வியாழன், 2 மே, 2013

பாலிதீன் பைகளை ஒழிப்போம் ...


பூமியில் பிறந்த நாம் அனைவரும் தெரிந்துகொள்ளவேண்டிய பாடம்...
படியுங்கள் பகிருங்கள் நட்புகளே...

பாலிதீன் பைகளால் புற்று நோய் , தோல் வியாதிகள் போன்றவை ஏற்படுகிறது... ( அறிவியல் உண்மை )
பாலிதீன் பைகளால் நம் அழகிய பூமி மாசுப்படுகிறது...
பாலிதீன் பைகளால் மழை நீர் பூமியில் உறிஞ்சப்படுவது தடைப்பட்டு நீர் மட்டம் பாதாளத்திற்கு செல்கிறது...
பாலிதீன் பைகளால் நிறைய கால்நடைகள் இறக்கின்றன. சில விச தன்மையுடைய பாலை நமக்கு கொடுக்கின்றன...
பாலிதீன் பைகளால் கழிவு நீர் சாக்கடைகள் அடைக்கப்பட்டு விச கொசுக்கள் உருவாக்கி மலேரியா போன்ற கொடிய நோய்கள் உருவாகிறது...
கடலில் கொட்டப்படும் பாலிதீன் கழிவுகளால் கடல் வாழ் உயிரினங்களும், பறவைகளும் உயிரை இழக்கின்றன....
உணவு விடுதிகளில் கொடுக்கப்படும் பாலிதீன் பைகளால் தோல் நோய் மற்றும் புற்று நோய் கூட ஏற்படும்....

இப்போது தெரிகிறதா,
பாலிதீன் பைகள் அணுகுண்டை விட மிக மோசமான ஓன்று என ...
இதை நாம் பயன்படுத்தலாமா ?
நாம் இயற்கையை கெடுத்தோம் என்றால் நம் அடுத்த தலைமுறை வாழ வழியே இல்லாமல் போய்விடும்...

பூமியை நாம் காப்பாற்றினால், பூமி நம்மை காப்பாற்றும்....
மரம் நடுவோம்...
பாலிதீன் பைகளை ஒழிப்போம் ...
இயற்கைக்கு எதிரான செயல்களை தடுப்போம்...
பூமியை பாதுகாப்போம்...
அனைவரும் வளமுடன் வாழ்வோம்...

கருத்துகள் இல்லை: