இந்திய தரக்கட்டுப்பாடு நிறுவனம் (Bureau of Indian Standards), 22 கேரட் தங்கத்தால் செய்யப்பட்ட நகைகளுக்கு வழங்கும் முத்திரைதான் '916 ஹால்மார்க்'. ஒரு கிராம் நகையில் 91.6% தூய தங்கம் இருக்கிறது என்பதைத்தான் குறிக்கிறது அந்த 916. தூய தங்கத்தின் அளவைப் பொறுத்து இந்த எண்கள் மாறுபடும் (9 கேரட்- 375; 14 கேரட்- 585; 17 கேரட்- 708; 18 கேரட்- 750; 21 கேரட்- 875; கேரட்- 23 கேரட்- 958). இதையெல்லாம் கவனித்து நகைகளை வாங்குவது நல்லது.
. நீங்கள் வாங்கும் நகை, 'ஹால்மார்க்' முத்திரையுடன் இல்லையென்றால்... 'ஹால்மார்க்' முத்திரையைப் போட்டு தரச்சொல்லி வாங்கலாம். ஆனால், நகைகளை அதற்குரிய விற்பனை ரசீதுகளுடன் வாங்குவது முக்கியம்.
. வாங்கும் நகையின் தரம் எதுவென்று முத்திரைக்கு உள்ளே இருக்கும் தர எண்ணை, லென்ஸ் மூலம் தெளிவாகப் பார்த்து உறுதி செய்து கொள்ளவும்.
. பெண் குழந்தை என்றால், எதிர்காலத்துக்குத் தேவை என்று நகைகளாக வாங்கிச் சேமிப்பீர்கள். அதைவிட, தங்க நாணயங்களாகச் சேமித்தால்... எதிர்காலத்தில், அன்றைய நாகரிகத்துக்கு ஏற்றாற்போல புதிய நகைகளைச் செய்து கொள்ளலாம்.
தங்க நகை விலை உயர்ந்து கொண்டே போகும் இந்தக் கால கட்டத்தில், உங்களின் முதலீடு, தங்க நகைகளாக இருக்கட்டும். அதுவும் '916 ஹால்மார்க்' நகைகளாக இருப்பது மிகவும் புத்திசாலித்தனமானது.
. தங்க நகை வாங்கும்போது, தரமானதா என்பதைத்தான் முக்கியமாக கவனிக்க வேண்டும். 'பவுனுக்கு இத்தனை ரூபாய் தள்ளுபடி' என்பதையெல்லாம் பார்த்து, தரமற்ற தங்க நகைகளை வாங்கிவிடாதீர்கள். விற்கும்போது உங்களுக்கு நஷ்டம் ஏற்படும்.
கல் வைத்த நகைகள் வாங்கும்போது, அந்தக் கற்களின் தரம் பற்றி நன்றாகக் கேட்டறியுங்கள். அவை தங்கத்தின் எடையுடன் சேருமா, சேராதா என்பதையும் கவனிப்பது முக்கியம். விலை குறைந்த கற்கள் பதிக்கப்பட்டிருக்கும் நகையை, தங்கத்துக்குரிய விலை கொடுத்து வாங்குவது புத்திசாலித்தனமல்ல.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக