புதன், 29 மே, 2013

முளை கட்டிய பயறின் மகத்துவம் தெரியுமா?

பச்சைப் பயறை வாங்கி வந்து அதனை இரவில் தண்ணீரில் ஊற வைத்து காலையில் தண்ணீரை வடித்து விட்டு ஆறவிடுங்கள். சுமார் 4 மணி நேரம் கழித்து பயறு முளை வந்திருக்கும்.

இதனைத்தான் முளை கட்டிய பயறு என்கிறோம். பொதுவாக பயறுக்கும், முளை கட்டிய பயறுக்கும் ஒரு வித்தியாசம் உள்ளது. என்னவென்றால், அதில் உள்ள சத்துக்கள்தான்.எந்த தானியத்தையும் முளை வந்த பிறகு அதனை உண்பது உடலுக்கு அதிக சக்திகளைக் கொடுக்கும் என்பது அனைவரும் அறிந்ததே. அதில் மிக முக்கிய இடம் வகிப்பது பயறுதான்.

100 கிராம் முளை கட்டிய பயறில்,
30 கலோரிகள்
3 கிராம் புரதச்சத்து
6 கிராம் கார்போஹைட்ரேட்
2 கிராம் நார்ச்சத்து உள்ளது.

அதிக உடல் உழைப்பும், உடல் பலமும் தேவைப்படுபவர்கள் இந்த முளை கட்டியப் பயறை உணவில் எடுத்துக் கொள்ளலாம். இது உடலுக்கு குளுமையைக் கொடுப்பதால் கோடைக் காலத்தில் குழந்தைகளுக்கும் செய்து கொடுக்கலாம்.

via-ரிலாக்ஸ் ப்ளீஸ்

Visit our Page -► தமிழால் இணைவோம்

உதவி!

இங்கிலாந்தில் பிளெமிங் என்ற விவசாயி ஒருநாள் காட்டு வழியே நடந்து போய்க்கொண்டிருந்தார். வழியில் ஒரு பணக்காரச் சிறுவன் புதைகுழியில் சிக்கி உயிருக்குப் போராடிக்கொண்டிருந்தான். உடனே பிளெமிங் தனது உயிரைப் பற்றிக் கவலைப்படாமல் மிகவும் சிரமப்பட்டு அந்தச் சிறுவனைக் காப்பாற்றினார்.

இதனை அறிந்த சிறுவனின் தந்தை பிளெமிங்கிடம், "எவ்வளவு பணம் வேண்டுமானாலும் வாங்கிக் கொள்ளுங்கள்' என்று கூறினார். பணத்தை வாங்க மறுத்த அந்த விவசாயி, தனது மகனைப் படிக்கவைக்க உதவி செய்யுமாறு வேண்டினார்.

அந்தப் பணக்காரரின் உதவியால் படித்துப் பின்னாளில் பெனிசிலின் என்ற அரிய மருந்தைக் கண்டுபிடித்தார் அந்த விவசாயியின் மகன் அலெக்ஸôண்டர் பிளெமிங்.

சில ஆண்டுகளுக்குப் பின்னர் அவரது தந்தையால் காப்பாற்றப்பட்ட அந்தச் சிறுவன் நிமோனியா நோயினால் பாதிக்கப்பட்டார். அப்போது பெனிசிலின் மருந்துதான் அவரது உயிரைக் காப்பாற்றியது. பிளெமிங் குடும்பத்தால் இரண்டு முறை காப்பாற்றப்பட்ட அந்தச் சிறுவன்தான் பின்னாளில் இங்கிலாந்தின் பிரதமரான வின்ஸ்டன் சர்ச்சில்.

-செ.தீபிகா

ஆங்கிலத்தில் ரிலாக்ஸ் ப்ளீஸ் Relaxplzz

செவ்வாய், 28 மே, 2013

தெரிந்துகொள்வோம்

R.TO. REGE.NUMBR DETAILS ALL TAMIL NADU. . . .

1 TN01 - CHENNAI(CENTRAL )
2 TN02 - CHENNAI(NORTH-W EST)
3 TN03 - CHENNAI(NORTH-E AST)
4 TN04 - CHENNAI(EAST)
5 TN05 - CHENNAI(NORTH)
6 TN06 - CHENNAI(SOUTH-E AST)
8 TN09 - CHENNAI(WEST)
9 TN10 - CHENNAI(SOUTH-W EST)
10 TN11 - RTO TAMBARAM
11 TN11Z - SOLLINGANALLUR
12 TN16 - RTO, TINDIVANAM
13 TN18 - REDHILLS
14 TN18Z - AMBATTUR
15 TN19 - CHENGALPATTU
16 TN19Z - MADURANTAKAM
17 TN20 - TIRUVALLUR
18 TN20Y - POONAMALLE
19 TN21 - KANCHEEPURAM
20 TN21W - SRIPERUMBUDUR
21 TN22 - MEENAMBAKKAM
22 TN23 - VELLORE
23 TN23T - GUDIYATHAM
24 TN23Y - VANIYAMBADI
25 TN24 - KRISHNAGIRI
26 TN25 - TIRUVANNAMALAI
27 TN25Z - ARANI
28 TN28 - NAMAKKAL
29 TN28Y - PARAMATHIVELLOR E
30 TN28Z - RASIPURAM
31 TN29 - DHARMAPURI
32 TN29W - PALACODE
33 TN29Z - HARUR
34 TN30 - SALEM(WEST)
35 TN30W - OMALUR
36 TN31 - CUDDALORE
37 TN31U - CHIDAMBARAM
38 TN31V - VIRUDHACHALAM
39 TN31Y - NEYVELI
40 TN32 - VILLUPURAM
41 TN32W - KALLAKURICHI
42 TN32Z - ULUNDURPET
43 TN33 - ERODE
44 TN34 - TIRUCHENCODE
45 TN36 - GOBICHETTIPALAY AM
46 TN36W - BHAVANI
47 TN36Z - SATHIYAMANGALAM
48 TN37 - COIMBATORE(SOUT H)
49 TN38 - COIMBATORE(NORT H) -
50 TN39 - TIRUPPUR(NORTH)
51 TN39Z - AVINASHI
52 TN40 - METTUPALAYAM
53 TN41 - POLLACHI
54 TN42 - TIRUPUR(SOUTH)
55 TN42Y - KANGAYAM
56 TN43 - OOTY
57 TN43Z - GUDALUR
58 TN45 - TRICHIRAPPALLI
59 TN45Y - THIRUVERUMBUR
60 TN45Z - MANAPPARAI
61 TN46 - PERAMBALUR
62 TN47 - KARUR
63 TN47Z - KULITHALAI
64 TN48 - SRIRANGAM
65 TN48Z - THURAIYUR
66 TN49 - THANJAVUR
67 TN49Y - PATTUKOTTAI
68 TN50 - THIRUVARUR
69 TN50Z - MANNARGUDI
70 TN51 - NAGAPATTINAM
71 TN51Z - MAYILADURAI
72 TN52 - SANGARI
73 TN52Z - METTUR
74 TN54 - SALEM(EAST)
75 TN55 - PUDUKOTTAI
76 TN55Z - ARANTHANGI
77 TN56 - PERUNDURAI
78 TN57 - DINDIGUL
79 TN57R - OTTANCHATRAM
80 TN57V - VADASANDUR
81 TN57Y - BATALAGUNDU
82 TN57Z - PALANI
83 TN58 - MADURAI(SOUTH)
84 TN58Z - THIRUMANGALAM
85 TN59 - MADURAI(NORTH)
86 TN59V - VADIPATTI
87 TN59Z - MELUR
88 TN60 - THENI
89 TN60Z - UTHAMAPALAYAM
90 TN61 - ARIYALUR
91 TN63 - SIVAGANGA
92 TN63Z - KARAIKUDI
93 TN64 - MADURAI(South)
94 TN65 - RAMANATHPURAM
95 TN65Z - PARAMAKUDI
96 TN66 - COIMBATORE(CENT RAL)
97 TN67 - VIRUDHUNAGAR
98 TN67U - SIVAKASI
99 TN67Z - SRIVILIPUTHUR
100 TN68 - KUMBAKONAM
101 TN69 - TUTICORIN
102 TN69Y - TIRUCHENDUR
103 TN69Z - KOVILPATTI
104 TN70 - HOSUR
105 TN72 - TIRUNELVELI
106 TN72V - VALLIOOR
107 TN73 - RANIPET
108 TN73Z - ARAKONAM
109 TN74 - NAGERCOIL
110 TN75 - MARTHANDAM
111 TN76 - TENKASI
112 TN76V - AMBASAMUTHIRAM
113 TN76Z - SANKARANKOIL
114 TN77 - ATTUR
115 TN77Z - VALAPADI
116 TN78 - DHARAPURAM
117 TN78Z - UDUMALPET

திங்கள், 27 மே, 2013

10 திராட்சை

10 திராட்சைகளைப் பன்னீரில் ஊறவைத்துச் சாப்பிட்டால், இதயம் பலம் பெறும். தொடர்ந்து திராட்சை உண்பவர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.




Thanks, Doctor Vikatan

வெள்ளி, 24 மே, 2013

கருவில் உள்ள குழந்தையை காக்கும் ஆப்பிள்,,

கர்ப்பகாலத்தில் பழங்கள், மீன், முட்டை, போன்ற ஆரோக்கியமான உணவுகளை சாப்பிடவேண்டும் என மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர். அதிகமான கர்ப்பிணிபெண்கள் ஆரோக்கியமான உணவை உட்கொண்டால் எடை பிரச்சனை ஏற்படக்கூடும் என பயப்படுகின்றனர். ஆனால் நீங்கள் தினமும் உட்கொள்ளும் உணவில் ஆப்பிள் பழங்களை எடுத்துக்கொள்ளலாம். 

தினமும் ஒரு ஆப்பிள் பழம் எடுத்துக்கொள்வதால் பளபளப்பான உடல் தோற்றத்தையும் ஆரோக்கியமான உடல் நலனையும் தருவதோடு மட்டுமல்லாமல் பல நன்மைகளையும் வழங்குகிறது.. கர்ப்பிணி பெண்கள் தினமும் ஆப்பிள் சாப்பிட்டு வந்தால் குழந்தை ஆரோக்கியமான உடல் நலம் கொண்ட குழந்தையாக இருக்கும். பொதுவாக ஆப்பிள் செரிமானத்தை அதிகமாக்கும் உணவுப் பொருள் தான். ஆனால் அதில் உள்ள பெக்டின் என்னும் கார்போஹைட்ரேட், வாயுத் தொல்லையை உண்டாக்கும். எனவே கர்ப்பிணிகள் இதனை அளவாக சாப்பிடுவது நல்லது.

ஒரு ஆப்பிள் பழத்தில் கர்ப்பிணிகள் பயன் பெறும் வகையில் எனர்ஜி, புரதம், கொழுப்பு, கார்போஹைட்ரேட், கால்சியம், பாஸ்பரஸ், நார், இரும்புசத்து, வைட்டமின் A-B1-B2 மற்றும் சி போன்ற சத்துக்களை கொண்டுள்ளது. பொதுவாக கர்ப்பகாலத்தில் கர்ப்பிணிகள் ஆப்பிள் சாப்பிட்டால் இரத்தத்தில் காணப்படும் சர்க்கரையின் அளவை கட்டுபாட்டுக்குள் வைத்துக்கொள்ளும்.

அதாவது ஆப்பிள் பழத்தில் இயற்கையாகவே இனிப்பு பொருட்களை உள்ளடக்கியது.. அது இரத்த ஒட்டத்தில் நுழைந்து ரத்தத்தில் கலந்துள்ள சர்க்கரையின் அளவையும், இன்சூலினையும் கட்டுபாட்டுக்குள் வைத்துக்கொள்ள உதவுகிறது. மேலும் சுவாச நோயிலிருந்து குழந்தையை காத்துக்கொள்ளும்.

ஆப்பிலில் கொண்டுள்ள பைத்தோகெமிக்கல்ஸ் நுரையீரல் மீதான நேர்மறை எண்ணங்களை அழிக்கிறது-. ஆய்வு ஒன்று மேற்கொண்டபோது கர்ப்பகாலத்தில் அதிகம் ஆப்பிள் சாப்பிட்ட கர்ப்பிணிபெண்களின் குழந்தைகள் 53% சுவாச பிரச்சனை மற்றும் ஆஸ்துமாவிலிருந்து விடுபடுகின்றனர். ஆப்பிள் சாப்பிட்டாத கர்ப்பிணிபெண்களின் குழந்தைகளுக்கு நோய் வர வாய்ப்பு அதிகமாக உள்ளது.

ஆப்பிள் பழத்தில் பெக்டின், பாலிபினால்கள் இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது. இது இரத்தத்தில் கலந்துள்ள கொழுப்புகளை தடுத்து ஆக்ஸிஜனேற்றம் அடைவதற்கான அடர்த்தியுள்ள லிபோபுரோட்டீன் (LDL) கொண்டுள்ளது. தோல் நீக்காமல் ஆப்பிள் சாப்பிடுவது மிக நல்லது. தோல் நீக்காத ஆப்பிள் பழத்தில் 2 முதல் 6 மடங்கு ஆக்ஸிஜனேற்ற எதிர்பொருட்களை கொண்டுள்ளது. கருவில் இருக்கும் போது ஆப்பிள் சாப்பிடுவதால் ஐந்து ஆண்டுகள் வரையில் குழந்தைகளை ஆஸ்துமாவிலிருந்து பாதுகாக்கலாம்.

வியாழன், 23 மே, 2013

வெந்தயத்தின் மருத்துவக்குணம்


வெந்தயத்தை வறுத்து பொடி செய்து 1 டம்ளர் நீரில் ஊற வைத்து உட்கொள்ள வயிற்று வலி, வயிற்றுப் பொருமல், சுரம், உட்சூடு, வெள்ளை, சீதக்கழிச்சல் முதலியவைகள் போகும்.

.கஞ்சியில் வெந்தயத்தைச் சேர்த்து காய்ச்சிக் கொடுக்க பால் சுரக்கும்.

வெந்தயத்தை ஒரு கைப்பிடியளவு எடுத்து ஊற வைத்து தலை முழுகிவர முடி வளரும். அது முடி உதிர்ந்து போவதைத் தடுக்கும்.

வெந்தயத்தை உலர்த்தி பொடி செய்து மாவாக்கிக் களி கிண்டிக் கட்ட புண், பூச்சி நோய்களைப் போக்கும்.

வெந்தயத்தை வறுத்து இத்துடன் வறுத்த கோதுமையைச் சேர்த்து காப்பிக்குப் பதிலாக வழங்கலாம் இதனால் உடல் வெப்பம் நீங்கும்.

வெந்தய லேகியம்:

வெந்தயம், மிளகு, திப்பிலி, பெருங்காயம் இவற்றை சமஅளவு எடுத்து உலர்த்தி நன்றாக வறுத்துப் பொடி செய்து சர்க்கரைப் பாகில் போட்டு இலேகியமாகச் செய்து சாப்பிட சீதக்கழிச்சல், வெள்ளை, மேல் எரிச்சல், குருதியழல், தலைகனம், எலும்பைப் பற்றிய சுரம் தீரும்.

நீர் வேட்கை இளைப்பு நோய், கொடிய இருமல் இவைகளை விலக்கும். ஆண்மை தரும்.

வெந்தயம், கடுகு, பெருங்காயம், கறிமஞ்சள் இவைகளை சமபாகம் எடுத்து நெய் விட்டு வறுத்து பொடி செய்து சோற்றுடன் கலந்துண்ண வயிற்றுவலி, பொருமல், வலப்பாடு இடப்பாட்டீரல் வீக்கங்கள் நாளுக்கு நாள் குறைந்து கொண்டு வரும்.

மிளகாய், கடுகு, வெந்தயம், துவரம்பருப்பு, பெருங்காயம், கருவேப்பிலை இவைகளைத் தக்க அளவு எடுத்து நெய்விட்டு வறுத்து புளிக்குழம்பை இதில் கொட்டி உப்பு சேர்த்து சட்டியிலிட்டு அரைப்பாகம் சுண்டிய பின் இறக்கி சூட்டுடன் சாப்பிட வெப்பத்தால் நேரிடும் சிற்சிலப் பிணிகள் தணியும்.

இத்துடன் வாதுமை பருப்பு, கசகசா, கோதுமை நெய், பால், சர்க்கரை சேர்த்து கிண்டி உட்கொள்ள உடல் வலுக்கும். வன்மையுண்டாகும். இடுப்பு வலி தீரும்.

வெந்தயத்தை, சீமை அத்திப்பழம் சேர்த்தரைத்து கட்டிகளின் மீது பற்றுப்போட அவைகள் உடையும். படைகள் மீது பூச அவைகள் மாறும்.

வெந்தயத்தை, சீமைப்புளி, அத்திப்பழம், திராட்சை ஒரே எடையாகச் சேர்த்து குடிநீரிட்டு தேன் சிறிது கலந்து சாப்பிட இதயவலி, மூச்சடைப்பு இவை போகும்.

வெந்தயத்தை வேக வைத்து தேன் விட்டுக்கடைந்து உட்கொள்ள மலத்தை வெளியேற்றும். இது மார்புவலி, இருமல், மூலம், உட்புண் இவைகளைப் போக்கும்.

குழந்தைகள் உணவு

குழந்தை உணவில் 
முதலிடம் வகிப்பது தாய்ப்பால் தான். குழந்தை பிறந்த முதல் சில நாட்கள் 
கிடைக்கும் தாய்ப்பால் மிகவும் சத்து நிறைந்தது. இது க்லஸ்ட்ராம் 
(Colostrum) என்று அழைக்கப்படும், இதில் அதிக அளவில் விட்டமின் A உள்ளது. 
Antibodies அதிகமாக உள்ளது. 
குழந்தைகளுக்கு பலவித நோய் நொடிகள் வராமல் தடுப்பதற்கு இந்த Antibodies 
மிகவும் உதவியாக இருக்கும். முதல் 3 மாதங்களிலிருந்து 6 மாதங்கள் வரை 
குழந்தைகளுக்கு தாய்ப் பாலே போதும். சில சமயங்களில் தாய்ப்பால் போதுமான 
அளவு கிடைக்கவில்லை எனில் பசும்பால், சிறிது பழரசம் போன்றவைகள் இடையில் 
கொடுக்கலாம்.

ஒரு நாளைக்கு பொதுவாக 6லிருந்து 9 முறை பிறந்த 
குழந்தைகளுக்கு கொடுக்க வேண்டியி ருக்கும். கிராமப்புறங்களில் 
குழந்தைகளுக்கு ஆட்டுப்பாலும் கொடுப்பது உண்டு. ஆனால் தற்போது வேலைக்குச் 
செல்லும் தாய்மார்களும், வீட்டிலிருக்கும் சில பேரும் விதவிதமாக 
டப்பாக்களில் அடைத்த (Milk powder) பால் உணவுகளை கொடுக்கின்றனர். இதனால் 
குழந்தைகள் குண்டாக ஆரோக்கியமாக வளரும் என்பது அவர்களது நம்பிக்கை. மிகவும்
தவிர்க்க முடியாத சந்தர்ப்பங்களில் இதுபோன்று கொடுக்கலாம். ஆனால் அதுபோன்ற
சந்தர்ப்பங்களிலும் பசும்பால் போன்றவற்றைக் கொடுப்பது ஆரோக்கியம் தரும். 
டப்பாக்களில் அடைத்த பால் கொடுப்பதால் பணவிரயம் தானே தவிர குழந்தைகளுக்கு 
அதிக நன்மை தராது. எனவே குழந்தைகள் உணவைத் தேர்ந்தெடுக்கும் போது மிகவும் 
கவனம் அவசியம்.

குழந்தை பிறந்த முதல் நாளிலிருந்து

3 மாதங்கள் வரை - தாய்ப்பால் மட்டும்

4 மாதங்கள் முதல் 9 மாதங்கள் வரை - தாய்ப்பால், பழரசங்கள், மசித்த வாழைப்பழம்

10 மாதங்கள் முதல் 15 மாதங்கள் வரை - பசும்பால், புரதம் நிறைந்த உணவுகளான பருப்புகள் 


கொடுக்கலாம். மசித்த வாழைப்பழம், சாதம், கிச்சடி,


வேகவைத்த உருளைக்கிழங்கு போன்றவை 

கொடுக்கலாம்.

16 மாதங்களிலிருந்து 15 வயது வரை - பால், அரிசி, கோதுமை, முளைக்கட்டிய தானியங்கள்,


பாதாம், முந்திரி போன்ற யாவும் கொடுக்கலாம்.


சிறிய வயதிலேயே குழந்தைகளுக்கு ஆரோக்கியமான உணவுகளில் விருப்பம் ஏற்படுத்த 
வேண்டும். எதையும் அவர்களுக்குப் பிடிக்காமல் திணிக்கக் கூடாது. குழந்தைகளே
விரும்பி சாப்பிட வேண்டும். Seasonal fruits யாவையும் கொடுத்து பழக்கலாம்.
குழந்தைகள் சந்தோஷமாக இருப்பது மிகவும் முக்கியம். அதிகமாக அவர்களை 
பயமுறுத்தக் கூடாது. இது போன்று ஆரம்பித்திலிருந்தே கொடுத்துவந்தால் 
இப்போது எல்லாம் அதிகம் வரும் நோய்களான Primary Complex போன்றவற்றால் 
குழந்தைகள் சிரமப்படாது.

சத்தான உணவு

1. 1 
வயதிலிருந்து 2 வயது வரை உட்பட்ட குழந்தைகளுக்கு கேழ்வரகு கஞ்சி கீழ்கண்ட 
முறையில் தயாரித்துக் கொடுக்கலாம். முதல் நாள் இரவு கேழ்வரகை நன்கு களைந்து
மூழ்கும் அளவு தண்ணீர் ஊற்றி ஊற வைக்கவும். மறுநாள் காலை தண்ணீரை 
வடிகட்டி, நல்ல சுத்தமான மெல்லிய வெள்ளை துணியில் ஊறவைத்த கேழ்வரகை கட்டி 
ஒருநாள் முழுவதும் தொங்க விடவும். இடையில் இது காய்ந்து போகாமல் இருக்க 
சிறிது சிறிதாக நீர் தெளித்து வரவும். அடுத்த நாள் காலையில் துணியை 
அவிழ்த்துப் பார்த்தால் கேழ்வரவு நன்கு முளை விட்டிருக்கும். இதை எடுத்து 
உரல் (or) Grinderல் சிறிது தண்ணீர் சேர்த்து அரைத்துக் கொள்ளவும்.

அரைத்ததை நன்கு தோசைமாவு பதத்தில் கரைத்து ஒரு பாத்திரத்தில், விட்டு 
அப்பாத்திரத்தை ஓர் இடத்தில் அசையாமல் வைக்கவும். சில மணி நேரங்களுக்குப் 
பிறகு மேல் பாகத்தில் உள்ள தண்ணீரை இறுத்துவிட்டு அடியில் உள்ள மாவை 
மட்டும் ஒரு சுத்தமான மெல்லிய துணியில் நன்கு வடிகட்டிக் கொள்ளவும். 
வடிகட்டிய மாவை நிழலில் நன்கு காயவைத்து பாட்டிலில் போட்டு வைத்துக் 
கொள்ளவும். தேவையானபொழுது குழந்தைகளுக்கு இந்த Powder ½ tsp to 1 tsp 
எடுத்து 1 டம்ளர் தண்ணீரில் கரைத்து 5 நிமிடங்களுக்கு நன்கு கொதிக்க வைக்க 
வேண்டும். பிறகு அதில் தேவையான அளவு காய்ச்சிய பசும்பால் சிறிது சர்க்கரை 
சேர்த்து கலந்து கொடுக்கவும். குழந்தைகளின் ஆரோக்கியமான உணவில் இதுவும் 
இன்று.

2. 2 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு கீழ்கண்ட 
தானியக் கஞ்சி செய்து கொடுக்கலாம். கோதுமை ½ kg புழுங்கல் அரிசி ¼ Kg சட்னி
கடலை 3 பிடியளவு, பச்சை பயறு 1 tsp பாதம் பருப்பு சிறிது. முந்திரி 
சிறிது, ஜவ்வரிசி 1 tsp, சோளம் 1 கைப்பிடி, கம்பு கைபிடி, பார்லி 1 tsp 
இவற்றில் கோதுமை, பச்சைபயறு இவற்றை மேற்சொன்ன முறையில் ஊற வைத்து முளைகட்டி
நிழலில் காயவைத்து வைத்துக் கொள்ளவும். பிறகு எல்லாவற்றையும் தனித்தனியாக 
பொன்னிறமாக வறுத்து எடுத்து கொள்ளவும். சுவைக்கேற்ப சிறிது ஏலக்காய் (or) 
ஓமம் சிறிது சேர்த்துக் கொள்ளவும் தேவையான பொழுது 2 tsp எடுத்து ஒரு டம்ளர்
தண்ணீரில் கரைத்து நன்கு 5 நிமிடம் கொதிக்க வைத்து பால் சர்க்கரை (or) 
மோர், உப்பு கலந்து கொடுக்கவும். மிகவும் சத்தான கஞ்சி இது. புரதச்சத்து 
மிகுதியாக இருப்பதால் வளரும் குழந்தைகளுக்கு மிகவும் நல்லது.


பொதுவாகவே குழந்தைகளுக்கு Chocolate/Chips/Sauce, Cold drinks போன்ற 
உணவுகளை அதிகம் கொடுக்காமல் ஆரம்பத்திலிருந்தே நல்ல காய்கறிகள், பழங்கள், 
முளைகட்டிய தானியங்கள், பழரசங்கள் போன்ற நல்ல சத்தான உணவாகக் கொடுத்து நல்ல
சத்தான உணவை உண்ணும் பழக்கத்தை ஏற்படுத்திவிட்டால் குழந்தைகள் 
எல்லாவிதத்திலும் நல்ல ஆரோக்கியமாக வளருவார்கள். அவர்கள் பெரியவர்களான 
பின்பும் இந்த உணவு பழக்கங்கள் அதிகம் மாறுவதற்கு வாய்ப்பில்லை. இதில் 
தாய்மார்களின் பங்கு மிகவும் முக்கியம். குழந்தைகளின் நல்ல உணவு பழக்கங்கள்
எவ்வளவு முக்கியமானதோ, அதே போல் அவர்கள் மனதளவில் ஆரோக்கியமாக வளர்வது 
மிகவும் முக்கியமாகும்.

Thanks 
http://www.usetamil.net

சின்ன குழந்தைக்கு என்ன உணவு கொடுக்கலாம்?


முதல் உணவு தாய்ப்பால் தான் :
குழந்தையின் முதல் வருடத்தின் சத்துணவு பெரும்பாலும் தாய்ப்பால் தான்
எப்போது புட்டிப் பால் :
தாய்ப்பால் சுரக்காவிட்டால் என்ன செய்ய? தாய்ப்பால் சுரந்தும் சில குழந்தைகளுக்கு அது ஒத்துக்கொள்ளாமல் போய்விடுகிறது. என்ன காரணம்? பாலில் லாக்டோஸ் என்பதுதான் முக்கியப்பொருள். குழந்தைக்குத் தொடர்ந்து வயிற்றில் ஏதாவது கோளாறு என்றால் இந்த லாக்டோ சத்தை குழந்தையால் ஜீரணிக்க முடிவதில்லை. எனவே, வயிற்றில் உப்புசம், இதைத் தொடர்ந்து பீய்ச்சியடிக்கும் பேதி. ஆனால் ஒன்று, வயிற்றுப்போக்கை மட்டும் வைத்துக்கொண்டு குழந்தைக்குப் பால் அலர்ஜி என்று முடிவெடுப்பது தப்பு. குழந்தை பிறந்ததும் இரண்டிலிருந்து ஆறு வாரங்கள் வரை தாய்ப்பால் கொடுக்கும்போது இப்படி ஏற்பட்டால் மட்டுமே அப்படி ஒரு முடிவுக்கு வரலாம்.
வேறுசில சமயங்களிலும் தாய்ப்பால் அளிக்க முடியாத துரதிஷ்டமான நிலை ஏற்படக் கூடும். அம்மாவுக்குப் புற்றுநோய். அதற்கெதிராகத் தொடர்ந்து மருந்து சாப்பிடவேண்டிய நிலை. அல்லது அவளுக்கு மன இறுக்கம் போன்ற சைக்கலாஜிக்கான கோளாறுகள் காரணமாகத் தொடர்ந்து மருந்தை உட்கொள்ள வேண்டியிருக் கிறது. இது போன்ற சமயங்களில் தாய்ப்பால் கொடுக்கலமா? டாக்டரை கலந்து நன்கு ஆலோசனை செய்யுங்கள். அதற்குப் பிறகு ஒரு முடிவெடுங்கள்.
குழந்தை பிறந்து முதல் நான்கு மாதங்களுக்கு தாய்ப்பால் மட்டுமே போதுமானது. அதற்குப் பிறகு பசும்பால் அல்லது எருமைப்பால் கொடுக்கலாம். ஆனால் பால் சுகதாரமான முறையில் தயாரிக்கப்பட்டிருக்க வேண்டும்.
முடிந்தவரை நள்ளிரவில் பால் கொடுப் பதைத் தவிர்க்கப் பாருங்கள். காரணம், நாளடை வில் குழந்தையின் பற்களில் சொத்தை விழ இது காரணமாக அமையலாம் என்பதோடு, பால் காதுக்குள் நுழைந்து அப்படியே அசையாமல் குழந்தை தூங்கிவிடலாம். காதில் சில தொற்று நோய்கள் உண்டாகக்கூடும்.
திட உணவு
குழந்தைக்கு நான்கைந்து மாதங்கள் ஆகிவிட்டதா? பருப்புத் தண்ணீர் அல்லது கேரட் தண் ணீரை அளிக்கலாம்.
ஐந்தாவது மாதம் :
ஐந்து மாதங்கள் ஆனவுடன் காய்கறி மற்றும் பழங்களைக் கொடுக்கத் தொடங்கலாம். ஆப்பிள், வாழைப்பழம், பழுத்த பப்பாளி ஆகியவை முதல் சாய்ஸ். மலை வாழைப்பழம் கொடுக்கலாம். பச்சை வாழை மற்றும் ரஸ்தாளி அளிப்பதைத் தவிர்க்கலாம். வைட்டமின் சி சத்து நிறைய அடங்கியவை - சாத்துக்குடி, கமலா ஆரஞ்சு, எலுமிச்சை ஆகியவை. குழந்தைக்குத் தவறாமல் கொடுக்கலாம். பெற்றோருக்கு இந்த சிட்ரஸ் வகைப்பழங்கள் அலர்ஜி என்றால், குழந்தைக்கு சுமார் ஒன்றரை வயது ஆனபிறகு இதுபோன்ற பழங்களைக் கொடுத்துப் பார்க்கலாம்.
குழந்தைகளால் சீக்கிரம் ஜீரணிக்கக் கூடி யவை களும், அவர்களால் விரும்பப்படுவதுமான பிசைந்த வாழைப்பழங்களும், கடைந்த ஆப்பிள் களும் குழந்தைகளுக்கு ஆரம்பத்தில் கொடுக்கும் உணவு வகைகளில் சிறந்தது. பெரும்பான்மையான எல்லா பழங்களையும், காய்கறிகளையும் மிக்ஸியில் அரைத்து குழந்தைகளுக்குகக் கூழ் போலாக்கி கொடுக்கலாம். பருப்பு வகைகளையும் இப்படி கொடுக்கலாம்.
ஆறாவது மாதம் :
ஆறாவது மாதம் முட்டையில் உள்ள மஞ்சள் கருவைக் கொடுக்கலாம். இட்லியுடன் கொடுக்கத் தொடங்கலாம். அரை ஸ்பூன் நெய் அல்லது எண்ணெய் சேர்த்துக் கொடுக்கலாம். (குழந்தை யின் வளர்ச்சிக்கு கொழுப்புச் சத்தும் தேவைதான்) ஆனால் குடும்பத்தில் பலரும் கனவான்கள் என்றால் இப்படி நெய், எண்ணெய் சேர்ப்பதை சற்றுத் தள்ளிப்போடலாம்.
இட்லிக்கு சர்க்கரையைத் தொட்டு கொடுப்பதைவிட, தெளிவான ரசம் போன்ற வற்றைத் தொட்டுக் கொள்ளலாம். ஏனென்றால் இனிப்பு மட்டுமல்லாது மீதி சுவைகளும் குழந்தையின் நாக்குக்கு பிடிபடுவது நல்லது. அப்போதுதான் வளர்ந்தபிறகு பலவகை உணவுகளை குழந்தை உண்ணத் தயராகும்.
சிறுகச் சிறுக புதிய உணவு வகைகளில் குழந்தையின் அனுபவத்தை வளர்க்க வேண்டும். குழந்தை ஆறு மாதக் குழந்தையாகும்போது உணவில் சிறு பகுதி புரதம் செறிந்த இறைச்சி, மீன், முட்டை, கோழிக் குஞ்சியின் இறைச்சி இவை களைச் சேர்க்கலாம். ஆனால் இவை நன்றாகப் பக்குவப் படுத்தப்பட்டதாகவும், மிருதுவாகவும் உள்ளதாயும் இருத்தல் அவசியம்.
ஏழாவது மாதம் :
ஏழாவது மாதத்தில் சப்போட்டா போன்ற பழங்களைக் கொடுக்கலாம்.
தோசை, பால் குறைவான மில்சேஷப்க் சப்பாத்தி, தானிய சுண்டல், மிக்ஸ்ட் ரைஸ், கிச்சடி, உப்புமா, பழங்கள் சாப்பிடக் கொடுத்துப் பழக வேண்டும்.
பத்தாவது மாதம் :
குழந்தைக்குப் பத்துமாதம் ஆனதும் சாதத்தையும் பருப்பையும் குழைத்துப் பிசைந்து வெண்பொங்கல்போலாக்கி காய்கறித்துண்டு களையும் சேர்த்துக் கொடுக்கலாம். காய்கறிகளைக் குழந்தை துப்பிவிடுகிறது என்றால் அவற்றை சூப்பாக்கி கொடுக்கலாம். தினமும் ஒருமுறை இப்படி சாப்பிடலாம். நடுவே வெரைட்டிக்கு ரொட்டித் துண்டில் வெண்ணெய் மற்றும் ஜாம் தடவித் தரலாமே.
காய்ந்த திராட்சை, பேரிச்சம்பழம் ஆகியவை குழந்தையின் உடலுக்கு நல்லது. ஆனால் இவற்றை சாப்பிட்டபிறகு மறக்காமல் பற்களைச் சுத்தம் செய்து விடுங்கள்.
எப்போதுமே ஒரே நாளில் இரண்டு வித உணவுகளைக் குழந்தைக்குக் காடுக்கவேண்டாம். சில நாட்கள் இடைவெளிக்குப் பிறகே அடுத்த புதிய உணவுப் பொருளை அறிமுகப்படுத்துங்கள்.அப்போதுதான் குழந்தைக்கு வயிற்றுப்போக்கோ வேறு ஏதாவது சிக்கலோ ஏற்பட்டால் அது எந்த உணர்வினால் என்பதைத் துல்லியமாகக் கண்டு பிடிக்க முடியும்.
முதலில் காரம் இல்லாத உணவு வகைகளைக் கொடுத்து, பிறகே கொஞ்சம் கொஞ்சமாக காரம் மற்றும் மசாலா சேர்ந்த பொருட்களை அறிமுகப்படுத்தலாம்.
உணவில் மிக அதிகமான சர்க்கரையையும், உப்பையும் சேர்க்காதீர்கள், அதிகப்படியான உப்பு உடம்பில் நீர் இல்லாமல் செய்துவிடும், அதிகப் படியான சொத்தைப் பல்லை உண்டாக்கும் பிற்காலத்தில் இதனால் பலவிதமான பிரச்சினைகள் உருவாகும். முக்கியமாக 1 வயது வரை உள்ள குழந்தைகள் இனிப்பு வகைகளை குறைக்க வேண்டும். குழந்தையின் சுவை உறுப்பு நன்றாக
வேலை செய்யக்கூடியது. ஆகவே, அதற்கு அதிகப்படியான உப்பும், சர்க்கரையும் தேவையில்லை.
உணவைத் திணிக்காதீர்கள் :
சில சமயங்களில் குழந்தை எல்லா வித உணவு களையும் புறக்கணிக்கக்கூடும். இது அநேக மாக வழக்கத்தில் இருந்து மாறுபடுவதால் ஏற்பஉவது. குழந்தை திட உணவைப் புறக் கணித்தால் அதனைச் சாப்பிடச் சொல்லிக் கட்டாயப்படுத்தாதீர்கள். திட உணவின் அமைப் பும், ருசியும் பாலினின்றும் வெகுவாக வேறு படுவதாலும், விழுங்கும் முறை வழக்கமான ஊறிஞ்சிக் குடிக்கும் முறையிலிருந்து வேறுபடு வதாலும் குழந்தை புறக்கணிக்கக் கூடும்.
குழந்தை உணவு உட்கொள்வதில் ஆவலாக இல்லாவிடினும் கவலைப்படாதீர்கள். அதனைக் கட்டாயபடுத்தாதீர்கள். மாறாக வேறு ஏதாவது ஒன்றை முயற்சி செய்யுங்கள் வேறுபட்ட தானியம் அல்லது வேறு வகையான பழக்குழம்பு போன்றவை. அப்பொழுதும் குழந்தை அவைகளைபுறக்கணித்தால் சில நாட்கள் சென்ற பிறகு மறுபடியும் முயற்சி செய்யுங்கள்.
ஒவ்வொரு புதிய உணவு வகைகளையும் குழந்தை ருசி பார்க்கட்டும். அதன் ருசியையும் அதன் கெட்டிதன்மையும் பழக்கப்படத்திக் கொள்ளட்டும்.
குழந்தைக்கு முதலில் கொஞ்சம் கொடுங்கள், அதைச் சாப்பிட்டு முடித்த பிறகு இன்னும் கொஞ்சம் கொடுங்கள். அவர் சிறது அதிகமாக சாப்பிட்டால் அதை அவனுக்குக் கொடுங்கள். கொஞ்சம் கொஞ்சமாக அளவை அதிகப்படுத்தி அவன் பசிக்கும் ஏற்ப கொடுங்கள். குழந்தையைப் பெருக்க வைக்கும் எந்தவிதமான உணவையும் கொடுக்காதீர்கள் உதாரணமாக, அதிகப்படியான வெண்ணெய் அல்லது நெய், கரீம் அல்லது தித்திப்பான முட்டையும், பாலும் சேர்ந்த திண்பண்ட வகை இவைகள் குழந்தையைப் பெருக்க வைக்கும், எவ்வளவு எலும்பும் தோலுமாக இருந்தாலும் அநேகமாக முடிவில் தடித்த குழந்தையாக ஆகி, பிற்காலத்தில் கொழுத்த மனிதனா வான். புளிக்காத, ஃபிரிட்ஜில் வைக்காத தயில் சாதம் குழந்தைகளுக்குக் கட்டாயம் கொடுக்க வேண்டும். இதுபோன்ற தயிரில் நல்ல பாக்டீயா இருப்பதால் உடல்நலனுக்கு மிகவும் நல்லது.
நாள்தோறும் நான்கு அல்லது ஐந்து முறை யாக குழந்தைகளுக்குக் காய்கறி உணவுகளையும், பழங்க ளையும் கொடுங்கள். குழந்தைகளுக்கு நார்ச்சத்து மிகவும் முக்கியம். அவை அதிகம் உள்ள முழுத் தானிய பிரெட் போன்றவற்றை குழந்தை களுக்கு கொடுங்கள்.
சற்றேறக்குறைய இந்த வயதிலேயே குழந்தை தன்னுடைய வாயில் எல்லா பொருட்களையும் போட்டுக் கொள்வதைக் காணலாம். இப்பொழுது அதன் கையினால் எடுத்த சப்பி சாப்பிடத்தக்க உணவு வகைகளை அறிமுகம் செய்விக்கலாம். தானே சாப்பிடம் குழந்தைக்கு எல்லாம் ருசியாக இருக்கும். இது குழந்தையை திறமையுள்ளவானகவும் மாற்றும். கையில் பிடித்துக் கொள்ளும் வகையிலான பெரிய துண்டு ரொட்டி, அப்பம் அல்லது ஆப்பிள், வாழைப்பழம், காரெட்டு போன்றவற்றை கொடுக்கலாம்.
அதிகமான கடின உணவைக் கடித்துத் தின்பது குழந்தையின் ஈறுகளும், பற்களும் ஆரோக் கியமாக வளர உதவி புரிகின்றது. குழந்தைக்கு குறிப்பாக பல் முளைக்கும் சமயம் இது சௌகாரியமாப அமையும். விரல் போன்ற உருவில் இருக்கும் உணவுகள் இதே காலகட்டத்தில் குழந்தையின் உணவில் முக்கிய பங்கு வகிக்கின்றன. ஆனால், தானே உணவு உட்கொள்ளும்போது குழந்தையைக் கவனமாக கவனிக்க வேண்டம். அவன் ஒரு துண்டைக் கடித்து மென்று பின் அதை விழுங்குவதில் கஷ்டப்படலாம் எனவே, அவனுக்கு கொட்டைகள், முலாம்பழம், தானியங்கள், உருளைக்கிழங்கு வறுவல், சாக்கலேட்டுகள் முதலியவைகள் ஒருபோதும் கொடுக்காதீர்கள்.
இரும்புச் சத்து நிறைந்த உணவுகள் (முருங் கைக் கீரை, பேரீச்சை, வெல்லம்) போன்றவற்றை உணவில் அதிகம் சேருங்கள்.
நிறைய கலர்ஃபுல்லான காய்கறிகள், பழங் கள் என்று சாப்பிடம் ஆசையைத் தூண்டி விடலாம். சாண்ட்விச், முந்திரி, பாதாம், உலர்ந்த திராட்சை, வேகவைத்த வேர்க்கடலை போன்ற கால்சியம், பி புரோட்டீன் மற்றும் வைட்டமின்கள் நிறைந்த உணவுகளைச் சாப்பிடக் கொடுக்க வேண்டும்.
குழந்தைக்கு இரும்புச் சத்து, புரசச்சத்து அதிகம் தேவைப்படும். எனவே கொழுப்பில்லாத மட்டன் சூப்பில் மூன்று பங்கு தண்ணீர் சேர்த்து முதல் நாள் சிறிதளவு கொடுத்துப் பாருங்கள். குழந்தைக்கு ஜீரணமானால் இந்த சூப்பை வாரத்தில் மூன்று அல்லது நான்கு நாட்கள் கொடுக்கலாம். இதைத் தவிர சிக்கன் சூப், வேகவைத்து மசித்த பசலைக்கீரை, முருங்கைக்கீரை, பருப்புசாதம் கொடுக்கலாம். வளர வளர குழந்தை களுக்குத் தேவையான சத்துகளும் (இரும்புச்சத்து, கால்சியம் போன்றவை, அளவுகளும் மாறும். அதற்கேற்ப கவனித்து உணவளியுங்கள்.
வயதுக்கு மேல்
2 வயதுக்கு மேல் உள்ள குழந்தைகளுக்கு கொழுப்பு நீக்கிய பால், குறைந்த ஆற்றல் தரும் உணவு, குறைந்த அளவு இடைவேளை உணவு தர வேண்டும். இளவயதினருக்கு குறைந்த கொழுப்புச் சத்து நிறைந்த உணவைவிட குறைந்த மாவுச்சத்து எடை குறைப்பதற்கு மிகவும் உடற்பருமன் அதிகமுள்ள குழந்தைகளுக்கு ஒரு நாளைக்கு உண்ணும் உணவு 800 கிலோ கலோரி மட்டுமே இருந்தால் எடை இழப்பு வேகமாக இருக்கும். எண்ணெய்யில் பொரித்த உணவுகளை விட சுட்ட வறுத்த, ஆவியில் வேகவைத்த உணவுகள் நல்லது.
கடைகளில் வாங்கும் உணவுகள், பாஸ்ட் புட் களை கூடிய மட்டும் தவிர்த்துவிடுங்கள். இனிப்புச் சேர்த்த பழச்சாறுகள், சோடாக்களை கொடுக்கதீர்கள். அதற்குப் பதிலாக பாலையும், தண்ணீரையும் கொடுங்கள்.
பள்ளி செல்லும் போது
குழந்தைகள் பள்ளி செல்ல ஆரம்பிக்கும் வயது, என்னதான் நீங்கள் பார்த்துப் பார்த்து டிபன்பாக்ஸில் சாப்பாடு கட்டிக் கொடுத்தாலும், அவர்கள் சாப்பிடுகிறார்களா, கொட்டிவிடுகிறார்களா என்று தெரியாது. எனவே காலை பிரேக் ஃபாஸ்ட், மாலை ஸ்நாக்ஸ், இரவு உணவில் நீங்கள் குழந்தைகள் மீது கவனமாக இருக்க வேண்டும். நீங்கள் கவனிக்காமல் விட்டுவிட்டீர்கள் என்றால் போதிய சத்துணவின்றி குழந்தைகள் சுறுசுறுப்பை இழந்து எப்போதும் தூங்கிவழிந்து கொண்டே இருப்பார்கள். ரொம்ப அசதியாகவும் காணப்படுவார்கள். மூளைத்திறனும் குறைவாகவே இருக்கும்.

கேழ்வரகு கஞ்சி (குழந்தைகளுக்கு)

குழந்தைக்கு எதை செய்துக் கொடுத்தாலும் அதனுடன் பொருமையையும் தங்களின் விலைமதிப்பில்லாத தாயன்பையும் சேர்த்து கொடுங்கள்.

குழந்தையை வளர்க்கும் தாய்,  சமூக பிரச்சினையையோ, குடும்ப பிரச்சினையையோ பற்றி கவலை படகூடாது. நீங்கள் உண்டு உங்கள் குழந்தை உண்டு என இருக்க பழகுங்கள். உங்களுக்கும் குழந்தைக்கும் நல்லது.

கேழ்வரகு கஞ்சி (குழந்தைகளுக்கு) 

பரிமாறும் அளவு : 2 

  • கேழ்வரகு - 2 மேசைக்கரண்டி
  • சர்க்கரை - 2 தேக்கரண்டி
  • முதலில் ஒரு பாத்திரத்தில் 2 கப் தண்ணீர் ஊற்றி கொதிக்கவிடவும்.
  • கேழ்வரகினை 1/2 கப் தண்ணீர் ஊற்றி கரைத்து கொள்ளவும்.
  • பின்னர் கொதித்து கொண்டு இருக்கும் தண்ணீரில் கரைத்து வைத்துள்ள கேழ்வரகினை ஊற்றி கிளறவும்.
  • சுமார் 5 - 8 நிமிடம் வேகவிடவும். இடையிடையே நன்றாக கிளறிவிடவும்.
கடைசியில் சர்க்கரை (தேவைப்பட்டால்) சேர்த்து கலந்து கொடுக்கவும். குழந்தைகள் மிகவும் விரும்பி குடிப்பார்கள். 

குறிப்பு : உடலிற்கு மிகவும் நல்லது. 

Thanks , http://kuzhanthaiyinunavu.blogspot.in/

ஆரோக்கிய உணவு (குழந்தைகளுக்கு)


குழந்தை ஆரோக்கியமாக வளர சுற்றமும் தாயன்பும் சத்தான உணவும் முக்கியம், குழந்தை இருக்கும் இடம் சுத்தமாக இருக்க வேண்டும்.

ஆரோக்கிய உணவு (குழந்தைகளுக்கு)
  • பாதாம் - 2
  • பிஸ்தா - 2
  • டேட்ஸ் - 2
  • அக்ரூட் - 2
  • திராட்சை - 2
  • முந்திரி - 2
  • பால் - தேவைக்கு
இவை அனைத்தையும் பாலில் சிறிது நேரம் ஊற வைக்கவும்.
அதன் பின் அவற்றை பேஸ்ட் போலவோ அல்லது நீர்க மில்க் ஷேக் போலவோ அடித்து குழந்தைகளுக்கு கொடுக்கலாம்.

குறிப்பு:
மருத்துவர் 1 வயதுக்கு மேல் உள்ள குழந்தைகளுக்கு இதை தினமும் ஒரு முறை கொடுக்க சொல்கிறார். இது குழந்தைகளின் உடலை ஆரோகியமாக வைக்குமாம். அதே போல் 8 மாதத்துக்கு மேல் உள்ள குழந்தைகளின் உணவில் அவசியம் 1 தேக்கரண்டி நெய் அல்லது வெண்ணை சேர்த்து விட வேண்டும்.

Thanks , http://kuzhanthaiyinunavu.blogspot.in/

பேச்சுப் பிரச்னைக்கு சத்துக் குறைவான உணவுவை தவிருங்கள்..

குழந்தைகளுக்குப் பேச்சுப் பிரச்னை உண்டாக சத்துக் குறைவான உணவும் ஒரு காரணம். உணவில் போதுமான சத்து இல்லாத காரணத்தால், நரம்பில் கோளாறு ஏற்பட்டு பேச்சுத்திறன் குறைபாடு உண்டாகிறது. இதற்கு ‘குளூட்டன் ப்ரீ டயட்’ தர வேண்டும். உணவு வகைகளை நன்றாக வேக வைத்துத் தர வேண்டும். பதப்படுத்தப்பட்ட அரிசியை சமையலுக்கு பயன்படுத்தலாம். முழு தானியங்களாக எதையும் தரக்கூடாது. 

அவற்றையும் பதப்படுத்தப்பட்ட நிலையில் தரவேண்டும். 8 தினசரி உணவில் ஜின்க், விட்டமின் டி, ஈ சத்துக்குறைபாட்டின் காரணமாகவும் இப்பிரச்னை அதிகரிக்கும். மெக்னீசியம் பற்றாக்குறையின் காரணமாக குழந்தையின் மொத்த வளர்ச்சியுமே பாதிப்புக்கு உள்ளாகும். இச்சத்துகள் அதிகம் உள்ள உணவுகளை எடுத்துக் கொள்ள வேண்டும்.

8 க்ளூட்டன் ப்ரீ டயட், பச்சைக்காய்கறிகள், முட்டை, பட்டாணி வகைகள், சாண்ட் விச், உருளைக்கிழங்கு, பிரவுன் ரைஸ் ஆகியவற்றை சேர்த்துக்கொள்வது அவசியம். 8 காலை உணவில் பதப்படுத்தப்பட்ட அரிசி சாதம் ஒரு கப், கொழுப்பு நீக்கிய பால் அல்லது வாழைப்பழம் ஒன்று கொடுக்கலாம்.

11 மணிக்கு பழங்கள், முந்திரிப்பருப்பு, கொட்டை வகைகள். க்ளூட்டன் ப்ரீ சாக்லெட் சாப்பிடத் தரலாம். பிரவுன் ரைஸ், பிரட் டோஸ்ட், ஆப்பிள் அல்லது ஆப்பிள் ஜூஸ் தரலாம். மதியம் பதப்படுத்தப்பட்ட அரிசி சாதத்துடன் வேகவைத்த முட்டை, பாலக் கீரை, வெள்ளரிக்காய், பீன்ஸ் உள்ளிட்ட காய்கறிகளில் ஏதாவது ஒன்று தரலாம். அசைவ உணவை நன்றாக வேக வைத்து மசித்த நிலையில் தர வேண்டும். இரவில் எளிதில் ஜீரணம் ஆகக்கூடிய உணவைக் கொடுக்கலாம்.

எந்த சந்தோஷமும் நிரந்தரமல்ல

எந்த சந்தோஷமும் நிரந்தரமல்ல..
எந்த சூழ்நிலையும் நிரந்தரமல்ல..
உயந்த நிலையும் உனக்கு வரலாம்..
தாழ்ந்த நிலையும் உனக்கு வரலாம்..
இருந்த நிலை மட்டும் மறந்து போகாதே..
யாருக்கும் பயனற்ற ஜடமாகவே இறந்து போகாதே..
உனக்கு யாரும் தேவையில்லாமல் இருக்கலாம்..
ஆனாலும் யாருக்கேனும் நீ தேவைப்படலாம்..

சுண்டைக்காய்

நாம் அன்றாடம் உணவில் சேர்க்கும் சுண்டைக்காய் ஏராளமான மருத்துவ குணங்களை கொண்டுள்ளது. இந்த காய் கசப்பு சுவை கொண்டிருந்தாலும் உடலுக்கு ஊட்டச்சத்தாக மாறி உடலை ஆரோக்கியமாகவும், நீண்ட ஆயுளையும் கொடுக்கிறது. குடல்புண்களை ஆற்றும் சுண்டைக்காயில் காட்டுச் சுண்டை, நாட்டுச் சுண்டை என இருவகை உண்டு. 

என்ன சத்து?
விட்டமின் சி.குளுக்கோசைடுகள், போன்ற பல வேதிப்பொருட்கள் பிரித்தெடுக்கப்பட்டுள்ளன. டார்வோனின் ஏ, டார்வோனின் பி, பேனிகுனோஜெனின், டார்வோஜெனின்.

யார் சாப்பிடலாம்?
சிறுவர்கள் வாரம் இருமுறை சாப்பிட்டால் வயிற்றில் பூச்சி சேராது. ஆஸ்துமா நோயாளிகள் தினசரி சாப்பிட மூச்சுத்திணறல் குறையும். கர்ப்பிணிப் பெண்கள் மாதம் ஒரு நாள் சாப்பிடலாம்.

என்ன பலன்கள்?

கிருமிகளை, வயிற்றுப் பூச்சிகளை அழிக்கும். நுரையீரலுக்கு செயல் திறன் தரும். சளியைக் கரைக்கும்.

சுண்டைக்காயின் இலைகள், வேர், கனி முழுத்தாவரமும் மருத்துவ குணம் உடையது. இலைகள் ரத்தக் கசிவினை தடுக்கக் கூடியவை. கனிகள் கல்லீரல் மற்றும் கணையம் தொடர்பான நோய்களுக்கு மருந்தாகின்றன.

வயிற்றுக் கிருமிகள் உள்ளவர்கள் வாரம் மூன்று முறை சுண்டைக்காய் சாப்பிட்டு வந்தால் வயிற்றுக் கிருமி, மூலக் கிருமி போன்றவை அகலும். வயிற்றுப்புண் ஆறும். வயிற்றின் உட்புறச் சுவர்கள் பலமடையும்.

மலைக்காடுகளில் தானாக வளர்ந்து அதிகம் காணப்படுவது மலைச்சுண்டை. இவை பெரும்பாலும் வற்றல் செய்யப் பயன்படுகிறது.

சுண்டைக்காயை உலர்த்தி பொடியாக்கி சூரணம் செய்து நீரில் கரைத்து சாப்பிட்டு வந்தால் ஆசனவாய் அரிப்பு நீங்கும். மலக்கிருமிகள் மற்றும் மூலக்கிருமிகள் அகலும்.

சுண்டைக்காயுடன், மிளகு, கறிவேப்பிலை சேர்த்து கஷாயம் செய்து சிறு குழந்தைகளுக்குக் கொடுத்து வந்தால், மூலக்கிருமி, மலத்துவாரத்தில் பூச்சுக்கடி போன்றவை நீங்கும்.

நீரிழிவுக்கு மருந்து முற்றின சுண்டைக்காயை நசுக்கி மோரில் போட்டு ஊறவைத்து வெயிலில் காயவைத்து எடுத்து பத்திரப்படுத்திக்கொண்டு தினமும் எண்ணெயில் வறுத்து சாப்பிடலாம் அல்லது வற்றல் குழம்பாக்கி சாப்பிடலாம். இது மார்புச்சளியைப் போக்கும். குடலில் உள்ள அசடுகளை நீக்கும்.

சுண்டை வற்றலை நெய்யில் வறுத்து பொடியாக்கி சோற்றுடன் சேர்த்து பிசைந்து சாப்பிட்டு வந்தால் நீரிழிவு நோயினால் உண்டாகும் கை கால் நடுக்கம், மயக்கம், உடற்சோர்வு, வயிற்றுப் பொருமல் முதலியவை நீங்கும். வாந்தி மயக்கம் நீங்கும்.

சுண்டைக்காயை இரண்டாக நறுக்கி அதனுடன் பூண்டு, சின்ன வெங்காயம், மிளகு, சீரகம், கறிவேப்பிலை, கொத்தமல்லி இலை சேர்த்து நன்கு கொதிக்க வைத்து சூப் செய்து அருந்தி வந்தால் கபக்கட்டு, இருமல், மூலச்சூடு, மூலக்கடுப்பு, மூலத்தில் ரத்தம் வெளியேறுதல், போன்றவை நீங்கும்.

இரத்தத்தை சுத்தப்படுத்தி, சிறுநீரைப் பெருக்கும். உடல் சோர்வை நீக்கும். தலைச்சுற்றல், வாந்தி, மயக்கம் நீங்கும். மேலும் மார்புச்சளி, தொண்டைக்கட்டு போன்றவற்றிற்கு சிறந்த நிவாரணியாகும். ஆஸ்துமா, காசநோயாளிகள் இதனை அருந்திவந்தால் பாதிப்பு குறையும்.


Thanks, Doctor Vikatan

அட அப்படியா.......!


சாலைகளில் உள்ள மைல்கல் மூலம் நாம் செல்ல வேண்டிய தூரத்தை மட்டுமல்ல... இன்னொரு விஷயத்தையும் தெரிஞ்சுக்கலாம். மைல் கல்லில் உள்ள கலரை வைத்து அது எந்த சாலை என்பதை அறிந்து கொள்ளலாம். இதோ தெரிஞ்சுக்கோங்க...

* மைல்கல்லில் மஞ்சள் மற்றும் வெள்ளை கலர் இருந்தால் அது தேசிய நெடுஞ்சாலை

* பச்சை மற்றும் வெள்ளை கலர் என்றால் மாநில நெடுஞ்சாலை

* நீலம், வெள்ளை கலர் இருந்தால் மாவட்டசாலை

* பிங்க் அல்லது கருப்பு, வெள்ளை நிறம் இருந்தால் ஊரக சாலை.

சனி, 18 மே, 2013

கல்யாணம் என்பது…..


‘திருமணம் என்பது சரியான துணையைத் தேர்ந்தெடுப்பது அல்ல; சரியான துணையாக இருப்பது’

(Marriage is not selecting the right person, but being the right person) என்று ஒரு பழமொழி உண்டு.

ஆம்… பெற்றோர்களும், சுற்றத்தார்களும், நண்பர்களும் சூழ நின்று ஆசீர்வதித்து நடத்தி வைக்கும் திருமணத்தின் உண்மையான அர்த்தம், ஆண் – பெண் இருவரும் வாழ்ந்து காட்டுவதில்தான் இருக்கிறது!

அப்படி நீங்களும் ஒரு ஆத்மார்த்த இணையாக, துணையாக இருக்க… தம்பதிகளுக்கும், தம்பதி ஆகப் போகிறவர்களுக்கும் இல்லற மந்திரம் போதிக்கிறது இந்தக் கட்டுரை.

மந்திரங்கள் உங்கள் மணவாழ்க்கையில் மகிழ்ச்சியை நிரப்பட்டும்!
இப்போதெல்லாம் நிச்சயத்தின்போதே சபையில் வைத்து பெண்ணுக்கு மொபைல் போனை பரிசாக வழங்குகிறார் மாப்பிள்ளை… முகூர்த்த நாள்வரை இருவரும் பரஸ்பரம் பேசி, பகிர்ந்து கொள்வதற்கு! பெரும்பாலான பெற்றோர்களும்கூட, தம் பிள்ளைகளின் இதுபோன்ற திருமணத்துக்கு முந்தைய பழக்கங்களுக்கு அலட்டிக்கொள்ளாமல் பச்சைக்கொடி காட்டிவிடுகின்றனர். எனவே, நிச்சயம் முடிந்த நாளிலிருந்து திருமண நாள் வரையிலான இந்தக் காலத்தை, ‘மண இணைவு’க்கு தங்களை மன ரீதியாக தயார்படுத்திக் கொள்ள மாப்பிள்ளை – பெண் இருவருமே பயன்படுத்திக்கொள்வது குட்!

1. கற்பனையில் அவுஸ்திரேலியாவுக்குப் போய் தாராளமாக டூயட் பாடுங்கள். அதேசமயம், துணையின் வீட்டு உறவுகளோடு சந்தோஷமாக இருக்கும் பாச சீன்களையும் மனதில் ஓடவிடுங்கள். இது புதிய உறவுகளுடன் சுமுகமாவதற்கான மனப் பயிற்சியாக அமையும்.

2. வருங்கால துணையோடு பீச், கோயிலுக்குப் போவதில் தவறில்லை. அதேபோல அவர்கள் வீட்டுக்கும் ஒருமுறை விஜயம் செய்யுங்கள். கூச்சமாக இருக்கிறதா..? சரி, போனிலாவது மாமனார், மாமியார், நாத்தனார் என மற்ற உறவுகளோடு பேசிப் பழகுங்கள். அது திருமணம் முடிந்து நீங்கள் அந்த வீட்டில் கால் எடுத்து வைக்கும்போது, அவர்களுக்கும் உங்களுக்கும் இடையேயான அந்நியத்தைக் குறைத்திருக்கும்.

3. ஒருவேளை நீங்கள் அவர்களின் வீட்டுக்கு வருவது, பேசுவது தங்களுக்குப் பிடிக்கவில்லை என்று அவர்கள் சொன்னாலோ, செய்கையால் உணர்த்தினாலோ ‘டல்’ ஆகாதீர்கள், அவர்களை ‘பழைய பஞ்சாங்கம்’ என நினைக்காதீர்கள். புன்னகையோடு ஏற்று சந்திப்பைத் தவிருங்கள்.
4. தயக்கத்தின் காரணமாகக்கூட துணையின் உறவுகள் ஆரம்பத்தில் உங்களுடன் ஒட்டாமல் இருக்கலாம். உடனே அவசரப்பட்டு அவர்களைப் பற்றி உங்களுக்குள் தீர்ப்பு எழுதி, அதே மன நிலையோடு அவர்களை அணுகாதீர்கள்.

5. நிச்சயதார்த்த பஜ்ஜி, சொஜ்ஜி ஆறும் முன்பே அறிவுரைகள் ஆரம்பித்துவிடும். எல்லாவற்றையும் கேட்டு திகிலாகாதீர்கள். எது சரி, எது தவறு என அமைதியாக யோசித்து சரியானதை ‘டிக்’ அடியுங்கள்.
6. ‘கைக்குள்ள போட்டுக்க… முறுக்கா இரு’ போன்ற பிறந்த வீட்டு உபதேசங்களை செவிப்பறையோடு நிறுத்திக் கொள்ளுங்கள். அந்த விதை, பின் பல பிரச்னைகளுக்கு வேராகிவிடும்.

7. துணையைப் பற்றிய எதிர்பார்ப்பை ஆரம்பத்திலேயே அதிகம் வளர்த்துக் கொள்ளாதீர்கள். முடிந்தவரை மனதை காலி பையாக வைத்துக் கொண்டு கிடைப்பதை அமைதியாகச் சேகரியுங்கள். பிடிக்காததை பிறகு தவிர்த்துவிடலாம்.

8. இந்தக் கால கட்டத்தில் திருமண முறிவு, கல்யாணத்தன்று தகராறு போன்ற நெகட்டிவ் செய்திகளைக் கேட்கவோ, படிக்கவோ சந்தர்ப்பம் வருவதுபோல் தெரிந்தால், கூடுமானவரை அவற்றைத் தவிர்த்துவிடுங்கள். நல்லவை மட்டுமே மனதுக்குள் போகட்டும்.

மேரேஜ் கவுன்சிலிங் அவசியமாகும் சூழல் இது!

பெண்களுக்கு பதினாறிலும், ஆண்களுக்கு இருபதிலும் என நம் முந்தைய தலைமுறை திருமணங்கள் முடித்து வைக்கப்பட்டபோது, அந்த வயதில் இருவருக்குமே அவரவர்க்கென பெரிய அளவில் தனிப்பட்ட விருப்பு, வெறுப்புகள் வளர்ந்திருக்கவில்லை. எனவே, நாணலாக வளைந்து அவர்கள் தங்கள் வாழ்க்கையை வாழ்ந்து பழகிக் கொண்டார்கள். ஆனால், இன்றைய சமூக, பொருளாதர மாற்றங்களால் பெண்கள் 26 வயதுக்கு மேலும், ஆண்கள் 29-35 வயதிலும்தான் திருமணம் செய்து கொள்கிறார்கள். இந்தக் காலகட்டத்தில் இருவருக்குமே சுயசிந்தனை, சுதந்திரம், தனிப்பட்ட விருப்பு, வெறுப்புகள் என்றெல்லாம் அவரவர்களுக்கென கேரக்டரை சமரசங்களின்றி அமைத்துக் கொள்கிறார்கள்.

அப்படி வெவ்வேறு துருவங்களாக இருக்கும் இருவர், மணவாழ்க்கையில் இணையும்போது முட்டி முளைக்கின்றன பிரச்னைகள். எனவே, மாலை சூடிக்கொள்ளும் முன்னர் அவர்களுக்கு திருமணம் பந்தம், வாழ்வியல் பற்றி ஆலோசனைகள் அவசியமாகிறது. அவற்றுள் சில இங்கே…

9. சாதாரண வேலை என்று நாம் நினைக்கும் எந்த வேலையுமே… பயிற்சிக்குப்பின்தான் சுலபமாக கைகூடும். அப்படியிருக்கும்போது ஆயிரங்காலத்துப் பயிர் திருமண பந்தத்தில் இணைய பயிற்சி இல்லாமல் எப்படி? குறிப்பாக மனதளவிலான பயிற்சிகள் அவசியம். அது சுயபயிற்சியாகவும் இருக்கலாம்… அனுபவம் வாய்ந்த பெரியோரின் வழிகாட்டுதல்களாகவும் இருக்கலாம். அல்லது குடும்பநல ஆலோசகர்களின் அறிவுரைகளாகவும் இருக்கலாம்.

10. துணையின் ‘ஆத்மார்த்த’ உறவாகிவிட வேண்டும் என்ற ஆசை சரிதான். ஆனால், திருமணம் நடந்த ஒரு நாளிலோ, ஒரு மாதத்திலோ அது நிகழ்ந்துவிடாது. அதற்கு அன்பு, நம்பிக்கை, பொறுமை, சகிப்புத்தன்மை, புரிதல் என பல விஷயங்கள் தேவைப்படுகின்றன. அவை நமக்குள் இருக்கிறதா என்பதை பரிசோதித்துக் கொள்வதும், இல்லாதவற்றை வளர்த்துக் கொள்வதும் முக்கியம்.

11. என்னதான் இருந்தாலும் உங்கள் பக்க உறவுகளோடு நீங்கள் இருப்பது போன்ற அந்நியோன்யத்துடன் துணையால் இருக்க முடியாது. அப்படி எதிர்பார்ப்பதும் தவறு. அதுபோன்ற விஷயங்களுக்கு மனதைப் பழக்கிக் கொள்ளுங்கள்.

12. நீங்கள் நெடுங்காலமாக பின்பற்றும் பழக்கத்தை மாற்றிக் கொள்ளும் சூழ்நிலையும் ஏற்படலாம். ‘அதெல்லாம் முடியாது’ என முரண்டு பிடிக்காமல், அட்லீஸ்ட் அதை தள்ளி வையுங்கள். தேவைப்படும்போது எடுத்துக் கொள்ளலாம்.

13. குறிப்பாக, உங்களுக்குத்தான் உயிர் தோழி-தோழன். உங்கள் துணைக்கல்ல. எனவே, அவர்களுக்கு நேற்றுவரை தந்த அதே முக்கியத்துவத்தை, நேரத்தை தர இயலாது என்பது உணருங்கள். ‘நான் கல்யாணமானாலும் மாறல’ என முறுக்காதீர்கள்.

14. குடும்ப வாழ்க்கையின் அடித்தளம் இரண்டு விஷயங்கள்… அன்பு, நம்பிக்கை. இவை இரண்டும் ஒன்றுடன் ஒன்று பின்னிப் பிணைந்தவை. ஒன்றின் நூலிழை அறுந்தாலும் இன்னொன்றில் நூலிழை அதுவாகவே அறுந்துவிடும் என்பதால் எப்போதும் இவை இரண்டிலும் நேர்மையாக இருப்பது ஆரோக்கியமானது.

வெள்ளி, 17 மே, 2013

இப்படித்தான் பல் துலக்க வேண்டும்...

1 முன் பற்களை கீழ் அசைவில், 45 டிகிரியில் பிரஷ்ஷை ஏந்தி, பற்கள் மற்றும் ஈறுகளை சுத்தம் செய்ய 
வேண்டும்.
2 பின் பற்களை மெதுவாக மேலும், கீழுமாக பிரஷ் செய்ய வேண்டும்.
3 கீழ் கடவாய் பற்களை உள்புறமாக மேல், கீழ் அசைவோடு சுத்தம் செய்ய வேண்டும்.
4 மேல் மற்றும் கீழ் முன் பற்களை உள்ளிருந்து, வெளியே பிரஷ் செய்ய வேண்டும்.
5 கடவாய் பற்களின் மேல் பகுதியை முன்பின் அசைவோடு மெதுவாக சுத்தம் செய்ய
வேண்டும்.
6 இறுதியாக நாக்கில் ஒட்டிக் கொண்டிருக்கும் உணவுப் பொருள்களை அகற்ற மற்றும் துர்நாற்றம் ஏற்படாமலிருக்க பிரஷ் செய்ய
வேண்டும்.

விளம்பரத்தில் காட்டுகிற மாதிரி பிரஷ் முழுக்க நிறைய பேஸ்ட் வைத்து பல் துலக்க வேண்டியதில்லை. வேர்க்கடலை அளவுக்கு பேஸ்ட் இருந்தாலே போதும். பேஸ்ட்டானது, பிரஷ்ஷின் உள்ளே இறங்கும்படி, அதன் அமைப்பு இருக்க வேண்டும். பல் துலக்கி முடித்ததும், விரல் நுனிகளால், ஈறுகளை மென்மையாக மசாஜ் செய்து விடலாம்.

பற்களை மிதமான அழுத்தம் கொடுத்துத் தேய்த்தால் போதும். ஆக்ரோஷமாக, அதிக அழுத்தத்துடன் தேய்த்தால் எனாமல் பாதிக்கப்படும். எனாமல்தான் பற்களுக்குக் கவசம்.

3 மாதங்களுக்கொரு முறை பிரஷ்ஷை மாற்ற வேண்டும். வாய்துர்நாற்றம் இருப்பவர்கள், பற்களில் கூச்சம் இருப்பவர்கள், ரத்தம் கசிவதை உணர்பவர்கள் எல்லாம், பல் மருத்துவரின் ஆலோசனையின் பேரில், பிரத்யேக பற்பசை மற்றும் மவுத்வாஷ் உபயோகிக்கலாம்.

கோடைக் காலத்துல தாகத்தைத் தணிக்க பானகம்


புளியை நெல்லிக்காய் அளவு எடுத்துக்குங்க. வெல்லம் ஒரு கைப்பிடி, சுக்குத்தூள், ஏலக்காய்த்தூள் ஒரு சிட்டிகை அளவுல எடுத்துக்கலாம். புளியையும், வெல்லத்தையும் தண்ணியில கரைச்சி, வடிகட்டி அடுப்புல ஒரு கொதிவிட்டு இறக்கிடலாம். அடுத்து, ஏலக்காய்த்தூள், சுக்குத்தூளையும் தூவி விட்டு, நல்லா கலக்கினா... பானகம் தயார். கோடைக் காலம் மட்டுமில்லீங்க, மத்த நேரத்தலயும்கூட இந்தப் பானகத்தைக் குடிச்சி, உடம்பைத் தெம்பாக்கலாம்.

இந்தப் பானகத்தைக் குடிச்சா... தாகமும் அடங்கும். நீர்க்கடுப்பும் வராது.உடம்பும் உற்சாகமா இருக்கும்.

விலை உயர்ந்த பொருள்?


உலகின் மிகப்பெரிய தத்துவஞானி எனப் போற்றப்பட்ட ரஸ்ஸல் பெர்னாட் வெளிநாட்டுப் பயணம் முடித்து தாய்நாடு திரும்பினார். அங்கு விமான நிலைய அதிகாரிகள் அவரைச் சோதனையிட்டனர்.

“உங்களிடம் இருக்கக் கூடிய விலைமதிப்பேறிய பொருட்கள் என்ன? அதையெல்லாம் வெளியே எடுத்துக் காட்டி விடுங்கள்.” என்று கண்டிப்பான குரலில் கூறினர் விமான நிலைய அதிகாரிகள்.

ரஸ்ஸல் அமைதியாக, “என்னிடம் விலைஉயர்ந்த பொருள் ஒன்று மட்டும்தான் உள்ளது. அதை வெளியில் எடுக்கவோ, உங்களிடம் காட்டவோ முடியாது” என்றார்.

