வகிக்கும் இந்த பழத்தில் பொட்டாசியம், கால்சியம், மினரல் மற்றும் இரும்பு சத்துக்கள் உள்ளன.

அத்திபழத்தில் இரும்புச்சத்து ஒரு கிராம் அளவு உள்ளது. கால்சியம், மற்றும் பாஸ்பரஸ் தாதுக்களும் நிறைந்து உள்ளதால், எலும்பு வளர்ச்சிக்கும், பலத்திற்கும் உதவுகிறது. இளம் பெண்கள் முதற்கொண்டு மாதவிடாய் காலம் முடிவுறும் நிலையில் உள்ள பெண்கள் வரை தினம் அத்திப்பழத்தை இரவு நீரில் ஊற வைத்து காலை எழுந்தவுடன் நீரை குடித்து பழத்தை மென்று சாப்பிட மாதவிடாய் சம்பந்தப்பட்ட கோளாறுகள் நீங்கும்.

கருத்தரிப்பில் உண்டாகும் பிரச்சினைகள் அகலும். கர்ப்ப காலங்களில் பல பெண்களுக்கு மலச்சிக்கல் ஏற்படும். அவர்கள் தினம் ஊற வைத்த அத்திபழம் சாப்பிடுவதால் மலச்சிக்கல் நீங்குவதுடன் உடலுக்கு வேண்டிய தாதுவையும் எளிதாக பெறமுடியும். சரிவர பசி எடுக்காத குழந்தைகளுக்கு இதை கொடுக்க அவர்கள் பசி எடுத்து உண்பார்கள்.

சுறுசுறுப்பாக இயங்குவார்கள். நாட்பட்ட வறட்டு இருமல் உள்ள குழந்தைகளுக்கும் கொடுக்கலாம்.ரத்த அழுத்தத்தை கட்டுக்குள் வைத்திருக்கும் தன்மை கொண்டது. உயரழுத்தத்தை கட்டுப்படுத்த உதவுகிறது. அத்திப்பழம் இதய நோய்கள் வராமல் தடுக்கிறது. நோய் எதிர்ப்பு சக்தி கொண்டது

Abumymoona
Dubai.
நன்றி : K-Tic

இன்னா செய்தாரை

ஓர் ஊரில் சாம்பன் என்பவன் வாழ்ந்து வந்தான். எப்போதும் தீயவற்றையே நினைத்து வாழ்ந்தான். தீயவருடனேயே சேர்ந்து தீய காரியங்கள் செய்து பணம் சம்பாதித்து வாழ்ந்தான். ஒரு முறை வேறு ஊருக்குச் சென்று அங்கிருப்பவர்களை ஏமாற்றிப் பணம் சம்பாதிக்க எண்ணம் கொண்டான்.

அதனால் அடுத்திருந்த ஓர் ஊருக்குப் புறப்பட்டான். வழியில் ஒரு பெரும் காடு இருந்தது. அதைத் தாண்டுவது மிகவும் கஷ்டமாக இருந்தது. நடந்து நடந்து மிகவும் களைத்து விட்டான் சாம்பன்.

ஒரு பெரிய மரத்தடியில் படுத்து ஓய்வு எடுத்துக் கொண்டிருந்தான். பறவைகள் எல்லாம் கூட்டை நோக்கிப் பறக்கும்நேரம் ஆகிவிடவே எழுந்து அமர்ந்தான். பசி வேறு வயிற்றைப் பிசைந்தது.

அப்போது அந்த மரத்தை நோக்கி புறா ஒன்று பறந்து வந்தது. ராஜகீர்த்தி என்பது அதன் பெயர். அது தன் இருப்பிடத்திற்கு யாரோ வந்திருப்பது கண்டு மகிழ்ந்தது. விருந்தினரை வரவேற்கும்
எண்ணத்தோடு சாம்பனிடம் வந்து கூறியது.

"ஐயா, என இல்லம் தேடி நீங்கள் வந்தது கண்டு மிக்க மகிழ்ச்சி.மிகவும் களைப்பாக இருக்கிறீர்களே. இருங்கள் நீங்கள் உண்ணக் கனி கொண்டு வருகிறேன் "என்று கூறிப் பறந்தது.

சற்று நேரத்தில் சுவை மிக்க கனிகளைக் கொண்டு வந்து அவர் முன் வைத்து "உண்ணுங்கள் ஐயா, இரவு இங்கேயே தங்கி காலையில் புறப்படுங்கள்" என்று கூறி அவர் படுப்பதற்காக
புற்களையும் மலர்களையும் பரப்பி படுக்கை தயாரித்துக் கொடுத்தது. சாம்பன் மகிழ்ச்சியுடன் படுத்து உறங்கினான். ராஜகீர்த்தியும் சாம்பனுக்குப் பாதுகாப்பாக அவன் அருகிலேயே படுத்து உறங்கியது.

மறுநாள் காலை சாம்பன் புறப்படும் போது ராஜகீர்த்தி என்ற அந்தப் புறா ,"நண்பா, அடுத்த மலையில் என் நண்பன் விரூபாக்கன் என்ற அரக்கன் இருக்கிறான். என் நண்பன் நீ என்று தெரிந்தால் உனக்கு வேண்டிய உதவி செய்வான் நீ அங்கு செல்."என்று கூறியது.

ராஜகீர்த்திப் புறாவின் சொற்படியே சாம்பன் அடுத்த மலையை நோக்கிச் சென்றான்.சற்றுத் தொலைவு சென்றபோது வேறு ஒரு மலை தெரிந்தது. அதன் மேல் ஏறிச் சென்றான் சாம்பன். அங்கு அரக்கர் கூட்டத்தின் நடு நாயகமாக வீற்றிருந்தான் விரூபாக்கன் என்ற அரக்க அரசன்.

அவனைப் பார்த்து அஞ்சினான் சாம்பன்.

"நீ யார்?"எனக்கேட்ட விரூபாக்கனுக்கு நடுங்கியபடியே பதில் கூறினான் சாம்பன். "நான் ராஜகீர்த்தியின் நண்பன்."இதைக் கேட்ட உடனே எழுந்து அருகே வந்த விரூபாக்கன் சாம்பனை அணைத்துக் கொண்டான்.

"நீ என் நண்பனின் நண்பன்.இனி எனக்கும் நண்பன்." சாம்பானுக்கு பெரும் விருந்தும் பல பரிசுகளையும் கொடுத்து நிறைய பொற்காசுகளையும் மூட்டையில் கட்டிக்கொடுத்தான் விரூபாக்கன்.

அந்த அரக்க அரசனிடம் விடைபெற்றுக் கொண்ட சாம்பன் தன் சொந்த ஊர் நோக்கி நடக்க ஆரம்பித்தான். வரும் வழியில் தன் நண்பன் ராஜகீர்த்தியின் மரத்தடிக்கு வந்தான். அங்கு வழக்கம்போல் இருட்டும் நேரம் ராஜகீர்த்தி இல்லம் திரும்பியது.

"நண்பா, உன் நண்பன் விரூபாக்கன் எனக்கு நிறைந்த பொன் கொடுத்துள்ளான். இன்று இரவு இங்கேயே கழித்து விட்டு காலையில் நான் புறப்படுகிறேன்."

இதைக் கேட்ட ராஜகீர்த்தி மகிழ்ந்தது. தன் நண்பனுக்கு உண்ண உணவளித்து படுக்கை தயார் செய்தது.

நடு இரவில் கண் விழித்த சாம்பன் அருகே தூங்கும் ராஜ்கீர்த்தியைப் பார்த்தான்.

'நான் இன்னும் வெகு தூரம் போகவேண்டுமே. உச்சி வேளையில் பசித்தால் என்ன செய்வது' என்று சிந்தித்தவன் தன் அருகே படுத்திருந்த புறாவைக் கொன்றான்.அதன் அழகிய இறகுகளைப் பிய்த்துப் போட்டான் அந்த உடலை நெருப்பில் வாட்டி எடுத்துக் கொண்டு தன் பொன் மூட்டையையும் தூக்கிக் கொண்டு வேகமாக அந்த இடம் விட்டுப் புறப்பட்டான்.

பொழுதும் விடிந்தது. நேரம் கடந்துகொண்டிருந்தது. தினமும் தன்னை வந்து பார்த்துச் செல்லும் நண்பன் ராஜகீர்த்தி வராததால் அரக்க அரசனான விரூபாக்கன் அவனைத் தேடி வரும்படி தன் காவலருக்கு கட்டளையிட்டான். அவர்களும் ராஜகீர்த்தியின் இல்லம் வந்து அங்கே புறாவின் இறகுகள் கிடப்பதைக் கூறினர்.

என்ன நடந்திருக்கும் என்பதைப் புரிந்துகொண்ட விரூபாக்கன் சாம்பனைத் தேடி இழுத்து வரும்படி கட்டளையிட்டான்.

அவனது வீரர்களும் சிறிது நேரத்தில் சாம்பனைக் கட்டி இழுத்து வந்தனர்.அவனிடம் நெருப்பிலிடப்பட்ட தன் நண்பனின் உடலைப் பார்த்து கதறி அழுதான் விரூபாக்கன். தனக்கு நன்மை செய்தவன் என்று கூட நினைத்துப் பார்க்காத நன்றி கெட்ட சாம்பனைக் கொன்று தின்னுமாறு பணித்தான்.

ஆனால் அரக்கர் அனைவரும் நன்றி கெட்டவனின் உடலைத் தின்னமாட்டோம் என்று கூறிவிட்டனர். அதன் பின் சண்டாளர்களிடம் கொடுத்தால் அவர்களும் நாங்கள் ஏற்கெனவே பாவம் செய்து சண்டாளர்களாக உள்ளோம்.. இந்தப் பாவியின் உடலைத் தின்றால் இந்த நரகத்திலேயே உழலவேண்டும். எங்களுக்கு வேண்டாம் என்று கூறவே சாம்பனை வெட்டி குழியில் போட்டு மூடுமாறு கட்டளையிட்டான்.

பின்னர் ராஜகீர்த்தியின் உடலுக்கு மிகுந்த மரியாதையுடன் அந்திம காரியங்களைத் தானே செய்தான். மிகுந்த துயரத்தோடு சிதையிலிடும்போது திடீரென்று ராஜகீர்த்தியின் உடலில் சிறகுகள் மிகவும் அழகுடன் வளரத் தொடங்கியது. அதைப் பார்த்த விரூபாக்கன் ஆகாயத்தை அண்ணாந்து பார்த்தான்.விண்ணிலே காமதேனுவுடன் இந்திரன் செல்வது தெரிந்தது. அதன் நிழல் ராஜகீர்த்தியின் மேல் பட்டதால் ராஜகீர்த்தி உயிர் பெறத் தொடங்கியது.

விரூபாக்கணும் ராஜகீர்த்தியும் இணைந்து இந்திரனைத் துதித்தனர். இந்திரன் மகிழ்ந்து என்ன வரம் வேண்டும் எனக் கேட்க,

ராஜகீர்த்தி , "தேவதேவா, அறியாமல் பிழை செய்த எங்கள் நண்பன் சாம்பனை மன்னிக்க வேண்டும். அவனையும் உயிர்ப்பிக்க வேண்டும்." என்று கேட்டுக் கொண்டது.

"உன் பெருந்தன்மையும், தீமை செய்தவனுக்கும் நன்மைசெய்ய எண்ணும் உன் நல்ல பண்புக்கும் உன்னைப் பாராட்டுகிறேன். உன் விருப்பப்படியே சாம்பனை உயிர்ப்பிக்கிறேன். நலமோடு வாழ்வீர்களாக" என்று ஆசிவழங்கிவிட்டு மறைந்தார் தேவேந்திரன்.

உயிருடன் எழுந்து வந்த சாம்பன் ராஜகீர்த்தியிடம் கண்ணீர் மல்க மன்னிப்புக் கேட்டான். அவனை அணைத்து மகிழ்ந்தது ராஜகீர்த்தி. இத்தகைய உயர்ந்த பண்பு தனக்கில்லாமல் போயிற்றே என விரூபாக்கன் வெட்கப்பட்டான். தான் செய்த நன்றி மறந்த செயலுக்காக வெட்கப் பட்டான் சாம்பன். இருவரையும் அணைத்துக் கொண்டு மகிழ்ச்சி வெள்ளத்தில் திளைத்தது ராஜகீர்த்தி என்னும் புறா.

இந்தக் கதையின் கருத்தைத்தான் வள்ளுவரும்
'இன்னா செய்தாரை ஒறுத்தல் அவர்நாண
நன்னயம் செய்து விடல்'
என்று கூறியுள்ளார்.

ஒருவன் செய்த தவறுக்கு சிறந்த தண்டனை எது என்றால் அவன் நாணும்படியாக அவனுக்கு நன்மை செய்தலே ஆகும். இந்த உண்மையை நாம் அனைவரும் புரிந்து கொண்டால் சமுதாயம் சிறந்து விளங்கும்.

-- ருக்மணி சேஷசாயி