அதிகாரிகளுக்கு கோபம் வந்தது.

“நீங்கள் எடுத்துக் காண்பிக்காவிட்டால் நாங்கள் பறிமுதல் செய்ய நேரிடும். அப்பொழுது மிகவும் வருத்தப்படுவீர்கள்” என்று எச்சரித்தனர்.

மறுபடியும் ரஸ்ஸல் அதே புன்னகையுடன், “என்னிடம் உள்ள விலையுயர்ந்த பொருள் என்னுடைய அறிவுதான். அதைத் தாங்கள் எப்படி பறிமுதல் செய்ய முடியும்?” என்று கேட்டார்.

அப்போது அங்கு வந்த சிலர், “இவர் நம்நாட்டு தத்துவஞானி ரஸ்ஸல் பெர்னாட்” என்றனர்.

உடனே விமான நிலைய அதிகாரிகள், “அய்யா, எங்களை மன்னித்து விடுங்கள். நீங்கள் போகலாம்” என்று அவரை வழியனுப்பி வைத்தனர்.

பாதிப்பேர் முட்டாள்கள்!

கூட்டம் ஒன்று நடந்து கொண்டிருந்தது.

பேச்சாளர் ஒருவர், "இந்தக் கூட்டத்தில் பாதிப்பேர் முட்டாள்கள்" என்று சொல்லி விட்டார்.

கூட்டத்தினர் எதிர்த்துக் கூச்சல் போட்டார்கள். அவர் தனது பேச்சை வாபஸ் வாங்க வேண்டும் என்று கத்தினார்கள்.

உடனே பேச்சாளர், "மன்னிக்கவும். இந்தக் கூட்டத்தில் பாதிப்பேர் முட்டாள்கள் இல்லை" என்று கூறி வாபஸ் வாங்கினார்.

அதன் பிறகு கூட்டம் அமைதியானது.

தண்டனைக்கு உரியவன் தந்தையே!

கிரேக்கத் தத்துவ ஞானியான டயோஜனஸ், ஒரு வீதியின் வழியே நடந்து கொண்டி ருந்தார். வழியில், சிறுவன் ஒருவனை பலரும் சேர்ந்து அடித்துக் கொண்டிருப் பதைக் கண்டார். அவர்களை விலக்கி விட்டவர், சிறுவனை அடிப்பதற்கான

காரணத்தைக் கேட்டார். அவர்கள், "கேட்கச் சகிக்காத வார்த்தைகளால்... அசிங்கமாக பேசியதால் இவனை அடிக்கிறோம்!'' என்றனர்.

உடனே, "அதற்காக இந்தச் சிறுவனை அடிக்காதீர்கள். இவனின் தந்தை யார் என்பதை அறிந்து, அவனைப் பிடித்து அடியுங்கள். மகனுக்கு நல்ல பழக்க வழக்கங்களைக் கற்றுத் தராத தந்தையே தண்டனைக்கு உரியவன்'' என்றார் டயோஜனஸ்!

-அரூர். மு. மதிவாணன்

புதன், 15 மே, 2013

வாழை இலையின் பயன்கள்

1. வாழை இலையில் சாப்பிடுவதால் இளநரை வராமல், நீண்ட நாட்களுக்கு முடி கருப்பாக இருக்கும்.

2. தீக்காயம் ஏற்பட்டவர்கள் வாழை இலை மீது தான் படுக்க வைக்க வேண்டும் அப்பொழுதுதான் சூட்டின் தாக்கம் குறையும்.

3. சாப்பாடு வாழை இலையில் பேக்கிங் செய்தால் சாப்பாடு கெடாமலும், மனமாகவும் இருக்கும்.

4. பச்சிளம் குழந்தைகளை உடலுக்கு நல்லெண்ணெய் பூசி வாழை இலையில் கிடத்தி காலை சூரிய ஒளியில் படுக்க வைத்தால் சூரிய ஒளியில் இருந்து பெறப்படும் விட்டமின் டி யையும் இலையில் இருந்து பெறப்படும் குளுமையும் குழந்தைகளை சரும நோயில் இருந்து பாதுகாக்கும்.

5. காயம், தோல் புண்களுக்கு தேங்காய் எண்ணெய்யை துணியில் நனைத்து புண்மேல் தடவு வாழை இலையை மேலே கட்டு மாதிரி கட்டி வந்தால் புண் குணமாகும்.

6. சின்ன அம்மை, படுக்கைப் புண்ணுக்கு வாழை இலையில் தேன் தடவி தினமும் சில மணி நேரம் படுக்க வைத்தால் விரைவில் குணமாகும்.

7. சோரியாசிஸ், தோல் அழற்சி, கொப்பளங்கள் பாதிக்கப்பட்ட இடத்தில் வாழை இலையை கட்டி வைக்க வேண்டும்.

தலை வாழை இலை என்றதும் அனைவருக்கும் ஞாபகம் வருவது விருந்து தான் . அது சைவ உணவாக இருந்தாலும் அசைவ உணவாக இருந்தாலும் இலையில் தான் நிச்சயம் இருக்கும். இன்றைய வேகமான முன்னேற்றத்தில் வாழை இலை மறைந்து கொண்டு இருக்கின்றது அதுவும் நகர் புறங்களில் தட்டு அல்லது பாலீதின் பேப்பரில் தான் இங்கு இருக்கும் ஓட்டல்களில் உணவு கிடைக்கிறது. இது காலமாற்றத்தினால் ஏற்பட்ட மாற்றம் நகர்புறத்தில் இருப்பவர்கள் சாப்பிட்டுத்தான் ஆகவேண்டும். ஆனால் நம்மில் பலர் தனது சொந்த கிராமத்திற்கு விடுமுறை நாட்களில் செல்லும் போது தட்டிலேயே வாடிக்கையாக உணவு அருந்துகின்றனர், அதை மாற்ற முயற்ச்சிக்கலாம்.

இலையில் சாப்பிடும்போது ஏற்படும் நன்மைகளை அறியும் போது ஏன் நம் முன்னோர்கள் இலையில் சாப்பிட்டார்கள் என நமக்கு தெரியவரும்.
நம் முன்னோர்களின் வாழ்க்கை முறையில் எத்தனை சிறப்பு அம்சங்கள் அவர்கள் வகுத்துள்ள முறைப்படி நாம் உணவு உண்டு வேலை செய்தாலே நிச்சயம் நோயின்றி வாழலாம் அதற்கு வாழை இலையில் சாப்பிடுவதும் ஓர் உதாரணமே.

வாழைமரத்தில் குருத்தை கொஞ்சம் கிளரி விட்டு (வாழை நீர் தேங்குமளவுக்கு) சீரகம் கொஞ்சம் போட்டு சின்ன வாழை இலையால் கிளறிய பகுதியை மூடி வைத்து அதில் ஊறும் நீரை பருகினால் பேதி, வயிற்று வலி போன்றவை நீங்கும்.

நன்றி:தைக்கால்.காம்

வீட்டில் கட்டாயம் ஒரு வாழை மரம் வளருங்கள், இலைக்காக மட்டுமாவது...

வெள்ளரி - 25 மருத்துவ பயன்கள்

1. காய்கறிகளுள்ளே குறைவான கலோரி அளவைக் கொண்டிருப்பது வெள்ளரிக்காய்தான். 100 கிராம் வெள்ளரிக்காயில் கிடைக்கும்கலோரி 18தான்.

2. விஞ்ஞானிகள் வெள்ளரிக்காயைப் பழவகையில் சேர்த்துள்ளனர்; ஆனால், மக்கள் இதைக்காய்கறிப் பட்டியலில் சேர்த்துள்ளனர்;பச்சையாகவும், சமையலில் சேர்த்தும் சாப்பிடுகின்றனர்.

3. வெள்ளரிக்காய், குளிர்ச்சியானது. அப்படியே உண்ணத்தூண்டும் அளவுக்குத் தனிச் சுவையுடையது. நன்கு செரிமானம் ஆகக்கூடியது. சிறுநீர்ப் பிரிவைத் தூண்டச் செய்வது, இரைப்பையில் ஏற்படும் புண்ணையும் மலச்சிக்கலையும் குணப்படுத்தக்கூடியது.

4. இக்காய் பித்தநீர், சிறுநீரகம் ஆகியன சம்பந்தப்பட்ட அனைத்துக் கோளாறுகளையும் குணமாக்குவதில் தலைசிறந்து விளங்குகிறது.

5. அண்மைக்கால ஆராய்ச்சி முடிவுகளை, வெள்ளரிக்காய் கீல்வாதம் சம்பந்தப்பட்ட கோளாறுகளையும் குணமாக்குவதில் வல்லமைமிக்க உணவாகத் திகழ்வதையும் நிரூபித்துள்ளன.

6. ஆந்திர உணவில் எப்போதும் வெள்ளரிக்காயும் பாசிப்பருப்பும் கலந்து தயாரிக்கப்படும் பச்சடி உண்டு. காரணம்,ஆந்திரசமையலில் காரம் அதிகம். 100கிராம் வெள்ளரிக்காயில் 96 சதவிகிதம் ஈரப்பதம் உள்ளது. அது உணவில் உள்ள காரத்தை மட்டுப்படுத்தி இடையில் அடிக்கடி தண்ணீர் அருந்தாமல் சாப்பிட வைக்கிறது. மீதி நான்கு சதவிகிதத்தில் உயர்தரமான புரதம், கொழுப்பு,மாவுச்சத்து, தாது உப்புகள், கால்சியம்,பாஸ்பரஸ், இரும்பு, வைட்டமின் ‘பி’ஆகியவை அமைந்துள்ளன; வைட்டமின்‘சி’யும் சிறிதளவுஉண்டு.

7. சாதாரணமாக வெள்ளரிக்காயைப் பச்சையாகக்கடித்துச் சாப்பிடுவது வழக்கம். ஆனால், வெள்ளரிக்காய்களை மிக்ஸி மூலம் சாறாக்கியும் அருந்தலாம்.

8. இளநீரைப் போன்றே ஆரோக்கிய ரசமாய் வெள்ளரிக்காய்ச் சாறு திகழ்கிறது.

9. வெள்ளரியைச் சமைத்துச்சாப்பிடும் போது பொட்டாசியம், பாஸ்பரஸ் ஆகிய உப்புகள் அழிந்து விடுகின்றன. எனவே,வெள்ளரிச்சாறுக்கு முக்கியத்துவம் கொடுங்கள்.

10. வயிற்றுப்புண் உள்ளவர்கள் இரண்டுமணி நேரத்திற்கு ஒரு தடவை ஆறு அவுன்ஸ் வீதம் வெள்ளரிச் சாறு அருந்தினால் குணம் தெரியும்.

11. காலராநோயாளிகள் வெள்ளரிக்கொடியின் இளந்தளிர்களை ரசமாக்கி, அதனுடன் இளநீரையும் கலந்து, ஒருமணிக்கு இரண்டு அவுன்ஸ் வீதம் அருந்த வேண்டும்.

12. வறண்ட தோல், காய்ந்து விட்ட முகம் உள்ளவர்கள், வெள்ளரிக்காய் சீசனில் தினமும் வெள்ளரிக்காய்ச் சாறு சாப்பிட்டு வறட்சித் தன்மையைப் போக்கலாம்.

13. தினமும் மிகச்சிறந்த சத்துணவு போல் சாப்பிடத் தயிரில் வெள்ளரிக் காய்த்துண்டுகளை நறுக்கிப் போடவும்.அத்துடன் காரட், பீட்ரூட், தக்காளி,முள்ளங்கி ஆகியவற்றின் சிறிய துண்டுகளையும போட்டுவைத்து வெஜிடேபிள் சாலட் போல் பரிமாற வேண்டும். அது இல்லத்தில் உள்ள அனைவருக்கும் சத்துணவு கிடைக்கச் செய்கிறது. மேலும் இது நோய் எதிர்ப்புச் சக்தியை அளிக்கும் ஆற்றலையும் கொஞ்சம் கொஞ்சமாக அதிகரிக்க ச்செய்யும்.

14. இக்காயில் உள்ள சுண்ணாம்புச் சத்து இரத்தக் குழாய்களைத் தளர்த்தி உயர் இரத்த அழுத்தத்தைக் குறைக்க வல்லது.

15. மலச்சிக்கலுக்காகச் சிலர் ஏதாவது ஒரு பழம் சாப்பிடுவார்கள். அதற்குப்பதிலாகத் தினசரி இரண்டு வெள்ளரிக்காய்களைச் சாப்பிட்டால் மலச்சிக்கலின்றி எப்போதும் குடல் சுத்தமாய் இருக்கும்.

16. முகத்தில் உள்ள கரும் புள்ளிகள்,வறண்ட தோல், பருக்கள் முதலியவை குணமாக வெள்ளரிக்காயை அரைத்து முகத்தில்பூசவேண்டும். பதினைந்து நிமிடங்கள் முகத்தில் இந்தப் பூச்சு இருக்கவேண்டும். தொடர்ந்து இந்த முறையில் பூசினால் முகம் அழகு பெறும். பெண்கள் இந்த முறையைத் தினசரி பின்பற்றலாம்.

17. நீரிழிவு நோயாளிகள் எடை குறைய விதையுடன் சேர்த்தே வெள்ளரிக்காய் சாற்றை அருந்த வேண்டும். சிறிய வெள்ளரிக் காய் என்றாலும் பெரியவகை வெள்ளரிக்காய் என்றாலும், அதை விதையுடன் தான் அரைத்துச் சாறு அருந்தவேண்டும். இதனால் ஆண்மை பெருகும்.

18. முடிவளர்ச்சிக்கு குறிப்பாகப் பெண்கள் வெள்ளரிச் சாற்றை அருந்த வேண்டும்.வெள்ளரியில் உள்ள உயர் தரமான சிலிகானும், சல்பரும் முடி வளர்ச்சிக்குப் பயன்படுகின்றன. இந்தச் சாற்றுடன் இரு தேக்கரண்டி காரட் சாறு, இரு தேக்கரண்டி பசலைக் கீரைச்சாறு,பச்சடிக் கீரைச் சாறு போன்ற வற்றையும் சேர்த்து அருந்தினால் முடி நன்கு வளரும். முடிகொட்டுவதும் நின்றுவிடும்.

19. காரட்கிழங்கைப் போலவே, வெள்ளரிக் காயில் தோல் பகுதி அருகில் தான் தாது உபபுகளும், வைட்டமின்களும் அதிக அளவில் உள்ளன. எனவே, தோல் சீவாமலேயே வெள்ளரிக்காய்களை நன்கு கழுவிப் பயன்படுத்துங்கள்.

20. மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு கூட இந்தியாவில் தோன்றிய வெள்ளரிக்காயின் தாவர விஞ்ஞானப் பெயர் குக்குமிஸ்ஸாடிவாஸ் என்பதாகும். இது மலைப்பகுதிகளில் நன்கு வளர்கிறது. இமயமலைப் பகுதியிலிருந்து வரும் சிக்கிம் வெள்ளரி15 அங்குலம் நீளமும் 6 அங்குலம் கனமும் உள்ளது.

21. ஜமைகாநாட்டு வெள்ளரிக்காய் எலுமிச்சம்பழ அளவிலும், நிறத்திலும் இருக்கிறது. கிழக்கத்திய நாடுகளில் வாசனைக்காக வெள்ளரி அதிகம் பயிராக்குகின்றனர். பிரிஸ்ஜில் இரு வாரங்கள் வரை வைத்து வெள்ளரிக்காய் களை பயன்படுத்தலாம்.

22. வெள்ளரியில் உள்ள நீர் சத்து நா வரட்சியைப் போக்குவதுடன் பசியை உண்டாக்கும். உடம்புக்குக் குளிர்ச்சியை உண்டு பண்ணும்.வெள்ளரியில் தாதுப் பொருட்களான சோடியம், கால்சியம், மக்னேசியம், இரும்பு, பாஸ்பரஸ், கந்தகம், சிலிகன், மற்றும் குளோரின் இதில் உண்டு .இரத்ததில் சிவப்பணுக்களை உற்பத்தி செய்யும் பொட்டாசியம் அதிகம் உண்டு. ஈரல், கல்லீரல் சூட்டைத் தணிப்பதால் நோய் குணமாகும்.

23.செரித்தல் அதிகம் ஏற்படுவதால் பசி அதிகமாகும். வெள்ளிரியை உண்பதால் 'பசிரசம்' எனும் ஜீரண நீர் சுரக்கிறது என்பது விஞ்ஞானிகளின் கண்டு பிடிப்பு. இது மலத்தைக் கட்டுப்படுத்தும், பித்தத்தைக் குறைக்கும், உள்ளரிப்பு, கரப்பான் போன்ற சரும நோய்களைப் போக்கும் ஆற்றல் வெள்ளிரிக்கு உண்டு.

24.வெள்ளிரிப் பிஞ்சை உட்கொண்டால் மூன்று தோசமும் போகும் என்று பழைய வைத்திய நூல்கள் கூறுகின்றன. புகை பிடிப்போரின் குடலை நிகோடின் நஞ்சு சீரளிக்கின்றது .அதையும் போக்க வல்லது. மூளைக்குக் கபால சூட்டைத் தணித்து குளிர்ச்சியூட்டி புத்துணர்ச்சி தரும்.

25. கபம், இருமல், நுரையீரல் தொல்லையுள்ளவர்கள் வெள்ளரி சாப்பிடுவது நல்லதல்ல.

தகவல்: மூலிகை வளம் & பேஸ்புக்

*** அறிவோம் ஆயிரம் ***

இணைந்திருங்கள் எங்களுடன்...

பகிர்ந்துக் கொள்ளுங்கள் நண்பர்களுடன்...

தெரிந்து கொள்வோம் -சீத்தாப்பழம்

சீத்தாப்பழம் தனிப்பட்ட மணமும், சுவையும் கொண்டது. சீத்தாப்பழத்தின் தோல், விதை, இலை, மரப்பட்டை, அனைத்துமே அரிய மருத்துவ பண்புகளை கொண்டது. ஆங்கிலத்தில் சீத்தாப்பழத்திற்கு கஸ்டட் ஆப்பிள் என்றும், இந்தியில் சர்பா என்றும் பெயராகும். இதன் தாவரவியல் பெயர்- Annona squamosa என்று பெயர்.

சீத்தாப்பழத்தில்- நீர்சத்து அதிகமாக உள்ளது. மேலும் மாவுசத்து, புரதம், கொழுப்பு, தாது உப்புக்கள், நார்ச் சத்து, சுண்ணாம் புச்சத்து, பாஸ்பரஸ், இரும்பு சத்து போன்றவை அடங்கியுள்ளன. இத்தகைய சத்துக்கள் சீத்தாப்பழத்தில் அடங்கியிருப்பதனால் தான் இப்பழம் மிகுந்த மருத்துவ பயன்களை அடக்கியுள்ளது.

மருத்துவ பயன்கள்:

1. சீத்தாப்பழத்தை உண்ண செரிமானம் ஏற்படும். மலச்சிக்கல் நீங்கும்.

2. சீத்தாப்பழச்சதையோடு உப்பை கலந்து உடையாத பிளவை பருக்கள் மேல் பூசிவர பிளவை பழுத்து உடையும்.

3. இலைகளை அரைத்து புண்கள் மேல் போட்டுவரை புண்கள் ஆறும்.

4. விதைகளை பொடியாக்கி சம அளவு பொடியுடன் சிறுபயிறு மாவு கலந்து தலையில் தேய்த்து குளித்;து வர முடி மிருதுவாகும். பேன்கள் ஒழிந்து விடும்.

5. சீத்தாப்பழம் குளிர் மற்றும் காய்ச்சலை குணப்படுத்தும்.

6. சீத்தாப் பழ விதை பொடியோடு கடலை மாவு கலந்து எலுமிச்சை சாறில் குழைத்து தலையில் தேய்த்து ஊறிய பின்னர் குளித்து வர முடி உதிராது.

7. சீத்தாப்பழ விதைப்பொடியை மட்டும் தலையில் தேய்த்து குளித்து வந்தால் முடி உதிராது.

8.சிறுவர்களுக்கு சீத்தாப்பழம் கொடுத்துவர எலும்பு உறுதியாகும். பல்லும் உறுதியாகும்.

9.சிறிதளவு வெந்தயம், சிறுபயிறு, இரண்டையும் இரவு ஊறவைத்து பின்னர் காலையில் அரைத்து இதோடு சீத்தாப்பழ விதைப்பொடியை கலந்து தலையில் தேய்த்து ஊறியபின்னர் குளித்துவர தலை குளிர்ச்சி பெறும். முடியும் உதிராது. பொடுகு காணாமல் போகும்.

10. சீத்தாப்பழத்தை தொடர்ந்து உண்டு வந்தால் இதயம் பலப்படும். காசநோய் இருந்தாலும் மட்டுப்படும்.

11. இதில் 16.5% சர்க்கரை உள்ளது. கொழுத்த சதை உடையவர்கள் இப்பழத்தை சாப்பிட கூடாது.

-இன்று ஒரு தகவல்

உடலுக்கு வலு கொடுக்கும் புடலங்காய்

இன்றும் கிராமங்களில் கொல்லைப் புறத்திலும், தோட்டங்களிலும், பந்தல் போட்டு வளர்க்கப்படும் கொடி வகைதான் புடலை. இதன் காய் நன்கு நீண்டு காணப்படும்.

ுடலங்காய் இந்தியாவில் அதிகம் பயிர் செய்யப்படுகிறது. இது சுவை மிகுந்த காயாகும். இதனை தென்னிந்தியாவில் உணவில் அதிகம் சேர்க்கின்றனர்.

புடலையில், இளத்தல், கொத்துப்புடல், நாய்ப்புடல், பன்றிப்புடல், பேய்புடல் என பல வகைகள் உள்ளது. இவற்றில் கொத்துப்புடல் மட்டுமே உணவாகப் பயன்படுகிறது.

இதனை புடல், சோத்தனி, புடவல் என்ற பெயர்களில் அழைக்கின்றனர்.

புடலங்காயில் நன்கு முற்றிய காயை உண்பது நல்லதல்ல. பிஞ்சு அல்லது நடுத்தர முதிர்ச்சியுள்ள காயையே பயன்படுத்த வேண்டும்.

புடலையின் உட்பகுதியில் நீண்ட குழாய் போன்று காணப்படும். அதில் உள்ள விதைகளை நீக்கி சதைப் பகுதியை மட்டும் பயன்படுத்த வேண்டும்.

புடலங்காயின் பயன்கள்

* உடலுக்கு வலு கொடுக்கும். தேகம் மெலிந்து இருப்பவர்கள் அடிக்கடி புடலங்காயை உணவில் சேர்த்து வந்தால், தேக மெலிவு மாறி உடல் பருமனடையும்.

* அஜீரணக் கோளாறைப் போக்கி எளிதில் சீரணமாக்கும். நன்கு பசியைத் தூண்டும்.

* குடல் புண்ணை ஆற்றும். வயிற்றுப்புண், தொண்டைப்புண் உள்ளவர்கள் அடிக்கடி சாப்பிட்டு வந்தால், மேற்கண்ட நோயின் பாதிப்புகள் குறையும்.

* இதில் நார்ச்சத்து அதிகம் உள்ளதால், மலச்சிக்கலைப் போக்கும்.

* மூலநோய்க் காரர்களுக்கு புடலங்காய் சிறந்த மருந்தாகும்.

* நரம்புகளுக்கு புத்துணர்வு கொடுத்து ஞாபக சக்தியை அதிகரிக்கும்.

* சருமத்திற்கு பளபளப்பைக் கொடுக்கும்.

* விந்துவைக் கெட்டிப்படுத்தும். ஆண்மைக் கோளாறுகளைப் போக்கும். உடல் தளர்ச்சியைப் போக்கி வலு கொடுக்கும்.

* பெண்களுக்கு உண்டாகும் வெள்ளைப் படுதலைக் குணப்படுத்தும். கருப்பைக் கோளாறுகளைப் போக்கும்.

* கண் பார்வையைத் தூண்டும்.

* இதில் நீர்ச்சத்து அதிகமிருப்பதால் உடலில் உள்ள தேவையற்ற உப்புநீரை வியர்வை, சிறுநீர் மூலம் வெளியேற்றும்..

இத்தகைய சிறப்புத் தன்மை கொண்ட புடலங்காயை அவ்வப்போது பயன்படுத்தி ஆரோக்கியம் பெறுவோமே.

நன்றி : மருத்துவம் தளம்